நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி.
டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது. இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.
சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.
என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.
முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.
ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவதை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.
திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை.
ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம்.
முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது,
சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியாணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது.
ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
திருட்டு விசிடி படம் வெளி வந்த உடனே சில சமயங்களில் படம் வெளிவரும் முன்னரே [ஜக்குபாய் ]வந்து விடுகிறது.30 ரூபாய் சிடியை போட்டு எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள்.அதில் வரும் கூ ட்டத்தைவிடவா டிடி ஹெச் இல் 1000 ரூபாயில் போடப்படும் படத்துக்கு திரையரங்குக்கு வரும் தடம் குறைந்து விடும்?
இன்று கமலை கையை கட்டி வைத்து விட்டாலும் நாளை இந்த தொழில் நுட்பத்தை யாராவது கொண்டு வரத்தான் செய்வார்கள்.இப்போது மன்சூர் அலிகான் தயாராக உள்ளார்.
திருட்டு விசிடி அதிகமாகி விடும் என்று ஒரு ஆய்வாளர் கூ றியுள்ளார். இப்போது ஒரு பக்கமும் சிடி கிடைக்காது என்று கண்ணாடி ஏசி அறையில் இருந்து கொண்டு ஆய்வு செய்துள்ளார்.
தெருக்கு -தெரு திருட்டு விசிடிகள் படம் வந்த நாள் அன்றே கிடைப்பதும்.அதுவும் வெறும் 30-40 க்கு .
அந்த சிடியை வைத்தே உள்ளூர் தொலைகாட்சி நடத்துபவர்கள் தினமும் ஒரு சானலில் படம் காட்டுவதையும் அவர் அறிய மாட்டார் போலிருக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன.
உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள்.
இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில் எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான்.
கீழே உள்ள தகவல் உலகநாயகனின் "விஸ்பரூபத்தின்" ரிலீஸ் ஆகாத நிலையிலான வசூல் பற்றி ஃபேஸ்புக்கில் நான் படித்த செய்தியொன்று.
300 கோடி ரூபாய்கள்3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.
நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள்300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.
1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.
நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை,பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........
தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான்.
கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.
திரையரங்கு காரர்களுக்கும் கைபிடித்தம் வராத வகையில் அனைத்து திரையரங்குகளிலும் ராஜ் கமல் நிறுவனமே விகிதாச்சார வகையில் படத்தை வெளியிடுகிறது.நட்ட வந்தாலும் அது ராஜ் கமலைத்தான் சீரும்.திரையரங்கைப் பாதிக்காது. பின்னரும் திரையரங்குக்காரர்கள் ஏன் பயத்தில் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.?
கமல்ஹாசனுக்கு சிக்கல்கள் வரும்போது அதை மகிழ்வுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொள்ளும் தமிழ் ஊடகங்கள் இது போன்ற கமலின் சாதனை செய்திகளை மட்டும் வெளியிடாமல் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் இதுவரை வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சியாக வெளியிடலாமே.ஏன் இந்த செய்திகளை வெளியிடவில்லை.இதுதான் தமிழகப் பத்திரிக்கை தர்மம்..
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர் கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment