Sunday, 13 January 2013

முள்ளங்கியின் மருத்துவ குணங்களும், பயன்களும்!! ஒரு பார்வை...



காய்கறிகளை சமையலுக்குத் தேர்வு செய்யும்போது, எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாகவும் எங்கும்கிடைக்கக் கூடியதாகவும், சத்துக்கள்நிறைந்ததாகவும் விலை மலிவானதாகவும் உள்ளதைத் தேர்ந்தெடுத்து, அன்றாடம் பயன்படுத்துவதே சிறப்பானதாகும்.இக்காய்களில் மருத்துவக் குணம் நிறைந்தவற்றைப் பார்த்து வாங்கினால், பல நன்மைகளை அடைய முடியும். அவ்வாறு தேர்வுசெய்ததில் ஒன்றுதான் முள்ளங்கி.

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது.


முள்ளங்கியின் நறுமணம்: முள்ளங்கியை சமைக்கும் போதும் உண்ணும் போது ஒரு வித வாசனை ஏற்படும். சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும் அதற்குக் காரணம் அதில் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுவதால்தான். முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது. 




இந்த முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகியவற்றில்மருத்துவ குணங்களும்; உடலைப் பாதுகாக்கும் சத்துப்பொருள்களும் அடங்கியுள்ளன.
முள்ளங்கியில், சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கி வெப்ப வீரியமும் கார்ப்புச் சுவையும் கொண்டதாகும்.


02:42, 21 மார்ச் 2009 -ல் இருந்த பதிப்பின் சிறு தோற்றம்





மருத்துவ குணங்கள்: முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கிதான் மருத்துவகுணங்கள் அதிகம் உடையதாகும். முள்ளங்கியில் புரதம், கொழுப்பு, மணிச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன.உயிர்ச்சத்துக்களான, கரோட்டிண், பி.1,ரிபோபிளேவின், நியாசின், சி. வைட்டமின்களும், மெக்னீஷியம், செம்பு, மேங்கனீஸ், ஜின்க், குரோமியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.







என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?



விந்து உற்பத்திக்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள்; இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறவதை உணர முடியும். 




கருச்சிதவைத் தடுக்க:
அடிக்கடி கருச்சிதைவுக்கு உள்ளாகும் பெண்கள் முள்ளங்கிச் சாறு 100 மில்லியில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கருப்பை பலம்பெற்றுக் கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும்.




பொடுகு நீங்க: முள்ளங்கிச்சாற்றை குளிக்கும் தண்ணீரில் கலந்து தலைக்குத் தேய்த்து வைத்திருநது, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கும். குளிக்கும்போது, பேன்கள் வெளியேறி விடும்.




உணவு செரிமானத்திற்கு:முள்ளங்கி விதையை இதன் எடைக்கு எட்டுப் பங்குத் தண்ணீரில் சேர்த்துக் காய்ச்சி, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உணவை மிக விரவில் செரிமானமாக்க உதவும்.



தாது விருத்திக்கு: முள்ளங்கி விதையை நன்கு பொடித்து வைத்துக் கொண்டு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி பொடியைச் சேர்த்துக் குழைத்துச்சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்குச் சக்தியளித்து ஆண்மை சிறப்பாகச் செயல்படும். போக சக்தி நீடிக்கும். முள்ளங்கி விதையப் பொடி செய்து கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் தாது விருத்தி அதிகமாகும்.




முள்ளங்கி விதையப் பொடி செய்து சம அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை கால் கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், சுக்கில இழப்பு சரிசெய்யப்பட்டு, தாது விருத்திக் கூடுதலாகும்.




முள்ளங்கி விதைய ஒரு தேக்கரண்டியளவு தூள் செய்து தண்ணீரில் கலந்துகாலல, மாலை குடித்து வந்தால் கடுமையான வெடi;டநோய் குணமாகும்.மருநது; சாப்பிடும்போது பேதி அதிகமானால், மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.




சிறுநீர்ப் பையில் அழற்சியும் சிறுநீர் எரிச்சல், நீர்க்கடுப்பு உள்ளவர்கள் முள்ளங்கிச் சாறு100 மில்லியளவு தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சிறுநீர் தாராளமாகவும் எரிச்சல் இல்லாமலும் பிரியும். மேகநோய் தொடர்பான உடல் காங்கை தீரும்.


உணவில் முள்ளங்கியைச் சமைத்துச் சாப்பிடுவதால் கண்களுக்குத் தெளிவான பார்வை கிடைக்கிறது ஆண்களின் விந்து கூடுதலாக உற்பத்தியாகிறது.



பிஞ்சு முள்ளங்கியை வாங்கிச் சுத்தம் செய்து சாறு தயாரித்துச் சாப்பிட்டுவந்தால், நீர்க் கடுப்பு நீங்கும்.குடற் புண்கள் நிவர்த்தியாகும். பிஞ்சு முள்ளங்கியில் அயோடின், சிலிக்கான் ஆகியவை சேர்வதற்கு மிகவும் பயனுள்ளதாகும்.


முள்ளங்கியைத் தினமும் சாப்பிடலாம். உணவு நல்ல முறையில் செரிமானம்ஆக உதவுகிற.து குடலில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கிறது குடல் சம்மந்தமான அனைத்துக் கோளாறுகளயும் போக்குகிறது.



மூலக் கடுப்பிற்குச் சிறந்த நிவாரணமளிக்கிறது வயிற்று வலியைக் குணப்படுத்கிறது. வயிற்றில் ஏற்படும் எரிச்சலைக் குணமாக்குகிறது. இருமல், கபம்,ஜலதோஷம், தலைவலி, பல்நோய்கள் நிவர்த்தியாகிறது குன்மம் சுவாசம், குடல்விருத்தி நோய், வாதநோய் கரப்பான் நோய் நீங்க பெரிதும் பயன்படுகிறது.



நீரிழிவைக் கட்டுப்படுத்த: பிஞ்சு முள்ளங்கியைத் தேங்காய் திருகுவது போல் திருகி, நிழலில் உலர்த்தி பொடித்து, இதில் தேவையான அளவுநெய், தேன், கற்கண்டு சேர்தது; லேகிய பதத்தில் தயாரித்து வைத்துக் கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவுநோய் கட்டுப்படும்.



முள்ளங்கி விதையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தால் குடல்வாதம் நீங்கும்.

குழந்தைகளின் ஜலதோஷம் போக்கும்:பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும் தசிறுநீர் பிரச்சினை தீரும்: உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது..

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment