Tuesday, 1 January 2013

ஆங்கில மாதம் VS தமிழ் மாதம் பிறந்தது எப்படி? ஒரு சிறப்பு பார்வை...


2013 new calendar in english Stock Photo - 14211799
ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி,பிப்ரவரி என துவங்குகின்றன.தமிழ் மாதம் என்பது சித்திரை,வைகாசி எனத் துவங்குகின்றன.இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.
ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம். 


ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.

சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம்இடபம்மிதுனம்கடகம்கன்னிதுலாம்விருச்சிகம்,தனுமகரம்கும்பம்மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும்.

அப்படியென்றால் ஏன் எல்லா தமிழ் மாதங்களும் ஒரே அளவு நாட்களைக்கொண்டதாக இல்லை என்று கேட்கிறீர்களா?
சூரியன் சந்திரன் சஞ்சரிக்கும் இந்த பாதை விண்வெளிப்பாதை (Zodiacal Path) என்று அழைக்கப்படுகின்றது. இதன் நடுவில் இருப்பது விண்வெளி மத்திய ரேகை (Celestial Equator)ஆகும். இந்தப்பாதையை சூரியன் வடக்கு நோக்கிக் கடக்கும் காலம்உத்தராயண காலம் என்ற ஆறு மாதங்களாகும். இதே போல தெற்கு நோக்கிக்கடக்கின்ற காலம் தட்சிணாயன காலம்என்ற ஆறு மாதங்காளாகும். ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும் தட்சிணாயனம் தைப்பொங்கலில் முடிவடைகின்றது. இவ்வாறு தைப்பொங்கலில் தொடங்கும் உத்தராயணம் அடுத்த ஆடிப்பிறப்பில் முடிவடைகின்றது.

 எங்களுடைய தமிழ்ப் பண்டிகைகளுக்கு எவ்வளவு வானியல் விஞ்ஞான அடிப்படை உள்ளது பார்த்தீர்களா?
தமிழ் மாதங்களின் கால அளவு சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தையும் இவற்றில் ஏற்படும் வேறுபாடுகளையும் பொறுத்தது. சூரியனை பூமி சுற்றி வரும் பாதை ஒரு செவ்வையான வட்டப்பாதை அல்ல. இது ஒரு நீள்வட்டமான பாதை. இதனால் எப்போதும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரமும் ஒரே அளவாக இருப்பதில்லை. மார்கழி மாதத்தில் மிகவும் கிட்ட இருக்கும் சூரியன் ஆடியில் அதிக தூரத்துக்கு தள்ளிப்போய்விடும். அதிக பட்ச தூரத்தை பெரிஹீலியன்(perihelion) என்றும், குறைந்த பட்ச தூரத்தை அப்போகீலியன் (Apohelion)  என்றும் வானியல் விஞ்ஞானத்தில் கூறவார்கள். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள இடைவெளி குறைந்த காலங்களில் பூமியின் வட்டப்பாதையில் உள்ள 30 பாகையைக் கடக்கும் நீளமும் குறையும். அத்தோடு சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் தாக்கத்தாலும், பூமியின் மையநோக்க இழுவையில் (Centripetal force) ஏற்படும் மாற்றத்தாலும் பூமியின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு குறைந்த தூரத்தை அதிக வேகத்தில் கடக்கும்போது அதற்காக பூமி எடுத்துக்கொள்ளும் கால அளவும் குறையும்.

இதேபோல சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதிகரிக்கும்போது இந்த 30 பாகையைக் கடக்கும் தூரமும் கூடும். அதேபோல பூமியின் மையநோக்க இழுவையும் குறைந்து பூமியின் வேகமும் குறையும். அப்பொழுது சூரியன் அந்தக் குறிப்பிட்ட இராசியைக் கடக்கும் தூரமும் அதிகரிக்க, அதற்கான கால அளவும் அதிகரிக்கும்.





இதனால்தான் தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

1. தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மகர இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 29 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 2. மாசி மாதம்: என்னும் மக மாதம்- மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் கும்ப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 3. பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-பல்குணி என்னும் அத்த நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மீன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப் பகுதியாகும்.

4. சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்- சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மேட இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

 5. வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் இடப இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

6. ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் மிதுன இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

7. ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்- அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். இது சூரியன் கடக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 32 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

8. ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்- திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் சிம்ம இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 31 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

9. புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்- உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். இது சூரியன் கன்னி இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

10. ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்- அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் துலா இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

11. காரத்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்- கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் விருச்சிக இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும்.

12. மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்- மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். இது சூரியன் தனு இராசியில் புகுந்து சஞ்சரிக்கும் 30 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். 

பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவேஅந்த மாசத்தின் பெயராக இருக்கும்.அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

அனேகமாக சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் சித்திரை மாசத்தில் பௌர்ணமி வரும்.அதனால் சித்திரை மாசம் என்றானது.
விசாக சம்மந்தமானது வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி.மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் ஆனுஷீமாசம்.தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு.பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும்.முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம்.அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமிய வருவதால் மாகி என்றாயிற்று.இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும.அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன.

No comments:

Post a Comment