தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லதுசார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா,பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவுமற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில்ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
தலைமையகம் : காட்மண்டு (நேபாளம்)
நிறுவப்பட்ட நாள் : டிசம்பர் 8, 1985
நிறுவனர் ஜியாவூர் ரஹ்மான் (ஆலோசனை வழங்கியவர்)
நிறுவப்பட்ட நாள் : டிசம்பர் 8, 1985
நிறுவனர் ஜியாவூர் ரஹ்மான் (ஆலோசனை வழங்கியவர்)
தற்போதைய உறுப்பினர்கள்
மாநாடு நடைபெற்ற இடங்கள்.... இலக்கை அடைவதில் சார்க் அமைப்பு தோல்வி!
16வது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் உரையாற்றும் போது பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியக் கூட்டமைப்பு (SAARC) என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அடைவதில் வெற்றி கொள்ளவில்லை என பூட்டான் பிரதமர் Jigmi Thinley தெரிவித்துள்ளார். இதுகுறித்து காலநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஆகிய விடயங்களில் ஓரணியாக நின்று செயற்படுவதற்கு சார்க் அமைப்பு தவறிவிட்டதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்துள்ளார்..
18வது சார்க் உச்சி மாநாட்டை நேபாளத்தின் கத்மன்டு நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Source : Nerudal,Wikipedia Tamil & English
Written By M.Ajmal Khan.
No comments:
Post a Comment