Saturday, 5 January 2013

DTH -ல் கமலின் சிந்தனை..


இப்போது இந்த வசூல் மேட்டர் அப்புறம் படம் ரிலீசுக்கு பின்னால் எந்திரன்சிவாஜி வசூலுடன் ஒப்பீடுகள் என்று வரப்போகும் அளப்பரைகளை சிந்திக்காமல்விஸ்வரூபம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமுகத்தை காட்ட நினைக்கும் கமலின் சிந்தனை தொடர்பில் ஒரு பார்வை பார்க்கலாம்.


விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முன்னெல்லாம் ஒரு திரைப்படம் எத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதுஎத்தனை பிரிண்ட் போடப்படுகிறதுஎத்தனை நாடுகளில் திரையிடப்படுகிறது என்ற கேள்விகளே ஒலிக்கும். ஆனால் இனிமேல் எந்தெந்த டி.ரி.ஹெச்சில் ஒலிபரப்பாகிறது என்றெ கேள்வியையும் கூட சேர்த்து கேட்கபட வேண்டிய ஒரு அவசியத்திற்கு தமிழ் சினிமாவை உந்த முனைகிறார் உலக நாயகன்.


ஜனவரி 11 , 2013இல் உலகமெங்கும் திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியாகவுள்ள‌ நிலையில்அதற்கு முந்திய நாளானா ஜனவரி 10 அன்று இந்தியாவின் பிரதான டி.ரி.ஹெச்களான "டிஷ் ரீவிசன் டிரக்ட்வீடியோகேன்ஏர்டெல்ரிலயன்ஸ்" ஆகிய டி.ரி.ஹெச்களில் இந்திய நேரப்படி காலை 9.30க்கு விஸ்வரூபம் ஒளிபரப்பாகிறது.


இது வழமை போலவே சாதக பாதக அலைகளை கிள‌ப்பிவிட்டிருக்கிறது. 



ஒரு திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் என்பது பொழுதுபோக்கிற்கு மேலாக ஒரு படத்தின் வெற்றியை கணிக்க கால காலமாக பயன்பட்டுக்கொன்டு வருகிறது. ஒரு தியேட்டரில் படம் எத்தனை நாள் ஓடுகிறதுஎத்தனை ரூபாய்களை அது வசூலித்தது என்பதன் அடிபடையிலேயே இதுவரை காலமும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலும் ஒரு படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவந்ததுவருகிறது. இது கலைஞானி கமல் அறியாதது இல்லை. அப்படி அறிந்திருந்தும் இந்த மாதிரியான ஒரு தொழினுட்ப பரீட்சையில் கமல் இறங்கியிருக்க எனக்கு தெரிந்து இரண்டு காரணங்கள் தான் இருக்க வேண்டும் . ஒன்று கமல் ,தனது படங்கள் எத்தனை நாட்களை கடந்து ஓடுகிறதுஎத்தனை ரூபாய்களை ஈட்டியது என்பது குறித்து அலட்டிகொள்பவ‌ர் கிடையாதுஇரண்டாவது தமிழ் சினிமாவிக்குள் எப்படியாவது புதிய தொழிநுட்பங்களைபுதிய அனுகுமுறைகளை கொண்டுவந்துவிட வேன்டுமென்ற அவரது வெறி.


கமலின் இந்த முற்போக்குத்தனம் ஒருபுறம் இருக்கட்டும்இந்த முற்போக்குத்தனம் இந்திய திரைப்பட உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் உணர்வுகள் நிச்சயம் கமல் ரசிக்கும்படியாய் இல்லை என்பதே உண்மை. கமலின் இந்த முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையள‌ர்களில் ஒரு சாரார்.


அவர்களது வாதம் என்னவெனில் ரிலீசுக்கு முன்னதாக சின்னத்திரையில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தொகை குறைந்துதமது தொழில் பாதிப்படையும் என்பதே. இந்த வாதம் ஒருவகையில் நியாயமாகவே படுகிறது. 


ரஜினி கமல் தவிர அனைத்து நடிகர்களுக்கும் தம‌து படத்தை நூறு நாள் ஒரு திரையில் ஓட்டிக்காட்டித்தான் தம்மை ஒரு வெற்றியாளன் என்று காட்டவேண்டிய அவசியம்இருக்கின்ற போதும் ,தமிழ் சினிமாவில் எப்போதோ வேரூன்றிவிட்ட கமலுக்கு  அந்த அவசியம் இப்போதுஇல்லை. இப்போது தான் விஸ்வரூபத்தில் போட்ட முதலை எந்த வழியிலாவது லாபத்துடன் எடுத்துவிட்டால் போதும் கமலுக்கு. படம் திரையரங்கில் எத்தனை நாள் ஓடினாலும் அவர் அலட்டிக்கொள்ளப்போவதில்லைஅது அவரது புகழை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. ஆனால் கமல் அதற்குத்தான் ஆசைப்படுகிறாரா?


தியேட்டர்க்காரர்களின் இருபிரதான வாதத்திற்கு வருவோம். ஒன்று தியேட்டருக்கு வரும் ரசிகர் தொகை குறையும்இன்னொன்று திருட்டு வி.சி.டி தொழில் அமோகமாகி தமது தொழில் இன்னமும் மோசமாகிவிடும். இந்த பிரதான இருபயங்களில் நியாயம் இருப்பது போல் பட்டாலும் என்னைக்கேட்டால் கமலின் இந்த முடிவால் புதிதாக எந்த பாதகமான மாற்ற‌மும் வந்துவிடப்போவதில்லை என்பது தான். 


முதலில் தியேட்டருக்கு வரும் மக்கள் தொகை குறையும் என்ற குற்றச்சாட்டை பார்க்கலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ரசிகனுக்கு அந்த இடம் ஒரு கோவிலாக இருக்கிறதுஒரு குடும்பஸ்தனுக்கு தியேட்டர் செல்வது என்பது பீச்பார்இரவு உணவுக்கு ஏதும் ஹோட்டல் செல்வது போல தனது குடும்பத்துடன் வெளியில் செல்லும் ஒரு அனுபவமாக இருக்கிறதுநண்பர்கள் வட்டத்தில் தியேட்டர் ஒரு ஒன்று கூடும் உற்சாக தளம் . இப்படியாக தமிழ் நாட்டிலும் சரி தமிழர் வாழும் பிரதேசங்களிலும் சரி தியேட்டர் என்பது திரைப்படம் காட்டப்படும் தளம் என்பதற்கு மேலாக மக்களது வெகுசன வாழ்வியலோடு ஒன்றித்துப் போன ஒரு பொழுதுபோக்கு தளமாக மாறியிருக்கிறது.


ஆக இந்த டி.டி.ஹெச் திட்டமானது தமிழ் ரசிகர்களின் அந்த தியேட்டர் பாரம்பரியத்தை ஒன்றும் குலைத்துப்போடுவதற்கில்லை. அதனால் தியேட்டர் வரும் மக்கள் தொகையும் குறைந்துவிடப்போவதில்லை.




அத்தோடு இம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பைக் கிளறியிருக்கும் இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கே மக்கள் கூட்டமும் அலைமோதும். படத்தின் வி.ஐ.பி ஷோக்களை பார்த்த பிரபலங்கள் புகழ்வது போல் விச்பரூபம் நிஜமாகவே உலக சினிமா தரத்தில் இருக்கும் பட்சத்தில் சின்னத்திரையில் பார்த்தவன் கூட அந்த பிரம்மான்டத்தை வெள்ளித்திரையில் காண அடுத்தநாள் திரையரங்கிற்கு விரையப்போவதும் உறுதி.


திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவிப்போரின் திரையரங்குகள் விஸ்வரூபம் படத்திற்கு முன்பிருந்தே அதே நிலையிலேயே இருக்கும் திரையரங்குகளாகத் தான் இருக்க வேண்டும். சரியான பராமரிப்பு இன்மையால் தமது திரையரங்கை மூடும் நிலையில் உள்ளோர் விஸ்வரூபம் மீது குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது.


யாரெல்லாம் இந்த படத்தை டி.டியில் பார்க்கப்போகிறார்கள் ?சில சோம்பேறிஸ் சில பணக்காரர்கள் ( சந்தானம் சொல்வது போல் விசில் அடிக்காதஅழாதசிரிக்காத கூட்டம்)சில வயதானவர்கள்சில அங்கவீனர்கள்சில நேரம்கிடைக்காதவர்கள்சில நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க விரும்பாதவர்கள் . இவ்வாறாக வழமையாகவே ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கும் வரை காத்திருந்து வீட்டு ஹோம் தியேட்டரில் படம் பார்க்கும் கூட்டமே இந்த படத்தை டி.டி.ஹெசில் பார்க்கப்போகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுமளவிற்கு பாதகங்கள் வந்துவிடப்போவதில்லை என்பதே என் எண்ணம்.


அடுத்து திருட்டு வி.சி.டி  தொடர்பில் ஊதப்படும் அபாய சங்கு பற்றி பார்க்கலாம். விஸ்வரூபம் மட்டுமல்ல எப்போது வி.சி.டி கலாச்சாரம் உருவெடுத்ததோ அப்போதிருந்தே ஒவ்வொரு படத்திற்கும் இந்த அபாயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பு + விநியோக தரப்பு சம்பாதிக்கும் இலாபத்திற்கு நிகரான இலாபத்தை இந்த கும்பல் காலாகாலமாக சம்பாதித்துக்கொண்டே வருகிறது. இது விஸ்வருரூபத்திற்கு முன்பிருந்தே நடைமுறையிலிருக்கும் ஒரு அபாயம். ஏதோ டி.டி.ஹெச் மூலம் ரிலீஸ் செய்யப்படுவதால் விஸ்வரூபம் தான் திருட்டு வி.சி.டி அபாயத்திற்கு உள்ளாகப்போகும் முதல் தமிழ் படம் என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்படுவது கொஞ்சம் மிகையாக இருக்கிறது.


நீங்கள் கேட்கலாம் விஸ்வரூபம் டி.டி.ஹெச்சில் வருவதனால் தியேட்டர் ரிலீசுக்கு முதல் நாளே தெள்ள‌த்தெளிவான ஒரிஜினல் பிரதியான வி.சி.டிக்கள் சந்தையில் வந்துவிடுமென்று. இங்கு தான் கமல் தியேட்டர்காரர்களை காக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அதாவது திரைப்படம் ஒளிபரப்பாகப்போகும் அந்த ஐந்து டி.டி.ஹெச் நிறுவனத்தினரிடமிருந்தும்,விஸ்வரூபம் ஒளிபரப்பாகும் போது  பி.வி.ஆர் ( பிரைவேட் வீடியோ ரெக்கார்டிங் ) செயற்படுத்தப்படாமல் இருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த டி.டி.ஹெச் களில் படம் ஓடும் போது அதனை யாரும் அப்படியே ரெக்கார்ட் செய்யமுடியாது. இந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்ததாலேயே 'டா டா ஸ்கைக்கு"  விஸ்வரூபத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமம் கொடுக்கப்படவில்லை. தவிர விஸ்வரூபம் ஒளிபரப்பாகும் போது இடையில் எந்த வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பவும் கமல் தடை விதித்துள்ளார்.




அதற்காக திருட்டு வி.சி.டி வெளிவாராது என்று அர்த்தம் கிடையாது. வழமை போலவே அதுவும் வரத்தான் போகிரது. ஆனால் இந்த டி.டி.ஹெச்சை வைத்துக்கொண்டு திருட்டு வி.சி.டியும் ஏதோ மேம்பட்ட தொழிநுட்பத்தில் வரப்போகிறது என்கிற மாதிரியான வாதங்களை தான் ஏற்றுக்கொள்லமுடியாது. சிலர் இருக்கிறார்கள் அது புளூ ரேயாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது தெரியாத அளவுக்கு மோசமாக இருக்கும் வி.சி.டியாக இருந்தாலும் தவமிருந்து திருட்டு வி.சி.டியிலே பார்ப்பவர்கள். இவர்களை எந்த தொழிநுட்பமும் திருத்திவிட முடியாது,அவர்களாக திருந்தினால் ஒழிய.


மேற்சொன்னவாறு இந்த டி.டி.ஹெச் தொழிநுட்பம் மூலம் விஸ்வரூபம் படமானது ரிலீச் செய்யப்படுவதனால் எந்த தரப்பினரும் தமது கையை சுட்டுக்கொள்ப்போவதில்லை என சொல்லத்தெரிந்த எனக்கு இந்த முறையில் படம் ரிலீஸ் செய்யப்படுவதால் எவ்வாறான நன்மைகள் அடுத்தகட்ட சினிமாவுக்குள் நுழையப்போகிறது என்பது பற்றி சரியாக கணித்து சொல்லத்தெரியவில்லை.


ஆனால் இந்த தொழிநுட்பத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குள் கமல் கொன்டுசெல்கிறார் என்பது மட்டும் உறுதி. இப்போது எதிர்ப்பு மழை பொழியும் இந்த திட்டத்தால் எதிர் காலத்தில் தமிழ் சினிமாவில் இந்த டி.டி.ஹெச் தொழிநுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு புரட்சிகள் ஏற்பட காரணமாக அமையலாம்.


சினிமா என்பது தியேட்டரோடு மட்டும் சம்மந்தப்பட்டது என்று எந்த விதியும் கிடையாது. ஆரம்பகால தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மக்களை சென்றடைய வேறு ஊடகங்கள் இல்லாத படியால் தியேட்டர்கள் அந்த இடத்தை பிடித்துக்கொன்டு கோலோச்சின. ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ந்து வெகுசன ஊடகங்களையும் வளர்த்துவிட்டிருக்கிறபடியால் தமிழ் சினிமா அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிறது. இதனை தடுப்பது ஒரு வகையில் தமிழ் சினிமாவுக்கு செய்யும் துரோகம் என்று ஆகிவிடும்.


கொஞ்சம் ராவாக சொல்லப்போனால் ஒரு முதலீட்டாளர்களாக தமது தொழில் பாதிக்கும் என ஆதங்கப்படும் தியேட்டர் உரிமையாள‌ர்கள்ஒரு வியாபாரியாக தனது வியாபாரத்தை எந்த ரூபத்தில் செய்யவும் கமலுக்கு உரிமை உண்டு அதனை தடுப்பது சட்டப்படி குற்றமாகிறது. 




எது எப்படியாக இருப்பினும் தமிழ் சினிமாவின் பாரம்பரியமான தியேட்டர் கலாசாரத்தை திட்டமிட்டு குலைக்கும் நோக்கில் கமல் இந்த ஏற்பாட்டை செய்யவில்லை என்றும்காலத்தின் பரிமாண‌த்தில் இதுவும் கடக்கவேண்டிய ஒரு பாதை என்றும்இதனால் தியேட்டர் கலாசாரம் எவ்வகையிலும் குன்றிப்போகாது என்றும் சகல தரப்பினரும் புரிந்து கொள்வதே ஆரோக்கியமாக இருக்கும்.


இத்தனை எதிர்ப்பினையும் மீறி கமல் ஏன் இதனை கையிலெடுக்கிறார்தமிழ் சினிமா அடுத்தடுத்த விஞ்ஞான வளர்ச்சிகளில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேன்டுமென்ற அவரது வெறிதான் வேறென்ன. இல்லாவிடில் சுமார் நூறுகோடிகளை கொட்டிவிட்டு கத்திமேல் நடப்பது போன்ற காரியத்தை அவர் ஏன் செய்ய வேண்டும்?


முதன் முதலாக சூரியனைசுற்றித்தான் பூமி சுழல்கிறது என்று கலிலியோ சொன்னபோது கத்தோலிக்க திருச்சபையும் பாப்பாண்டவரும் கலிலியோவுக்கு விஷ‌ம் கொடுத்து கொலை செய்தனர்.....


முதன் முதலில் ரயில் வந்தபோது மக்கள் அதனை பேய் என்று சொல்லி தெறித்து ஓடினர்.....


முதல் சினிமாவில் திரையூடாக ரயில் வருவது போல காட்டப்பட்டபோதுஅந்த ரயில் தம்மை நசுக்க வருவதாக எண்ணி மக்கள் தியேட்டரை விட்டு எழுந்து ஓடினர்...


முதன் முதலில் ஒலியுடன் படங்கள் தயாரிக்கப்பட்டபோது சாப்ளின் முதலான மேதைகளை அதனை எதிர்த்தனர்....


முதன் முதலில் கலர் டி.விக்கள் நடைமுறைக்கு வந்தபோது அது கண்ணுக்கு கெடுதல் என்று மக்கள் அதனை தவிர்த்தனர்..


முதன் முதலில் மார்புக்கச்சைகள் நடைமுறைக்கு வந்தபோது விபச்சாரிகள் மட்டும் தான் அதனை அணிவர் என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவானது.....

இவ்வாறாக இத்தனை எதிர்ப்பினையும் மீறி கமல் ஏன் இதனை கையிலெடுக்கிறார்தமிழ் சினிமா அடுத்தடுத்த விஞ்ஞான வளர்ச்சிகளில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேன்டுமென்ற அவரது வெறிதான் வேறென்ன. இல்லாவிடில் சுமார் நூறுகோடிகளை கொட்டிவிட்டு கத்திமேல் நடப்பது போன்ற காரியத்தை அவர் ஏன் செய்ய வேண்டும்?

1 comment: