Monday, 16 June 2014

நாம் கைத்தொலைபேசி அடிமைகளா !!!

கைத்தொலைபேசி எப்போதும் எம்மோடு இருக்கின்ற, எமது வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு பொருளாக இன்று மாறிவிட்டது. மனிதன் மெதுவாக கைத்தொலைபேசி தொழில்நுட்பத்துக்கு அடிமையாகி வருகின்றான் அல்லது அது சார்ந்து வாழப் பழகிக் கொள்கிறான் எனலாம். உணர்வு ரீதியான, தனிப்பட்ட மற்றும் தொழில்சார் தகவல்களை செல்பேசியை நம்பியே பரிமாறிக் கொள்கிறார்கள். பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்கூட கைத்;தொலைபேசியை நம்பியே காணப்படுகின்றன.வங்கி ஏ.டி.எம். அட்டையின் கடவுச்சொல்லை(Pயளள றழசன) கைத்;தொலைபேசியில் பதிவு செய்து வைத்தே நினைவூட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு பல்வேறு விடங்களுக்கும் கைத்;தொலைபேசியை நம்பியே வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இனங்காண முடியும்.

வீட்டில் இருந்து வெளியேறும் போது கைத்தொலைபேசி இல்லாமல் புறப்பட முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. வீட்டுச் சாவி மற்றும் பணப்பை என்பவற்றோடு கைத்;தொலைபேசியும் மறக்காமல் எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய பொருளாக மாறிவிட்டது. 
மனிதன் இன்று கைத்;தொலைபேசியை நம்பியே வாழப்பழகிவிட்டான் எனலாம். கைத்;தொலைபேசி மூலமாகவே தமது ஞாபகங்களைச் சரிபார்த்துக் கொள்கிறார்கள். முக்கியமான தினங்களையும் நேரத்தையும் நினைவூட்டிக் கொள்கிறான்.முக்கிய தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள், ஒருவருடனான சந்திப்பையும் செல்பேசியே நினைவூட்டுகிறது. தொடர்பு விவரங்களுக்கும் செல் பேசியை நம்பியே இப்போது மனிதன் வாழ்கிறான். 

‘நடந்துகொண்டே இன்னொருவருடன் பேசுகின்ற வாய்ப்பை கைத்;தொலைபேசி வழங்குகின்றது, நடந்து கொண்டே பேசுவதென்பது மனிதர்களுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.

உலகில் 31மூ மேற்பட்ட மக்கள் தொகையினர் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று கைத்;தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் தொகையினர் உலகளாவிய ரீதியில் கைத்;தொலைபேசிகளைப உபயோகிக்கிறார்கள்.

கைத்தொலைபேசிகள் வெறுமனே அழைப்புக்களுக்கும் உரையாடல்களுக்கும் மட்டுமல்லாமல் குறுந்தகவல்களை(ளுஆளு) தட்டச்சு செய்து பிறிதொரு செல்பேசிக்கு அனுப்புவதற்கும் பயன்படுகின்றன. இதைவிட வானொலி,இணைய இணைப்பு வசதிகளுடன் வீடியோ ரெக்கோடிங் , போட்டோ பதிவுகள்,குரல் ஃஒலி ரெக்கோடிங் வசதிகள் புளுருத்(டீடரநவழழவா)வசதி ஊடாக தரவுகளை கேபிள் இன்றி பரிமாறிக்கொள்ளுதல் போன்ற பல வசதிகளுடன் இன்று மூன்றாவது தலைமுறை(3பு) கைத்;தொலைபேசிகள்; வந்துவிட்டன. 

தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக விரைவாக வளர்ந்து வருகின்ற இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. இந்தியாவில் மக்கள் தொகை மிக விரைவாக வளர்கின்றமை,இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பன தொலைத்தொடர்பு வலையமைப்பு வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. 
கைத்;தொலைபேசி என்ற பெயர் பிராந்திய ரீதியாக வெவ்வேறுபெயர்களுடன் அழைக்கப்படுகின்றது. 

உயர் தொழில்நுட்ப வசதியுடைய செல்பேசிகள் குரல் ஒலியை மட்டும் பரிமாறிக் கொள்பவை அல்ல. அவை குறுந்தகவல்கள், வீடியோ, இசை, போட்டோ போன்றவற்றையும் பரிமாறிக்கொள்ளும் ஆற்றலுள்ளவையாக உள்ளன. மைக், கேமெரா, 4G இன்டர்நெட்,புலூடூத், wifi  வசதிகள் இதற்குத் துணைபுரிகின்றன. 

சில நாடுகளில் குறிப்பாகத் தாய்வான், கொரியா போன்ற நாடுகளில் கைத்;தொலைபேசி 100மூ மேல் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கின்றன. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசி வைத்திருப்பது அங்கு ஒன்றும் புதிதல்ல.இந்த நிலைமை இலங்கையிலும் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது.ஒருவர்ஒன்றுக்கு மேற்பட்ட கைத்;தொலைபேசிகளை வைத்திருப்பதோடு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசி நிறுவனங்களின் இணைப்புக்களையும் அதாவது சிம் கார்ட்டுகளையும் கொண்டிருப்பது சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது. 

இன்று தொழில்புரிவோரை விட தொழில் இன்றி பெற்றோரில் தங்கி வாழ்வோரே அதாவது இளைஞர்களே அதிகளவில் கைத் தொலைபேசிகளைப் பாவிக்கிறார்கள்.

கைத்தொலைபேசியை உபயோகப்படுத்துவது ஒரு சமூகப் பழக்கவழக்கமாகக் கருதப்படுகின்ற நிலைமை இன்று இளையோர் மத்தியில் அதிகரித்து வருகின்றது. பொது இடங்களில், சனக்கூட்டமான இடங்களில், நண்பர்கள் மத்தியில் கைத்;தொலைபேசியைக் காண்பிப்பது ஒரு உயர் சமூக அந்தஸ்து நிலையாக இளையோரால் கருதப்படுகின்றது.விலையுயர்ந்த கைத்தொலைபேசிகளை கைகளில் வைத்திருப்பது தமது சமூக அந்தஸ்தை அதிகரிப்பதாக இளையோர்கள் கருதுகிறார்கள்.

செல்பேசி உபயோகம் இன்று புதிய பழக்கவழக்கங்களையும் விழுமியங்களையும் உருவாக்கி வளர்த்து வருகின்றது.
சமூக வலையமைப்பில்; தம்மை இணைத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக கைத்;தொலைபேசியை உபயோகிக்கிறார்கள். கைத்;தொலைபேசி இளம் பெண்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், செல்பேசி பெற்றோருக்கும் பிள்ளைகளுக் கும் இடையிலான தொடர்பாடலை அதிகரிப்பதாக மனோரதியப(சுழஅயவெiஉ) பண்புமிக்க தொடர்பாடல்களை ஊக்குவிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். 

காதல் மலர்வதற்கும்.காதலர்கள் தங்கள் காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் கைத்தொலைபேசியை ஒரு முக்கிய ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உரையாடல்களுக்கு இணையாக குறுந்தகவல்கள(ளுஆளு) இதில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 15 June 2014

தந்தையர் தினம் தேவைதான ? ஒரு சிறப்பு பார்வை..



இன்று  தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  இது, ஒரு குடும்பத்தில் தந்தையின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூறும் நாள்.   தந்தையர் தினத்தை கொண்டாடப்படும்  நாள், நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது என்றாலும், இந்தியா, அமெரிக்கா,  இங்கிலாந்து, ஜப்பான் போன்ற  பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை,  அதாவது இன்ற தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

சமீபத்தில் எனது  நண்பனின் தந்தையை  பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். அவர்கள் பெண் குழதைகளுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள் . அதனால் ஆண் குலதைகளை கண்டுகொள்வதும் இல்லை . இதனால் தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள். அவர்கள் பென்சனும் கொஞ்சம் வருமான் வருமாயின் ஆண் குழதைகளின் பணத்தை ஏற்பதும் இல்லை.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவர்களுடைய இருக்க குணங்களை  மாற்றி கொண்டு அன்போடு பலகை வேண்டும். ஆண்  மற்றும் பெண்குழந்தைகளுக்கு சமமமாக பார்க்க வேண்டும். 
இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம்  தற்காலிகமாக குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும், பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்  பற்றியும்,  பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

அதே நேரத்தில் தந்தையின் சேவையை மறுப்பதற்கு இல்லை என்பதுதான், தந்தையர் தினத்தின் உள்ளார்ந்த கருத்து.இவ்வாறாக  ஒரு குடும்பத்துக்கு தந்தையின் சேவையை நினைவு படுத்தும் தினம் தான் இன்று தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால்,  தந்தை என்பவர் ,முதிய பருவம் அடையும் போது அவரை, அவரது மகன்களும், மகள்களும் அன்பான வார்த்தைகளால் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.முதிய வயதை அடையும் அடையும் தந்தையையும், தாயையையும்  முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடாமல், தங்களோடேயே வைத்துக்கொண்டு, அன்பையும் , பாசத்தையும், நேசத்தையும்  இன்றைய இளைய தலைமுறையினர் பொழிய வேண்டும் என்பதுதான் முக்கியமானது.இந்த சிறந்த கருத்தை, இன்றைய தந்தையர் தினம் வெளிப்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் எல்லா வல்ல இறைவன் அருள் புரிவானாக!!

தந்தை உறவுக்கு  என்னுடைய  நன்றி !

எனக்கு உயிர் தந்த ஓர் உறவு!

எனக்காகவே வாழ்ந்த ஓர் உறவு!
என்  இன்ப துன்பங்களை பகிர்ந்த உறவு!
சமூகத்தில் அவர் பெயர் "தந்தை"!

தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு
வளர்த்த உறவு!
தந்தையாய், நல்லாசானாய், தோழனாய் 
சகலமும் ஆகி நின்ற உறவு!

என் மௌனங்களுக்குள்  எப்போதும் உலா வருபவர் 

என் தயக்கங்களுக்கு  காரணியானவர் 
என் இயலாமைகளின் மூலதாரி

ஊரில் உள்ள அப்பாவுடன் நான்  ஏன் இல்லை யென
கரைந்தழுத பல இரவுகள்! அயல்நாட்டு  நித்திரையில்  கரையாமல் கனவிலும், நினைவிலும் !
என்னை உருவாக்கியதற்கு நன்றி!
எமக்காக உழைத்ததற்கு நன்றி!
எம்மைக் காத்ததற்கு நன்றி!
எம் அனைவர் (சகோதரர்கள்) சார்பிலும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!

ஆக்கம் -மு.அஜ்மல் கான் .

LYCHEE லிட்சி பழம் /அந்திம பழம் /விளச்சிப்பழம் பற்றிய சிறப்பு பார்வை..


Principle
Nutrient Value
Percentage of RDA
Energy66 kcal3.3%
Carbohydrates16.53 g12.7%
Protein0.83 g1.5%
Total Fat0.44 g2%
Cholesterol0 mg0%
Dietary Fiber1.3 g3.5%
Vitamins
Folates14 µg3.5%
Niacin0.603 mg3.5%
Choline7.1 mg1%
Pyridoxine0.100 mg9%
Riboflavin0.065 mg5%
Thiamin0.011 mg1%
Vitamin A0 mg0%
Vitamin C71.5 mg119%
Vitamin E0.07 mg0.5%
Vitamin K0.4 µg0.3%
Electrolytes
Sodium1 mg0%
Potassium171 mg3.5%
Minerals
Calcium5 mg0.5%
Copper0.148 mg16%
Iron0.31 mg4%
Magnesium10 mg2.5%
Manganese0.055 mg2.5%
Phosphorus31 mg4.5%
Selenium0.6 µg1%
Zinc0.07 mg0.5%
Phyto-nutrients
Carotene-ß0 µg
Crypto-xanthin-ß0 µg
Lutein-zeaxanthin0 µg

விளச்சிப்பழம் (LYCHEE /லிட்சி பழம் )என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரத்தின் பழமாகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த பழமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. இப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், இதனுடைய பூப் போன்ற நறுமணமுடையது. இது 40-50 அடி உயரம் வரை வளரும்.

கட்டமைப்பு, பழம் ஒரு உள்ளோட்டு ஆகிறது; ஓவல், இதய வடிவிலான அல்லது கிட்டத்தட்ட சுற்றில், நீண்ட 3-5 செமீ விட்டம் 3 செமீ அளவிடும் மற்றும் 10 கிராம் எடையும். தோற்றம், பழம், longan மற்றும் rambutan பழங்கள் நெருங்கிய ஒற்றுமைகளை கொண்டுள்ளது. இதற்கு லிட்சி பழம் /அந்திம பழம் என்றும் அழைப்பர்.

இந்தியாவில், லிட்சி பழம்...
இந்தியாவில், லிட்சி  பழ உற்பத்தி 15 சதவீதம் அதிகரிக்கும் என, தேசிய தோட்டக்கலை வாரியம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் விரும்பும் பழங்களுள் லிட்சி பழமும் ஒன்று. இந்தியாவில், லிட்சி பழம் 71 ஆயிரத்து 878 எக்டேரில் உற்பத்தி செய்யப்படுகிறது.சென்ற ஆண்டில் இதன் உற்பத்தி 423 டன்னாக இருந்தது. நடப்பாண்டில், நாட்டின் பருவ நிலை நல்ல நிலையில், இருப்பதால் இதன் உற்பத்தி, சென்ற ஆண்டை விட 15 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், லிட்சி பழத்தின் மொத்த உற்பத்தியில், பீகார் மாநிலத்தின் பங்களிப்பு 74 சதவீதமாகும். இங்கு, 30 ஆயிரத்து 600 எக்டேர் நிலத்தில் இவை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2009-10ம் ஆண்டில், 215 டன் லிட்சி பழம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பீகாரில், முசாபர்பூர் மாவட்டத்தில் அதிகளவு லிட்சி விளைச்சல் இருப்பதால் இம்மாவட்டத்தை, லிட்சி மாவட்டம் என்றே அழைக்கின்றனர். 'ஷாஹி' மற்றும் 'சீனா' ஆகிய இரண்டு வகை லிட்சி பழங்களுக்கு, அதிக வரவேற்பு காணப்படுகிறது. முசாபர்பூர் லிட்சி பழத்தை, உள்நாட்டில் டில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ளவர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். இவை தவிர, அரபு நாடுகள், வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் முசாபர்பூர் லிட்சி அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பீகார் மட்டுமின்றி, மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும், லிட்சி பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. பீகாரில், சென்ற வருடம் பருவநிலை பாதிப்பால் இதன் உற்பத்தி சரிவடைந்தது. லிட்சி பழங்களின் அறுவடை, திரிபுரா மாநிலத்தில் தொடங்கி மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து பீகாரில் முடிவடைகிறது. தமிழகத்தில் கொடைக்கானல் மலை பகுதிகளில் லிட்சி பழம் பயிரிடபடுகிறது.



அந்திம பழ (லிட்சி பழம்) சுகாதார நலன்கள்:
"விசுவாசமான வாழ்க்கை பரிசு" அதாவது லிச்சி நிச்சயமாக அதன் பெயர் வரை வாழ்கிறார். அந்திம நன்மைகளை முயற்சி மற்றும் நிரூபிக்கப்பட்ட சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கூட நன்றாக பண்டைய சீன புத்தகங்களில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் தோல் பராமரிப்பு, குழந்தை வளர்ச்சி ஒரு சிகிச்சை இருப்பது மற்றும் உடல் வலுப்படுத்தும் என பல்வேறு நோய்களுக்கு எதிராக போராட உதவும் என்று பல ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் கொண்டிருக்கிறார்கள்.

1. புற்றுநோய்:
அந்திம புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த பழம் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான மற்றும் மரணம் நோய்கள் போராட உதவுகிறது கூழ் ஃபிளாவனாய்டுகளின் உள்ளது. இது புற்றுநோய் செல்கள் பெருக்கம் குறைக்கும் சக்தி வாய்ந்த கலவைகள் உள்ளன நஷ்டம், quercitin மற்றும் kaemferol கொண்டிருக்கிறது. அந்திம பழம் சுவாரசியமாக எதிர்ப்பு மார்பக புற்றுநோய் பண்புகள் வழங்குகிறது.

2. இதய நோய்:
அந்திம இதனால் பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்கு எதிராக பாதுகாத்தல் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு கூடாது. அந்திம சாறு 1 கண்ணாடி தினசரி இதய துடிப்பு கூடாது. அந்திம இதய சுகாதார ஊக்குவிக்கிறது பாலிஃபினாலை இரண்டாவது மிக உயர்ந்த பட்டம் கொண்டிருக்கிறது. Litchis எதிர்ப்பு ஆக்சிடன்ட் தற்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது கண்புரை மற்றும் தொகுதிகள் அனைத்து இதய நோய்கள் முன்னேற்றம் குறைவடைகிறது.

4.பொட்டாசியம் 
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் பொட்டாசியம் குறைந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரியவந்து உள்ளது.

பொட்டாசியத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்வது இதயத்தை பாதுகாக்க சிறந்த வழியாகும். இது பழம் மற்றும் காய்கறிகளில் தாராளமாக கிடைக்கிறது. இதயத்தையும், எலும்புகளையும் பாதுகாக்க உங்கள் உணவில் தினசரி பொட்டாஷியத்தை சேர்த்துக் கொண்டாலே போதும். பொட்டாசியம் இதயம் இயங்க தேவையான முக்கியமான சத்து. ஒவ்வொரு ஆணும் ஒரு நாளைக்கு 4.7 கிராம் பொட்டாசியம் எடுத்துக் கொள்வது, இதயத்துக்கு, உடலுக்கு ரொம்ப நல்லது. விளையாட்டு வீரர்களும் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம்.

லிச்சி பழம் ஒரு கப் உங்கள் உடல் தினசரி தேவை என்று 4,700 மி.கி. 325 வழங்குகிறது.இதில் உள்ள ஒரு எலக்ட்ரோலைட்  தசைகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பராமரிக்க உதவுகிறது .மேலும் பொட்டாசியம் நம் உடலின் செல்களில் உள்ளது. இதயம், தசைகள், செல்கள், ஆர்கன்கள், நரம்புகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் இன்றியமையாதது. கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு, ரத்தத்தில் அமில-கார அளவை சீராக வைக்கவும் இது உதவுகிறது.

ரத்தத்தில் பொட்டாசியம் சரியான அளவில் இருப்பது மிக அவசியம். அதிகம் ஆனாலோ, குறைந்தாலோ இதய பாதிப்பு ஏற்படலாம். ரத்தத்தில் பொட்டாசியம் அளவை சரிவர பாதுகாக்க உடல், செல்களில் சேமித்து வைத்த பொட்டாசியத்தை பயன்படுத்துகிறது. உணவு பானங்களில் இருந்து கிடைக்கும் பொட்டாசியம் அதிகமானால் சிறுநீர், வியர்வை, ஜீரண மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. 

உடலில் பொட்டாசிய அளவு குறைந்தால் தசைகள் பலமிழக்கும். பக்கவாதம் ஏற்படலாம். மலட்டுத் தன்மை, எலும்புகள் பலவீனம், இதயக் கோளாறுகள் ஏற்படலாம். வாந்தி, பேதி காரணமாக பொட்டாசிய குறைபாடு ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம் அதிகமாவதை 'ஹைபர்கலெமியா' (hyperkalemia) எனப்படுகிறது. சிறுநீரகம் பொட்டாசியத்தை சரிவர வெளியேற்றாவிட்டால் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகிவிடும். இதனால் இதயம் பாதிப்படையும். 


 5. செரிமானம்: 
அந்திம வலுவான செரிமானம் வைத்திருக்கும், ஒரு சுத்தமான வயிற்றில் பராமரிக்கிறது பசியை அதிகரிக்கிறது மற்றும் வயிற்றில் நெஞ்செரிச்சல் மற்றும் எரிச்சல் உணர்வு குணமாகி. இது உடலில் உள்ள ஆற்றல் மட்டங்கள் மேம்படுத்துகிறது மற்றும் குடும்ப நன்றாக இருப்பது பங்களிக்கிறது. அந்திம விதை குடல் பிரச்சினைகள் பயன்படுத்தப்படும் மற்றும் குடல் புழுக்கள் உடல் விடுவித்து இது கட்டுப்படுத்துகிற பண்புகளை கொண்டுள்ளது. Litchis குடல் பிரச்சினைகள் கட்டுப்பாடுகள் மற்றும் கலவைகள் இருந்து இலவச வயிற்றில் வைத்து பெருங்குடல் சுத்தம் செய்ய உதவும் கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டிருக்கிறது.


 6.ஆரோக்கியமான எலும்புகள் பராமரிக்கிறது
அந்திம சக்திவாய்ந்த எலும்புகள் ஆதரிக்கிறது மற்றும் உடையக்கூடிய எலும்புகள் உறுதிப்படுத்துகிறது தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்கள் கண்டுபிடிக்க பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஒரு பணக்கார ஆதாரமாக உள்ளது. துத்தநாகம் இணைந்து, தாமிரம் எலும்புகள் சுகாதார பராமரிக்கிறது கால்சியம் ஜீரணம் அதிகரிக்கும் வைட்டமின் டி திறன் கூட்டுகிறது.


7.வைட்டமின் சி
வைட்டமின் சி, உடல் இயற்கையாகவே உற்பத்தி இல்லை என்று ஒரு வைட்டமின் ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது காரணிகளை எதிரான அபிவிருத்தி மற்றும் தீங்கு சார்பு அழற்சி இலவச தீவிரவாதிகள் தேடுவர் உடலில் உதவுகிறது. இது குளிர், காய்ச்சல், மற்றும் புண் தொண்டையின் பாதிக்கப்பட்ட அந்த நன்மை. அந்திம உடலில் மிகுந்த ஊட்டச்சத்து பெற செரிமானம் உதவுகிறது. வைட்டமின் சி நமது தோல், எலும்புகள் மற்றும் திசுக்கள் நல்லது எனவே நமது உடலில் ஒரு மிக முக்கியமான வைட்டமின்.

லிச்சி பழம் 1 கப் பரிமாறப்படும் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவைகளை விட 100 சதவீதம் வழங்குகிறது வைட்டமின் சி ஒரு நல்ல ஆதாரமாக இருக்கிறது. வைட்டமின் சி, இரத்தப்போக்கு தடுக்க காயங்களை ஆற்றுவது மற்றும் கொலாஜன் உருவாக்க உதவுகிறது. வைட்டமின், சர்க்கரை நோய், மற்றும் பொது வாழ்க்கை எதிர்பார்ப்பு காரணமாக இருக்கலாம். வைட்டமின் சி அதிக அளவு சாப்பிடும் பெரும்பாலும் உணவுத்திட்ட அலுவலகம் படி, தடுக்க மற்றும் சளி போன்ற சிறிய நோய் சிகிச்சை, ஆனால் முடிவு கலந்துவிடும் படிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

 8, Oligonol: 
Oligonol அந்திம பழம் எக்கச்சக்கமாக காணப்படுகின்றன குறைந்த மூலக்கூறு எடை பாலிபினால் ஆகிறது. Oligonol பல எதிர்ப்பு ஆக்சிஜனேற்றி எதிர்ப்பு காய்ச்சல் வைரஸ் நடவடிக்கைகள் உள்ளது. இது, இரத்த ஓட்டம் மேம்படுத்த உதவுகிறது எடையை குறைக்கிறது மற்றும் தீங்கு UVA கதிர்கள் இருந்து தோல் பாதுகாக்கிறது. Oligonol, ஆழ்ந்த கொழுப்பு குறைகிறது ஓரம்கட்டி இரத்த ஓட்டம் எழுப்புகிறது, பிந்தைய உடற்பயிற்சி சோர்வு குறையும், சகிப்பு தன்மை எழுப்புகிறது அத்துடன் முக கோடுகள் மற்றும் பழுப்பு புள்ளிகள் குறைக்கிறது.

9, வைட்டமின் பி: 
லிச்சி மேலும் பி வைட்டமின்கள் தயாமின், ரிபோப்லாவின், நியாசின், பி 6 மற்றும் ஃபோலேட் ஆதாரமாக இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தும் மற்றும் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடு அதிகரிக்கிறது பீட்டா கரோட்டின் ஒரு உயர் நிலை உள்ளது. பி வைட்டமின்கள் நீங்கள் சாப்பிட உணவு இருந்து உங்கள் உடல் சாறு சக்தி உதவும். அவர்கள் இரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்தில் முக்கியம். போதுமான ஃபோலேட் உட்கொள்ளும் உங்கள் உடல் புதிய செல்கள் உற்பத்தி தேவையான மற்றும் பிறப்பு குறைபாடுகள் தடுக்க முக்கியமானதாகும். குழந்தை பருவமுள்ள பெண்களுக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் படி, தினசரி ஃபோலேட் 400 மைக்ரோகிராம் பெற வேண்டும். லிச்சி பழம் ஒரு கப் ஃபோலேட் 27 மைக்ரோகிராம் வழங்குகிறது.


10.பாலிபெனோல்ஸ்
பாலிபெனோல்ஸ் இயற்கையாகவே ஆக்சிஜனேற்ற செயல்பட என்று கெமிக்கல்ஸ் நடைபெற்று வருகிறது. அவர்கள் வயதான விளைவுகளை எதிர்கொள்வதற்காக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் தடுக்கும் திறன் உடையவை. 

மேலும் விபரங்களுக்கு ...
http://www.stylecraze.com/articles/amazing-health-benefits-of-litchis/


லிச்சி பழங்களின் நோய்த் தாக்குதல்..

பீகாரில் பழுக்காத லிச்சி பழங்களைச் சாப்பிட்டதால் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, சுமார் 50க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன. சமீபகாலமாக பீகார் குழந்தைகளுக்கு மர்ம நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இதில் பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், குழந்தைகளின் மரணத்திற்கு பழுக்காத லிச்சி பழங்கள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனவே, லிச்சி பழங்களின் மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் பழுக்காத லிச்சி பழத்தில் குழந்தைகளின் மூளையைத் தாக்கும் மிக மோசமான வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முசாபர்பூர் லிச்சி பழங்கள் சுவையில் தனிப்பெயர் பெற்றவை. இனிப்பான சாகி வகை லிச்சி பழங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம். இம்முறை லிச்சியின் விளைச்சல் அம்மாநிலத்தில் அமோகம் எனவே, சரியாக பழுக்காதளும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றைப் பெரியவர்கள் சாப்பிட்ட போதும், குழந்தைகளைத் தான் அப்பழத்திலுள்ள வைரஸ் கடுமையாகத் தாக்கியுள்ளது.

 முசாபர்பூர் மருத்துவமனையில் குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் குறித்த முதல்கட்ட விசாரணையில், அக்குழந்தைகள் அனைவருக்கும் 3 முதல் 5 வயது எனவும், அவர்கள் அனைவரும் அதிகளவில் பழுக்காத லிச்சி பழங்களை சாப்பிட்டதும் தெரியவந்தது. 


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள்!! ஒரு விழிப்புனர்வு பார்வை..


அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.
அவை:
1. திரும்ப வரமாட்டீர்கள்…
இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.
போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.
எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும். 
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும்.
என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள். இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.
அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.
கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள்.
சுமார் 13, 14 வருடங்களுக்கு முன்பு எங்களின் நெருங்கிய உறவினர் தம் சூழ்நிலைகளின் (...???). காரணமாக தம் இளம் மனைவி, சிறிய குழந்தையைப் பிரிந்து அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து... இறுதியாக நியூயார்க் மன்ஹாட்டனில் பணி புரிந்து கொண்டிருந்தார்...! அது சமயம் மற்றொரு நெருங்கிய உறவினர் அவர் மூலம் அமெரிக்கா செல்ல தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருக்கும் போது அவரும் அங்குள்ள நடைமுறை சிக்கல்களை தன்னால் இயன்ற அளவுக்கு எடுத்துக் கூறியும் இவருக்குப் புரியவில்லை... அல்லது புரிய விரிம்பவில்லை...!!!
அது சமயம் அமெரிக்காவிலிருந்து அவர் எழுதிய கடிதத்தினை நான் படிக்க நேர்ந்தது...! கடிதத்தின் இறுதி வாசகம்... "அமெரிக்காவில் கடைசி ரயிலை தவற விட்டவன் வசதியானவனாக இருப்பின் அவன் தன் உயிரை இழக்கிறான்...? இளம் பெண்னாக இருப்பின்... தன் கற்பை இழக்கிறாள்....??"
இது எநஎதளவுக்கு உண்மையான தகவல் என்பது எனக்கு தெரியாது...! ஆனால் கடிதத்தில் கண்ட மேற்படி வாசகங்கள் உண்மை....!!!

ஆக்கம் மற்றும்  தொகுப்பு  மு.அஜ்மல் கான்.

Saturday, 14 June 2014

மதுரை ஹாஜி முகமது மெளலானா சாகிப் (இந்திய விடுதலைப் போராட்ட தியாகி)!! ஒரு சிறப்பு பார்வை..

ஹாஜி முகமது மெளலானா சாகிப் என்ற மதுரை மௌலானா சாகிப் (1886 - 1957) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமியர். 

 பிறப்பும்இளமையும் : 
காங்கிரஸ் பேரியக்கம் தோன்றி ஓராண்டு கழிந்தபோது மதுரை முனிச்சாலையில் வாழ்ந்த ஹாஜி முகம்மது அசனுதீன் - மாஜான் பீவி இணையருக்கு 1886 ஆம் ஆண்டு ஹாஜிமுகம்மது பிறந்தார். இவரது குடும்பம் இசுலாமிய நெறிமுறைகளைப் பின்பற்றும் இறைப்பற்று மிக்க குடும்பமாகும். தனது தொடக்கக் கல்வியை ஆங்கிலவழிக்கல்வி மூலம் பெற்ற ஹாஜிமுகம்மது பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜிமுகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில்பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிக்க காரணத்தால் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை ஹாஜிமுகம்மது படித்து அன்றாடம் தேச நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனித்து வந்தார். ஆங்கிலேயக் கப்பல் கம்பனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மௌலானாவின் தேசப்பற்று ஆர்வத்தை அதிகமாக்கின. முகமது மெளலானா 1910இல் முதன்முதலில் அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டார். இவரது பேச்சு பொருள் பொதிந்ததாகவும், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள் இவற்றைத் துல்லியமாக விளக்கும் வகையில் இருக்குமென்பதால், இவரது பேச்சை மக்கள் விரும்பிக் கேட்பர். பல அறிஞ்சர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் இவைகளிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி பேசும் பாங்கு அந்த நாளில் மிக அரிதானது. இவர் அரசை எதிர்த்து அழுத்தமான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பேசினால், அரசுத் தரப்பினர் அச்சம் கொள்வர்.

சுதந்திர வீராவேசம்:
1921இல் நிலக்கோட்டையில் கள்ளுக்கடை மறியல் நடந்தது. அப்போது மறியலை எதிர்த்து உள்ளூர் குண்டர்கள் சிலர் கள்ளுக்கடை முதலாளிகளின் ஏவலால் சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் நடத்த அங்கு ஓர் கலவரம் உருவாகி, கடைகள் சூறையாடப்பட்டன. காவல்துறை தொண்டர்கள் மீது கொள்ளை வழக்கைப் பதிவு செய்து வழக்கு நடத்தினார்கள். அந்த வழக்கில் ஹாஜி முகமது மெளலானா அவர்களும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போனபோது இவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அதில் இவர் பேசிய பேச்சுக்காக, மக்களைத் தூண்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு மறுமுறை இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தீவிரமான மதப் பற்று உள்ளவர் இவர். அதே அளவுக்கு தேசபக்தியும் மிகுந்தவர். 

மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மன் :
இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்திருக்கிறார். எந்த நேரத்திலும் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வந்தவர்.
அப்போதைய மதுரை மாவட்டம் மிகப் பெரிய அளவுடையது. அங்கெல்லாம் இவர் சுற்றுப் பயணம் செய்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊக்கினார். கம்பீரமான இவரது தோற்றமும், பேச்சும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சுதந்திர வீராவேசமும் மக்களிடையே ஒரு எழுச்சியை ஊட்டுவதாக அமைந்திருந்தது. 1921இல் இவர் நிலக்கோட்டை தாலுகாவில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். கள்ளுக்கடைகளுக்குத் தொண்டர்களோடு போய் அங்கு குடிக்க வரும் மக்களை பணிவோடு வேண்டிக் கொள்வார். குடிக்காதீர்கள். குடித்தால் நீங்களும், உங்கள் குடும்பமும் அழிந்து போகும். மனத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போதையில் மனிதர்களை இருக்க வைத்து வெள்ளைக்காரன் இந்த நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறான். பெற்ற பொன்னாட்டையும், பிறந்த ஊரையும் அன்னியனுக்கு அடிமையாக்கப் போகிறீர்களா? குடித்துவிட்டு போதை மயக்கத்தில் சாக்கடையில் விழுந்து கிடக்கப் போகிறீர்களா? சுதந்திரப் பொன்னாட்டைப் பார்க்கப் போகிறீர்களா. அப்படியானால் குடியை இன்றோடு நிறுத்தி விடுங்கள் என்பார்.

அதற்கு பதில் என்ன தெரியுமா? குடிகாரர்கள் ஏசுவார்கள். சிலர் அடிப்பார்கள். எச்சிலை உமிழ்வார்கள். கள்ளுக்கடைக் காரர்கள் அடியாட்களைக் கொண்டு தொண்டர்களை அடித்து விரட்டுவார்கள். இத்தனையும் எந்த முணுமுணுப்புமின்றி காந்திய வழியில் அகிம்சை முறையில் இவர் எதிர் கொள்வார். எத்தனை பெரிய மனிதர். இப்படி குடிகாரர்களிடமும், கள்ளுக்கடை அடியாட்களிடமும் அடிவாங்குகிறாரே என்று மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம், ஆதரவு பெருகி வரத் தொடங்கிற்று. தூய வெண்ணிற ஆடை, இஸ்லாமியருக்கு உரிய தாடி, தலையில் குல்லாய், கரங்களில் மூவண்ணக் கொடி, கண்களில் சுதந்திர வெறி இவற்றோடு இந்தத் தூயவரைப் பார்த்த மக்கள் இவருக்கு மரியாதை செலுத்தத் தொடங்கினர்.

இவரை நேர்மையான முறையில் எதிர்கொள்ள முடியாத ஆளும் வர்க்கமும் அவர்களது அடிவருடிகளும் இவரை ஒரு கொள்ளை வழக்கில் சம்பந்தப் படுத்தி வழக்குத் தொடுத்தனர். வழக்கு நடந்து செஷன்ஸ் கோர்ட்டுக்குச் சென்றது. அங்கு இவருக்கு எதிரான எந்தப் புகாரும் போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை என்று இவர் விடுதலையானார். பொய் வழக்குப் போட்டுவிடுவது எளிது. ஆனால் அந்தப் பொய்யிலிருந்து விடுபட்டு உண்மையை வெளிக் கொணர்ந்து வெற்றிகரமாக வெளிவருவது என்பது எல்லோராலும் முடிகிற காரியமா. ஹாஜி முகமது மெளலான சாகிப் இதில் வழக்காடி வெளியே வந்தார்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் சென்னை மாகாண காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அங்கு இவரது பேச்சு மதுரை மாவட்டத்தை விட்டு வெளியே வந்து சென்னை மாகாண பிரதிநிதிகளின் மத்தியில் வெளிப்பட்டது. இவரது பேச்சில் இருந்த வேகம் ஆட்சியாளர்களை மிரளவைத்தது. செடிஷன், அதாவது ராஜத்துரோகம், கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு இவர் மீது போடப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. 1932ஆம் வருடம் மதுரை நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

 இவரது இரண்டு கண்கள் என்றால் தேசபக்தி, மதபக்தி!
தேசத்தை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அந்த அளவுக்கு இவர் தனது மதத்தையும் மதித்தார். இரண்டும் இவரது இரண்டு கண்கள். இப்படிப்பட்ட தேசிய முஸ்லிம்கள் அன்று நாட்டு சுதந்திரத்துக்குப் பாடுபட்டதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இவரது பெயர் சுதந்திரப் போராளிகள் வரிசையில் மதுரையில் சிறப்பாகப் பேசப்பட்டது. மதுரை முனிசிபல் உதவி சேர்மனாகவும், பின்னர் சேர்மனாகவும் இருந்து மதுரை நகரத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். சிறப்பாக தென் மாவட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை மிகச் சிறப்பாகப் பேணிக் காப்பாற்றப்பட்டது.

தொழுகை தவறாதவர் :
எந்த ஊருக்குப் போனாலும் சரி, எந்த அவசர வேலைகளுக்கிடையிலும் அந்தந்த வேளைகளில் தொழுகைக்குப் போவதை நிறுத்தியதே கிடையாது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறையிலிருந்த முஸ்லீம்கள் தொழுகை நடத்தத் தனி இடம் ஒதுக்கித் தரப் போராடி வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல, இருண்டு கிடந்த சிறைச்சாலைகளில் விளக்குகளும், குடிதண்ணீர் வசதிகளும் இவர் வாங்கித் தந்தார். இவர் 1886இல் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஹாஜி முகம்மது ஹாசேமுது. வாழ்க ஹாஜி முகம்மது மெளலான சாகிப் புகழ்!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.