Tuesday, 10 February 2015

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் கொடுத்த தீர்ப்பு !!


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. டெல்லியில் முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகளும் பாஜக-வுக்கு 32.2 வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே தினத்தில் பதவி ஏற்கும் அர்விந்த் கேஜ்ரிவால்கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதிதான் தனது 49 நாட்கள் ஆட்சிக்குப் பிறகு லோக்பால் மசோதா முறியடிக்கப்பட்டதை அடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். 

தற்போது சரியாக ஒரு ஆண்டு கழித்து அபார வெற்றியுடன் பிப்ரவரி 14ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் கேஜ்ரிவால் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.மதிப்பிற்குரிய புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் நுபுர் சர்மாவை, அர்விந்த் கேஜ்ரிவால் 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 

2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கோட்டையாக இருந்த டெல்லியை தன்வசமாக்கிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியின் 7-வது முதல்வராக டிசம்பர் 28-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றார். 

அப்போது 3 முறை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஷீலா திக்சித்தை 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் கேஜ்ரிவால். பிறகு 49 நாட்கள் ஆட்சி செய்த பிறகு பல்வேறு இடையூறுகள் ஏற்பட பிப்ரவரி 14ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 என் கருத்து..


உண்மை மோடி பிரச்சாரம் செய்தார கிரன்பேடி நேற்று வந்தவர் அண்ணாஅஸாரே பார்ட்டி இவரை புறம்தள்ளினார்ள் அலை ஏன் வீசவில்லை? 

தமிழ்நாட்டிலும் மாற்றம் எதிர்நோக்கிககாத்திருக்கிறார்கள், டெல்லிந டையைபார்த்து இங்கு மாற்றம் வரலாம்?

இதற்கு முன் ஆட்சியில் கரன்ட் பில்லை பாதியாக குறைத்ததுதான் காரணம்! 

Free ya கொடுத்தா பினாயிலையே வாங்கி குடிக்கிறவங்கதானே நம் மக்கள்.!!!


காங்கிரசின் ஊழலால் வெறுப்படைந்திருந்த மக்களிடத்தில் வளர்ச்சி என்ற மாயையைக் காட்டி வந்தார்கள்...... ஆனால் வந்த சில மாதங்களில் அடிப்பொடிகளை விட்டு மதவெறியை அரங்கேற்ற நினைத்தார்கள்.... இவர்களுடைய போக்கு மக்களிடத்திலே இவர்கள் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது..... இவர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கடில்லில் ஏறியிருக்கிறார்கள் என்பதை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்..... இனி மதவெறி அரசியலா அல்லது மதச்சார்பற்ற ஆட்சியா என்பதை இவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.....


கெஜ்ரிவால் ஒருமாசம் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை ஒருமாச கரன்ட் பில்லாவது குரையுமே என்ற ஆசையில்தான் ஓட்டு போட்டார்கள்.!!!

2வது காரணம் காங்ரசை பிடிக்காதவர்கள் பாவம் யாருக்குதான் ஓட்டு போடுவாங்க அந்த ஓட்டெல்லாம் கெஜ்ரிவாலுக்கு போட்டுட்டாங்க...!!!!!


மாறாக பாஜக தனது ஆட்சிக்கு விளம்பரம் தேடும் செயல்பாடாக இருப்பதோடு, செயல்திறனுள்ள அரசாக இல்லை. மேலும், பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. மத வாத ஆட்சியாளர்களுக்கு மரண அடி நம் நாட்டிற்கு தேவை மதச்சார்பற்ற அரசு. வளர்ச்சி வளர்ச்சி என்று மக்களை ஏமாற்றி தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சியில் அமர்ந்தீர்கள். இனி யாரும் நம்மளை கேள்வி கேட்க முடியாது என்று இறுமாப்பு கொண்டு மக்களின் வரிப்பணத்தில் அயல் நாட்டு உறவு என்ற போர்வையில் நாடு சுற்றுவது,10 லட்சம் ஆடை, வீண் விரயம் செய்வது இனி நடக்காது. சிறுபான்மை மக்களை அச்சுறுத்த நினைப்பது, இந்திய அரசியல் அமைப்பிற்கெதிராக குறிப்பிட்ட மத நூலை தேசிய நூல் என திணிப்பது, குறிப்பிட்ட மொழியை திணிப்பது இதுவெல்லாம் இனி நடக்காது. இனி மேல் கர் வப்சி எல்லாம் இனி டர் வாப்சி தான். தூய்மை இந்தியா என்று சொன்னதெல்லாம் பொய்மை ஆகி கோட்சேக்கெல்லாம் இனி கோயில் கட்ட முடியாது இன்று இந்தியா மதச்சார் பற்ற இந்தியா என்று நிருபித்துள்ளது. என்பதை விட இங்கு உள்ள மக்கள் மதச்சார் பின்மையை பின்பற்றுகிறோம் என்று நிரூபித்துள்ளனர்.

இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி!! மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டியன் ஒற்றுமை ஓங்குக...

தமிழ்நாட்டிலும் இது போன்ற ஒரு தேர்தல் புரட்சி ஏற்பட்டு இரண்டு கழகங்களையும் ,இரண்டு தேசிய கட்சிகளையும் ,இரண்டு காளான் கட்சிகளையும் , இரண்டு சாதீய கட்சிகளையும் இரண்டு விதண்டாவாத கட்சிகளையும் (எல்லாம் எவை எவைகள் என்று புரிந்து இருக்கும் )தூர எரிந்து தமிழகத்தை விட்டு விரட்டி அடித்து துய்மை அரசியலை கொண்டு வரவேண்டும் ...நடக்குமா ? வோட்டுக்கு 2000 பெற்று வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை அது நடந்தேறுமா?


எங்களுக்கு ஊழல் முதல்வர் வேண்டாம்...!
காலில் விழும் அடிமை கூட்டம் வேண்டாம்...!
குடும்ப அரசியல் நடத்தும் தாத்தா வேண்டாம்...!

தமிழ் ஈழம் பேசி மக்கள் உணர்ச்சியை தூண்டும் அரசியல் வேண்டாம்...!
சமூக நீதிக்கு வன்முறை தான் முடிவு என்று சொல்லும் கட்சியும் வேண்டாம்..!
ஜாதி வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் வேண்டாம்..!
சிறுபான்மை வோட்டு வங்கி கட்சிகள் வேண்டாம்...!
எங்கள் உயிர்,உடமை,உரிமை,கல்வி,சுகாதாரம் பேணும் கட்சி தான் வேண்டும்.....

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


Monday, 9 February 2015

நேரம் மற்றும் கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) பற்றிய சிறப்பு பார்வை..

பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை ‘0’ டிகிரி என வைத்தனர். 
இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘கிரீன்விச்‘ என்ற நகரின் உள்ள ராயல் வானிலை ஆராய்ச்சி மையத்தின் இடைநிலை சூரிய நேரத்தை நண்பகல் நேரத்தை 12.00மணி என மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.இந்த நேரத்தை கிரீன்விச் மீன் டைம் என்றும் கூறுவர்.அதாவது GMT - Greenwich Mean Time என்பர்.(இந்த கிரீன்விச் நகரத்தை மையமாக வைத்து வடக்கில் 180 பாகை (டிகிரி) எனவும்,தெற்கில் 180பாகை (டிகிரி)எனவும் பூமியின் வட்டத்தை கணக்கிட்டு இத்தனை பாகை,இத்தனை கலை,இத்தனை விகலை தூரத்தில் ஓர் இடம் அமைந்து உள்ளது என்று கணக்கிட்டு அறியலாம்.இதுவே இன்றைக்கு புவியடங்காட்டி என்னும் GPS (Global Positioning System) முறையில் கூகுள் வரைபடம் உள்ளிட்ட எந்த முறை புவியிடங்காட்டுதல் முறையிலும் குறிப்பிட்ட இடத்தை காண முடிகிறது.)
இந்த ‘0‘ டிகிரி ‘லாங்கிடியூடில்‘ என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன.
இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.                     
                    
இந்தியாவின் கடிகார நேரம் அலகாபாத் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூட்டை வைத்துதான் சொல்லப்படுகிறது. இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் 5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரின்விச்சில் விடியும்.
லண்டனில் இருக்கும் ‘வெஸ்ட் மினிஸ்டர்ஸ் கிளாக்‘ என்பது உலகப் பிரசித்தி பெற்றது. இதை பிக்பென் கடிகாரம் என்றும் கூறுகிறார்கள். இந்த கடிகாரம் காட்டுவது கிரீன்விச் நேரத்தைத்தான். இதில் ஒரு மணிக்கு ஒரு முறை ‘டிங்டாங்‘ என்று மணி அடிக்கும். இந்த மணிக்குதான் ‘பிக்பென்‘ என்று பெயர்.
இந்த மணி ஓசையை பி.பி.சி. வானொலி தவறாமல் ஒலிபரப்பி வந்தது. சர்வதேச பயணம் மேற்கொள்ளும் போது புறப்பட்ட நாட்டின் நேரத்துக்கும், போய்ச்சேரும் நாட்டின் நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் ஒரேவிதமான நேரத்தை கடைப்பிடிப்பார்கள்.
கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்டேண்ட்ஃபோர்டு ஃபிளெம்மிங் (Standford Fleming) என்பவர் 1876ஆம் ஆண்டு பீமியின் உருண்டை வடிவத்தை 360 பாகையாக (டிகிரி) கொண்டு அதன்படி ஒவ்வொரு 15 பாகைக்கும் (டிகிரிக்கும்) ஒரு மணி நேரம் என கணக்கிட்டு 24 மணி நேரத்தை உலகம் முழுவதும் பயன்படும் விதத்தில் 24மணி நேரவலயத்தை அமைத்து வெளியிட்டார்.

   கிரீன்விச் 0பாகை(டிகிரி) கற்பனைக்கோட்டை மையமாக வைத்து   வரையப்பட்ட நேர்கோட்டிலிருந்து நிலநடுக்கோடு என்னும் பூமத்திய ரேகையை தொடும் இடத்தை   0பாகை (டிகிரி) என  கணக்கிட்டு பூமத்திய ரேகையிலிருந்து கிழக்கிலும்,மேற்கிலும் பசிபிக் பெருங்கடலிலுள்ள 180 பாகை (டிகிரி) வரை EAST & WEST என  கணக்கிட்டு IST -(International Date Time) உலக நாள்காட்டி நேரம் குறிக்கப்படுகிறது.

          
   உதாரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் GPS முறைப்படி அல்லது சோதிடவியல் முறைப்படி சத்தியமங்கலம் அமைந்துள்ள இடம்11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு என்று குறிப்படப்பட்டு இருக்கும்.இதில்  (11 Degree 30 Minutes) 11பாகை 30 கலை வடக்கு என்று குறித்துள்ளதை வைத்து பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில்  11பாகை 30 கலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்.அடுத்து 77டிகிரி 14 விகலை தூரத்தில் கிழக்கு என்று குறிக்கப்பட்டுள்ளதை கிரீன்விச் நகரத்தின் 0டிகிரி நேர்கோட்டிலிருந்து கிழக்கில் 77 டிகிரி 14 விகலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என அறியலாம்.

                    அதாவது வடக்காக மற்றும் கிழக்காக (11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு) வெட்டும் அல்லது இணைக்கும் இடம் சத்தியமங்கலம் என தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறாக உலகின் அனைத்து இடங்களையும் அறியலாம்.
ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது. 

நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்? 
அணு மணிப்பொறி (Atomic Clock) துணையோடு என்று தெரிந்திருக்கும். இதற்கு பயன்படுத்தப்படும் அணு/தனிமம் சீசியம் (Caesium). அமரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கடிகாரத்தில் இது கணக்கிடப்படுவதில்லை. உலகெங்கிலும் 50 நாட்டு ஆராய்ச்சிக்கூடங்களில் இருக்கும் 300 அணு கடிகாரங்களின் சராசரியின் அடிப்படையில் நேரம் கணக்கிடப்படுகின்றது. இது சர்வதேச அணு நேரம் (International Atomic Time). இதனுடன் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நெடு நொடிகள் (Leap seconds) சேர்க்கப்பட்ட பின் கிடைப்பதே ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (Coordinated Universal Time) அல்லது கிரீன்விச் நேரம் (GMT). பிறகு அந்தந்த ஊர்களின் புவியியல் அமைப்பிற்கு ஏற்ப சில மணி நேரங்கள் கூட்டியோ கழித்தோ குறிக்கப்படும்.
Leap Seconds எதற்கு சேர்க்கப்படுகிறது என்றால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் ஒரு நூற்றாண்டுக்கு 3 மில்லி செகன்ட் வீதம் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே வருகிறது (டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரம் தான்). ஆனால் அணு நேரம் மாறாது. அதனால் இவ்விரண்டையும் சரிகட்ட சேர்க்கப்படும் நொடிகள் தான் நெடு நொடிகள்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்

Sunday, 8 February 2015

பிரேதப் பரிசோதனை பற்றிய விழிப்புணர்வு பார்வை..

மரணங்களுக்குப் பின்னால் உள்ள எத்தனையோ புதிர்களைத் தீர்க்கக்கூடிய இடம் பிரேதப் பரிசோதனை அறை. 
ஆனால், இந்தியாவில் பெரும் பாலான பிரேதப் பரிசோதனைகள் முறையாகச் செய்யப்பட வில்லை என்கிறார் மருத்துவர் டிகால்.
சட்டம் சார்ந்த சிறப்பு மருத்துவரான இவர், பல வருட அரசுப் பணிக்குப் பிறகு, தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இணை தடயவியல் மருத்துவப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
இதுவரை 2,000 பிரேதப் பரிசோதனைகளைச் செய்துள்ளார். 2ஜி வழக்கில் சர்ச்சைக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படும் சாதிக் பாட்சாவின் உடலைப் பரிசோதனை செய்தவர் இவர்தான்.
தடயவியல் ஆய்வுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை முறைகளில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசுகிறார்.
தடயவியல் ஆய்வில் பிரேதப் பரிசோதனையின் பங்கு என்ன?
*********************************************************************************************
தடயவியல் என்பது கடல். அதில் சிறிய பகுதி தடயவியல் மருத்துவம். ஒரு குற்றம் மனித உடல் சார்ந்த குற்றம் எனில், பிரேதப் பரிசோதனை மருத்துவரின் அறிக்கை அதற்கு அவசியம்.
இந்தியத் தடயவியல் துறையிடம் எவ்வளவோ வசதிகள் இருந்தும் நிறைய மரணங்கள் மர்மமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?
பெரும்பாலும், பிரேதப் பரிசோதனை மேஜையிலேயே மரணத்துக்கான காரணத்தை மருத்துவர் கண்டுபிடித்துவிட முடியும். வசதிகள் இருந்தாலும், நமது நாட்டைப் பொறுத்தவரை பிரேதப் பரிசோதனை நடைமுறைகளில் நிறையக் குளறுபடிகள் உள்ளன.
பிரேதப் பரிசோதனைக்கான சடலத்தைக் காவல் துறையினர் அளிக்கும்போதே மரணத்துக்குள்ளானவர் என்னென்ன காரணங்களால் இறந்திருக்கக் கூடும் என்ற தங்கள் விசாரணை விவரங்களைச் சான்றிதழாகக் கொடுத்து விடுகிறார்கள். காவல் துறையின் அறிக்கையையே அரசு மருத்துவரும் கொடுத்துவிட்டால் அந்த வழக்கே முடிந்து விடும். இந்தியாவில் எத்தனை வழக்குகளில் காவல் துறையினர் சொல்வதற்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது, சொல்லுங்கள்? அதனால்தான் சொல்கிறோம். புலனாய்வு செய்யும் போலீஸும் அரசு மருத்துவரும் மட்டும் போதாது. சந்தேகப் படும் தரப்பு சார்பில் மருத்துவ நிபுணர் பிரேதப் பரிசோதனை அறையில் இருந்தால் மட்டுமே பிரச்சினை தீர்க்கப்படும்.
மேல்முறையீடு செய்வது சந்தேகம் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லையா?
பெரும்பாலும் பரிசோதனை முடிக்கப்பட்ட அன்றே சடலத்தை எரித்துவிடுவார்கள். இல்லையென்றால், அடுத்த நாள் காலை அழுகிவிடும். அதற்குப் பிறகு என்ன செய்வது?
அப்படியெனில், உண்மையாகவே பிரேதப் பரிசோதனை நடப்பதில்லை என்கிறீர்களா?
மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறைக்கே பெரும் பாலும் போவதில்லை. எம்.டி. படிக்கும் மாணவர்கள்தான் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். இவர்கள் கையெழுத்து மட்டுமே போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். எம்.பி.பி.எஸ். படித்த யாரும் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்ற அனுமதி உள்ளது.
மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. வெட்டுக் காயத்தால் இறந்தவர் தொடர்பான வழக்கு அது. பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய மருத்துவர் உள்ளேயே போகவில்லை. மரணத்துக்கான காரணம் ஆஸ்துமா என்பதாகவும், நுரையீரலைத் திறந்து பார்த்த தாகவும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.
பிரேதப் பரிசோதனை அறைக்கு மருத்துவர்கள் ஏன் போவதில்லை?
மருத்துவர்கள் உள்ளே நுழையும் நிலையில் அந்த இடம் உள்ளதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
பிரேதப் பரிசோதனையில் நடக்கும் தவறுகளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்?
சமீபத்தில் என்னிடம் நிபுணர் ஆலோசனைக்காக ஒரு வழக்கு வந்துள்ளது. நெல்லூரில் நடந்த ஒரு மாணவியின் மரண வழக்கு அது. நான்கு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். அந்த மாணவி, தன் கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு இறந்துவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவர் தனது கழுத்தைத் தானே நெரித்துக்கொண்டு சாவதற்கான சாத்தியக்கூறு 0.0001 சதவீதம்தான் இருக்கிறது. அப்படியிருக்க, இது வரை அதைக் கொலை வழக்காகப் பதியவில்லை. அந்த மாணவியின் பெற்றோர் இது தற்கொலை என்று நம்ப மறுக்கின்றனர். சிபிஐ விசாரணை கேட்கின்றனர். ஆந்திர உயர் நீதிமன்றமோ எந்தக் காரணத்துக்காக சிபிஐ விசாரணை என்று கேட்கின்றனர். நிபுணர் பரிந்துரைக்காக என்னிடம் வந்தனர். கழுத்தைப் பிறர் நெரிக்கும்போது, அனைத்துச் சதைகளும் அழுத்தப்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும். அதையே மருத்துவரும் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அது எப்படித் தற்கொலை வழக்கானது? பெரும்பாலான வரதட்சணைக் கொலைகளில் இப்படித்தான் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்படுகிறது.
சட்டரீதியான விசாரணையில் பிரேதப் பரிசோதனை செய்பவரின் இடம் எது?
பிரேதப் பரிசோதனை செய்பவர் ஒரு சந்தேகத்தை மட்டுமே எழுப்ப முடியும். அவர் ஒரு சாட்சி. அவ்வளவுதான். மரணத்துக்கு உடல்ரீதியான காரணங்கள் என்னென்ன என்று மட்டுமே அவரிடம் கேட்பார்கள். நீதிமன்றத்தால் எந்த வழக்கிலும் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையை நேரடியாக உணர முடியாது. மருத்துவரின் பணி என்பது அந்த உண்மைக்கு நெருக்கமாக நீதிமன்றத்தைக் கொண்டு நிறுத்துவதுதான். இருட்டுக்குள் தடவிச் செல்வதைப் போன்ற பாதை அது. உடலில் இருந்ததை விஞ்ஞானபூர்வமாக உண்மையாகச் சொன்னால் போதும். ஆனால், அந்த உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் நடைமுறைகளில் எவ்வளவோ ஓட்டைகள்!
புகார்தாரர் சார்பில் ஒரு நிபுணர் பங்குகொண்டால் என்ன வகையான மாற்றங்கள் ஏற்படும்?
பிரேதப் பரிசோதனைக்கான படிவத்திலேயே புகார் தாரரிடம், அவருடைய சார்பில் மருத்துவர் வேண்டுமா என்று கேட்பதற்கான இடம் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைகளில் புகார்தாரர் தரப்பாக தனியார் மருத்துவர்களை நியமிக்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவர்களை அனுப்பலாம். வீடியோ எடுப்பது அனைத்துப் பிரேதப் பரிசோதனைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
இப்போதைய நடைமுறைப்படி, ஒரு மருத்துவரே பிரேதப் பரிசோதனை செய்யும் நிலையில் தன்னுடைய அறிக்கையை அவர் எத்தனை காலம் வேண்டுமானாலும் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்க இயலும். ரசாயனப் பரிசோதனைக்குக் காத்திருப்பதாகக் காரணம் சொல்லலாம். ஒரு சாதாரண ஊழியரின் மூலம் அங்குள்ள சாம்பிள்களை மாற்றிவிட முடியும். மூன்று நாட்களுக்குள் ஒரு சோதனையை முடித்து அறிக்கை அனுப்பும் வகையில் அங்குள்ள உள்கட்டமைப்பையும் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.
பிணவறைகளையும் பிரேதப் பரிசோதனை அறையையும் எப்படி மேம்படுத்த வேண்டும்?
உடலின் ஒவ்வோர் அடுக்கையும் கத்தியால் வெட்டும்போதும் வேறு வேறு கையுறைகளை அணிய வேண்டும். ஆனால், அது நடைமுறையில் இல்லை. அழுக்குக் கையால் ஒரு மாதிரியை எடுத்தால் துல்லியமான முடிவுக்கு எப்படி வர முடியும்? 
பல வருடங்களாக ஒரே உடைகளை எப்படித் துவைத்துப் பயன்படுத்த முடியும்? 
கையுறை, காலுறை, மேல் கோட் உட்பட ஒரு முறையே பயன்படுத்தும் வகையில் இருத்தல் அவசியம். எல்லாவற்றுக்கும் டிஸ்போஸபிள் வேண்டும். மொத்த டிஸ்போஸபிள் உடை ஒரு செட்டுக்கு ரூ.100-தான் ஆகும்.
அதேபோல், பிணவறைக்குள்ளேயே உடைமாற்று அறை, ஷவருடன் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி, நீர் உடனடியாக உலரும் வகையில் வழுக்காத தரைகள், சடலங்களைப் பார்வையிடும் அறை ஆகியவை அவசியம். சாதாரண வீட்டின் சமையலறையிலேயே சிம்னி வசதி வேண்டும் என்கிற காலம் இது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறையில் சிம்னி கிடையாது. சடலத்தைத் திறக்கும் போது எத்தனை அழுக்குகள், கிருமிகள் வெளிவரும். அதை உறிஞ்சி மேலே அனுப்ப சிம்னி வேண்டாமா? வெளி நாடுகளில் அந்த வசதிகள் பக்காவாக இருக்கின்றன.
இந்திய மருத்துவமனைகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனால், பிணவறையும் பிரேதப் பரிசோதனை அறையும் மட்டும் ஏன் அப்படியே இருக்கின்றன?
ஒரு ஊழலான அமைப்பைச் சரிசெய்வதற்கு அனைத்து அங்கங்களிலும் மாற்றம் அவசியம். ஒரு பிணவறை நவீனமாவதை மருத்துவர் விரும்ப மாட்டார். ஏனெனில், வீடியோ கேமரா இருந்தால், எல்லா பிரேதப் பரிசோதனைகளிலும் அவர் பங்கேற்க வேண்டும். கத்தியை எடுத்து சடலத்தைக் கட்டாயமாக வெட்டிப் பார்க்க வேண்டும்.
ஆனால், இப்போது எந்த மருத்துவரும் சடலத்தைத் தொடுவதேயில்லை. ‘ஸ்வீப்பர்’ என்று சொல்லப்படும் கீழ்நிலைப் பணியாளர்கள்தான் கத்தியைக் கையாள்வார்கள். அவர்களும் முறையான கல்விப் பின்னணியோ, பயிற்சியோ இல்லாதவர்கள். ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு இரண்டு வருடம் பயிற்சி கொடுத்து இப்பணியில் நியமிக்கலாம். ஆனால், அதற்குக்கூட அரசு இதுவரை வழிவகை செய்ய வில்லை. இதுபோன்ற மாற்றத்தை மருத்துவர்களும் விரும்ப வில்லை. அரசுத் தரப்பில் கொடுக்கப்படும் நிதி எதையும் பிரேதப் பரிசோதனை முறையை மேம்படுத்துவதற்கு டீன்கள் ஒதுக்குவதேயில்லை. ஏனெனில், ஒதுக்கப்படும் நிதி குறைவு. ஒரு புதிய கத்தரிக்கோல் வாங்குவதற்கு எத்தனை ‘பார்மாலிட்டிஸ்’ நடக்கும் தெரியுமா?
வேறு என்ன செய்யலாம்?
நீதிபதி பி.என். பிரகாஷ் சமீபத்தில் ஓர் அருமையான தீர்ப்பு கொடுத்திருக்கிறார். அடையாளம் தெரியாத சடலங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பரிசோதிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்குக் கூறியுள்ளார். அவர்களுக்கு நடைமுறை அறிவுபெற சடலங்கள் தேவை. அடையாளம் தெரியாத உடல்களை மூன்று நாட்கள் குளிர்பதனத்தில் வைக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகும் யாரும் கோராத நிலையில், தனியார் மருத்துவமனை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரேதப் பரிசோதனை செய்யும் அரசு மருத்துவருக்கு உதவித்தொகை உண்டா? 
ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 500 ரூபாய்கூட உதவித் தொகை அரசு மருத்துவர்களுக்குக் கிடையாது. சமீப காலம் வரை ஒரு பிரேதப் பரிசோதனைக்கு 75 ரூபாய் கொடுத்தனர். ஊதிய கமிஷன் இப்போதுதான் 150 ரூபாயைப் பரிந்துரைத்துள்ளது. கடைநிலைப் பணியாளருக்கு ஒரு பிரேதத்துக்கு 12 ரூபாய் வரை கிடைக்கும்.
ஒரு பிரேதப் பரிசோதனை நிபுணராக மரணத்தையும், மரணமடைந்த ஒரு உடலையும் எப்படி விளக்குவீர்கள்?
எங்கள் துறையில் சொல்வார்கள்: இறந்த உடலைப் பொறுத்தவரை அது உண்மையை மட்டுமே பேசும். அது பேசும் மொழியை மட்டுமே மருத்துவர் தெரிந்திருக்க வேண்டும். அந்த மொழிதான் அறிவியல். இறந்த உடல் சொல்லும் அனைத்தையும் எனது அனுபவத்தையும் அறிவையும் வைத்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் கற்றது கைமண் அளவு என்பதே உண்மை. 
தொகுப்பு மு.அஜ்மல் கான்.

Friday, 6 February 2015

பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் ஏன் இருபத்தெட்டு நாட்கள் வந்தன ?

 இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.
மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.
பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.
ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.
அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.
ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.
இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.
எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.
கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.
இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்..

Thursday, 5 February 2015

வாட்ஸ்-அப் செயலியில் அதிகரிக்கும் ஆபத்து !!! WhatsApp குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?


வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது. அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.

பாஸ்வேர்டு பாதுகாப்பு : முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும்.

போட்டோரோல் : ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும். 
ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது.


மின்னஞ்சல் :வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ்சல்களை கண்டு ஏமாற வேண்டாம்.

டீ ஆக்டிவேட் : வாட்ஸ்-அப் பயன்படுத்தும் போன் ஒருவேளை தொலைந்து விட்டால் உங்களது வாட்ஸ்-அப் செயலியை உடனடியாக டீ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

லாஸ்ட் சீன் : வாட்ஸ்-அப் செயலியில் லாஸ்ட் சீன் என்ற சேவையை நிறுத்த வாட்ஸ்-அப் ப்ரோஃபைல் சென்று லாஸ்ட் சீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ப்ரோபைல் படம் வாட்ஸ்-அப் ப்ரைவஸி மெனுவில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் சென்று contacts only என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

லாக் அவுட் : வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தாத போது அதை லாக் அவுட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமான தகவல்களை முடிந்த வரை வாட்ஸ்-அப் செயலியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. 
நன்றி : தமிழ் ப்ளாக்  கம்ப்யூட்டர்.

Wednesday, 4 February 2015

தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை பற்றிய சிறப்பு பார்வை..

தமிழ்நாடு காவல்துறை பற்றி தெரிந்ததும், தெரியாததும்… 
Image result for tamilnadu police*தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
*தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
*தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல் பரப்பளவு – 130058 ச.கி.மீ.
*மொத்த காவல் பணியாளர்கள் – 113602..
*தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மண்டலங்கள் – 4.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு காவல் பொது ஆய்வாளர் (Inspector General of Police) தலைமையில் இயங்குகின்றன.
*தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆணையரகம் – 6.
தமிழகத்தில் உள்ள 6 பெரிய நகரங்களான சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்கள் காவல்துறை காவல் ஆணையாளர் (Commissioner of Police) தலைமையில் இயங்குகின்றது.
*தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் மாவட்டங்கள் – 33 (2 ரயில்வே உட்பட).
தமிழகம் 33 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள் காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) தலைமையில் இயங்குகின்றன. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் (Deputy Inspector General of Police) மேற்பார்வை செய்கிறார்.
*போலீஸ் துணை பிரிவுகள் – 247.
*போக்குவரத்துக் காவல் நிலையங்கள் – 218.
*திருச்சி ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 20.
*சென்னை ரேஞ்ச் ரயில்வே போலீஸ் நிலையங்கள் – 21.
*தமிழ்நாட்டில் 632 மக்களுக்கு 1 காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.
Image result for tamilnadu policeமுதன் முதலில் இது மதராசு நகரக் காவல்துறைச் சட்டம் 1888 (The Madras City Police Act 1888) இற்கு ஏற்பத் துவக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் 1888, ஏப்ரல் 12 இலும், Governor-General -ன் ஒப்புதல் 1888, சூன் 26 இலும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஆணையாளரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இது சென்னை மாநகர எல்லை முழுமைக்குமாகத்தான் தன் செயல் எல்லையைக் கொண்டிருந்தது.


*காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்
1] சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு (Law and Order).
2] ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை (Armed Police or Tamil Nadu Special Police).
3] பொதுமக்கள் பாதுகாப்பு (Civil Defence and Home Guards).
4] பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID).
5] கடலோர காவல் துறை (Coastal Security Group).
6] குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID).
7] பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing).
8] செயல்பாடு – தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations – T.N. Commando Force & Commando School).
9] இரயில்வே காவல்துறை (Railways)
10] சிறப்புப் பிரிவு – உளவு மற்றும் பாதுகாப்பு (Special Branch , CID including Security).
11] குற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)
12] மதுவிலக்கு அமல் பிரிவு (Prohibition Enforcement Wing).
13] குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights).
14] பயிற்சிப் பிரிவு (Training).
15] சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights).
16] போக்குவரத்துக் காவல் பிரிவு (Traffic).
பயிற்சி நிறுவனங்கள்:
அ) போலீஸ் அகாடமி – 1.
ஆ) Regl. போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சி மையம். – 1.
இ) போலீஸ் பயிற்சி பள்ளி (நிரந்தரம்) – 8 (தூத்துக்குடி / திருச்சி / வேலூர் / கோயம்புத்தூர் / ஆவடி / விழுப்புரம் / சேலம் / மதுரை).
ஈ) போலீஸ் பயிற்சி கல்லூரி – அசோக் நகர்.
தமிழ்நாடு காவல் துறையில் பணி புரிபவர்களின் ஊதிய விவரம்:
1] காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP) – 80,000.
2] காவல்துறைத் துணை தலைமை இயக்குனர் (ADGP) – 67000 – 79000.
3] காவல்துறை பொது ஆய்வாளர் ( Inspector General of Police ) – 37400- 67000 + 10000.
4] காவல்துறை துணை பொது ஆய்வாளர் ( Deputy Inspector General of Police ) – 37400 – 67000 + 8900.
5] காவல்துறை ஆணையர் ( Commissioners of Police ) – 37400 – 67000 + 12000.
6] காவல்துறைக் கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ( SPs, IPS including Asst. Inspector, Jt. SP, Addl. SP ) – 15600 – 39100 + 6600.
7] காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) – 15600 – 39100 + 5400.
8] காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP) – 15600 – 39100 + 7600.
9] ஆய்வாளர் (Inspector) – 9300 – 34800 + 4900.
10] உதவி ஆய்வாளர் (சப் – இன்ஸ்பெக்டர் – பெண் அதிகாரிகள் உட்பட ) – 9300 – 34800 + 4800.
11] தலைமைக் காவலர் (Head Constable including Women HC ) 5200 – 20200 + 2800.
12] முதல்நிலைக் காவலர் (PC-I) ( Police Constable Gr-I incl. Women PC ) – 5200 – 20200 + 2400.
13] இரண்டாம்நிலைக் காவலர் (PC-II) ( Police Constable Gr-II including women ) – 5200 – 20200 + 1900.
தமிழ்நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள் : dress
உலகின் 10 மிகப்பெரிய போலீஸ் படைகள்:
1. சீனா – 1,600,000 போலீஸ் அதிகாரிகள்.
2. இந்தியா – 1.585.353 போலீஸ் அதிகாரிகள்.
3. அமெரிக்கா: 794.300 போலீஸ் அதிகாரிகள்.
4. ரஷ்யா – 782001 போலீஸ் அதிகாரிகள்.
5. இந்தோனேஷியா: 579.000 போலீஸ் அதிகாரிகள்
6. மெக்ஸிக்கோ: 544.000 போலீஸ் அதிகாரிகள்
7. பிரேசில்: 478.001 போலீஸ் அதிகாரிகள்
8. துருக்கி: 412.624 போலீஸ் அதிகாரிகள்
9. நைஜீரியா: 371.800 போலீஸ் அதிகாரிகள்
10. பாக்கிஸ்தான்: 354.221 போலீஸ் அதிகாரிகள்.
கடலோர பாதுகாப்பு காவல் துறையினர்:
* 13591 மீன் பிடிக்கும் கிராமங்கள் அடங்கிய கடலோர மாவட்டங்கள் .
* 6 மண்டல அலுவலகங்கள் (சென்னை / நாகை / வேதாரண்யம் / புதுக்கோட்டை / ராமநாதபுரம் / தூத்துக்குடி).
கடலோர பாதுகாப்பு காவல் குழு உபயோகிக்கும் வாகனங்கள்:
- 12 படகுகள் (12 டன்) – 12 படகுகள் (5 டன்).
– 8 திடமான ஊதப்பட்ட படகுகள் – 6 ஜெமினி படகுகள்.
– 12 அனைத்து நிலப்பரப்பு ஜீப்புகள், 12 அனைத்து நிலப்பரப்பு இருசக்கர வாகனங்கள்.
– 20 படகுகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 இரு சக்கர வாகனங்கள்.
தமிழ்நாடு காவல் துறையில் மோப்ப நாய்கள்:
*குற்றம் கண்டு பிடிப்பதில் – 80 மோப்ப நாய்கள்.
*வெடித்துச் சிதறும் கண்டறிதலில் – 107 மோப்ப நாய்கள்.
*போதைப் பொருள் பற்றி கண்டறிய – 4 மோப்ப நாய்கள் உள்ளன.
*மலைக்குன்றுகள் உள்ள இடத்தில் பணி புரிய 4 (சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருச்சி) 38 குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
*மாநில போக்குவரத்துகளை திட்டமிட்டு சரிசெய்ய – 122 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ( ஜிபிஎஸ் மூலம் ) உள்ளன.
நன்றி :  மு. அப்துல் அன்சாரி .