பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை ‘0’ டிகிரி என வைத்தனர்.

இந்த ‘0‘ டிகிரி ‘லாங்கிடியூடில்‘ என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன.
இந்திய சீர்தர நேரம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தை மையமாக வைத்து ஒருங்கிணைந்த உலக சீர்தர நேரத்தின் +5.30 மணி நேர வித்தியாசத்தை அடிப்படையாக வைத்து 82.5 டிகிரி தீர்க்க ரேகை அதாவது நெட்டாங்கு (Longititude) புள்ளியினை இந்திய சீர்தர நேரத்துக்கான புள்ளியாக கொண்டு இந்திய நாட்டின் நேரத்தை கணக்கிடப்படுகிறது.
இந்தியாவின் கடிகார நேரம் அலகாபாத் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூட்டை வைத்துதான் சொல்லப்படுகிறது. இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் 5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரின்விச்சில் விடியும்.
இந்த மணி ஓசையை பி.பி.சி. வானொலி தவறாமல் ஒலிபரப்பி வந்தது. சர்வதேச பயணம் மேற்கொள்ளும் போது புறப்பட்ட நாட்டின் நேரத்துக்கும், போய்ச்சேரும் நாட்டின் நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் ஒரேவிதமான நேரத்தை கடைப்பிடிப்பார்கள்.

கிரீன்விச் 0பாகை(டிகிரி) கற்பனைக்கோட்டை மையமாக வைத்து வரையப்பட்ட நேர்கோட்டிலிருந்து நிலநடுக்கோடு என்னும் பூமத்திய ரேகையை தொடும் இடத்தை 0பாகை (டிகிரி) என கணக்கிட்டு பூமத்திய ரேகையிலிருந்து கிழக்கிலும்,மேற்கிலும் பசிபிக் பெருங்கடலிலுள்ள 180 பாகை (டிகிரி) வரை EAST & WEST என கணக்கிட்டு IST -(International Date Time) உலக நாள்காட்டி நேரம் குறிக்கப்படுகிறது.
உதாரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் GPS முறைப்படி அல்லது சோதிடவியல் முறைப்படி சத்தியமங்கலம் அமைந்துள்ள இடம்11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு என்று குறிப்படப்பட்டு இருக்கும்.இதில் (11 Degree 30 Minutes) 11பாகை 30 கலை வடக்கு என்று குறித்துள்ளதை வைத்து பூமத்திய ரேகையிலிருந்து வடக்கில் 11பாகை 30 கலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்.அடுத்து 77டிகிரி 14 விகலை தூரத்தில் கிழக்கு என்று குறிக்கப்பட்டுள்ளதை கிரீன்விச் நகரத்தின் 0டிகிரி நேர்கோட்டிலிருந்து கிழக்கில் 77 டிகிரி 14 விகலை தூரத்தில் சத்தியமங்கலம் அமைந்துள்ளது என அறியலாம்.
அதாவது வடக்காக மற்றும் கிழக்காக (11பாகை 30கலை வடக்கு,& 77பாகை 14விகலை கிழக்கு) வெட்டும் அல்லது இணைக்கும் இடம் சத்தியமங்கலம் என தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறாக உலகின் அனைத்து இடங்களையும் அறியலாம்.
ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது.
நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்?
அணு மணிப்பொறி (Atomic Clock) துணையோடு என்று தெரிந்திருக்கும். இதற்கு பயன்படுத்தப்படும் அணு/தனிமம் சீசியம் (Caesium). அமரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு கடிகாரத்தில் இது கணக்கிடப்படுவதில்லை. உலகெங்கிலும் 50 நாட்டு ஆராய்ச்சிக்கூடங்களில் இருக்கும் 300 அணு கடிகாரங்களின் சராசரியின் அடிப்படையில் நேரம் கணக்கிடப்படுகின்றது. இது சர்வதேச அணு நேரம் (International Atomic Time). இதனுடன் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நெடு நொடிகள் (Leap seconds) சேர்க்கப்பட்ட பின் கிடைப்பதே ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (Coordinated Universal Time) அல்லது கிரீன்விச் நேரம் (GMT). பிறகு அந்தந்த ஊர்களின் புவியியல் அமைப்பிற்கு ஏற்ப சில மணி நேரங்கள் கூட்டியோ கழித்தோ குறிக்கப்படும்.
Leap Seconds எதற்கு சேர்க்கப்படுகிறது என்றால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. அதனால் ஒரு நூற்றாண்டுக்கு 3 மில்லி செகன்ட் வீதம் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே வருகிறது (டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரம் தான்). ஆனால் அணு நேரம் மாறாது. அதனால் இவ்விரண்டையும் சரிகட்ட சேர்க்கப்படும் நொடிகள் தான் நெடு நொடிகள்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்
No comments:
Post a Comment