Wednesday, 11 February 2015

தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி( Tonsillitis ) பற்றிய சிறப்பு பார்வை....

” டான்ஸில் ” என்பதை தொண்டைச் சதை எனலாம். தொண்டையின் இருபுறமும், உள்வாயில் நாக்கின் அடியில் இவை அமைந்துள்ளன. நிணத்திசுக் கோளங்களான இவை, உடலின் தடுப்புச் சக்தியின் உறுப்புகள். இவை ‘ லிம்ப் ‘ எனும் நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இந்த சதைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதை தொண்டைச் சதை வீக்கம் அல்லது அழற்சி ( Tonsillitis ) அழைக்கப்படுகிறது.
தொண்டைச் சதை வீக்கம் பெரும்பாலும் 3 முதல் 7 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த வயதில்தான் தொண்டைச் சதை அதிகமாக நோய்க் கிருமிகளை எதிர்த்து போரிடும் காலமாகும். குழந்தை வளரும்போது தொண்டைச் சதையின் அளவும் குறையும். அப்போது நோய்த் தொற்றும் குறைந்துவிடும்.
தொண்டைச் சதை வீக்கம் ஆபத்தை விளைவிக்காது. ஆனால் அதில் சீழ் கட்டி உருவானால் அதன் மூலம் கிருமிகள் இரத்தத்தில் கலந்து ரூமேடிக் காய்ச்சல் அல்லது சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்கிவிடலாம்.
சில வேளைகளில் வீக்கம் பெரிதாக இருந்தால் அதனால் மூச்சு விடுவதில் சிரமமும், காது வலியும் கூட உண்டாகலாம்.

பெரும்பாலான தொடை சதை நோய்த் தொற்றும் சீழ் கட்டியும் ஸ்ரெப்டோகாக்கஸ் எனும் கிருமிகளால் உண்டாகின்றன. சில வைரஸ் கிருமிகளும் இதை உண்டாகலாம்.
               

மேல் தொண்டை, நடுத் தொண்டை, கீழ்த் தொண்டை போன்ற இடங்களில்சதைத் துண்டுகள் இருக்கின்றன. மேல் தொண்டையின் சதைத் துண்டு அடினாய்டு என்றும், நடுத் தொண்டையின் ஜோடி சதைத் துண்டுகள் டான்சில் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்த் தொண்டைப் பகுதியிலிருந்து மூச்சுக் குழல் ஆரம்பமாகிறது.

இதில் தொண்டைக்குள் இறங்கும் உணவுப் பொருட்கள், டான்சில் வழியாகத்தான் உணவுக்குழலை சென்றடைகின்றன. அதில் கிருமிகள் இருப்பின் அதன் தாக்குதலாலேயே இந்த சதைத்துண்டுகள் வீக்கமும் வலியும் காணுகின்றன.

இப்படி சதை வீக்கம் ஏற்பட்ட குழந்தைகள் மூச்சு விடத் திணறுவதும் அதனால் வாயைத் திறந்தபடி தூங்குவதும்தவிர்க்க முடியாதவை. வாயைத் திறந்து தூங்குவதால் பல் சீரமைப்பு கெடுவது, மூக்கடைப்பு, காதடைப்பு, காது கேளாமை போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.


துவக்க நிலை டான்சிலை கட்டுப்படுத்த மாத்திரைகள் போதும். தொடரும் தொண்டைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளோடு உணவை விழுங்கவே திணறும் அளவுக்கு வீக்கம் முற்றி விட்டால், அறுவை சிகிச்சை மட்டுமே கைகொடுக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு டான்சில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால் போதும். தொடர்ந்து வேறு மாத்திரைகளுக்கு வேலையில்லை. தற்போது கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் சகஜமாகிவிட்டன.

. ஐஸ்கிரீம், சாக்லேட் இல்லாத குழந்தைப் பருவத்தை கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல், குழந்தைகளுக்கு தரமான தயாரிப்புகளை மட்டுமே அளவோடு கொடுங்கள்.

இது சாதாரண பிரச்னைதான். ஆனால், இதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகளை இது தாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.





 அறிகுறிகள்
* தொண்டையில் புண் உண்டாகி அதிகம் சிவந்து காணப்படும். வெள்ளை நிறத்தில் புள்ளிகள் அல்லது மஞ்சள் நிறத்தில் சீழ் உள்ளதைக் காணலாம்.
* கழுத்துப் பகுதியில் நிணநீர்க் கட்டிகள் அல்லது கரளைக் கட்டிகள் ( Lymph Nodes ) இருக்கலாம்.
* லேசான காய்ச்சல் , தலைவலி தோன்றலாம்.
* தொண்டையில் கடுமையான வலியும், உணவை விழுங்குவதில் சிரமமும் உண்டாகலாம்.
* பேசுவத்தில் கூட சிரமத்தை எதிர் நோக்கலாம்.
* மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம்.


சிகிச்சை முறை 
பிள்ளைகளின் தொண்டையை நாம் பரிசோதிப்பது சுலபம். ஒரு கரண்டியின் பிடியை நாக்கின் மீது வைத்து, குழந்தையை ஆ என்று சொல்ல வைக்க வேண்டும். அப்போது டார்ச் லைட்டை வாய்க்குள் அடித்து பார்த்தால் தொண்டைச் சதையின் வீக்கத்தையும், அதிகமான சிவந்த நிறத்தையும் காணலாம்.. அப்படி தெரிந்தால் உடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர் தொண்டையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருந்துகள் தருவார். பொதுவாக வலிக்கு மருந்தும், கிருமிகளைக் கொல்லும் என்டிபையாட்டிக் மருந்தும் தருவார். சில மருத்துவமனைகளில் தொண்டைப் பகுதிலிருந்து பஞ்சுத் துடைப்பான் ( Swab ) மூலம் நீர் அல்லது சீழ் எடுத்து பரிசோதனையும் செய்வார்கள். அதில் கிருமியின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை சீழ் கட்டி இருந்தால், அல்லது அடிக்கடி தொண்டைச் சதைத் தொந்தரவு ஏற்பட்டால் மட்டுமே அறுவைச் சிகிச்சைத் தேவைப் படும்.
உண்மையில் தொண்டைப் பகுதியில் தொண்டைச் சதைகள் உள்ளது உடலின் எதிர்ப்புச் சக்திக்குத்தான். இவை கிருமிகள் வாய் வழியாக உடலினுள் புகாமல் தடுத்து நிறுத்தும் உறுப்புகள். அதனால் வேறு வழியே இல்லாதபோதுதான் அறுவை சிகிச்சை மூலமாக தொண்டைச் சதைகள் அகற்றப்படுகின்றன.
காது மூக்கு தொண்டை நிபுணர்களிடம் இதை செய்து கொள்வதில் ஆபத்து இல்லை.  அதன் பின் தொண்டைப் பகுதியில் எதிர்ப்புச் சக்தி ஓரளவு குறைவு பட்டாலும், திரும்ப திரும்ப ஏற்படும் தொண்டைச் சதை வீக்கத்தால் உண்டாகும் ஆபத்தான பின் விளைவுகளிலிருந்து விடுபடலாம்.

பாட்டி வைத்தியம்...

1.ஜாதிக்காய்..

தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.


2.தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம், தேன் கலந்து கொடுக்க‌ தொண்டைச் சதை வளர்ச்சி குறையும்.

3.தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலைச் சாறு, துளசி இலைச்சாறு நூறு வீதம் எடுத்து நல்லெண்ணெய் ஐநூறு மில்லியில் கலந்து அடுப்பில் வைத்
து காய்ச்சி வடிகட்டி எண்ணெயை பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி ஒரு கரண்டி அளவில் எண்ணெய் எடுத்து வாயில்விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். (oil pulling) இதுமாதிரி குறைந்தது பத்து நாட்கள் கொப்பளிக்க தொண்டை சதை வளர்ச்சி குறைந்து குணம் தெரிய ஆரம்பிக்கும். 
தொடர்ந்து செய்து வர நல்ல குணம் உண்டாகும்.


4.ஆயர்வேத மருத்துவ கடைகளில் அரிமேதாஸ் தைலம் கிடைக்கும். இதில் ஒரு ஸ்பூன் வாயிலிட்டும் இரண்டு நேரம் வாய்கொப்பளிக்கலாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment