Tuesday 10 February 2015

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் கொடுத்த தீர்ப்பு !!


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. டெல்லியில் முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 14-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகளும் பாஜக-வுக்கு 32.2 வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே தினத்தில் பதவி ஏற்கும் அர்விந்த் கேஜ்ரிவால்கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதிதான் தனது 49 நாட்கள் ஆட்சிக்குப் பிறகு லோக்பால் மசோதா முறியடிக்கப்பட்டதை அடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். 

தற்போது சரியாக ஒரு ஆண்டு கழித்து அபார வெற்றியுடன் பிப்ரவரி 14ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் கேஜ்ரிவால் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.மதிப்பிற்குரிய புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் நுபுர் சர்மாவை, அர்விந்த் கேஜ்ரிவால் 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 

2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கோட்டையாக இருந்த டெல்லியை தன்வசமாக்கிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியின் 7-வது முதல்வராக டிசம்பர் 28-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்றார். 

அப்போது 3 முறை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஷீலா திக்சித்தை 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் கேஜ்ரிவால். பிறகு 49 நாட்கள் ஆட்சி செய்த பிறகு பல்வேறு இடையூறுகள் ஏற்பட பிப்ரவரி 14ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 என் கருத்து..


உண்மை மோடி பிரச்சாரம் செய்தார கிரன்பேடி நேற்று வந்தவர் அண்ணாஅஸாரே பார்ட்டி இவரை புறம்தள்ளினார்ள் அலை ஏன் வீசவில்லை? 

தமிழ்நாட்டிலும் மாற்றம் எதிர்நோக்கிககாத்திருக்கிறார்கள், டெல்லிந டையைபார்த்து இங்கு மாற்றம் வரலாம்?

இதற்கு முன் ஆட்சியில் கரன்ட் பில்லை பாதியாக குறைத்ததுதான் காரணம்! 

Free ya கொடுத்தா பினாயிலையே வாங்கி குடிக்கிறவங்கதானே நம் மக்கள்.!!!


காங்கிரசின் ஊழலால் வெறுப்படைந்திருந்த மக்களிடத்தில் வளர்ச்சி என்ற மாயையைக் காட்டி வந்தார்கள்...... ஆனால் வந்த சில மாதங்களில் அடிப்பொடிகளை விட்டு மதவெறியை அரங்கேற்ற நினைத்தார்கள்.... இவர்களுடைய போக்கு மக்களிடத்திலே இவர்கள் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது..... இவர்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கடில்லில் ஏறியிருக்கிறார்கள் என்பதை மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர்..... இனி மதவெறி அரசியலா அல்லது மதச்சார்பற்ற ஆட்சியா என்பதை இவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.....


கெஜ்ரிவால் ஒருமாசம் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை ஒருமாச கரன்ட் பில்லாவது குரையுமே என்ற ஆசையில்தான் ஓட்டு போட்டார்கள்.!!!

2வது காரணம் காங்ரசை பிடிக்காதவர்கள் பாவம் யாருக்குதான் ஓட்டு போடுவாங்க அந்த ஓட்டெல்லாம் கெஜ்ரிவாலுக்கு போட்டுட்டாங்க...!!!!!


மாறாக பாஜக தனது ஆட்சிக்கு விளம்பரம் தேடும் செயல்பாடாக இருப்பதோடு, செயல்திறனுள்ள அரசாக இல்லை. மேலும், பாஜக தற்போது பணக்காரர்களுக்கான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்சி என்பதும் உறுதியாக நம்பப்படுகிறது. மத வாத ஆட்சியாளர்களுக்கு மரண அடி நம் நாட்டிற்கு தேவை மதச்சார்பற்ற அரசு. வளர்ச்சி வளர்ச்சி என்று மக்களை ஏமாற்றி தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சியில் அமர்ந்தீர்கள். இனி யாரும் நம்மளை கேள்வி கேட்க முடியாது என்று இறுமாப்பு கொண்டு மக்களின் வரிப்பணத்தில் அயல் நாட்டு உறவு என்ற போர்வையில் நாடு சுற்றுவது,10 லட்சம் ஆடை, வீண் விரயம் செய்வது இனி நடக்காது. சிறுபான்மை மக்களை அச்சுறுத்த நினைப்பது, இந்திய அரசியல் அமைப்பிற்கெதிராக குறிப்பிட்ட மத நூலை தேசிய நூல் என திணிப்பது, குறிப்பிட்ட மொழியை திணிப்பது இதுவெல்லாம் இனி நடக்காது. இனி மேல் கர் வப்சி எல்லாம் இனி டர் வாப்சி தான். தூய்மை இந்தியா என்று சொன்னதெல்லாம் பொய்மை ஆகி கோட்சேக்கெல்லாம் இனி கோயில் கட்ட முடியாது இன்று இந்தியா மதச்சார் பற்ற இந்தியா என்று நிருபித்துள்ளது. என்பதை விட இங்கு உள்ள மக்கள் மதச்சார் பின்மையை பின்பற்றுகிறோம் என்று நிரூபித்துள்ளனர்.

இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி!! மதவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற ஹிந்து முஸ்லிம் கிறிஸ்டியன் ஒற்றுமை ஓங்குக...

தமிழ்நாட்டிலும் இது போன்ற ஒரு தேர்தல் புரட்சி ஏற்பட்டு இரண்டு கழகங்களையும் ,இரண்டு தேசிய கட்சிகளையும் ,இரண்டு காளான் கட்சிகளையும் , இரண்டு சாதீய கட்சிகளையும் இரண்டு விதண்டாவாத கட்சிகளையும் (எல்லாம் எவை எவைகள் என்று புரிந்து இருக்கும் )தூர எரிந்து தமிழகத்தை விட்டு விரட்டி அடித்து துய்மை அரசியலை கொண்டு வரவேண்டும் ...நடக்குமா ? வோட்டுக்கு 2000 பெற்று வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை அது நடந்தேறுமா?


எங்களுக்கு ஊழல் முதல்வர் வேண்டாம்...!
காலில் விழும் அடிமை கூட்டம் வேண்டாம்...!
குடும்ப அரசியல் நடத்தும் தாத்தா வேண்டாம்...!

தமிழ் ஈழம் பேசி மக்கள் உணர்ச்சியை தூண்டும் அரசியல் வேண்டாம்...!
சமூக நீதிக்கு வன்முறை தான் முடிவு என்று சொல்லும் கட்சியும் வேண்டாம்..!
ஜாதி வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் வேண்டாம்..!
சிறுபான்மை வோட்டு வங்கி கட்சிகள் வேண்டாம்...!
எங்கள் உயிர்,உடமை,உரிமை,கல்வி,சுகாதாரம் பேணும் கட்சி தான் வேண்டும்.....

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment