Sunday, 15 February 2015

பாரத பிரதமர் அவர்களுக்கு இந்த கடிதம் போய் சேரும் என்ற நம்பிக்கையில்...

முகபுத்தகம்  வழியாக..
அன்புள்ள பாரத பிரதமர் அவர்களுக்கு,
வணக்கம்! ஒரு காங்கிரஸ் ஆதரவாளராக இல்லாமல், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
Image result for modiநலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.ஆனால் உங்களுக்கு வாக்களிக்காத நானும் உங்களுக்கு வாக்களித்தவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறேன்.சரியாக ஒரு வருடத்திற்கு முன்னால் நீங்கள் உங்கள் ஆருயிர் நண்பன் அதானியின் விமானத்தில் ஊர் ஊராக பறந்து " காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து, உங்கள் பொன் விளையும் பூமியான குஜராத்தின் போட்டோஷாப் வளர்ச்சியை தம்பட்டம் அடித்து, காசா பணமா என்று வள்ளல் போல் வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியையும் பிடித்துவிட்டிர்கள்.
அதில் முக்கியமானவை " ஆளுக்கு பதினைந்து லட்சம் " அதையும் பிரதமர் என்ற முறையில் முதல் நபராக பெற்றுக் கொண்டு, உங்களிடம் ஏது பனம் நீங்கள் தான் டீ வீற்ற ஏழையாச்சே! எனவே அதில் பத்து லட்சத்துக்கு ஒரு கோட் -சூட் வாங்கி மீதம் உள்ள ஐந்து லட்சத்தை உங்கள் ஆட்சியின் ஒரே திட்டமான " பிரதான் மந்திரி ஐன் தன் " திட்டம் முலம் சேமித்து வைத்திருப்பீர்கள். விரைவில் நாட்டு மக்களுக்கு அந்த பதினைந்து லட்சம் போய் சேரும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை மேலும் தொடர்கிறேன்.
சில சமயங்களின் நானும் உங்களை விமர்சித்து வலைதளத்தில் எழுதியிருக்கிறேன் ( உங்கள் பக்தர்கள் மன்மோகன் சிங்கை பற்றி எழுதியது போல் அல்ல, நாகரிகமாக தான் எழுதியிருக்கிறேன், எழுதுவேன்) அதை தவிர்த்து உங்கள் பக்தர்கள் போல் நீங்கள் செல்லும் இடமெல்லாம் " மோடி மோடி " என்று கோஷம் போட எனக்கும் ஆசை தான்! ஒருவேளை நீங்கள்
*குறைந்தபட்சம் கருப்பு பனம் வைத்திருக்கும் நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தால்.
*நீங்கள் பிரதமர் பதவி ஏற்பதற்கு சில நொடிகளின் முன் மண்டியிட்ட காந்தி யை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சியை கண்டித்திருந்தால்.
*நாட்டை துண்டாட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் - வி.எச்.பி - பஜ்ரங் தல் - இந்து மகாசபா போன்ற இயக்கங்களை சேர்ந்தவர்களின் விஷமத்தனமான கருத்துகளை மறுத்து அறிக்கை விட்டிருந்தால்.
*நிரன்ஜன் ஜோதியை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தால்.
*பாலியல் குற்றவாளியை அமைச்சரவையில் சேர்க்காமல் இருந்திருந்தால்.
*சாக்ஷி மஹராஜாவை ஒதுக்கியிருந்தால்.
*ராஜபக்ஷேவை வாழ்த்தாமல் இருந்திருந்தால்.
*ஒபாமாவிடம் சரண் அடையாமல் இருந்திருந்தால்.
*தேவாலயம் இடிக்கபட்டதிற்கு கண்டனம் தெரிவித்திருந்தால்.
*உயர் பதவிகளில் இருப்பவர்களை சகட்டுமேனிக்கு நீக்காமல் இருந்திருந்தால்.
இது அத்துனையும் கூட வேண்டாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராபர்ட் வதேரா பற்றி நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்நேரம் அவர் சிறையில் இருக்க வேண்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் ராபர்ட் வதோராவைப் பற்றி இப்பொழுது நீங்கள் பேசுவதில்லை? அவர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? உண்மையில் ராபர்ட் வதோரா தவறு செய்திருந்தால் கைது செய்ய வேண்டியது தானே? எதற்காக தாமதம் ? ஏன் இந்த நாடகம் ?
இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.அவற்றை எல்லாம் எழுத நேரம் போதாது. இப்படி உங்கள் ஆட்சி இருக்கையில் நானும் முட்டாள் தனமாக " மோடி மோடி " என்று கோஷமிடுவது சரியாக இருக்காது.
ஆக, நீங்களோ இந்த ஆட்சியோ இந்நாள் வரையில் எதுவும் உருப்படியாக செய்ய வில்லை. இதற்கு ஆதாரம் டெல்லி தேர்தல் முடிவுகள். எதையும் செய்ய வில்லை என்றாலும் பரவாயில்லை, நாட்டில் சிறுபான்மை மக்களை வாழ விடுங்கள். உங்கள் கட்சியை கண்டு முஸ்லிம் மக்கள் தான் ஒதுங்கிக்கொண்டார்கள், இன்றைக்கு கிறிஸ்தவ மக்களும் ஒதுங்க நினைக்கிறார்கள். எனவே உங்கள் "பொற்கால " ஆட்சியின் பெயரை கெடுக்க நினைக்கும் மோகன் பகவத் - யோகி ஆத்தியனாத் - சாக்ஷி மஹாராஜா இவர்களை கண்டித்து வையுங்கள். எட்டு மாத ஆட்சியை பார்த்த மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை என உணரத்தொடங்கி விட்டார்கள். வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லையே என்று ் என்று நீங்களும் வருத்தப் படவேண்டாம்.
தமிழகத்தில் எப்படி ஓ.பி.எஸ் மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறாரோ, அதைப்போல் ஐந்து வருடங்களும் முழுவதும் பேட்டி எதுவும் கொடுக்காமல் ஒரு மௌன ஆட்சியை நடத்தி விட்டு மீண்டும் உங்கள் " United States of Gujarat " ற்கே சென்று விடுங்கள்.
இந்த தேசத்தை அறுபது ஆண்டுகளாக ஒரே குடையின் கீழ் கட்டி வளர்த்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்த மக்கள், தாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கி விட்டார்கள். அந்த பெருமை எல்லாம் உங்களையே போய் சேரும்.
நன்றி!
விஜய் ராம்தாஸ்
14/02/2015

No comments:

Post a Comment