Saturday, 27 February 2016

பெண்களின் வாழ்வில் டீன் ஏஜை விடவும் மிகவும் ஆபத்தான தருணம் நாற்பது வயது !!இதோ அதிர்ச்சி அளிக்கும் அட்வைஸ்...



தூக்கம் வரல... உருப்படியா என்ன செய்யலாமென்று யோசிக்கும் போது, இதைச் செய்யலாமே என்ற நல்லெண்ணத்திலும், பெண்களின் பாதுகாப்பிற்கும் உதவலாமே என்ற நற்சிந்தனையிலும் கைவலிக்க நானே டைப் செய்த பதிவு....


பொதுவாக பெண்களுக்கு20 -25 வயதில் திருமணமாகிவிடும் .பின் கணவன், குழந்தைகள், குடும்பம், school, வேலை என நாற்பது வயது வரை மிகவும் busy யாக இருப்பார்கள்,


நாற்பதை தொடும்போது 20 வருட குடும்ப வாழ்க்கை முடிந்திருக்கும், அஜித் மாதிரி கனவு கண்டவர்கள் எல்லாம் அப்புகுட்டி போன்றவருக்கு வாக்கப்பட்டு, அவர் சாயலில்
இரண்டு மூன்று குழந்தைகளையும் பெற்றிருப்பார்கள்,

அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் +2 படிக்கும் வரை பின்னாலேயே சுற்றிவந்துவிட்டு college ல் கால் வைத்ததும் அவர்களுக்கு என தனியாக நண்பர்கள், அவர்களோடு வெளியே போவது அம்மாவிடம் share பண்ணிய விஷயங்கள் எல்லாம் இப்போது நண்பர்களிடம் share பண்ணுவார்கள்

அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி உருவாகும்,

குழந்தைகள் வளர்ந்து வர வர அவர்களின் எதிர்காலம், படிப்பு என சிந்தனை திசைதிரும்பி கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான நெருக்கமான தருணங்களும், காதலும் ரொமான்ஸ் ம் கூட குறைந்து இரண்டு பேருக்கும் இடையேவும் ஒரு இடைவெளி உருவாகும்,

இருந்த தோழிகளையும் கல்யாண மேடையிலேயே கழட்டி விட்டிருப்பீர்கள்!

கணவன் பணம் சம்பாதிக்க ஓட, குழந்தைகள் மார்க்கை தேடி ஓட பெண்கள் மட்டும் அந்த ஆபத்தான நாற்பது வயதில் தனிமையில் இருப்பார்கள்

தன்னுடன் நேரம் செலவழிக்கவோ, தன் சமையல் குறித்தோ தனித்தன்மை குறித்தோ பாராட்ட ஆள் இருக்காது இதுபோன்ற தனிமையில் தூக்கம் வருவது தடைபடும்

இந்த தனிமையின் கொடுமை போதாதென்று.. ப்ரீ மெனொபாஸ் சங்கடங்கள் வேறு வரிசை கட்டி நிற்க..

TV, phone தவிர்த்து கொஞ்சம் படித்தவர்கள் நண்பர்கள் சோல்லியோ அல்லது தனக்கே தெரிந்தோ இன்டர்நெட் பயன்படுத்த தொடங்குவார்கள்

அதிலும் Facebook போன்ற சமூக வலைதளங்கள் தான் முதல் choice, முன்பின் தெரியாத நபர்களுடன் பொழுதுபோக்காக பேச ஆரம்பித்து நாளடைவில் அதற்கு அடிமையாகி நள்ளிரவுவரை பேச்சுக்கள் போட்டோ பறிமாற்றங்கள் என தான் என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத அளவுக்கு அந்த நட்பு சென்றுகொண்டு இருக்கும்

பெரும்பாலும் பெண்கள் தான் அதில் பாதிக்கப்படுகிறார்கள் நன்கு பழக்கமான நம்பிக்கையான நண்பர்களிடம் எந்த நேரத்தில் பேசினாலும் தவறில்லை, ஆனால் இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு புதிதாக வருவோர் நள்ளிரவில் online ல் இருப்பது மிகுந்த ஆபத்தான ஒன்று,

பொதுவாக இரவு 10 மணிக்கு மேல் நன்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் chat பண்ணும் பெண்களை ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர் என்பதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை என்பது ஆண்களின் கணக்கு,

பெண்கள் குடும்ப பிரச்சனையிலோ, மனஅழுத்தத்திலோ இருக்கும் போது யாராவது ஆறுதல் சொன்னால் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்,

அதே நேரத்தில் சொல்பவரின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

ஆடு நனைவதற்காக ஓநாய் ஆறுதல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும், நள்ளிரவில் online ல் இருக்கும் பெண்களை ஆறுதல் வார்த்தை சொல்லியோ, அன்பாக இருப்பதுபோல் நடித்தோ, அழகாக இருப்பதாக பொய்சொல்லியோ, பணத்தாசை காட்டியோ, ஆபாசமாக பேசியோ தன் வலையில் சிக்கவைக்க ஆயிரக்கணக்கான ஓநாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன,

முன்பின் தெரியாதவர்களின் புகழ்ச்சிக்கு ஒருபோதும் மயங்காதீர்கள், உங்கள் குடும்பத்து பிரச்சனையில் மற்றவர்களை குளிர்காய அனுமதிக்காதீர்கள், உங்கள் தனிமைக்கு குடைபிடிக்க சாத்தான்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,

தனிமைக்கு குடைபிடிக்கும் அதே நேரத்தில், உங்கள் குடும்பம்,உங்கள் மதிப்பு,
உங்கள் குழந்தைகள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல நண்பர்களை
மட்டும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் தற்காலிக ஆறுதல் தேடல் நிரந்தரமான குடும்பத்தில் சலசலப்பை எற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனம் கொள்ளுங்கள்!


உஷார் தாய்க்குலமே! உங்களுக்கு ஒரு எடுத்துகாட்டை சொல்ல ஆசைபடுகிறேன்

உண்மையில் என் தோழியின் friend listல் இருந்த Veronica என்ற சகோதரிக்கும், Meena மாமிக்கும் ஏற்பட்ட விபரீதம். Now, Both are not in FaceBook.

பெண்களே! தேவையா உங்களுக்கு இந்த அவல நிலை:

கணவர் முன்போ, ஈன்றெடுத்த பெற்றோர் முன்போ, நீங்கள் ஈன்றெடுத்த வயது வந்தக் குழந்தைகள் முன்போ இப்படிக் கூனிக் குறுக வேண்டுமா? அவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டுமா?

West Bengalலிருந்து, பல வருடங்கள் கழித்துத் தன் பிறந்த வீட்டிற்குப் போவதை ஒரு பெண், Facebookல் update செய்கிறார்.

அதை Facebook இப்படிக் காட்டுகிறது.

Jaya Bachchan travels with Amitab Bachchan & 16others to Chidambaram, TamilNadu.

இதற்கு 999 likes, 110 comments. அத்தனையும் வெட்டி., டம்மி, உடான்ஸ்.

அதில் அப்பெண்ணின் ஆண் நண்பர்கள் கேட்கும் எப்படி வாறீங்க, என்ன color dress ல் வாறீங்க, Saree or chudi, bus or train or flight எத்தனை மணிக்கு Reach ஆகும் போன்ற கேள்விகளுக்குப் பொறுமையாக, துல்லியமான முறையில் அப்பெண் பதிலளிக்கிறார்.

இதன் விபரீத விளைவு, அப்பெண் வந்து reach ஆகக் கூடிய இடத்திற்கு, அந்த கேள்விகள் கேட்ட ஆண்கள் கூட்டமே வந்து நின்று, ஒருத்தன் luggage தூக்குகிறான், ஒருத்தன் face dullஆ இருக்கீங்க, wash பண்ணிக்கோங்க என்று சொல்லி Water Bottle கொடுக்கிறான்.

இது அத்தனையும் அப்பெண்ணுடன் பயணம் செய்த கணவர், குழந்தைகள்,உறவினர் முன்பே நடக்கிறது.

அவ்விடத்திலேயே, கணவர், குழந்தைகள் முகம் கோவத்தால் கருகி, வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அப்பெண்ணுக்கு அவள் பெற்ற மகன், மகள், உட்பட அனைவர் முகத்தையும் பார்க்க கூசுகிறது.

என்ன ......க்கு status போடுற? அவன் யாரு... எனக்கு மேல அக்கறையா இருக்கான்? இது போன்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போது, சந்தோஷம் சிதறுகிறது. என்ன purposeக்காக ஊருக்கு வந்தோமோ அது..... ஏன் டா வந்தோம் என்று மாறுகிறது!

உங்களுக்கு இது தேவையா?

Likes & Commentsக்கு ஆசைப்பட்டு, life & commitmentsஐத் தொலைத்துவிடாதீங்க தாய்க்குலமே...

இன்னொரு மீனா, இன்னொரு வெரோனிகா வேண்டாம்.

கணவன் மனைவி அந்நியோன்யத்தைப் Publicல் கை பிடித்து அல்லது கை கோர்த்துக் கொண்டு அல்லது bikeல் போகும்போது இறுக்கிக் கட்டிக் கொண்டு போவது போன்ற செய்கைகளால் பறைசாற்றலாமா?

கணவன் மனைவி கருத்தொருமித்தக் காதலை, அன்பை ஊருக்குத் தெரியப்படுத்த அவசியமோ, கட்டாயமோ இல்ல. public places ல் எப்படி கண்ணியமாக நடக்கனுமோ அப்படி நடந்தால் போதும்.

முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.

இதை விட இன்னொரு கேவலமான விஷயம் என்னவென்றால், TVல் ஒருத்தி/ஒருவன் Mike எடுத்துட்டு வந்து பேட்டி எடுப்பான்.

நீங்கள் முதன் முதலாக பார்த்த படம்?

முதலில் யார் propose செய்தீங்க?

யார் ரொம்பக் கோவப்படுவீங்க? யார் விட்டுக் கொடுத்துப் போவீங்க?

இது போன்ற கேள்விகளுக்கு, உண்மையான கருத்தொருமித்தத் தம்பதியராக இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?

நான் என் மனைவியை நேசிப்பது அவளுக்குத் தெரியும்.
அவள் என்னை நேசிப்பது எனக்குத் தெரியும்?

நடுவுல நீ யாரு நாயே இதை மைக், video camera எடுத்துட்டு வந்து ஊரு பூரா போட்டுக் காட்டுற என்று நம்ம வில்லன் ரகுவரன் மாதிரி சொல்லி விரட்டி அடிப்பாங்க.

This is the original bond between husband &wife.

அந்தரங்கம் புனிதமானதுங்க. அதை வெளியே சொல்லிக் கேவலப்படுத்தாதீங்க.

கணவன்-மனைவிக்குள் இருக்கும் எந்தவொரு விஷயமும், பெர்சனல் டைரி போல இருக்கனுமே தவிர, சுவரொட்டி போல இருக்கக் கூடாது.

Thursday, 25 February 2016

Be Careful Our Self !! What Are We Doing Front of Our Childrens!! Our Children Will Follow What We Do..

Yes, that's right. If you have a hot temper, more than likely, your children will have one too. Now that's not in all cases, but the majority.Kids sit back in silence and watch everything we do. They watch to see how we handle stress. They watch to see how we interact and respect our friends. They listen in on our business and personal phone chats. They will even eat what we eat. So if you sit back and eat chocolate bars while watching movies, they will do the same. They are extremely observant and soak it all in like sponges.
There are time when I am out and about and my little Captain will repeat something to me that I may have shared during a phone conversation with a friend. It totally throws me off guard because I usually have my chats away from the kids. I don't spend much time at all on the phone outside of business, however it's those couple times he over hears me. 




What led me to write this post today?

A couple of days ago, My Captain and I went grocery shopping at The Superstore and I noticed he had a candy in his mouth and I asked, "Captain where did you get that candy from?" He replied, "the bin over there" confident that it was perfectly fine to take the candy from the bin. I stood there speechless because I am at fault for doing the same. So I said to him, "Captain you can't do that sweetie we have to pay for them first" Well well well his smart and accurate reply was, "but mom you do it too." Om Goodness  The rest was history.

Modeling appropriate behavior is an important part of discipline. Even when we think they aren't aware of what we're doing, they ARE! If we act in a way that we want our kids to act, they’ll learn just from watching us. We've got to be the person we want our children to be.

It doesn't take rocket science to know this is truth. How many times have you seen your daughters or little girls (period) putting on their mother's high heal shoes and if given the freedom to do so, they even put lipstick on their lips and nail polish on their nails. You will also see boys imitating their father's habits by hammering things all over the house with their tool box. They will even pretend to shave to be just like their daddies. If you sit back and observe you will see many pieces of YOU in your children. Just hope they are the good pieces and not the bad.

Children know when we're doing something wrong. Even if they sit there in silence, they know it's wrong. 


So again, BE THE PERSON YOU WANT YOUR CHILDREN TO BE!


Collection  & Written by M.Ajmal Khan.

தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ள சிங்கப்பூர் !!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்னும் கூற்றிக்கு இணங்க சிங்கப்பூர் நாடு அளவில் சிறியதாக இருந்தாலும் தமிழ் மொழியை உலக அரங்கில் முன்னெடுத்து செல்வதில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளது.சிங்கப்பூரில் தமிழர் எனப்படுபவர், தமிழைப் பேசும் ஒரு மக்கள் கூட்டத்திலிருந்து தோன்றியவர் என்பதைப் பலரும் ஏற்றுவந்துள்ளனர். தமிழர் எனப்படுபவர் தமிழ்மொழிப் புழக்கத்தால் மட்டுமே அறியப்படக் கூடியவர் என்று மற்றுமொரு விளக்கமும் உண்டு.

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது.

*தமிழில் முதன்முதலாக (Singapore’s Pioneering Efforts In Tamil Language)

-தமிழ் நாட்டு அரசாங்கம் அறிவித்த 13 தமிழ்ச் சீர்திருத்த எழுத்துகளை அமலாக்கம் செய்த நாடு சிங்கப்பூர்.(1983)


-தமிழ்மொழியில் தொடக்கப் பள்ளிகளுக்காக மின்னியல் பாடங்களை(SMART) முதன்முதலில் உருவாக்கிய நாடு சிங்கப்பூர்.(1991)

-உலகத் தமிழாசிரியர் மாநாட்டை முதன்முதலில் தோற்றுவித்த நாடு சிங்கப்பூர்.(1992)

-அனைத்துலகத் தமிழ் இணைய மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர். (1997)

-உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முதன்முதலில் கூடிய நாடு சிங்கப்பூர்.(2011)

-உலகப் பல்கலைக்கழகத் தமிழ் இளையர் மாநாட்டை முதன்முதலில் தொடக்கி வைத்த நாடு சிங்கப்பூர்.(2012)
நடைபெற்றது.(1971)

-ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களால் முதன் முதலில் சிங்கப்பூர்ப் பள்ளிகளுக்காக தமிழ்ப்பாடநூல்களும், பயிற்சிநூல்களும் உருவாக்கப்பட்டன.(1973)

-சிங்கப்பூரில் பல்கலைக்கழக அளவில் முதன்முதலாகத் தமிழ்க் கருத்தரங்கம் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையால் நடத்தப்பட்டது.(1977)

-கல்வி அமைச்சு, பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் என்ற பிரிவு ஒன்றைத் தோற்றுவித்தது. அதில் முதன்முதலாகத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப்பாடநூல், பயிற்சிநூல், பயிற்று கருவிகள் உள்ளூர் ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.(1983)

-தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்க் கருத்தரங்கு யீசூன் தொடக்கக் கல்லூரியில் முதன்முதலாக நடத்தப்பட்டது.(1986)

-சிங்கப்பூரில் முதன்முதலாக ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் பற்றி ஆய்வரங்கு.


தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

Friday, 19 February 2016

தமிழ் மொழியின் வகைகள்..


Image result for தமிழ் மொழியின் வகைகள்கொடுந்தமிழ்

 தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும். கொடுந்தமிழ் ஒரு மரபுச் சொல் வழக்கே இன்றி மொழியின் உயர்வு தாழ்வினைச் சுட்ட இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ் மொழியை மட்டுமல்லாமல்அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. "பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும்அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த தமிழ்நாட்டுப்பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்." கொடுந்தமிழ் பிற மொழி கலப்பினால் களங்கம் கண்ட தமிங்கிலம் போன்ற தமிழ் வழக்குகளை சுட்ட பயன்படுத்தப்படுவதில்லை.


செந்தமிழ்

சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளை தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகின்றது. இது ஒரு வழக்கே தவிரஅரச நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட சீர்தரம் அல்ல. சீனம் போன்ற பிறமொழிகளைப் போலன்றி வட்டார மொழிக்களுக்கும் செந்தமிழுக்கும் இருக்கும் இடைவெளி சிறியதேஆகையால் செந்தமிழைதமிழர்கள் இயல்பாகவே பயன்படுத்துகின்றார்கள்.

"மதுரையை
 மையமாக கொண்டுஇந்தப் மிகப் பழங்காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது. இந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டுமற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக இருந்தது. இதன் கட்டுத் திட்டங்களைஇடைக்கால உரையாசிரியர்களின் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட, (கூட்டம்அவைமதச் சங்கம்கல்லூரி என்ற பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட) ஒரு இலக்கியகலாச்சார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன. இது மிகவும் உற்று நோக்கப்படவேண்டிய செய்தி. ஏனெனில்மதுரையின் செப்பமான இலக்கிய மொழியிலிருந்து தற்கால தமிழ் வரை ஒரு நேரடியான வளர்ச்சி முறையை நாம் படிப்படியாக காட்டுதல் கூடும்." 
"இந்த செந்தமிழ் நிலத்தில் பேசப்பட்ட வட்டார மொழி பிற்காலத்தில் செந்தமிழ் என்று குறிப்பிடப்பட்டதுஅதன் வளர்ச்சிக் காலத்தில் அது வாய்ப் பேச்சுக்கள் பெறும் வளர்ச்சியைப் பெற்றதுஅது நிலைத்து "இலக்கிய" மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை அடைந்த பிறகு மக்களால் பேசப்பட வில்லைஅது இலக்கியத்திற்கே உரியமொழியாகிவிட்டது..." 

தனித்தமிழ்

பிறமொழிச் சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை தனித்தமிழ் எனலாம்.தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும்நீண்டகாலமாகக் கலந்து நிற்கும் வடமொழிச் சொற்களையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக்க் கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல்இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம்.

நற்றமிழ்

இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திநடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கிவெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லத் தமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால்சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளை கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் (எ.கா உயிரினங்களை வகைப்படுத்தலுக்கு பயன்படும் சொற்கள்)அனைத்துலக கணித இலக்கங்கள்ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்றுக்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும்களங்கப்பட்ட தமிழைத் தவர்த்தும் எடுக்கப்படும் ஒர் இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.

முத்தமிழ்

இயல் (இயற்தமிழ்)இசை (இசைத்தமிழ்)நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும்நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

இயல், இசை, கூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழக மற்றும் புதுவை மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் !! ஒரு தவகல்..


தமிழகத்தைப் பொறுத்தமட்டில்,  வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 20, 30 ஆண்டுகளாக பதிந்து வைத்து வேலைக்காக காத்திருக்கும் பல்வேறு வகை சுமார் 1,05,000 என அரசு தெரிவிக்கிறது. அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிட வாய்ப்புகளை தராமல் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதில் தமிழக அரசும் அரசும் கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு,ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1107 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. எனவே, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை சட்டத்தின்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் அளித்திட தமிழக அரசு முன்வரவேண்டு


தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளி பிரச்சனைகளை கவனிக்க திறமையுள்ள துறையாக மாற்றுத்திறனாளி துறை மாற்றப்பட வேண்டும்.குறிப்பாக மாற்றுத்திறனாளி சட்டப்படி மாநில ஆணையருக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு இணையான அதிகாரம் தரப்பட்டுள்ளன.இருப்பினும், நியமிக்கப்படுகிற மாநில ஆணையம் இந்த சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எனவே, மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.


1.மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம் :



கிடைக்கும் உதவி மாதாந்திர நிதி உதவியாக 40%-65% - ரூ.1500/-
66%-85% - ரூ.2000/- 86%-100% - ரூ.3000/- வழங்கப்படுகிறது.


தகுதிகள் 1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. கை, கால் ஊனம், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை, கண் பார்வை குறைவு : 40% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

3. மனவளர்ச்சி குன்றியவர் : ஐ .க்யூ. 69மற்றும் அதற்கும் குறைவாக .

4. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.



2. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தோறும் இலவச அரிசி வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்தோறும் இலவசமாக 15 கிலோ அரிசி வழங்குதல்.

தகுதிகள் :
1.மாற்றுதிறனாளி மாதாந்திர நிதி உதவி பெறுபவராக இருத்தல் வேண்டும்.

2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

3. 40% மேல் இருக்க வேண்டும்.

4.ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


3. மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : கிழ்கண்டவாறு மாற்றுதிறனாளி மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்படுகிறது.

1- முதல் 5-ஆம் வகுப்பு வரை - ரூ.1000/-
6- முதல் 8-ஆம் வகுப்பு வரை - ரூ.2000/- 

9- முதல் 12-ஆம் வகுப்பு வரை - ரூ.3400/-
இளங்கலை பட்டப்படிப்பு - ரூ.5000/- 

முதுகலை பட்டப்படிப்பு - ரூ.6800/-

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின அளவு 40% க்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும். 


4. கண் தானம் செய்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும்
திட்டம் :


கிடைக்கும் உதவி : கண் தானம் செய்த நபரின் குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.5000/- கண் ஒன்றிற்கு வழங்கப்படுகிறது.


தகுதிகள் :

1. ஆண்டு வருமானம் கிடையாது.

2. புதுவை ஆட்சி பரப்பில் 5 வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும்.

3. ஊக்கத்தொகையை பெற விண்ணப்பிப்பவர் கண் தானம் கொடுத்தவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.

4. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

5. கண் மாற்று அறுவை சிகிச்சை செய்த 90நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.



5. மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல்:



கிடைக்கும் உதவி : மாற்றுதிறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்குதல்.


தகுதிகள் :
1. 65% மேல் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

3. மாற்றுத்திறனாளி வேலை செய்பவராக / கல்வி பயிலுபவராக இருத்தல் வேண்டும்.

4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. இத்துறையின் மூலமாக போக்குவரத்து பயணப்படி பெறாதவராக இருத்தல் வேண்டும்.


6. ஒரு மாற்றுதிறனாளி மற்றொரு மாற்றுதிறனாளியை மணந்து கொண்டால் திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ.50,000/- (ரொக்கத்தொகையாக ரூ.20,000/-மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.30,000/- வழங்கப்படும் :


தகுதிகள் :


1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும்.

3. ஊனத்தின் அளவு : இருவருக்கும் 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. குடியிறுப்பு : மாற்றுதிறனாளிகள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும்.

7. திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.
8. தம்பதியர் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும்.


7. ஒரு மாற்றுதிறனாளி ஊனம் இல்லாதவரை திருமணம் செய்து கொண்டால் - திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : ஊக்கத்தொகை ரூ. 25,000/- (ரொக்கத்தொகையாக ரூ.5,000/- மும் தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.20,000/- வழங்கப்படும் :


தகுதிகள் :

1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. வயது ஆணுக்கு 21-ம் பெண்ணுக்கு 18-ம் இருத்தல் வேண்டும்.

3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

5. தம்பிதியருக்கு முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.

6. திருமணத்தை பதிவு செய்தல் வேண்டும்.

7.திருமணம் நடந்த 120 நாட்களுக்குள் விண்ணபிக்க வேண்டும்.

8. தம்பதியர்கள் திருமணத்திற்கு பிறகு புதுவை ஆட்சி பரப்பில் வசிக்க வேண்டும்.




8. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு முடநீக்கு கருவிகள் வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிக்கு நலவழித்துறையின் பரிந்துரையுடன் மூன்று சக்கர வண்டி, முடநீக்கு கருவிகள், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகள் வழங்குதல்.


தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.


4. வயது வரம்பு கிடையாது.

5. கல்வி தகுதி தேவையில்லை



9. பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல்:



கிடைக்கும் உதவி : முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு குளிர்கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் மற்றும் கைத்தடி வழங்குதல்

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

3. கண் பார்வை இல்லாதவரின் ஊனத்தின் அளவு 100% இருத்தல் வேண்டும்.


10. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பெறும் கண்பார்வையற்ற மாணவ / மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைபெறும் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
முதல் பரிசு ரூ.15,000/-
இரண்டாம் பரிசு ரூ.10,000/-
மூன்றாவது பரிசு ரூ.5,000/-



தகுதிகள் :
1. கண்பார்வையற்ற மாணவ / மாணவியராகஇருத்தல் வேண்டும்.

2. ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.



11. இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல் :

கிடைக்கும் உதவி : இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு
எரிபொருள் செலவில் 50% மான்யம் வழங்குதல்

தகுதிகள்
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. வயது வரம்பு கிடையாது.
5. கல்வி தகுதி தேவையில்லை
6. சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும்.
7. ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.




12. மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவு வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வண்டியின் பராமரிப்பு செலவிற்கு ஒரு ஆண்டிற்கு ரூ. 200/- வழங்கப்படுகிறது :

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் கிடையாது.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. ஐந்து வருடத்திற்கு மேல் குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

4. மூன்று சக்கர வண்டியை இலவசமாகவோ அல்லது அன்பளிப்பாகவோ பெற்றிருத்தல்வேண்டும்.

5. மூன்று சக்கர வண்டியை பழுது பார்த்ததிற்கான ரசீதை தங்கள் பெயரில் சமர்ப்பிக்க வேண்டும்.

13. மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர பயணப்படி திட்டம் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து செலவிற்காக மாதந்திர உதவித்தொகையாக
ரூ.100/- வழங்கப்படுகிறது. இது அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மூலம் மாதமாதம்வழங்கப்படும்.

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் வசித்தல் வேண்டும்.


4. ஐந்து வயதிற்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.  



14. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்குதல்.


தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.



15. கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : கண்பார்வையற்றவர்களுக்கு இலவச வானொலி பெட்டி வழங்குதல்.

தகுதிகள்
1. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.
3. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.



16. மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் :

கிடைக்கும் உதவி : தீபாவளி அல்லது பண்டிகை காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது .

தகுதிகள் :

1. 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயரை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவுசெய்திருத்தல் வேண்டும்.
4. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராகஇருத்தல் வேண்டும்.


17. மாற்றுத்திறனாளிகளுக்கு வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலமாக இலவசமாக வருடாந்திர சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். சுற்றுலாவில் தங்க இடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.


தகுதிகள் :
1. 18-50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

3. அரசு ஊழியராக இருத்தல் கூடாது.

4. ஆண்டு வருமானம் ரூ.75,000/- இருத்தல் வேண்டும்.
5. கடந்த 10 ஆண்டுகளில் இச்சுற்றுலாவில் கலந்து கொள்ளாதவராக இருத்தல்வேண்டும்.
6. தொழுநோய் / காசநோய் போன்ற பரவும் நோய் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.


7. புதுவை ஆட்சி பரப்பில் ஐந்து வருடத்திற்கு குறையாமல் குடியுரிமை பெற்றவராக
இருத்தல் வேண்டும்.

8. மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை.

18. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு உதவித்தொகை திட்டம் :

கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் நபர் இறந்து விட்டால் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது.


தகுதிகள்

1.இறந்த மாற்றுத்திறனாளி மாதந்திரஉதவித்தொகை பெறுபவராக இருத்தல்வேண்டும்.

2.மாற்றுத்திறனாளி இறந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.



19. மாற்றுத்திறனாளி நலனுக்கான மாநில விருதுகள் வழங்கும் திட்டம் :
கிடைக்கும் உதவி :
1. அரசு ஊழியர் / தனியார் நிறுவன ஊழியர் சுய வேலை வாய்ப்பு செய்பவர் ஆகியவர்களுக்கு
ரூ.10,000/-மும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.2.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்பவர்களுக்கு ரூ.15,000/- ம், சான்றிதழும்
வழங்கப்படுகிறது.3.மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனகளுக்கு ரூ.25,000/- மமும், சான்றிதழும் வழங்கப்படுகிறது.4.மாநில விருதுகள் மாநில குழுவால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

தகுதிகள் :
1. ஆண்டு வருமானம் கிடையாது.


2. வயது வரம்பு கிடையாது.

3. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.

4. சாதனை புரிந்ததற்கான ஆவணங்களும் மற்றும் விரிவான விளக்கங்களும் சமர்ப்பிக்கவேண்டும்.



20. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடுதல் :
கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், விருதுகள், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தகுதிகள்

1.புதுச்சேரியை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம்.



21. மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் :


கிடைக்கும் உதவி : மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல்.

தகுதிகள்
1. ஊனத்தின் அளவு : 40% மேல் இருத்தல் வேண்டும்.



22. மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் :


கிடைக்கும் உதவி : பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நலச்சங்கங்களுக்கு இசை மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.


குதிகள் :மாற்றுத்திறனாளி நலச்சங்கங்கள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.



ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 18 February 2016

சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் யார் இந்த வெங்கடேஷ்?



வெங்கடேஷ் போன்ற சமுதாய அவலங்களை தட்டிக்கேட்கும் பொருப்புள்ள இளைஞர்கள் நம்மில் பலர் உள்ளார்கள். சமுதாய அக்கரையும் ஊழலை ஒழிக்கும் வல்லமை படைத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இவர்கள் கையில் தான் எழுச்சி மிகு பாரதத்தின் எதிர்காலம் உள்ளது. காலமௌ காலமாக மக்களை ஏமாற்றி அஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து சாமானியரையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் பெரிய பொருப்பு இன்றைய இளைஞர்களிடம் உள்ளது என்பதைஉணர்ந்து செயலாற்ற வேண்டும்.


யார் இந்த வெங்கடேஷ்.?

ஒல்லீயான தேகம். விடாமுயற்ச்சி. அசாத்திய துணிச்சல் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட இளைஞர்.
சமுதாய அவலங்கலை சகித்துக்கொள்ள முடியாமல் ஊர் ஊராய் பிரச்சனைகளை தேடி பயணிக்கிறார். தினம் RTI போடுகிறார். சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடப்பில் கிடக்கும் அரசு வேலைகளை ஏன் செய்யவில்லை என்று குடிமகனுக்கு உள்ள மக்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கேள்வி கேட்கிறார். எந்த காரியம் யாரால் முடியும் எந்த அதிகாரியால் இந்த பணி தாமதமாகிறது. அந்த பணி முடிய என்ன செய்ய வேண்டும். என்பதெல்லாம் விரல் நூனியில் வைத்துள்ளார்.


பட்ட படிப்பு படித்த இவர் அனைத்துறைகள் பற்றி ஆணி வேர் முதல் அறிந்து வைத்திருக்கும். இவர் திருநெல்வெலி மாவட்டத்தில் அனைத்து அதிகாரிக்கும் பரிச்சயமானவர். இவர் நூழைந்தாலே தவறு செய்த அரசு அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைக்க வைத்துவிடுகிறார். இவர் இடுக்குபிடியில் தப்பிக்க முடியாமல் ஓரு நகராட்சியே கூடி சிறையில் தள்ள தீர்மானம் போட்டது.
சுயஒழுக்கத்தில் சிறப்பானவரான வெங்கடேஷ் எதிலும் சிக்க வைக்கமுடியவில்லை. எதிரிகளை விட 9 அடி கூடுதல் பாய்கிறார். ரோடு போடுறாங்களாம்பா.! பாலம் கட்டுறாங்களாம்ப்பாம்.! ஆக்கிரமிப்பை அகற்றுராங்களாம்பா.! லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராம்ப்பா.! பொய் சான்றிதழ்ல வேலையில் சேர்ந்து மாட்டிகிட்டாராம்ப்பா .! என்று திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் பேசும் இந்த பேச்சின் அடித்தளத்தின் அஸ்திவாரம் வெங்கடேஷ் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்பது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

சுதந்திர போராட்டத்தின் போது இத்தகைய இஞைஞர்களை பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். இந்த நூற்றாண்டிலும் சொந்த வாழ்க்கையை பற்றி கவலைபடாமல் தேசப்பற்று கொண்ட இளைஞராக வலம் வருகிறார்.

தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கதவுகளை உரக்க தட்டும் இளைஞர் எந்த ஓரு பிரச்சனையும் சிங்கம் போல சிங்கிளாக சந்தித்து வெற்றி பெரும் வரை விடுவதில்லை. அரசியல் கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ விலை போகாத இவர் இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவி நாட்டு பற்று கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தி வருகிறார்.

வெங்கடேஷின் ஆசை ஓன்றே ஒன்று மட்டும் தான். என்னைப்போல சமூக அக்கரை உள்ள இளைஞர்கள் ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். முதலில் அவர்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டேன் என்றால் நாட்டை கொடியவர்கள் கையில் இருந்து காப்பாற்றி விடமுடியும் என்று முழு நம்பிக்கையோடு சொல்கிறார்.
சமூக அக்கரை கொண்ட இளைஞர்கள் இந்த நெல்லை மைந்தனுடன் கரம் கோர்கலாமே.!

வெங்கடேஷ் - 9500 922 922


Thursday, 4 February 2016

முதல் இயற்கை வேளாண் மாநிலம்: எப்படிச் சாதித்தது சிக்கிம்?

முன்னாள் எம்.பி எஸ்.கே.கார்வேந்தன்-பொங்கலூர் இரா.மணிகண்டன் ஆகியோர் தமிழ் இந்து நாளிதழ் பொறுப்பாசிரியர் குள.சண்முகசசுந்தரம் அவர்களிடம் அளித்த விரிவான தகவல்
இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.
முதல்வரின் முழு முயற்சி
இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.
வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.
மத்திய மானியம் மறுப்பு
ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.
உயிர் கிராமங்கள்
இதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.
இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.
தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.
எடுபடாத எதிர்ப்பு
அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:
’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.
வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.
இயற்கை உரத் தொழிற்சாலை
பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.
ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
எப்போது மீள்வோம்?
“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் சங்கம் தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன்.
மெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது.
தமிழகம் மீள்வது எப்போது.!!??
நன்றி:-தமிழ் இந்து நாளிதழ் ஜனவரி 30 2016.

Monday, 1 February 2016

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்!! ஒரு தவகல்..




கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).
2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
MICROWAVED POPCORN.
3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):
REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.
4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.
5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.
6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
(SALTED, PICKLED FOODS):
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.
7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.
8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...
9.பண்ணை மீன்கள்:
FARMED FISH: பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.
மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.
முடிந்த வரை - "SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

ஜிக்கா’ எனும் வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பார்வை..

உலகை மிரட்டி வரும், 'ஜிக்கா' வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவுகிறது. ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 2,116 கர்ப்பிணிகள் உட்பட, 20 ஆயிரத்து, 297 பேருக்கு இதன் பாதிப்பு உள்ளது.தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ஜிக்கா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் அவசர நிலையை அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கர்ப்பணிகள் யாரும் தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வருவோர் குறைந்தது ஒரு மாதமாவது மனைவிகளுடன் உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜிக்கா வைரஸ் உடலுறவு மூலமாகவும் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலகை மிரட்டி வரும் சைகா வைரஸ் எப்படி பரவுகிறது என்று ஒவ்வொவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

.

கருத்தரிக்க வேண்டாம் !!
* 'அமெரிக்காவில், இந்த ஆண்டு, சைகா வைரசால், 40 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
* பிரேசிலில், 3,718 கர்ப்பிணிகள் உட்பட, 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* 'கொலம்பியாவில், ஆறு லட்சம் பேர் பாதிக்கப்படலாம்' என, அரசு எச்சரித்து உள்ளது.
* 'தாயின் மூலம் வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கப்படும் என்பதால், அடுத்த எட்டு மாதங்களுக்கு கருத்தரிக்க வேண்டாம்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், சைகா வைரஸ் பரவுகிறது. ஆனால், இது மனிதர்களிடமிருந்து உடலுறவு மூலமாகவும் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பரவாது. தாயிடமிருந்து, கருவில் உள்ள குழந்தைக்கு பரவும்; இந்த வைரசால் பாதிக்கப்படும் கரு, தலை சிறுத்து, மாறுபட்ட வடிவத்துடன் பிறக்கும். அமெரிக்க தேசிய சுகாதார மையத்தின் தகவலின்படி, பிரேசிலுக்கு அடுத்தபடியாக, கொலம்பியாவில் தான் இந்த வைரசின் பாதிப்பு அதிகமாக உள்ளது.


அறிகுறிகள்
  • ஜிக்கா வைரஸால் தாக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தெரிவது இல்லை. இதனால் அவர்களுக்கு தங்களுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதே தெரிவது இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

  • காய்ச்சல் சிலருக்கு மட்டுமே அறிகுறிகள் தென்படும். அதுவும் வைரஸ் தாக்கி சில நாட்கள் கழித்தே அறிகுறிகள் தெரியும். காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, கண் சிவப்பாகுதல் ஆகியவை ஏற்படும். அந்த அறிகுறிகள் 2 முதல் 7 நாட்களில் சரியாகிவிடும். 

ஜிக்கா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மனிதர்களை வைத்து மருந்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 29 January 2016

பிரதமர் நரேந்திர மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை!!

Image result for மோடியின்
நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்-வேன் என்று தேர்தல் பரப்புரையின் போது மாய-ம-யக்கம் தோற்றுவித்த நரேந்திரமோடி அறு-திப் பெரும்பான்மை பெற்று பிரதமர் ஆகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டும் தொடங்கி-விட்டது.
இந்த மூன்றாண்டு ஆட்சியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட எந்த வகையிலும் சிறப்-பான முன்னேற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. அதே-நேரம் சிறுசிறு தீப்பொறிகளை காட்டுத் தீயைப் போல உருவாக்கும் வேலைகளையே பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் மாட்டுக்கறித் தீ!
இந்தியாவில் பல்வேறு இன மக்கள் பல்வேறு பண்பாடு, உணவுப் பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து வருகின்றனர். ஆட்டுக் கறி, கோழிக்கறி என்பதே இந்தியாவின் பெரும்பாலான அசைவ உணவுப் பிரியர்-களின் உணவாக உள்ளது. கிராமங்களில் மடை-யான், நாரை, புறா ஆகியவற்றை உண்ணும் பழக்கம் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி மாட்டுக் கறி உண்ணும் பழக்கமும் இந்தியாவில் உண்டு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அனைத்துத் தரப்பினரது உணவாக மாட்டிறைச்சி இருக்கிறது.
இந்த நிலையில்தான், ‘இந்துக்களின் புனித தெய்-வம் பசு, அதை வெட்டக் கூடாது’ என்று மாட்-டுக் கறி மீது திடீர் எதிர்ப்பைக் காட்ட ஆரம்-பித்-தார்கள் பா.ஜ.க.வினர் கடைக்கண் பார்வையில் இருக்கும் இந்துத்துவ அமைப்புகள். மாட்டிறைச்சி வைத்திருந்தாக சிலர் அடித்துக் கொல்லப்பட்டனர். மிகச் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மாட்டின் தோலை உரித்த தலித்துகள் நிர்வாணமாக கட்டி-வைத்து அடிக்கப்பட்டனர்.
இப்படி மாட்டுக் கறிக்கு எதிராக மோடி அரசின் நிழலில் இருக்கும் சில இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலை-யில், மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதி-கரித்தது. கடந்த 3 ஆண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்று-மதி-யில் இந்தியா உலகிலேயே முதல் நாடாக இருக்கிறது. இந்த நிலையில் மாட்டு இறைச்சி பற்றிய சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உண்மைகள் தெரியாம-லேயே இதில் இஸ்லாமியர்களும் சிக்க-வைக்-கப்-பட்டு அரை- வேக்க-õடுகளால் அரசியல் செய்யப்-படு-கிறார்கள்.

மாடு இந்துக்களுக்குப் புனிதமானது என்பதில் மாற்-றுக் கருத்து இல்லை. ஆனால் மாட்டுக் கறி எந்த மதத்தைச் சார்ந்த உணவும் அல்ல, எந்த சாதியைச்
சேர்ந்த உணவுமல்ல. நிலவியல், பொருளாதாரம் சார்ந்த காரணிகளால்தான் உணவுப் பழக்கமும் அமை-கிறது. அந்தவகையில் மாட்டிறைச்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கோ இனத்துக்கோ, சாதிக்கோ உரித்தானதல்ல.
ஆனால் இந்துத்துவ அமைப்புகள் மாட்டுக் கறி இஸ்லாமியர்களின் உணவு, தலித்துகளின் உணவு என்று அறியாமையால் நிறுவ முற்படுகின்றன. இந்தக் கொடுமையைவிட கொடுமையானது என்ன-வென்றால், தலித்துகளும், முஸ்லிம்களும் இந்துத்-துவ கும்பலின் இந்த வலையில் விழுந்து, ‘மாட்டுக் கறி தங்களுக்கானது. அதை எதிர்க்கக் கூடாது’ என்று இந்த போராட்டத்துக்கு தங்கள் அடையாளச்
சாயத்தை ஏற்றியிருக்கின்றனர்.மாட்டிறைச்சி இஸ்லாமியர்களின் உணவு அல்ல. இஸ்லாமியர்களுக்கான வாழ்வியல், உணவியல் நெறி-களில் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. சாப்பிடலாம், சாப்பிடாமலும் இருக்கலாம். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை தொடங்கி, ஆந்திரா எல்லை வரை உள்ள நீண்ட தமிழகக் கடற்கரையில் ஏராளமான கிராமங்களில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பரவிக் கிடக்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும் முன்பு சமண சமயத்தைத் தழுவியிருந்தனர். கடலோர முஸ்லிம்கள் பயன்படுத்தத் தொடங்கி இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் பயன்படுத்துகின்ற தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா போன்ற தூய தமிழ் சொற்கள் சமணர்களிடம் இருந்து கைக்கொள்ளப்பட்டவையே. மேலும் கடலோர இஸ்லாமியர்கள் கடல்வாணிபத்திலும் ஈடுபட்டனர். மரக்கலங்களின் மக்கள் என்பதுதான் மரக்-காரையர்கள் என்று இருந்து பின் மரைக்காயர்கள் என்று மருவியது. இவர்கள் எல்லாம் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். தமிழகத்தில் கடற்கரை முஸ்-லிம்கள் உள்பட பெரும்பாலான முஸ்லிம்கள் மாட்-டிறைச்சி உண்ணும் வழக்கம் அற்றவர்கள்.
ஆனால், 1980களில் தமிழக முஸ்லிம் இளை-ஞர்கள் வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்-பூர் போன்ற நாடுகளுக்கும் செல்வது அதிக-மானது. வளைகுடா நாடுகளில் கடைநிலைத் தொழி-லாளர்-களாகச் சென்ற இவர்கள் அங்கே கட்டாயத்தின் பேரில் மாட்டு இறைச்சி சாப்பிட ஆரம்பித்தனர். அந்தப் புள்ளி-யில் இருந்துதான் தமிழக முஸ்லிம்களிடத்தில் மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்தது.

இன்னும் உற்று நோக்கினால் பணக்கார இஸ்லா-மி-யர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடும் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அடித்தட்டு இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பது அதிகரித்திருக்கிறது. கூலித் தொழில் செய்து, தொழிலாளர்களாக இருக்கும் முஸ்-லிம்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களாகவும் இரு--க்-கிறார்கள். இதில் எங்கிருந்து மதம் வந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு சோழநாடு சோறுடைத்து என போற்றப்படும் டெல்டா மாவட்டங்களிலேயே விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு வறுமை கோர தாண்டவம் ஆடியதே. நினைவிருக்கிறதா? வரப்-பெலி எனப்படும் எலிகள் விவசாயிகளுக்கு செல--வின்றி கிடைத்ததால் எலிக்கறி சாப்பிட்டனர். அதே-போலத்தான் மாட்டிறைச்சியும் குறைந்த செலவில் கிடைக்கிறது என்பதாலேயே சாப்பிடுகிறார்களே தவிர, இதில் சித்தாதந்தமும் இல்லை புண்ணாக்கும் இல்லை. வறுமைதான் இருக்கிறது. 

தமிழகம் தாண்டிப் பார்த்தால் கேரளாவில் அனைத்து சாதி, மதத்தினருக்கும் பொதுவான உண-வாக மாட்டுக் கறி உணவு இருக்கிறது. கேரளா, அஸ்-ஸாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பா.ஜ.க. தலைமையே மாட்டுக் கறிக்கு எதி-ர--õன நிலைப்பாட்டை எதிர்க்கிறது. ஏனெனில் அவர்-களுக்கு அரசியலைத் தாண்டி மாட்டிறைச்சியின் பயன்-பாடு புரிந்திருக்கிறது. அதனால் இம்மாநில பா.ஜ.க.வினரே தலைமையோடு மாட்டிறைச்சி விவ-காரத்தில் முரண்படும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. குறிப்பிடும்படியாக காஷ்மீர் மாநில முஸ்-லிம்-களி-டத்-திலும் மாட்டிறைச்சி பயன்பாட்டில் இல்லை. 

இவ்வாறு நிலம் சார்ந்து, பணம் சார்ந்த உணவே அன்றி மாட்டிறைச்சி மதத்துக்கானதோ, சாதிக்-கானதோ இல்லை. ஆனால் இந்துத்துவர்களுக்கு இது-பற்றிய புரிதல் இல்லை. இருந்தால் கூட மாட்டு இறைச்சியை வைத்து குறிப்பிட்ட சில மக்களின் இறைச்சியைப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்கள். மகாத்மா காந்தி மாட்டிறைச்சி பற்றி குறிப்-பிட்டதை இப்போது நினைவுகூர்வது மிகச் சரியாக இருக்கும். “பசுவதையை சட்டம் போட்டு நடை-முறைப்-படுத்த இயலாது. இந்த பூமிக்கு பாரமாய் இருக்கிற விலங்குகளை பாதுகாப்பது என்பது இயலாது. பார-மாக இருந்தால் மனிதனைக் கூட பாதுகாப்பது இய-லாத காரியம்தான். பசுவைக் காப்பாற்றுவது இந்து சமயத்தில் முக்கியமானதுதான். ஆனால், பசுவைக் காப்பதற்காக இந்து அல்லாத ஒருவனிடம் வலிமையைப் பயன்படுத்துவது இந்துமதக் கோட்பாடு ஆகாது’ என்கிறார் காந்தியடிகள். ஆனால், இப்போது பசுவைக் காப்பதாகச் சொல்லி இந்துமதத்தில் இருக்கும் தலித்கள் மீதே பலப்பிரயோகம் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்துத்துவர்கள். மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் கிராமப் பொருளாதாரமும், நாட்டின் ஏற்றுமதி வணிகமும் அடங்கியுள்ளது. இதை வசதியாக மறைத்து
உணர்ச்சிக் கொந்தளிப்பு முலாம் பூசுகிறார்கள். ஊடகங்களும் கூட! இந்தியா மாட்டுச் சந்தைகளுக்கு புகழ் பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா என இந்தியாவின் பல மாநிலங்களில் கிராமங்கள் முதல் மாநகரங்களின் புறநகர் பகுதிகள் வரை மாட்டுச் சந்தைக்கு புகழ்பெற்றவை.

விவசாயிகளும் பொதுமக்களும் பசு உள்ளிட்ட மாடுகளை வளர்க்கின்றனர். மூன்று அல்லது நான்கு கன்றுகள் ஈனும் வரைதான் பசுவுக்கு மதிப்பு. அதன்பிறகு பசு கருத்தரிப்பது கிடையாது. இதன் பின் விவசாயிகள் அந்த பசுவை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இப்போது தமிழக அரசு இலவச கறவைமாடுகளை மக்களுக்கு வழங்கி வரு-கிறது. மாடுகளால் பயன் இல்லாத நிலையில் ஆயி-ரக்-கணக்கான மாடுகளை வைத்து எப்படி விவசாயி-களால் பராமரிக்க இயலும்?

முதிர்ந்த பசுக்களை, மாடுகளை அவர்கள் அடி-மாடு என்று கூறி இறைச்சிக்கு விற்கிறார்கள். இதுவே காலங்-காலமாக கிராமங்களில் இருந்துவரும் நடை-முறை.
இன்றைக்கு அப்படி முதிர்ச்சி அடைந்த மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லவோ, விற்கவோ இயலாத சூழலை, ‘பசு பாதுகாவலர்கள்’ என
சொல்-லிக் கொள்பவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இ-த-னால் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆனால் பல-மான பாதிப்புகள் கிராமப் பொருளாதாரத்தில் ஏற்-பட்-டுள்ளன. மனிதனே பெற்றோரை வயதான நிலை-யில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் காலத்--தில், பயனில்லாத மாடுகளை இறைச்சிக்காக பயன்-படுத்துவதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள். இதற்கு அரசிடம் பதில் இல்லை. மாட்டிறைச்சி வைத்திருப்-பவர்-களைத் தாக்குவது என்பது இந்தியக் கிராமப் பொரு-ளாதாரத்தின் மீதான தாக்குதல்தான்.
சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளால் உண்-ணப்-படாத விலங்குகள் அழியும் விலங்குகள் பட்டிய-லில் இருக்கின்றன. ஆனால் விலங்குகளாலும், மனிதர்-களாலும் உண்ணப்படும் நிலையிலும் மாட்டினம் தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த இயற்கை விஞ்ஞானத்தை இந்த்துவவாதிகள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்னொரு பக்கம், மாட்டிறைச்சி உற்பத்தி செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் இந்தியாவின் முக்கியத் தொழிலாக மாறி வருகிறது. பசு பாதுகாவலர்களின் அரைகுறைப் போராட்-டங்களால் இந்தத் தொழிலுக்கும் எதிர்-காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இத்தகைய போராட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்-புற விவவசாயிகள்தான். நிறுவன ரீதியாக மாட்-டிறைச்சி ஏற்றுமதி செய்பவர்களை எதிர்த்து நின்று போராட பசு பாதுகாவலர்களுக்கு தெம்பு இல்லை.
இந்த நிலையில், இந்துத்துவம் மாட்டிறைச்சியை ஒரு குறியீடாக வைத்து அரசியல் செய்கிறது என் -றால், இதை எதிர்க்கிறோம் என்று சொல்லும் கம்--யூனிஸ்-டு-களும் மாட்டிறைச்சியை குறியீடாக வைத்து எதிர் அரசியல் செய்கிறார்கள். தலித்கள், இஸ்லாமியர்களை அழைத்து மாட்டுக் கறி திருவிழா என்று நடத்துகிறார்கள் அவர்கள்.
உண்மையிலேயே மாட்டிறைச்சிக்குப் பின்னால் இருக்கும் கிராமப் பொருளாதாரம், சாதி - மதம் தாண்-டிய பொருளாதாரக் காரணிகளை மறைத்து-விட்டு
கம்-யூனிஸ்-டுகளும் மற்ற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்ப்-பதற்கு மாட்டிறைச்சியை அரசிய-ல் குறி-யீடா-கப் பயன்படுத்துகிறார்கள். இதுவும் எவ்-விதப் பய-னற்ற உணர்ச்சிகர அரசியல் அறுவடைக்கு-த்தான்.
இஸ்லாமியர்கள் பன்றிக்கறி சாப்பிட அனுமதி இல்லை. அதேசமயத்தில் அதை சாப்பிடுபவர்களை தடுப்பதற்கும் அனுமதியில்லை. 60% இஸ்லாமியர்கள் வாழும் முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொண்ட மலேசி-யா-வில் சீனர்கள் விரும்பிச் சாப்பிடுவது பன்றிக்-கறி-தான். அதை முன்னிட்டு மலேசியாவில் பன்றிகள் அறுக்கப்பட்டு பன்றி இறைச்சி விற்கப்படுகிறது. அதேசமயம் சில வளைகுடா நாடுகளிலும் பன்றிக் கறி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் அதை இஸ்லாமியர்கள் சாப்பிடுவதில்லை. இதை மாட்டிறைச்சி எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்-பாளராக போட்டியிட்ட மோடி, வளர்ச்சி, வளர்ச்சி என்பதையே தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் ஆட்சியைப் பிடித்தபிறகு வளர்ச்சி பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாததோடு பதற்றம் பதற்றம் என்பதையே குறியாக வைத்து பா.ஜ.க.வின் ஆதரவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
சாமானிய மக்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்-பது அனைவருக்கும் வேலை வாய்ப்பு,  சாலைப் போக்குவரத்து வசதி, மருத்துவ வசதிகள்,
எல்--லாருக்--கும் சமமான கல்வி, விலைவாசி உயர்வு கட்டுக்--குள் இருத்தல் ஆகியவைதான் கடைக்கோடி கிரா--மங்--களை மட்டுமல்ல நகரங்களைச் சேர்ந்த மக்-களும் எதிர்பார்ப்பது. இதுதான் இந்தியாவின் உண்-மை-யான வளர்ச்சியும் கூட. ஆனால் மோடியின் மந்திர -இந்தியாவில் இவையெல்லாம் இன்னும் பழைய நிலைமையில்தான் இருக்கின்றன என்பதே நிஜம். உணவுக்கே வழியில்லாமல் பல கோடி இந்தி-யர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த உணவைதான் சாப்பிடவேண்டும் என்ற குரல் ஆளுங்-கட்சி தரப்பில் இருந்து வருவது கண்டனத்துக்-குரியது. 

காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியின் ஊழலால் சலிப்படைந்து வெறுப்படைந்த மக்கள் வேறு வாய்ப்பு இல்லாத நிலையில்தான் மோடியை தேர்ந்-தெடுத்தனர். அதுவும் இந்தியாவில் முப்பது சத-வி-கித மக்கள்தான் மோடிக்கு வாக்களித்தனர். மோடி ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு சில்லறை விஷ-யத்-துக்-கும் மதச் சாயம் பூசி, போலி தேசியச் சாயம் பூசி சாதாரண மக்களை கடும் வெறுப்பில் ஆழ்த்தி-யிருக்-கிறார்கள் மோடியின் நிழலில் முழங்கும் இந்துத்துவ அமைப்பினர். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டில் 20  சதவிகிதம் இருக்கும் இஸ்லாமியர்களையும், 20 சதவிகிதம் இருக்கும் தலித்களையும் மோடிக்கு எதிராக காங்கிரஸால் ஒருங்கிணைக்க முடிய-வில்லை. ஆனால், மோடி பதவியேற்ற பிறகான செயல்-பாடுகளால் மோடிக்கு எதிராக இந்த நாற்பது சதவிகிதம் உள்ள இஸ்லாமியர்களும், தலித்களும் தாங்களாகவே ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி பற்றிய உண்மைகள் தெரியா-மலோ, அல்லது தெரிந்தும் மறைத்தோ அரசியல் ஆதாயம் தேட முயற்சித்த பாஜக அதில் தோல்வி அடைந்திருக்கிறது.மற்றவர்களை பயப்பட வைக்கவேண்டும் என்று மாட்டு இறைச்சி என்ற பூதத்தை பாஜக சுவரில் வரைந்தது. இப்போது தான் வரைந்த பூதத் தைப் பார்த்து தானே பீதியில் இருக்கிறது பாஜக. இதற்-குக் காரணம் இந்துத்துவவாதிகள் உணர்ச்சிக்-குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிவுக்கும் ஆய்-வுக்-கும் கொடுக்கவில்லை. இதற்கான விலையை பாஜக விரைவில் கொடுக்க இருக்கிறது.விதவிதமாய் பதற்றத் தீயை மூட்டினாலும் இந்தியாவில் மோடியின் மாட்டுக் கறி வேகவில்லை என்பதே உண்மை!
நன்றி : - புதுமடம் ஜாபர் அலீ,
சமரசம் அக்டோபர் 1-15, 2016