Sunday, 17 March 2019

அது என்ன Article 370 ? அவசியம் அனைவரும் தெரிஞ்சுருக்கணும் !!!

தற்போது விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.
அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம்.
இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.
கடைசி வரை படித்து பாருங்கள் அப்ரோம் நீங்களும் Article 370 ஐ எதிர்ப்பீர்கள்.
Image result for Article 3701.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.
அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம்.
2.ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி கொடி உள்ளது..
அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது.
3.ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.
ஆனால் நம்மை போன்ற மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.
4.இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்று article 370 இல் உள்ளது.
5.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்..
6.பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.
7.ஜம்மு காஸ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கான குடியுரிமை பறிக்கப்படும்.
அதே போல அந்த பெண் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்தியக்குடியுரிமை அளிக்கப்படும்.
இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர்.
8.அரசியல் சாசன சட்டம் 370 காரணமாக இந்தியாவின் RTI, RTE மற்றும் CAG போன்ற எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது..
9.இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது.
பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை.
மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை..
10.Article 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது.
சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் அங்கு மறுக்கப்படும்.
11.காஷ்மீரி பெண்களை திருமணம் மட்டும் செய்து கொண்டு பாக்கிஸ்தானியர்கள் இந்திய குடிமகனாக மாற முடியும்.
ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது..
12.காஷ்மீரில் உள்ள மக்களுக்கு என்று இந்திய அரசு வரிச்சலுகை செய்ய வேண்டும் என்று article 370 கூறுகிறது.
இதற்காக மட்டும் இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது.
அத்தனையும் நமது வரிப்பணம்.
நமது வரிப்பணத்தில் இலவசங்களை அனுபவித்து விட்டு,
இந்திய தேசிய சின்னங்களை அவமதித்து விட்டும்,
நமது பாதுகாப்பு படை வீரர்களை கோழைகள் போல முதுகில் குத்தி கொலை செய்யும் இவர்களுக்கு Article 370 தேவையா ?
சீனா திபெத்தை கைப்பற்றிய போது அங்குள்ள கிளர்ச்சியாளர்களை அடக்க சீன மக்களை அங்கு குடியமர்த்தியது.
அதே போன்று நாமும் செய்தால் தான் காஷ்மீரில் அமைதி நிலவும்.
அதற்கு Article 370 ஐ நீக்க வேண்டும்
சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து கைப்பற்ற பாகிஸ்தான் எவ்வளவோ சித்து விளையாட்டுகளை செய்து நம் நிலத்தை அபகரிக்க பார்த்தது.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 7 மாவட்டங்கள் தான் இந்தியாவிற்கு எதிராக செயல்பட பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள்.
அவர்களை தமிழ்நாட்டில் உள்ள சிலர் விடுதலை வீரர்களாக சித்தரித்து வருகின்றனர் என்பது மன வேதனையை தருகிறது.
உங்க வீட்டை ஒருவன் ஆக்கிரமித்துக்கொண்டு உங்களை அங்கு இருந்து விரட்டினால் நீங்கள் அவனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்களா அல்லது அவனை அங்கிருந்து அடித்து விரட்டுவீர்களா ?
நேதாஜி வழியில் சென்றால் தான் நாமும் நம் நாடும் அமைதியாக இருக்கும்..
இப்பொழுது சொல்லுங்க நமக்கு இந்த Article 370 சட்டப்பிரிவு தேவையா ???

Thursday, 14 March 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தோண்ட, தோண்ட அதிர வைக்கும் பல தகவல்கள்

No photo description available.பொள்ளாச்சியில் அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் 2 படுக்கை அறைகள் கொண்ட இந்த பண்ணை வீடு உள்ளது.

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு சொந்தமானது, இந்த பண்ணை வீடு. ஒரு அடிதடி பிரச்சினை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சி நகருக்கு குடியேறிவிட்டது, திருநாவுக்கரசு குடும்பம். அதுவே திருநாவுக்கரசுக்கு வசதியாக போய்விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து, இளம்பெண்களை இங்கே வரவழைத்து கொடூர கும்பல் சீரழித்ததாக கூறப்படுகிறது. இங்கே வரும், இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய சுவற்றில் தனியாக துளையிடப்பட்டுள்ளது.

அந்த துளையின் மூலம் வீடியோ எடுத்து அதன் மூலம் இளம்பெண்களை மிரட்டியிருக்கிறார்கள். சமூக வலைதளம் மட்டுமின்றி, காதலியுடன் தனியாக இருக்க இடம் கேட்கும் நண்பர்களுக்கும், தன் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், அதை பயன்படுத்திக்கொள் என திருநாவுக்கரசு தாராள மனசு காட்டுவாராம்.அப்படி காதலியுடன் வரும் நண்பனின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து, அவர்களை அடித்து உதைத்து தங்கள் வழிக்கு கொண்டு வரும் செயலிலும் திருநாவுக்கரசு கும்பல் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வீடு மட்டுமில்லாமல், சொகுசு கார்களிலும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் வீடியோக்களை வைத்து அந்த பெண்களை மிரட்டி, பணம் பறிப்பார்கள் என சொல்லப்படுகிறது.பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டல் விடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இப்படி பல இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களையும் இந்த கும்பல் சீரழித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. 100வது சம்பவம், 200வது சம்பவம் என பாலியல் வன்முறையை இந்த கும்பல் கேக் வெட்டி கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பலருக்கு விருந்தாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை வந்தால், வீடியோ அழிக்கப்படும், நீ வராவிட்டால் உன் தோழியின் செல்போன் எண் கொடு, நகை கொடு, பணம் கொடு என பெண்களை மிரட்டி, மிரட்டி இவர்கள் பணிய வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இவர்கள், அந்த வீடியோக்கள் மூலமே தற்போது சிக்கியிருக்கிறார்கள்.

பெண்களை சித்ரவதை செய்யும் வீடியோக்களில் 4 பேரும் இருப்பதே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறியிருக்கிறது.
"அண்ணா என்னை அடிக்காதீங்கன்னா, வலிக்குதுன்னா. நானே கழட்றன்னா"
என்ற அந்த இளம் பெண்ணின் கதறலை கேட்கும் போது, வீட்டில் இளம் பெண்களை வைத்திருப்பவர்களின் இதயமே வெடித்து விடும் போல் இருக்கிறது.

குற்றவாளிகள் கொடுத்து வைத்தவர்கள். இந்தியாவில் பிறந்துவிட்டார்கள். இங்கே தான் அவர்களுக்கு 10 ஆயிரமும், தையல் மெஷினும் கிடைக்கும்.

இதுவே இவர்கள் இஸ்லாமிய நாட்டில் பிறந்திருந்தால், பொதுமக்கள் பார்வைக்கு 3 நாட்களுக்கு நடுரோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டு இருப்பார்கள்...

இதுபோன்ற மனித மிருகங்களை பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியி வைத்து மக்கள் முன்னிலையில் அவர்களின் ஆணுருப்பை அறுத்தெறிய வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு கூடியது போல ஒரே நாளில் மக்கள் சக்தியால் சட்டத்தை மாற்றி அமைக்க முடியும்.

நம் நாட்டை நயவஞ்சகர்களிடமிருந்து காக்க தற்போதே Social mediaக்கள் ஒன்றிணைந்து உடனே களத்தில் இறங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வேண்டும். மதங்களின் பெயரைச்சொல்லி நாட்டினைத் துண்டாட நினைக்கும் பாசிஷ சக்தி களையும் அழிக்க வேண்டும். இதற்கு நக்கீரன் போல ஆண்மையுள்ள மீடியாக்கள் இன்னும் நாட்டில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் மூடி மறைக்கப் படுகின்றன, அவற்றையும் வெளிக்கொண்டு வர வேண்டும்.

எவ்வளவு தான் Android phone களை பெண் குழந்தைகளிடம் கொடுக்கக் கூடாது என்றாலும் பெற்றோர்கள் வாங்கி தந்து விடுகிறார்கள். அது தங்களின் பிள்ளைகளுக்கு விஷம் கொடுப்பதற்கு சமம்

ஒரு அரசியல் மாநாட்டிற்காக ஒன்று கூடும் மக்களே!!!!

ஏன் ஒரு இழிச்செயலை செய்த கயவர்களை தண்டிக்க ஒன்று கூட தயங்குகிறது..

ஒரு முறை ஒரே முறை தண்டித்து பார்க்க முற்ப்பட்டால் பின் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்கும். கழுவேற்றம் !!!
No photo description available.
இந்த பழையமுறை தண்டனையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் இந்த காம மிருகங்களின்
கொட்டம் அடங்கும்.
இரண்டு மூன்று நாட்கள் துடிதுடித்து தன் மரணத்தை கண்முன்னே பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பிரியும் தண்டனை.
கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர். அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.


எல்லா விஷயத்துக்கும் பழமையை விரும்பும் நாம் ஏன் இதை செய்ய கூடாது....

Friday, 8 March 2019

வரலாறு போற்றும் முஸ்லிம் வீரப் பெண்மணிகள் பற்றி அறிந்துகொள்வோம் !!

1,சுமையா (ரலி) அவர்கள்
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் அது. நபி (ஸல்) அவர்களின் நற் போதனைகளை ஏற்ற நபித் தோழர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்தனர். காவிர்களின் தொல்லைகள் அதிகரித்த போதிலும் இஸ்லாத்தை ஏற்ற ஆண்களும் பெண்களும் தம் கொள்கையில் உறுதியாக இருந்தனர். கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்ற பெண்களில் முதன் முதலில் தன்னுயிரைத் தியாகம் செய்த பெருமை சுமையா (ரலி) என்ற வீரத்தாயையே சாரும். எழுதுவதற்கும் சொல்வதற்கும் எளிதாயிருப்பினும் சுமையர (ரலி) அடைந்த துன்பமும் துயரமும், வேதனையும் யார் அறிவர்?
ஹஸரத் அம்மார் (ரலி) அவர்களின் அன்பு தாயார் தான். சுமையா (ரலி) அவர்கள், இரக்க மற்ற காபிர்கள் அவர்களை கடும் வெயிலில் சூடான தகிக்கும் பொடிக் கற்கள் மீது படுக்க வைத்து வேதனை செய்தார்கள். உருக்குச் சட்டை அணிவித்து கடும் வெயிலில் நிறுத்தி வைத்து வேதனை செய்தார்கள்.
ஒரு நாள் கொடியவனான இரக்க மற்ற அபூஜஹீல் அவர்களைத் திட்டி, கோபப்படுத்திய பின், ஓர் ஈட்டியினால் ஒரு குற்றமும் செய்யாத சுமையா (ரலி) அவர்களைக் குத்திக்கொன்றான். ஒரு கோத்திரத்தின் தலைவன்- வம்பன் ஒரு பெண்ணைக் கொலை செய்து தன் கோழைத் தனத்தை உறுதி செய்துகொண்டான்.

2,ஸஃபியா பின்து உபைதா (ரலி)
ஹிஜ்ரி 12ம் ஆண்டு நடந்த திமிஷ்கு போரில் காலித் பின் வலீது (ரலி) அபூ உபைதா (ரலி) ஆகிய இரு பிரதான நபித் தோழர்களும் கலந்துகொண்டார்கள் அப்போரின்போது முஸ்லிம் வீரப் பெண்கள் பலர் கலந்துகொண்டனர். சண்டை தொடங்கு முன் ஸபிய்யா (ரலி) குதிரை மீது தாவி ஏறி வாளைச் சுழற்றியவாறு, பின்வரும் வீரமிக்க உரையை நிகழ்த்தினார்.
கற்புடைய “முஸ்லிம் வீர மங்கையரின் கருவில் கனிந்த முஸ்லிம் வீரர்களே! மெய்க்கும் பொய்க்கும் போர் மூன்டிருக்கிறது. அல்லாஹ் மீது ஆணை! பசித்த புலிகளைப் போல் வீறுகொண்டு கிளம்புங்கள்! எதிரிகளை வெட்டி வீழ்த்துங்கள்! கிடைத்தால் வெற்றி! அது கிடைக்காவிட்டால் புனித ஹிஷ்த் பதவி! அல்லாஹு அக்பர்’
இவ்வீர உரையைக் கேட்ட முஸ்லிம்களின் நரம்புகளில் ஓடிய உதிரத்தில் சூடேறிற்று! இரு தரப்பினருக்குமிடையி0ல் பயங்கரமான போர் மூண்டது. இதில் ஸபியா (ரலி) ஆண் வீரர்களுக்குச் சமமாக எதிரிகள் பலரை வெட்டி வீழ்த்தி வாகை சூடினார்கள்.

3,அமாமா பின்த் ஜுபைர் (ரலி)
அது கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். அப்துல்லா பின் ஸஅத்(ரலி) தலைமையின் கீழ் ஆப்ரிக்க நாட்டுக்குச் சென்ற படையில் இஸ்லாமிய வீர மங்கை அமாமா ரலி பங்கு பற்றினார்கள். இவர்கள் இஸ்லாமிய வீரர்கள் மத்தியில் உணர்வூட்டும் உரை நிகழ்த்தி ஆர்வமூட்டினார்கள். ஆண் வீரர்களுக்குச் சமமாக வாளேந்தி வீரர் தளபதி அப்துல்லா (ரலி) அவர்களுக்கு உதவியாக அருகிலே இருந்து வீர சாகஸங்கள் புரிந்தார். இருவருமாகச் சேர்ந்து எதிரிப் படைத்தலைவனின் தலையை வெட்டி சாய்த்தனர். ஆப்ரிக்கப் படை பல திசைகளிலும் சிதறி ஓடிற்று.

4,ஸபிய்யா (ரலி) அவர்கள்
இவர் ஹம்ஸா (ரலி) அவர்களின் சகோதரியும் நபி(ஸல்) அவர்களின் மாமியும் ஆவார்கள். பத்ருப் போரில் படுதோல்வியடைந்த காபிர்கள் ஹிஜ்ரி 2ல் நடந்த உஹத் போரில் வீராவேசத்துடன் கலந்துகொண்டனர். முஸ்லிம் வீரர்கள் ஆரம்பத்தில் காபிர்களைத் தாக்கி வெற்றிபெற்றனர்.
ஆயினும் நபி (ஸல்) அவர்களின் கட்டளை மீறப்பட்டதால், முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த இக்கட்டான கட்டத்தில் ஸபிய்யா (ரலி) அவர்கள் முஸ்லிம் வீரர்களை அழைத்து, அவர் களை உற்சாகப்படுத்தி, ஆர்வமூட்டிய தால் முஸ்லிம்கள் மீண்டும் உத்வேகத் துடன் போரில் ஈடுபட்டனர். இப்போ ரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஆக் கமும் ஊக்கமும் மகத்தானது.
அகழ்போரின்போது முஸ்லிம் பெண்மணிகளை ஒருகோட்டையில் பாதுகாப்பாக இருப்பதற்கு நபி (ஸல்) ஒரு ஹைபியை உதவியாளராக நியமித்து வைத்திருந்தார்கள்.
யூதனொருவன் முஸ்லிம் பெண்கள் இருந்த கோட்டைக்கருகில் வேவு பார்ப்பதற்கா மறைந்திருந்ததை ஸபிய்யா (ரலி) அவர்கள் அவதானித்தார்க்ள. அந்த யூதனைத் தாக்கி வரும்படி ஆண்ஸஹாபியிடம் ஸபிய்யா (ரலி) கூற, அவரின் பலவீனம் காரணமாக ஆண் ஸஹாபியால் அவ்வேலையைச் செய்ய முடியாமற்போகவே, வீரப் பெண்மணியான ஸபிய்யா (ரலி) கூடாரத்தின் ஓர் முளைக்கம்பைப் பிடுங்கி பதுங்கியிருந்த யூதனைக் கொன்று எதிரிகள் தங்கியிருந்த பகுதிக்கு இறந்த உடலை வீசி எறிந்து விட்டார்கள். இது சமயம் அவர்களின் வயதோ ஐம்பதுக்கும் அதிகமாக இருந்தது. இந்த வயதில் அவர்களின் வீரதீரச் செயல் இக்கால ஆண்களுக்கும் பெரிய படிப்பினையாகவே இருக்கின்றது.

5,ஜுவைரியா (ரலி)
ரோமானியர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நடந்த யர்மூக் போர் மிகவும் பயங்கரமானது. இதில் எதிர் தரப்பில் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர். முஸ்லிம்களோ முப்பத்து ஐயாயிரம் வீரர்கள் மட்டுமே. ஆரம்பத்தில் முஸ்லிம் வீரர்கள் ரோமானியரின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். பலர் உயிரிழந்தும் படுகாயமடைந்தனர்.
முஸ்லிம் படையினருக்கு உணவு, நீர் வசதிகள் செய்துகொடுக்கவும், காயமடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை செய்யவும் முஸ்லிம் பெண்களின் படையும் வந்திருந்தது. அப்படையில அமீர் முஆவியாவின் மகளார் வீர மங்கை ஜுவைரியாவும் இருந்தார்.
எதிரிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முஸ்லிம்கள் தினறுவதைக் கண்டதும் ஜுவைரியா கொதித்தெழுந்தார். பெண்கள் அனைவரையும் திரட்டினார். வாட்களை ஏந்தியவாறு பெண்கள் படை புறப்பட்டது. இதனைக் கண்டதும் ஆண்கள் வீறு கொண்டனர். ஜுவைரியா எதிரிப்படையினும் புகுந்து வாளைச் சுழற்சி சுழற்றி வீசி னார். எதிரிகள் திகைத்தனர். ஜுவைரியாவின் உடலில் பல காயங்கள் பட்டன. அவ் வீர மங்கை காயங்களைப் பொருட் படுத்தவில்லை. முஸ்லிம்கள் வெற்றிபெறும் வரை பின்வாங்கவும் இல்லை.
முஸ்லிம்களிடையே வெற்றி முழக்கம் ஏற்பட்ட பின்னரே குதிரையிலிருந்து சோர்ந்து கீழே சாய்ந்தார்..........


இன்று உலக மகளிர் தினம். தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் இந்த பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நோக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம் !!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Thursday, 7 March 2019

திருமணம் மற்றும் உறவின் முறை விளக்கம் பற்றிய சிறப்பு பார்வை !!

திருமணம் என்ற சொல்லின் விளக்கம் : 
=============================
திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது இங்கு அடைமொழி.மண\த்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:
=====
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.
பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து பொற்றாலி க்கினர்.

அருகு-மணை எடுத்தல்:
==================
தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.
"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள்~
அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வறண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து
போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.
பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.
ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

முகூர்த்தக்கால் நடுதல்:
========================
முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

அரசாணிக்கால் நடுதல்:
========================
மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும்,பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச்செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:
============================
கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இருகண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

திருமண வேள்வி:
==============
அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல்வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத்தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

பாலிகை இடுதல்:
=============
நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:
==========================
இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள்
என்பதே இதன் பொருள்.
அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================
மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச்சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும்மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================
மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்துவெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்றேன் என இருவிட்டாரும் கூறி ஏழு பாக்குகள் ஏழு வெற்றிலைகள் வைத்து மாற்றுதல் எழுவகை பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உருதியளிப்பதாகும் .

உறவின் முறை விளக்கம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~
கணவன், கொழுநன்
~~~~~~~~~~~~~~~~~~
கண் அவன் பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்தும் கண்ணைபோல் பெண்ணை நல்வழி படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்கு கொழு கொம்பு எப்படி இன்றி அமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய  ஆண்மகன் என்பதாகும்

மனைவி
~~~~~~~~
மனைவி துணைவி இல்லாள் இச்சொற்கள் இல்லநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனாவாகும் மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.  

Friday, 1 March 2019

நூறு பயனுள்ள மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் ஆங்கிலப் பெயர்களுடன் !!!

நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்….
1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE
கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும்.
இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும்.
Image result for மூலிகை2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE
அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும்.
3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE
அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும்.
அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும்.
4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE
இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும்
பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும்.
பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.
5. அரசு – Ficus religlosa – MORACEAE
அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பற்றிடபுண்கள் ஆறும்
அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.
அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டுவர பெண் மலடு நீங்கும்.
6.அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta – MALVACEAE
இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும். காயம் வெகு சீக்கரத்தில் ஆறும்.
இலையுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் – 2, மிளகு – 3 சேர்த்து அரைத்து புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுக்க நஞ்சு முறியும்.
7.அறுகம்புல் – Cynodon dactylon – POACEAE
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைத்தல் தீரும்.
30 கிராம் புல்லை அரைத்து பாலில் கலந்து பருக இரத்த மூலம் குணமடையும்.
30 கிராம் புல்லை நன்றாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20-40 நாட்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.
8.ஆடாதோடை – Adathonavasica – ACANTHACEAE
ஆடாதோடை மணப்பாகு 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட மார்ச்சளி, இருமல், காசம் ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
ஆடாதோடை இலை – பங்குக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரை சீலையில் தோய்த்து ஒற்றடமிட வீக்கம் கீல்பிடிப்பு இவை தணியும்.
9.ஆடுதீண்டாப்பாளை – Aristolochia bracteolate – ARISTOLOCHIACEAE
உலர்ந்த இலை – 10 கிராம் அளவு எடுத்து ¼ படி வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மி.லி. – 30 மி.லி. வீதம் உள்ளுக்குக் கொடுக்க நுண்புழுக்கள் சாகும்.
வேரை அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளுக்கு கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்து பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்கு பூச குணமாகும்.
10.ஆமணக்கு – Ricinus communnis – EUPHORBIACEAE
இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகுதியாகும்.
கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஒரிரு துளி விளக்கெண்ணெய் கண்ணில் விட வலி நீங்கும்.
ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்ட மாதவிடாய் வயிற்று வலி தீரும்.
11.ஆல் – Ficus benghalensis – MORACEAE
ஆலம்பழுப்பு இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து கரப்பானுக்குப் பூச குணமாகும்.
ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீர்விட்டு குடிநீராக்கி வாய் கொப்புளித்து வர வாய்ப்புண், ஈற்றுப்புண் இவை போகும்.
12.ஆவாரை – Cassia auriculata – CAESALPINIACEAE
பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவைநீங்கும்.
ஆவாரை இலை பூ, காய், பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்கச் செய்ய நீரிழிவு தீரும்.
13.ஆனை நெருஞ்சில் – Pedalium murex – PEDALIACEAE
இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.
14.இலந்தை – Ziziphus mauritiana – RAMNACEAE
இலை – 1பிடி, மிளகு – 6, பூண்டு – 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.
பச்சை இலையை அரைத்து சிறுஎலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.
15.இலவு – Ceiba pentandra – BOMBACACEAE
இலையை அரைத்து பசும்பாலில் கலக்கி கொடுக்க சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. காலை மாலை குடிக்கச் செய்ய மலச்சிக்கல், நீர்க்கட்டு நீங்கும்.
16.இலுப்பை – Madhuca longifolia – SAPOTACEAE
இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.
10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.
17.இம்பூறல் – Oldenlandia umbellate – RUBIACEAE
இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.
18.உசில் – Albizia amara – MMOSACEAE
உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.
19.ஒதியன் – Lannaea coromandelica – ANACARDIACEAE
ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.
ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.
20.உப்பிலாங்கொடி – Pentatropis capensis – ASCLEPIADACEAE
இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.
மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.
31.கல்யாண முருங்கை – Erythrina indica – CAESALPINIACEAE
இலைச்சாறு 30 மி.லி. 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன், பின் காணும் வயிற்றுவலி தீரும்.
இலைச்சாறு – 10 துளி, 10 துளி – வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகப்படும்.
32.கழற்சி – Caesalpinia crista – CAESALPINIACEAE
கொழுந்துஇலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர விரைவீக்கம், விரையழற்சி குணப்படும்.
கழற்சி விதையும், மிளகும் சமஅளவு பொடித்துக் கலந்து 4 கிராம் அளவாக காலை மாலை சாப்பிட காய்ச்சல், குடல்வலி ஆகியவை தீரும்.
33.களா – Carissa spinarum – APOCYNACEAE
களாப் பழத்தை உணவு உண்ட பின்பு சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்ணிலுள்ள படலங்கள் மாறும்.
34.கறிவேம்பு – Murraya koenigii – RUTACEAE
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரை கலந்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை, சூதக வாய்வு தீரும்.
இலை சிறிதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் பிடி சோற்றில் நெய் விட்டு பிசைந்து உண்ண குமட்டல், வாந்தி, அசீரணபேதி போன்ற வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.
35.அவுரி / நீலி – Indigofera tinctoria – PAPILINODEAE
அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு சமன் சேர்த்து சுண்டை அளவு மாத்திரை செய்து 1 நாளைக்கு 3 வேளை கொடுக்க நரம்பு சிலந்தி, கீல்வாதம் தீரும்.
அவுரி இலையைக் கொட்டைப் பாக்களவு அரைத்து 250 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை தீரும்.
36.கானாவாழை – Commelina benghalensis – COMMELINACEAE
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு போட விரைவில் அது குணமடையும்.
இலையை அரைத்துக் கட்ட படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்ணாறும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.
37.கிணற்றுப்பாசான் / வெட்டுக்காயப்பூண்டு – Tridax procumbens –COMPOSITAE
இலையை நீர் விடாது அரைத்து வெட்டுக்காயம் சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றிட சீழ்ப்பிடிக்காமல் விரைந்து ஆறும்.
38கிரந்தி நாயகம் – Dipteracanthus patulus – ACANTHACEAE
இலையை அரைத்து நகச்சுற்றுக்குப் பூச அவை குணமாகும்.
இலையை மென்றுத் தின்ன தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.
39.கீழாநெல்லி – Phyllanthus amarus – EUPHORBIACEAE
இலையை உப்பு சேர்த்து அரைத்து தடவிக் குளிக்க சொறி, சிரங்கு நமைச்சல் நீங்கும்.
கீழாநெல்லியுடன் சமன் கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்துப் பசும்பாலுடன் 45 நாள் சாப்பிட கல்லீரல் பழுது பாண்டு, சோகை தீரும்.
இலைச்சாறு, பொன்னாங்கண்ணி இலைச்சாறு சமன் கலந்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி தலைமுழுக பார்வைக் கோளாறுகள் தீரும்.
40.குப்பைமேனி – Acalypha indica – EUPHORBIACEAE
குப்பைமேனி சமூலச் சூரணத்துடன் நெய் கலந்து காலை, மாலை 40 நாட்கள் கொடுக்க பவுத்திர நோய் தீரும்.
இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் கழித்துக் குளிக்க தோல் நோய்கள் தீரும்.
[1/30, 10:33 AM] Erumbur Balaji: 21.ஊசித்தகரை – Cassia tora – CAESALPINIACEAE
இலையை நீரிலிட்டுக் காய்ச்சி 10 மி.லி வீதம் காலை, மாலை கொடுக்க குழந்தைகள் பல் முளைக்குங்கால் ஏற்படும் காய்ச்சல் தணியும்.
விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவ படை, சிரங்கு, ஆறாப்புண் ஆகியவை குணமாகும்.
22.எருக்கு – Calotropis gigantean – ASCLEPIADACEAE
இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும்
பூ – 1 பங்கு; மிளகு – 1 பங்கு, கிராம்பு – ½ பங்கு சேர்த்து மிளகளவு உருட்டிக் கொடுக்க கடின இரைப்பு உடனே தணியும்.
23.எழுத்தாணிப் பூண்டு – Launaea sarmentosa – COMPOSITAE
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவ சொறி, சிரங்கு இவை குணமாகும்.
வேர் – 5 கிராம் பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும்.
24.ஓமவல்லி / கற்பூரவல்லி – Coleus aromaticus – LABIATAE
இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல். தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும்.
இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.
25.ஓரிதழ் தாமரை – lonidum suffruticosum – VIOLACEAE
இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும்.
இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.
26.கண்டங்கத்திரி – Solanum xanthocarpum – SOLONACEAE
இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும்.
கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.
27.கரிசாலை / கரிசலாங்கண்ணி – Eclipta prostrate – ASTERACEAE
கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை ½ தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும்.
மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.
28.ஊமத்தை – Datura metel – SOLANACEAE
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும்.
இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.
29.கருணை – Typhonium trilobatum – ARACEAE
கருணைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி உலர்த்தி தயிரில் 3 நாள் ஊற வைத்து, எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பக்குவமாக பிசைந்து நெல்லி அளவு காலை, மாலை 6 மாதம் சாப்பிட மூலம் தீரும்.
30.கருவேல் – Acacia nilotica – MIMOSOIDEAE
கருவேலம்பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது கட்ட விரைந்து ஆறும்.
41.குமரி / சோற்றுக் கற்றாழை – Aloe vera – LILIACEAE
பெண்ணின் கருப்பைக் குற்றங்கள்
அனைத்திற்கும் இது நன்மருந்தாகும்.
சோற்றை 10 முறை நீரில் அலசி காலையில் சாப்பிட வயிற்றுப்புண், உடல்சூடு, மூலம் தணியும்.
கற்றாழை சோறு – 100 கிராம், பனைவெல்லம் – 100 கிராம், வெள்ளைப்பூண்டு – 25கிராம் எடுத்து இதில் பனைவெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி அதனுடன் கற்றாழை சோறு சேர்த்து அடுப்பேற்றி நன்றாகக் கிளறிப் பாகு பதத்தில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கிளறிப் பத்திரப்படுத்தவும். காலை, மாலை 5 கிராம் உண்டு வர உடல்சூடு தணிந்து வெள்ளை வெட்டை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். வயிற்றுப்புண், மூலம் குணமாகும்.
42.கொட்டைக்கரந்தை – Sphaeranthus indicus – COMPOSITAE
கொட்டைக் கரந்தை சூரணத்துடன் கரிசலாங்கண்ணி சூரணம் சமன் கலந்து தேனில் குழைத்து சாப்பித இளநரை தீரும்.
கொட்டைக் கரந்தைப் பொடி – 5 கிராம் சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட வெள்ளை தீரும். நீண்ட நாள் சாப்பிட மூளை, இருதயம், நரம்பு ஆகியவை பலப்படும். கரப்பான் குணமாகும்.
43.கோவை – Coccina grandis – CUCURBITACEAE
1 பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை குடித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை தீரும்.
2 பச்சைக் காயை தினமும் சாப்பிட்டு வர மது மேக நோயைத் தடுக்கலாம்.
44.கோபுரந்தாங்கி – Indoneesiela echioides – ACANTHACEAE
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வர தலைமயிர் உதிர்தல் நிற்கும்.
வேரை உலர்த்திப் பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ½ தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை ஆகியவை வலுப்படும்.
45.சத்திச்சாரனை – Trianthema decandra – AIZOACEAE
இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டி வர கண்ணோய் அனைத்தும் தீரும்.
இலையை நெய்விட்டு வதக்கிக் கீரையாகப் பக்குவப்படுத்தி உண்டு வர பசியின்மை, வயிற்றுளைச்சல், வயிற்றுவலி ஆகியவைத் தீரும்.
46.சரக்கொன்றை – Cassia fistula – CAESALPINIACEAE
பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கலும் அகலும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.
47.சிற்றாமுட்டி – Pavonia zeylaica – MALVACEAE
தாதுக்களின் எரிச்சலைத் தணிக்கும் அருமருந்து.
வேர் – 10 கிராமை 100 மி.லி நீரிலிட்டு 25 மி.லியாகக் காய்ச்சி 2 சிட்டிகை திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை 3 நாள் கொள்ள சுரம் தீரும்.
48.சிவனார்வேம்பு – Indigofera aspalathoides – PAPILIONOIDEAE
இலையை அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும் அல்லது அமுங்கி விடும்.
செடியை சுட்டு சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.
49.சிறுநெருஞ்சில் – Tribulus terrestris – ZYGOPHYLLACEAE
30 மி.லி சமூலசாற்றுடன் மோர் (அ) பால் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமாகும்.
நெருஞ்சில் விதையைப் பாலில் வேக வைத்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும், இளநீரில் சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீர்க்கட்டு குணமாகும்.
50.சிறுகண்பீளை – Aerva lanata – AMARANTHACEAE
சமூலத்தை நீரிலிட்டுக் குடிநீராக்கி காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.
சிறுபீளைச்சாறு – 50 மி.லி காலை, மாலை குடித்து வர சூதகவலி தீரும்.
51.சீந்தில் – Tinospora cordifolia – MENISPRMACEAE
முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால், அசதி, மிகு தாகம், உடல் மெலிவு ஆகியவை தீரும்.
52.சீமை அகத்தி – Cassia alata – CAESALPINIACEAE
இலையை எலுமிச்சம் பழச்சாறு கலந்து அரைத்துப் பற்று போட கரப்பான், புண், புரைகள் குணமாகும்.
இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மதியம், இரவு என சாப்பிட வண்டுக்கடி, அரிப்பு ஆகியவை தீரும்.
53.சுண்டை – Solanum torvum – SOLANACEAE
சுண்டை வற்றலைக் குழம்பாக்கி உண்ண, ஏப்பம் வயிறு ஊதுதல், வயிற்றுவலி முதலியன போகும்.
காயை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளை சிறிது கூட்டி வறுத்துப் பொடித்து உணவுடன் கொள்ள மூலம், செரியாமை தீரும்.
54.செம்பரத்தை – Hibiscus esculentes – MALVACEAE
பூவை நீரில் ஊற வைத்து வேளைக்கு 30 மி.லி. கொடுக்க சிறுநீர் நோய்கள் தீரும், உடற்கு குளிர்ச்சி தரும்.
அதிகுருதி அழுத்த நோயுள்ளவர்கள் இதன் இதழ்களை தினமும் தின்று வர குருதி சுற்றோட்டம் சீராக அமையும்.
55.தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus racemosa – LILIACEAE
இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும்.
கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.
56.தழுதாழை – Clerodendrum phlomoides – VERBENACEAE
இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும்.
இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர் பாய்தல் குறையும்.
57.திருநீற்றுப்பச்சிலை – Ocimum basilicum – LAMIACEAE
இலையை அரைத்துப் பூச கட்டி மறையும்
இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்
58.துத்தி – Abutilon indicum – MALVACEAE
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும்.
பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.
59.தும்பை – Leucas aspera – LABIATAE
தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுக தலைப்பாரம், நீரேற்றம் தீரும்.
இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி, சிரங்கு தீரும்.
60.துளசி – Ocimum sanctum – LABIATAE
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும்.
துளசி – 50 கிராம், மிளகு – 20 கிராம், இவற்றை மையாய் அரைத்து பயறளவு மாத்திரையாக்கி காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும்.
[1/30, 10:33 AM] Erumbur Balaji: 71.நாய்த்துளசி – Ocimum canum – LABIATAE
இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க மூலச்சூடு கணச்சூடு ஆகியவை தீரும்.
இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.
72.நாய்வேளை – Cleome viscosa – CAPPARACEAE
இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடித்துக் காதில் விட்டு வரச் சீழ்வடிதல் தீரும்.
நாய்வேளை இலையைப் பிற கீரைகளுடன் சமைத்து சாப்பிட வயிற்று வாயுவு அகலும், பசி மிகும்.
73.நித்தியகல்யாணி – Catharanthus roseus – APOCYNACEAE
6 பூவை அரைலிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டராக வற்ற வைத்து 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதி மூத்திரம், மிகுபசி, உடல் பலவீனம் தீரும்.
இலைகளை தேங்காய் எண்ணெயிலிட்டு வெயிலில் காய வைத்து கை, கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம்.
74.நிலப்பனை – Coruligo orchoides – HYPOZYDACEAE
கிழங்கின் தோல், நரம்பு ஆகியவற்றை நீக்கி, உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் அளவுக்கு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர இடுப்புவலி தீரும்.
½ தேக்கரண்டி நிலப்பனைக் கிழங்குப் பொடியை 200 மி.லி பாலில் சேர்த்துச் சர்க்கரை கூட்டி 2 வேளை பருக வெள்ளை, வெட்டை தீரும்.
75.நிலவேம்பு – Andrographis paniculata – ACANTHACEAE
இது காய்ச்சலை அகற்றி நல்ல பசியைக் கொடுக்கும்.
கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிக்க சகல சுரங்களும் தீரும்.
76.நிலாவாரை – Cassia senna – CAESALPINIACEAE
நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு, படை மீது தடவ அவை ஆறும்.
நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் உண்ண மலசிக்கல் தீரும்.
77.நீர்பிரமி – Bacopa monnieri – SCHROPHULARIACEAE
இலையை வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.
இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.
இலைச் சாறுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை கொடுக்க சித்தபிரமை தீரும்.
78.நீர்முள்ளி – Hygrophilla auriculata – ACANTHACEAE
நீர்முள்ளி சமூலத்தை இடித்து 200 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு ½ லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினம் 4 வேளை கொடுக்க ஊதிப்பெருத்த உடல் மெலியும்.
நீர்முள்ளி குடிநீரை குடித்து வர அனைத்து சிறுநீரக நோய்களும் குணமாகும்.
79.நுணா – Morninda tinctoria / cictrifolia – RUBIACEAE
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீர நுணாச்சாறு – 1 பங்கும், நொச்சி, பொடுதலை, உத்தாமணி ஆகிய மூன்றின் சாறு – 1 பங்கும் கலந்து 3, 4 வேளை 50 துளிக் கணக்கில் 6 மாத குழந்தைக்கு கொடுக்கவும். 1 வயதுக்கும் மேல் 10-30 மி.லி. வரையும் கொடுக்கலாம்.
இலையை அரைத்துப் பற்றிட இடுப்புவ்லி தீரும்.
61.தூதுவளை – Solanum trilobatum – SOLANACEAE
இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்புச் சளி நீங்கும்.
10 கிராம் பூவை தினமும் காய்ச்சி பால், சர்க்கரை கூட்டி 40 நாட்கள் பருக உடல் பலம் பெறும்.
62.தொட்டால்சுருங்கி – Mimosa pudica – MIMOSACEAE
இலையை அரைத்து பற்றுப் போட விரைவீக்கம், மூட்டு வலி, வீக்கம் ஆகியவை தீரும்.
இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து ½ மணி நேரம் கழித்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.
63.தேள்கொடுக்கு – Heliotropium indium – BORAGINACEAE
இலையைக் கசக்கி தேள் கொட்டின இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தணியும்.
இலைச்சாறு நல்லெண்ணெய் சமன் கலந்து பதமுறக்காய்ச்சி வடித்து காதுகளில் விட்டுவர காதடைப்பு தீரும்.
64.நஞ்சறுப்பான் – Tylophora indica – ASCLEPIADACEAE
இலையை உலர்த்திப் பொடித்து 1,2 கிராம் வெந்நீரில் 3 வேளையாக சாப்பிட்டு வர வியர்வை பெருகும்.
இலையை நன்கு அரைத்து எலுமிச்சங்காயளவு உள்ளுக்குக் கொடுத்து கடிவாயினும் வைத்துக் கட்ட வாந்தியாகி எல்லாவித நஞ்சும் முறியும்.
65.நத்தைச்சூரி – Hispida spermacoce – RUBIACEAE
10 கிராம் வேரைப் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
20 கிராம் வேரைச் சிதைத்து குடிநீராக்கி 200 மி.லியாக நாளொன்றுக்கு 3 வேளை கொடுக்க உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குறையும்.
66.நந்தியாவட்டை – Tabernaemontana divaricata – APOCYNACEAE
கண் வலியுடையோர் இதன் பூக்களை கண்ணில் வைத்து ஒரு துணியால் இலகுவாகக் கட்டி உறங்கி வர கண் வலி, கண் எரிச்சல், கண் சிவப்பு மாறும்.
பூவால் ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.
வேரை மென்று துப்ப பல்வலி நீங்கும்.
67.நல்வேளை / தைவேளை – Cleome gynandra – CAPPARACEAE
இலைச்சாறு 1 துளி காதில் விட சீழ் வருதல் நிற்கும்.
இலையை அரைத்து பற்றுப் போட சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும்.
இலைகளை அரைத்துச் சாறு பிழிந்து, சக்கையை தலையில் வைத்துக் கட்டி வர தலைபாரம் குணமாகும்.
68.நன்னாரி – Hemidesmus indicus – ASCLEPIADACEAE
பச்சை நன்னாரிவேர் – 5 கிராமை நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், நீர்ச்சுருக்கு ஆகியவைத் தீரும்.
20 கிராம் வேரை ½ லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை சாப்பிட நாட்பட்ட வாதம், பாரிச வாதம் ஆகியவை தீரும்.
நன்னாரி மணப்பாகு கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம்.
69.நாகமல்லி – Rhinacanthus nasuta – ACANTHACEAE
இலை அல்லது வேரை மென்று தின்ன பாம்புக்கடி நஞ்சு அகலும்.
இலை அல்லது வேரை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து பற்றுப் போட சொறி, கரப்பான் ஆகியவை தீரும்.
70.நாயுருவி – Achyranthes aspera – AMARANTHACEAE
துத்திக் கீரையை வதக்கி, நாயுருவி விதை சூரணம் – 20 கிராமுடன் கலந்து உணவில் சேர்த்து உண்ண மூலம் அனைத்தும் தீரும்.
நாயுருவி வேரால் பல்துலக்கப் பல் தூய்மையாகும்.
81.நெல்லி – Phyllanthus emblica – EUPHORBIACEAE
10 கிராம் நெல்லிக்காயை இடித்து ½ லிட்டர் நீரிலிட்டு 100 மி.லியாகக் காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து, 40 மி.லி குடிநீரை 3 வேளை சாப்பிட பித்தம் தணியும்.
இலையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.
82.நேத்திரப்பூண்டு – Blepharis maderaspatensis – ACANTHACEAE
200 கிராம் சமூலம் ஒரு துணியில் முடிந்து 400 மி.லி. நல்லெண்ணெயில் போட்டு வேடு கட்டி 15 நாள் வெயிலில் புடம் வைத்து வடிகட்டி காலை, மாலை 2 துளி கண்ணில் விட பார்வைமங்கல், கண்ணெரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டல், பார்வைக் குறைவால் வரும் ஒற்றை தலைவலி தீரும்.
80.நொச்சி – Vitex negundo – VERBENACEAE
இலையை தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து, நரம்பு வலி தீரும்.
நொச்சி இலை – 2, 4 மிளகு, 1 இலவங்கம், 4 பூண்டுப்பல் வாயில் போட்டு மென்று சுவைத்துச் சாற்றை மெதுவாக விழுங்கினால் மூச்சுத்திணறல் தீரும்.
83.பிரண்டை – Cissus quadrangularis – VITACEAE
பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்.
ஓரிரு துளி பிரண்டை சாற்றை காதில் விட்டுவர சீழ்ப்பிடித்தல் தீரும்.
84.பிரம்மதண்டு – Argemone Mexicana – PAPAVARACEAE
இலையை அரைத்துக்கட்டி வர கரப்பான், சொறி, சிரங்கு தீரும்.
பிரம்மத்தண்டு சாம்பலால் பல் தேய்த்து வர பல்லட்டம், பல்சொத்தை, பல் கரைதல் ஆகியவைத் தீரும்.
85.சங்கங் குப்பி – Clerodendrum inerme – VERBENACEAE
இலைச்சாறு விளக்கெண்ணெயில் காய்ச்சி தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட சொறி, சிரங்கு, கருமேகம் தீரும்.
வேர்ச்சாறு – 5-6 துளி, தாய்ப்பாலில் கலந்து காலை, மாலை கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கு காணும் செவ்வாப்பு நோய் தீரும்.
86.புரசு – Butea monosperma – PAPILIONOIDEAE
இலையை வதக்கி அடிவயிற்றில் ஒற்றடம் கொடுக்க சிறுநீர்த்தேக்கம் விலகும்.
புரசம் விதைப் பொடி – 300 மி.கிராம், மூன்று வேளையாக, மூன்று நாட்களுக்குக் கொடுத்து நான்காம் நாள் விளக்கெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கல் வெளியேறும்.
87.புங்கு – Pongamia pinnata – PAPILIONOIDEAE
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து, 1 சிட்டிகை காலை, மாலை தேனில் கொள்ள மதுமேகம் தீரும்.
புங்கன் எண்ணெய் எவ்வித புண்களையும் ஆற்றும்.
88.புன்னை – Calophyllum inophyllum – CLUSIACEAE
பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.
புன்னை விதையை அரைத்து கொதிக்க வைத்து பற்று போட முடக்குவாதம், வாதவலிகள் தீரும்.
மிக அழகிய மலர்களை உடைய மரம்.
89.பூவரசு – Tnespesia populnea – MALVACEAE
பழுப்பை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போடச் சொறி, சிரங்கு கரப்பான் குணப்படும்.
இலையை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.
90.பொடுதலை – Phylla nodiflora – VERBENACEAE
இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம், இரத்தமூலம் தீரும்.
சமூலச் சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வர கொடுகு தீரும்.
91.வெற்றிலை – Piper betal – PIPERACEAE
5 மி.லி. வெற்றிலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
வெற்றிலையை மார்பகத்தில் ஒட்டி வைக்க பால்சுரப்பைத் தடுக்கும்.
92.வெள்ளறுகு – Enicostemma axillare – GENTIANACEAE
சமூலத்தை அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.
மாதவிடாயின் முதல் 3 நாட்கள் சமூலத்தை அரைத்து எலுமிச்சங்காயளவு குடிக்க கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு தீரும்.
93.விஷ்ணுகிரந்தி – Evolvulus alsinoides – CONVOLVULACEAE
சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும்.
சுரத்துக்கான குடிநீரில் சேரும்.
94.மாவிலங்கம் – Cretaeva magna – CAPPARACEAE
இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும்.
பட்டை – 1 பங்கு, பூண்டு – ½ பங்கு; மிளகு – ¼ பங்கு அரைத்துக் கொட்டை பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.
95.மூக்கிரட்டை – Boerhavia diffusa – NYCTAGINACEAE
இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
96.மருதம் – Terminalia arjuna – COMBRETACEAE
மருத இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு ஆகியவை தீரும்.
பட்டைத் தூளுடன் ஆடாதோடைச்சாறு – 1 தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தரும்.
பட்டைக் குடிநீர் இதய நோய்களை குணமாக்கும்.
97.மகிழ் – Mimusops elengi – SAPOTACEAE
பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய்க்கொப்பளிக்க வாய்ப் புண்ணாறும்.
காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பப் பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.
98.மலைவேம்பு – Melia azadirachta – MELIACEAE
10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும்.
இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும்.
மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.
99.முடக்கறுத்தான் – Cardiospermum halicacabum – SAPINDACEAE
இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும்.
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.
100.வல்லாரை – Centella asiatica – APIACEAE
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்….

வீடு வாங்கும் முன் பில்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் !!




நம்மில் பலருக்கு வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முதலீடு. புது புது கட்டுமானங்கள், புதிய மற்றும் தேர்ந்த பில்டர்ஸ் வழங்கும் பல தரப்பட்ட கட்டுமானங்கள், வசதிகள் என ஒவ்வொரு ப்ராஜக்ட்டிலும் தனித்தன்மைகளுடன் ஏராளமான சாய்ஸ் உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்போ, வில்லாவோ எதுவாகயிருந்தாலும் வீடு வாங்கும் முன் பில்டரிடம் சில அடிப்படை கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்வது மிக அவசியம்.
முந்தைய ப்ராஜக்ட், வாடிக்கையாளர்கள் பற்றி

தற்போதுள்ள சூழலில், ரியல் எஸ்டேட் துறையில் தினந்தோறும் புது புது பில்டர்ஸ் வருவதை காணலாம்.  இந்த துறையில் உள்ள சவால்கள், நுணுக்கங்கள் போன்றவற்றை பற்றி சரிதான புரிதல் இல்லாமல், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் இந்த துறையில் ஈடுபட வாய்புகள் அதிகம். நீங்கள் வீடு வாங்க முன் பணம் செலுத்தும் முன் பில்டரின் முந்தைய கட்டுமானத்திற்கு சென்று அதன் தரம், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டதா என்பதை அந்த ப்ராஜக்ட்டின் வாடிக்கையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நேர்மையான எந்தவொரு பில்டரும் ஒப்பந்தக்காரர்கள் பற்றிய விவரங்கள், நிதியளித்தவரகள் என எல்லா விவரங்களையும் அளிக்க தயங்குவதில்லை.

வாங்கும் வீட்டில் சிறிய மாற்றங்கள் செய்ய இயலுமா?

நமக்கு தேவையான வசதிகளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுவாக பில்டர்ஸ் வலியுறுத்திவிடுவார்கள். இருப்பினும் சில சமயம் நம் எண்ணங்களின் மாற்றமோ அல்லது அழகு வேண்டி சில மாற்றங்களை நாம் செய்யவேண்டும் என நினைப்பதுண்டு. அத்தகைய சூழ்நிலை எழுந்தால் உங்களின் ப்ராஜக்ட் மேலாளர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதிலிருந்தே பில்டரின் உண்மைதன்மையை அறிந்து கொள்ளலாம். உங்கள் பில்டரிடம் முன்பே இது போன்ற கடைசி நேர மாற்றங்கள் கூடுதல் தொகையில்லாமல் செய்து கொள்ள முடியுமா என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.


குறித்த நேரத்தில் கட்டுமானம் முடியாவிட்டால்?

இந்த கேள்வியை பல பில்டர்ஸ் விரும்புவதில்லை, அவர்களிடம் எழுத்து பூர்வமாக இதை பெறுவதும் கடினம் தான். ஆனால் நேர்மையான் அணுகுமுறை கொண்ட பில்டரின் ப்ராஜக்ட் தாமதானால் அதற்குரிய தீர்வு மற்றும் இழப்பீட்டு தொகை ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பிக்கையான பில்டரிடம் தான் உங்களின் முதலீடு செல்கிறது என்பதற்கு இது சான்றாகும்.

கட்டுமானத்திற்கு உத்திரவாதம்

லட்சக் கணக்கில் முதலீடு மட்டுமில்லாமல் வாழ்நாளில் பாதி வட்டி கட்டி கனவு இல்லம் வாங்கும் பொழுது, அதன் தரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் ஃபிட்டிங்ஸ் ஆகியவை தரமானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஸ்டீல், செங்கல், சிமன்ட், பைப், எலெக்ட்ரிகல் வயரிங், ஸ்விட்ச், குழாய் என எல்லாவற்றை பற்றியும் தெளிவாக பில்டரிடம் எழுதி வாங்கிக்கொள்வது நலம், இதன் மூலம் தரமான பொருட்களையே உங்களின் வீட்டில் உபயொக்கிறார்கள் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.

பொது மற்றும் பில்ட் அப் அளவின் தெளிவான வரையுறுத்தல்

அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் பொழுது பொது பகுதி மற்றும் பில்ட் அப் பகுதி ஆஅகியவற்றிர்கான வித்தியாசத்தை அவசியம் அறிந்திருத்தல் வேண்டும். வெளிப்புற சுவர்களுடன் உங்கள் வீட்டின் அளவை பற்றி தெரிந்து கொள்ள பில்ட்அப் பகுதி உதவும் என்பதால் ஏமாற்றமிருக்காது. ரியல் எஸ்டேட் துறையின் சில சொற்களை அறிந்து கொண்டால், ஏமாற்றத்தை தவிர்ப்பதோடு நம் முதலீட்டிற்கேற்றார் போல் சரியான சதுரடி அளவிலான வீட்டையும் பெறலாம்.













கட்டுமான துறை விளம்பரங்களில் பயன்படுத்தப்படும்  சொற்களும் அதன் பொருளும் உங்களுக்காக.

கார்பெட் ஏரியா (Carpet area)
இது வீட்டின் பயன்படுத்தக்கூடிய பகுதியை குறிக்கும் சொல்லாகும். இது ஒரு வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவறுக்கிடையே இடம்பெற்றுள்ள இடத்தை குறிக்கும். இதில் பால்கனியும் அடங்கும். சுவர் ஆக்கரமித்துள்ள பகுதி இந்த அளவீடில் வராது. நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவைதான் கார்பெட் ஏரியா என்று சொல்வார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் ஒரு கார்பெட்டை விரித்தால் எவ்வளவு இடத்தை அது அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா. கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்த்து பிளின்த் ஏரியா என்று சொல்வார்கள்.

கட்டடப்பரப்பு (Built-up area)

உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் இருந்து தரை, மாடிப்பகுதி மற்றும் பால்கனியில் உள்ள வீட்டின் சதுர அங்குலத்தை இந்த வார்த்தை குறிக்கிறது. சில பகுதிகளில், இது பீடம் பகுதி என குறிப்பிடப்படுகிறது, இது பொதுவாக, கார்பெட் ஏரியாவை விட 10-20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

சூப்பர் பில்ட் அப் ஏரியா (Super built-up area)

பிளின்த் ஏரியா அளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதே சூப்பர் பில்ட்அப் ஏரியா. அதாவது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை எல்லாம் சேர்ந்தது பில்ட் அப் ஏரியா. இந்த அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட் அப் ஏரியா கணக்கிடப்படும்.

ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ் (Floor space index)

பில்ட் அப் ஏரியாவுக்கும், கட்டமைப்பிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் இருக்கும் இடத்தை இது குறிக்கிறது. FSI உயர்ந்தால், கட்டும் பகுதி கூட பெரியதாக இருக்கும். இது Floor Area Ratio என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு சதுர அடி விலை (Per square foot rate)

இது பில்டர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சூப்பர் கட்டடப் பகுதியின் சதுர அடி விகிதத்தை குறிக்கும் சொல்லாகும். விற்பனையாளருக்கு பிளாட் விலையைக் குறிப்பிடுவதற்கு பில்டரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த விகிதம் கார்பெட் ஏரியா மற்றும் சூப்பர் பில்ட்அப் ஏரியா பகுதி உள்ளடக்கியதாகும்,

ஃப்ரீஹோல்ட் பிராபர்டி (Freehold property)

ஒரு சொத்தின் உரிமையாளர் அந்தச் சொத்துக்களை வேறு நபரிடம் விற்க அல்லது மாற்றுவதற்கான உரிமையை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மற்றவர் பெயரில் மாற்றி தருவதை குறிக்கும் சொல்.

கன்வேயன்ஸ் (Conveyance)

ஒரு சொத்தை வாங்குபவருக்கு ஆவணத்தின் உரிமையாளர், உரிமைகள், அந்த சொத்து சம்பந்தமான அனைத்து சொத்துரிமை நலன்களையும் வெளிப்படுத்தும் செயல்முறையை இது குறிக்கிறது.

கிரெடிட் ஸ்கோர் (Credit score)

இது ஒரு தனிநபரின் கடன் தகுதி அளவீடு ஆகும், இது புள்ளிவிவர அடிப்படையில் அவரது / அவரது கடந்த கால பதிவுகளிலிருந்து நிதிசார் அமைப்புகளுடன் இருக்கும் தொடர்பை பற்றி தெரிவிக்கும்.

வசிப்பதற்கான சான்றிதழ் (Certificate of occupancy)

ஒரு கட்டிடம் உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளது என உறுதிசெய்த பிறகு, ஒரு வீட்டின் உரிமையாளருக்கு உள்ளூர் நகராட்சியால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும்.

ஒதுக்கீட்டு கடிதம் (Allotment Letter)

குடியிருப்பு பகுதியில் வீடு வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது அபார்ட்மெண்ட் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிலடர் கொடுக்கும் கடிதத்தை குறிப்பதாகும்.



தொடக்க சான்றிதழ் (Commencement certificate)


ஒரு இடத்தில் கட்டிடம் எழுப்புவதற்கு முன் நகராட்சி / மாநகராட்சியில் அவசியம் பெற வேண்டிய சான்றிதழாகும். அடுக்குமாடி குடியிருப்பை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், கட்டுமான நிறுவனத்தால் இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.

பொதுவான பகுதிகள் (Common areas)

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு அல்லாது பொதுவாக அமைந்திருக்கும் இடம். அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலும் இந்த இடங்களில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்ற பொது உபயோகத்திற்கான வசதிகள் இருக்கும். குடியிருப்பவர்களிடமிருந்து பொதுவான பரமாரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு இது அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களால் நிர்வாகிக்கப்படும்.
உத்திரவாத சான்றிதழ் (Encumbrance certificate)

கட்டிடம் எழுப்பபடவிருக்கும் அந்த நிலம் எந்த வித வில்லங்கமும் இல்லாத இடம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழாகும்.

முத்திரை வரி (Stamp duty)

அரசு ஒவ்வொரு சொத்துக்கும் முத்திரை தாள் வழியில் வரி வசூலிக்கும். இது விளைநிலம், விளையாத நிலம், தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என அனைத்து வகை சொத்துகளுக்கும் பொருந்தும். இந்த வரியை சொத்தை வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.