Friday, 18 October 2019

தண்ணீரில் இருக்கும் கனிமங்கள் பற்றிய புள்ளிவிவரம் !!

Image result for total dissolved solidsதண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி. எஸ். (Total Dissolved Solids) என்பா ர்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளு க்குள் இருந்தால் மட்டு மே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவ ட்டங்க ளில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவி ட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும்லயோ லா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர் பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொ ள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.
ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண் ணீரின் வளத் தையும் வணிக நோக்கில் மனிதன் எவ் வாறு எல்லாம் சூறையாடு கிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப் பட்ட பல தகவ ல்கள் பகீர் திகீர் ரகம்.



கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போ ன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத் தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச் சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவு களும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங் கள் வெளியே ற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன் கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேற வே ண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந் தைய அளவை ஒப்பிட் டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.

கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களு க்கும் இடையிலான பந்தத்தை விளக்கி னார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழி ந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக் கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோ ட்டங்களை நன்கு அறிந்தவை ஆமைகள். செயற்கை க்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொ லைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடை கின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந் தைய டைனோசருக்கு இணை யான மூதாதையரான இந்த ஆமைகள், காலம் கால மாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்க ளை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண் டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உல கில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல் லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்க ளைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவு களை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண் கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வா ங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண் டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவா ரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொ ட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது'' என்று முடித்தார்.


Image result for total dissolved solids
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல் லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லை யெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொ டங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சா யப்பட்டறைத் தொழி ற்சாலைகள் ஆற்றை விஷமா க்கி வருகின்றன. பாலாற்றங்கரை யில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியி டும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக் கும் 46 ஊர்களில் 27,800 கிணறுக ளின் தண்ணீரை உபயோகிக் கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்கு கிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலா று மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங் கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந் நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுக ளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகி ன்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடை கள் இல்லையா?. அந்த நாடுகளுக்குத் தோல் பொருட் களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப் பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்த ப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேக ரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறு வனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என் றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல் கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ கத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீ ரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடு தலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இத னால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்க ளில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக்கற் கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன் னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தா ய்ப்பான உண்மை. ''பூமி யை ஓர் உயிரினம் என்பா ர்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவது போலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செ ய்யப் பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!'

Wednesday, 16 October 2019

எதனால் வாய் புற்றுநோய் ஏற்படுவது ? அறிகுறிகள் என்னென்ன?

 



வாய்புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்.சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் , உலக சுகாதார அமைப்பு மற்றும் குளோபோகான் 2018 ஆய்வு என அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவெனில் உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது.
10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.

என்ன காரணம்? எப்படி நிகழ்கிறது ?

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.



தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை உட்கொள்வதும் , சிகரெட், பீடி போன்ற தீய பழக்கங்கள்தான் முதல் காரணம்.
அடுத்ததாக ஆல்கஹால் பழக்கம், கூர்மையான பற்கள் அல்லது பொருத்தமற்ற பல்வகைகள், உணவுப் பழக்கம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, பல் துலக்குதலில் கவனக்குறைவு, பல் பராமரிப்பின்மை போன்றவையும் காரணங்களாக உள்ளன.

அறிகுறிகள் என்ன ?
வாயில் இரத்தப்போக்கு, முறையான சிகிச்சைக்கு பின்னரும் குணமடையாத வாய் புண் ,வாயில் வெண்மை அல்லது சிவப்பு தன்மை,வாய்க்குள் கட்டி அல்லது தடித்தல், பற்களில் தளர்வு , கழுத்தில் கட்டி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வாய்ப் புற்றுநோயாக இருக்கலாம்.


வாய் புற்றுநோய் சிகிச்சை 

  • கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை: புற்றுநோய் செல்கள் எல்லாவற்றையும் அகற்றுவதை உறுதி செய்வதற்காக சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களின் கட்டி மற்றும் வெட்டுக்களை அகற்ற
  • கழுத்தில் பரவும் அறுவைசிகிச்சை புற்றுநோய்: புற்றுநோய் நிண மண்டலங்கள் மற்றும் கழுத்து தொடர்பான திசுக்களை நீக்க
  • வாயை புனரமைப்பதற்கான அறுவை சிகிச்சை: பேச்சு மற்றும் சாப்பிடும் திறன் ஆகியவற்றை மீண்டும் பெற உதவும் வாய்ப்பை மீண்டும் உருவாக்க
  • கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய் செல்களை அழிக்க
  • கீமோதெரபி: புற்றுநோய் செல்களை அழிக்க

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.

• புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

• மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியைவைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

• ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவராலும் தவிர்க்க முடியும்.


தீர்வு :

மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே பல் மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயை வளர விடாமலோ அல்லது முற்றிலுமாகவோ நீக்கக் கூடும்.


தேசிய, மாநில அளவில் உள்ள ஆட்சியாளர்கள் நினைத்தால், 'புகையிலைப் பொருள்களுக்குத் தடை’ என்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.


தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Thursday, 3 October 2019

GATE நுழைவு தேர்வை பற்றிய ஒரு தவகல் !!

இந்தியாவில்உள்ள IIT, NIT, மத்திய கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலை கழகம், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech/M.Plan, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது.
இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரி மற்றும் படிப்பிற்க்கு ஏற்ப அரசு மாதம் ரூ.12,400 முதல் ரூ.25,000 வரை வழங்குகின்றது). இந்த தொகை மூலம் கல்வி கட்டணம், ஹாஸ்டல், உணவு, புத்தகம் என அனைத்து வகையான செலவுகளையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் நிறைவேற்றிகொள்ளலாம்.  
இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் பெரும்பாலோன மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதில்லை. உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. கவனத்துடன் படித்தால் எந்த தேர்வையும் வெல்லலாம்.
GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம் :
இது முழுக்க முழுக்க ஆன்லை

னில் நடக்கும் தேர்வாகும். தேர்வு எழுத 3 மணி நேரம் கொடுக்கப்படும். கணினியில் தேர்வு என்பதால் , தேர்ந்தெடுக்கும் முறை கேள்விகள் ( Multiple Choice Questions) மற்றும் எண்களில் பதில் அளிக்கும் முறை (Numerical Answer) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 65 கேள்விகள் 100 மதிப்பெண்ணுக்கு கேட்க்கப்படும், தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கபடும் (Negative marking).
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
1. B.E/B.Tech (பொறியியல் படிப்பு) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல் ( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க முடியும். இந்த இணையதளத்தில் (https://appsgate.iitd.ac.in/) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : செப்டம்பர் 24 (24-09-2019)
விண்ணப்ப கட்டணம் ரூ.1500
தேர்வு எழுதும் அனுமதி சீட்டை (Admid card) ஆன்லைனில் பெற்றுகொள்ளாம்.
தேர்வுகள் 2020 பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு எழுதுவார்கள்.
2020 மார்ச் 16-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடபடும்.
GATE - தேர்வில் தேர்சி பெற்றிருந்தால் நாம் விரும்பும் கல்லூரி/ பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் TANCA கவுன்சிலிங் மூலம் விருப்பமான கல்லூரியில் சேரலாம்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்,

மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள IES (Indian Engineering Service)தேர்வு !!


Image result for upsc examமத்திய அரசின் பாதுகாப்பு துறை , தொலை தொடர்பு துறை, மின் உற்பத்தி துறை, ரயில்வே துறை போன்ற பல்வேறு அரசு துறைகளில் பொறியியல் சார்ந்த அதி உயர் பதவிகளில் சேர UPSC ஆண்டு தோறும் IES (Indian Engineering Service) என்ற தேர்வை நடத்துகின்றது. இது மத்திய அரசு பணியில் IAS, IPS-க்கு இணையான தரத்தில் உள்ள தேர்வாகும். இதற்க்கு பொறியியல் (B.E / B.Tech) படித்த மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 15 (15-10-2019)

விண்ணப்பிக்க :
UPSC-ன் https://www.upsconline.nic.in/mainmenu2.php இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.200, தேர்வு ஜனவரி 5-ஆம் தேதி (5-01-2020) நடைபெறும், தமிழகத்தில் சென்னை, மதுரையில் தேர்வு நடைபெறும்.
வயது வரம்பு : 21-வது முதல் 30 வயது வரை
IES தேர்வை பற்றி :
தேர்வு கீழ்காணும் நான்கு பிரிவுகளில் நடைபெறும், மாணவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
1) Civil Engineering
2) Mechanical Engineering
3) Electrical Engineering
4) Electronics & Telecommunication Engineering
பொறியியலில் வேறு பிரிவு (other branch) படித்த மாணவர்கள், மேற்கண்ட 4 பிரிவுகளில் தாங்கள் படித்த பிரிவிற்க்கு நெருக்கமான ஒரு பிரிவை தேர்ந்தெடுக்கலாம்,
தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்,
1. முதல் நிலை தேர்வு (Preliminary Exam)
2. இரண்டாம் நிலை தேர்வு (Main Exam)
3. நேர்முக தேர்வு (Personality Test)
தற்போது முதல் நிலை தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம்
முதல் நிலை தேர்வு (Preliminary Exam) பற்றி :
இது இரண்டு தாள்களை (Two papers) கொண்டது, ஒரே நாளில் இரண்டு தேர்வையும் எழுத வேண்டும் , கேள்விகள் Objective Type (சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக) முறையில் இருக்கும்.
முதல் தாள் பொதுபாடம் மற்றும் அடிப்படை பொறியியல் (General Studies and Engineering Aptitude) சார்ந்த கேள்விகள் 200 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்
இரண்டாம் தாளில் மாணவர் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவில் (Engineering subject) உள்ள பாட திட்டத்தில் இருந்து கேள்விகள் 300 மதிப்பெண்ணிற்க்கு கேட்க்கப்படும், 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்
IES தேர்வை பற்றிய விபரங்கள் இந்த https://www.upsc.gov.in/…/default/files/Notice-ESEP-2020-En… ஃபைலில் உள்ளது

Tuesday, 1 October 2019

மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை!

Related imageபள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் காலெடுத்து வைக்கும் மாணவர்களில் பலர் பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க மத்திய/மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த உயர்கல்விக்கான உதவித்தொகை.

தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.இ., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலைப் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: இந்த உதவித்தொகை 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.

உதவித்தொகை விவரம்: இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20,000 ரூபாய் என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019 மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Thursday, 12 September 2019

JAM (Joint Admission Test ) நுழைவு தேர்வு !! ஒரு சிறப்பு பார்வை..

B.Sc படிப்பவர்கள் IISc, IIT-ல் M.Sc, Ph.D படிக்க JAM நுழைவு தேர்வு ஒரு வரப்பிரசாதம்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனமான IISc, ஐஐடியில் (IIT) M.Sc, Ph.D படிக்க JAM நுழைவு தேர்வு நடத்தபடுகின்றது, B.Sc- யில் Physics, Chemistry, Mathematics , Statistics, Geology, Biotechnology படித்தவர்கள் இந்த தேர்வை எழுத முடியும்.
B.Sc- ல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம். 
Image result for joint admission test 2020IIT-ல் படித்தால் அதிக சம்பளத்துடன் உடனடி வேலைவாய்ப்பு, செலவில்லாமல் வெளிநாட்டில் phd படிப்பு என மாணவர்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கும் பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த தேர்வை எழுதி மாணவர்கள் IISc, IIT-ல் M.Sc, Ph.D படிக்க முயற்சி செய்யுங்கள்.
IISc, IIT-ல் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு சிறப்பு கல்வி உதவி தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது, எனவே இங்கு படிக்க பெரிய அளாவில் பொருளாதாரம் செலவாகாது
இளநிலை (B.Sc) படிப்பில் 55 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும், வயது வரம்பு இல்லை. தொலைதூர கல்வியின் மூலம் (Distance Education) பட்டம் பெற்றவர்களும் இந்த தேர்வை எழுத முடியும்.
இந்த தேர்வில் தேர்சி பெறுவதன் மூலம் M.Sc -ல் Physics, Chemistry, Mathematics, Statistics, Biotechnology, Astronomy போன்ற படிப்புகளை IISc, IIT-ல் படிக்கலாம். ஒருங்கினைந்த M.Sc, Ph.D படிப்புகளும் படிக்கலாம்
தற்போது இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 8. இந்த https://joaps.iitk.ac.in/ இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்ப கட்டணம் ரூ.1500 (பெண்களுக்கு ரூ.750).
பிப்ரவரி 9- ஆம் தேதி தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும்.
மார்ச் 20- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், தேர்சி பெற்ற மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் அட்மிஷனுக்காக https://joaps.iitk.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண், பிரிவின் (Gen, OBC) அடைப்படையில் ஜூன் மாதத்தில் IISc, IIT-களில் இடம் ஒதுக்கப்படும்.
இந்த JAM தேர்வை பற்றி :
கீழ் காணும் 6 பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறும் .
(i) Mathematics (MA)
(ii) Mathematical Statistics (MS)
(iii) Physics (PH)
(iv) Chemistry (CY)
(v) Biotechnology (BT)
(vi) Geology (GG)
ஒருவர் ஒரு பிரிவில் தேர்வு எழுதினால் போதும். இரண்டு பிரிவிலும் எழுதலாம் . உதாரணத்திற்க்கு B.Sc Mathematics படித்தவர்கள் M.Sc Mathematics படிப்பதற்க்காக Mathematics (MA) பிரிவிலும், M.Sc. Applied Statistics and Informatics படிப்பதற்க்காக Mathematical Statistics (MS) பிரிவிலும் இரண்டு தேர்வுகள் எழுதலாம்.
இது முழுக்க முழுக்க ஆன்லைனில் (கணினி மூலம்) நடக்கும் 3 மணி நேர தேர்வு, மொத்தம் 60 கேள்விகள் 100 மதிப்பெண்னுக்கு கேட்க்கப்படும், Multiple Choice Questions வகையில் 30 கேள்விகளும், ஒன்றிற்கு மேற்பட்ட பதில்கள் வகையில் 10 கேள்விகளும், பதில் எழுதும் முறையில் 20 கேள்விகளும் கேட்க்கப்படும். தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking) 1 மார்க் கேள்விக்கு -0.33 மதிப்பெணும், 2 மார்க் கேள்விக்கு -0.66 மதிப்பெண்னும் குறைக்கப்படும்.
மேலும் விபரங்கள் இந்த pdf http://jam.iitk.ac.in/doc/JAM2020_ApplicationBrochure.pdf ஃபைலில்உள்ளது



Tuesday, 10 September 2019

பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு-2020-க்கான (Graduate Aptitude Test in Engineering GATE 2020) அறிவிப்பு !!

Image result for iit studentsஇந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் பல உயர்கல்வி நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் மேல்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவ தற்கும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குமான பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு-2020-க்கான (Graduate Aptitude Test in Engineering GATE 2020) அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தகுதித் தேர்வுப் பயன்பாடு
பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் (GATE Score) இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) மற்றும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிலிருக்கும் மேற்படிப்புகளுக்கான சேர்க்கை பெறுவதற்கு மட்டுமின்றி, பொறியியல், தொழில்நுட்ப மேற்படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவற்றுக்கான நிதியுதவியினைப் பெறுவதற்கும் உதவுகின்றது.

மேலும், பாரத மிகுமின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited), இந்திய எண்ணெய்க் கழகம் (Indian Oil Corporation), தேசிய அனல்மின் நிறுவனங்கள் (National Thermal Power Corporation), இந்திய அணு ஆற்றல் கழக நிறுவனம் (Nuclear Power Corporation of India Limited), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation), மின்கட்டமைப்புக் கழகம் (Power Grid Corporation) போன்ற இந்திய அரசு நிறுவனப் பணிகளுக்கும் GATE தேர்வு மதிப்பெண் தகுதியும் ஒன்றாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கான அமைப்பு
பெங்களூரிலிருக்கும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore) மற்றும் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்க்கி என எட்டு இடங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) என்று மொத்தம் எட்டு கல்வி நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வினைச் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் நடத்திவருகின்றன. 2020ஆம் ஆண்டுக்கான தேர்வினை டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Delhi (IITD)) நடத்தவிருக்கிறது.


தாள்கள்

இத்தேர்வு விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), நிலவியல் மற்றும் புவி இயற்பியல் (Geology and Geophysics), வேளாண்மைப் பொறியியல் (Agricultural Engineering), கருவிமயமாக்கல் பொறியியல் (Instrumentation Engineering), கட்டடவியல் மற்றும் திட்டமிடுதல் (Architecture and Planning), கணிதம் (Mathematics), உயிர்த் தொழில்நுட்பம் (Biotechnology), இயந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering), கட்டுமானப் பொறியியல் (Civil Engineering), சுரங்கப் பொறியியல் (Mining Engineering), வேதியியல் பொறியியல் (Chemical Engineering), உலோகத்தொழிற்கலைப் பொறியியல் (Metallurgical Engineering), கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Computer Science and Information Technology), பெட்ரோலியப் பொறியியல் (Petroleum Engineering), வேதியியல் (Chemistry), இயற்பியல் (Physics), மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering), உற்பத்தி மற்றும் தொழிற்சாலைப் பொறியியல் (Production and Industrial Engineering), மின்னியல் பொறியியல் (Electrical Engineering), நெசவுப் பொறியியல் மற்றும் இழைகள் அறிவியல் (Textile Engineering and Fibre Science), சூழ்நிலையியல் மற்றும் படிமுறை வளர்ச்சி (Ecology and Evolution), பொறியியல் அறிவியல்கள் (Engineering Sciences), உயிர் அறிவியல்கள் (Life Sciences) உள்ளிட்ட 25 தாள்களுக்கு நடைபெற இருக்கிறது.

கல்வித் தகுதி

GATE 2020 தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதியுடையவராக இருக்க வேண்டும். பொறியியல் / தொழில்நுட்பம் / மருந்தாளுமை (BE/B.Tech/BPharm) அல்லது கட்டடக்கலை (B.Arch) அல்லது நான்காண்டு கால இளநிலை அறிவியல் (ஆய்வியல்) (B.Sc (Research)/B.S) படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருத்தல் வேண்டும்.அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினிப் பயன்பாடுகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளில் முதுநிலைப் பட்டம் (M.Sc/M.A/M.C.A or Equivalent) பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும். நான்காண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இளநிலை அறிவியல் (Post - B.Sc) படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2, 3 மற்றும் நான்காம் ஆண்டுகளில் படித்துக் கொண்டு, 2020ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகள் (Int. M.E / M.Tech) அல்லது இரண்டு பட்டப்படிப்புகள் (Dual Degree) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2020 ஆம் ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.ஐந்தாண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் (Int. M.Sc) அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வியல் படிப்பு (Int B.S - M.S) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு இறுதியாண்டு படிப்பவராக இருக்க வேண்டும். மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD), இந்திய தேர்வாணையக் கழகம் (UPSC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் (B.E/B.Tech/B.Arch equivalent examinations of Professional Societies, recognized by MHRD/UPSC/AICTE) (உதாரணமாக A.M.I.E, AMICE)


விண்ணப்பிக்கும் முறை

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://gate.iitd.ac.in எனும் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் குறிப்பேட்டைத் (Information Brochure) தரவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் படித்துத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.



இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவிலுள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், பொதுப் பிரிவினர் ரூ.1500, எஸ்சி., எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டுத் தேர்வு மையங்களைத் தேர்வு செய்யும் நிலையில், அடிஸ் அபாபா, கொழும்பு, டாக்கா மற்றும் காத்மண்டு ஆகிய மையங்களுக்கு 50 அமெரிக்க டாலர் (US$ 50) என்றும், துபாய் மற்றும் சிங்கப்பூர் மையங்களுக்கு 100 அமெரிக்க டாலர் (US$ 100) என்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள் 24.9.2019.





தேர்வு மையங்கள்


GATE 2020 தேர்வுக்கு இந்தியா மற்றும் வங்கதேசம், எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய நகரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனும் மண்டலத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில நகரங்கள் என்று மொத்தம் 47 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என்று 19 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் என்று மொத்தம் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதற்குரிய கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.


தேர்வு மையம் மாற்றிக்கொள்ளக் கடைசி நாள் 15.11.2019.


அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்)

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வு இணைய விண்ணப்பச் செயல்திட்ட அமைப்புக்கான (GATE Online Application Processing System (GOAPS)) http://appsgate.iitd.ac.in எனும் இணையதளத்திலிருந்து 3.1.2020 முதல் தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அனுமதி அட்டையுடன் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டு (Passport), நிரந்தரக் கணக்கு எண் அட்டை (PAN Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ஆதார் அடையாள அட்டை (Aadhar UID), கல்லூரி அடையாள அட்டை (College ID), பணியாளர் அட்டை (Employee ID), ஓட்டுநர் உரிமம் (Driving License) அடையாள அட்டையினைத் தேர்வு எழுதும் மையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.





தேர்வு நாட்கள்




இணைய வழியில் நடத்தப் பெறும் இந்த கணினி வழித் தேர்வு (ONLINE Computer Based Test (CBT)) வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்தப்பெறுகிறது. GATE 2020 தேர்வு 1.2.2020, 2.2.2020 மற்றும் 8.2.2020, 9.2.2020 ஆகிய நான்கு நாட்கள் நடத்தப்படவிருக்கிறது. தேர்வு முடிவுகள் 16.3.2020 அன்று http://gate.iitd.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
நன்றி : குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி







Friday, 6 September 2019

இந்தியாவின் உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் (Engineering) படிக்க JEE Main தேர்வு

Image result for jee exam date 2020இந்தியாவின் உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் (Engineering) படிக்க JEE Main தேர்வு
இந்தியாவில் உள்ள உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களான IIT, IISc, NIT போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை கழகங்களில் பொறியியல் படிப்புகள் (B.E/B.Tech) , கட்டிட நிர்மான கலை (B.Arch) படிப்புகள் படிக்க JEE Main தேர்வு ஆண்டு தோரும் நடத்தப்படுகின்றது. அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 (30-09-2019)
JEE Main தேர்வில் தேர்சி பெறுபவர்கள் JEE Advance தேர்வு எழுதி தேர்சி பெற்று IIT, IISc-யில் B.E/B.Tech/B.Arch படிப்புகளில் சேரலாம்.
JEE Main தேர்வில் மட்டும் தேர்சி அடைந்தவர்கள் NIT, தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிப்புகளில் சேரலாம்.
கல்வி தகுதி :
a) +2 -ல் கணிதம்(Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) பிரிவு மாணவர்கள். படித்து கொண்டிருப்பவர்கள் அல்லது படித்து முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
b) டிப்ளோமா (Diploma) இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்கள் (அல்லது படித்து முடித்தவர்கள்)
c) +2 -ல் சில வொகேஷனல் (Vocational) பிரிவு மாணவர்கள்
+ 2 தேர்வு அல்லது டிப்ளோமா தேர்வில் குறைந்தது 75 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்
வயது :
2018, 2019- ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் அல்லது 2020-ல் தேர்வு எழுதபோகும் மாணவர்கள்
விண்ணப்பிக்க :
https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் ரூ.650, பெண்களுக்கு ரூ.325
06.01.2020 முதல் 11.01.2020 வரை 5 நாள்களில் ஏதாவது ஒரு நாளில் தேர்வு நடைபெறும்.
தேர்வை பற்றி :
இது 3 மணி நேரம் நடைபெறும் கணிணியில் எழுதப்படும் ஆன்லைன் (CBT) தேர்வாகும்
இதில் கணிதம்(Mathematics), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) ஆகிய 3 பாடங்களில் இருந்து ஒரு பாடத்திற்க்கு 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75 கேள்விகள் கேட்க்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு இந்த தேர்வு நடைபெறும். கேள்விகள் ஆங்கிலம், மற்றும் இந்தியில் இருக்கும்.
ஒவ்வொரு பாடத்திற்க்கும் 20 கேள்விகள், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் (MCQ) முறையில் இருக்கும், 5 கேள்விகள் நேரடியாக பதில் எழுதும் முறையில் இருக்கும்.
MCQ கேள்விகளில் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைத்து கொள்ளப்படும் (negative mark for wrong answer )
நேரடியாக பதில் எழுதும் 15 கேள்விகளுக்கு negative mark இல்லை.
JEE Main தேர்வின் பாடதிட்டம் (syllabus) https://jeemain.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx… லின்கில் உள்ளது
JEE Main தேர்வை பற்றிய விபரங்கள் இந்த pdf https://jeemain.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx… ஃபைலில் உள்ளது
இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.



Friday, 16 August 2019

ஆன்லைனில் அதிகம் உள்ள சகோதிரிகளுக்கு உங்கள் சகோதரன் மு. அஜ்மல் கான் தரும் அட்வைஸ் !!

No photo description available.அன்புள்ள சகோதரிகளுக்கு!!!

இணையதளத்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்...


ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துமுழுமையாக விலகி விடலாம்.
ஆனால், பெண்கள் அதற்குப் பின்தான் பெரிய தவறு செய்கின்றனர்.
முதல்ல பாலியல் ரீதியான பேச்சுகுள்ள போயிட்டாலே அங்கயே எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்...
இந்த மாதிரி டிஸ்கஷனை ஒரு பெண் ஆண் கிட்ட மறைமுகமா நடத்துறான்னா அங்கயே அவளோட தரம் தாழ்ந்து விடுகிறது...
ஒரு ஆணுடனான பேச்சு என்பது ஒவ்வொரு பெண்ணும் தன்னையே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமா நினைச்சுகிட்டா தவறான உரையாடல்களே நடைபெறாமல் போய்விடும்...

மேற்கொண்டு எந்தத் தவறும் வராமல் அதிலிருந்து மீண்டு விடலாம்...
இல்லையென்றால் வரும் ஆபத்துகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும்...
நான் சொல்வது தவறே செய்யாமல் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களுக்கான அறிவுரையாக எடுத்துக்கலாம்...

ஒரு ஆணோடு பாலியல் ரீதியாக உரையாடியிருந்து, அதைத் தவறு என்று உணரும் தருணத்தில் அதிலிருந்துஎவ்வாறு விலகி விடலாம்?
இந்தக் குறுஞ்செய்திகள் அல்லது அலைபேசி உரையாடல்களை வைத்து ஆண்கள் மிரட்டும் பொழுது அதற்கு பயந்து அவர்கள் அழைக்கும் இடத்திற்குச் செல்வது, அவர்கள் என்ன சொன்னாலும் செய்வது என்ற நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
பாலியல் மிரட்டல்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை. எந்தச் சூழலிலும் பதட்டமடையத் தேவையில்லை.
முகநூல், யு டியூப், கூகுள் ஆகியவற்றில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தவறாகப் பதிவிட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன.
IMAGE REMOVAL PREOCESSING மூலமாக ஆபாசமாகப் பதிவிட்டுள்ள
புகைப்படங்களை நீக்கி விட முடியும்.
கூகுள் வலைத்தளத்தில் REVERSE IMAGE PROCESSER பயன்படுத்தி எந்தெந்த வலைப்பகுதிகளில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்பதனை அறிந்து
அதை நீக்கி விட இயலும்.
யூ ட்யூப் -ல் காப்பி ரைட் படிவத்தினை சமர்ப்பித்தால் வீடியோ அகற்றப்படும்.
XXX வீடியோஸ் என்று சொல்லக் கூடிய ஆபாச வலைத்தளத்தில்
ABUSE REPORTING FORM என்று ஒரு படிவம் உள்ளது.அந்தப் படிவத்தில் ,
இது என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தால் அந்தக் காணொளியை
நீக்கி விடுவார்கள்.
இதனைத் தனியாக செய்யத் தெரியவில்லை என்றால் , அதற்கென்று சைபர் கிரைம் பிரிவு உள்ளது அல்லது இதை செய்து கொடுக்க தனியார் ஏஜன்சிகள் இருக்கின்றன.
உடலை வெளிப்படுத்துவதால் நமது புனிதம் கெட்டுவிட்டது, கற்பு போய்விட்டது என்றெல்லாம் நினைத்துப் பதறாமல் ,பாலியல் அச்சறுத்தல்களுக்கு அடிபணியாமல் நிதானமாக இந்தச் சிக்கல்களில் இருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற மனநிலைக்கு சென்றுவிடக் கூடாது .
முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்லவில்லை.
பெண்களுக்கு படிப்பறிவு இல்லை என்று சொல்லாமுடியாது. சுகாந்திராம் இல்லை என்று மறுக்க முடியாது. இது அனைத்தும் பல பெண்கள்நல்ல முறையில் பயன்படுத்துவதில்லை. இதனால் எல்லா துன்பத்தை அவர்கள் அனுபாவிக்கவேண்டி.உள்ளது முதலில் இதை போன்றபெண்கள் திருந்த வேண்டும்
அப்போது தான் குற்றங்கள் குறையும்...
நண்பன், காதலன் போன்ற உறவுகள் ஆன்லைனில் பெறக்கூடியது அல்ல.

புரிந்துகொள்ளுங்கள் சகோதரிகளே !!


முகநூல் மற்றும் Whats app ,Whats app status ,Hike, viber, instragrame, Skype, போன்றவற்றை பயன்படுத்தும் என் உடன்பிறவா சகோதரிகலே தங்களின் புகைபடங்களை எதிலும் வைத்துவிட வேண்டாம். தற்போது நடைமுறையில் photo editor மிகவும் பிரபலமான முறையில் வளச்சி அடைந்துள்ளது. யாரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம்.
தங்களின் புகைபடங்களை Download செய்து விபசாரி களின் உடையில்ல உடம்பில் உங்கள் தலையை பழியாக்க பல கும்பல் காத்துகிடக்கிறது. எதிலுமே அறியாத தெரியாத நபர்களிடம் தங்களின் புகைபடம் நம்பர்களை அனுப்ப வேண்டாம்.தற்சமயம் முகநூலில் Fack ஐடியில் பல மகான்கள் வலம்வருகின்றன.


அவற்றை கண்டரிய பல வழிமுறைகள் உள்ளது.
1. முதலில் About ல் பார்க்கவும் அவர்கள் கூறும் வயதும் About பதிவு செய்துள்ள வயதும் சரியாக உள்ளதா என்று.

2. அவர்களின் Status மற்றும் Upload போட்டோவை பார்க்கவும்.
எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் Status போடாமல் இருக்கமாட்டாங்க. Fake idல போட்டோ மட்டும் இருக்கும் Status இருக்காது

3. அவர்களின் Friends listயை பார்க்கவும்.

4. அவர்கள் Like செய்துள்ள Pageயை பார்க்கவும். எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் Like Pageல்மாட்டி கொள்வான்.

5.விடாமல் மெசேஜ்செய்துதொல்லை செய்பார்கள்.

6.அவர்களின் விளாசத்தை கூறாமல் உங்களின் விளாசத்தை மட்டும் கேட்டறிவார்கள்.

7.Messenger ல் விடாமல் போன்செய்பார்கள்.

8. நீங்கள் பெண்ணாக இருந்தாலும் நான் பையன் என்று கூறுங்கள் உங்களை உடனே blk செய்வார்கள்.


தாய்மார்கலே தயவு செய்து புதுமுகநூல் பயன்படுத்துபவர்கள் தங்களின் போன் நம்பரை முதலில் Remove செய்யுங்கள்.

அவற்றை செய்யும் முறை..

1, About ல் சென்று Contact info வை click செய்யவும்

2.சிறிது கிலே சென்று Contact info எதிர்புரம் உங்களின் போன்நம்பரும் Edit என்றும் இருக்கும்.Edit ஐ Click செய்யவும்.

3.பின்பு உங்களின் போன் நம்பரும் வரும் அதன் எதிர்புரதில் சிரிய டப்பா ஒன்று இருக்கும் அதை click செய்தால் Friends, public, onlyme என இருக்கும்.நீங்கள் பார்த்ததில்.onlyme இல்லையென்றால் More options னை Click செய்தால் அதில் Onlyme இருக்கும் அதை click செய்து கிலே சென்று Save என்ற பட்டனை Click செய்தால் உங்களின் நம்பரை நீங்கள் மட்டுமே கான முடியும்.

இது ஆண்களுக்கும் பெண்களும் தெரிந்து கொள்ளுங்கள்
தெரியவில்லையென்றால் தெரிந்தவர்களின் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தங்களிடன் ஒரு பெண் பேசவில்லை யென்றால் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் நம் வீட்டிலும் அம்மா என்ற தெய்வம் வாழ்வதை மறந்து விட வேண்டாம்.
இவ்வுளகில் ஆண் பெண் இருவரும் சமம் உறுப்புகள் மட்டுமே வேறு. இந்த பெண் இல்லையென்றால் எதோ ஒரு மூலையில் உங்களுக்காக ஒரு பெண் கண்டிப்பாக காத்திருப்பால்.

பிடிக்கவில்லையென்றால் விபசாரி யாக இருந்தாலும் தொட கூடாது என்பது பல மானிடர்களின் கொள்ளை. ஐந்து நிமிட உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணிண் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம்.தாய் தந்தைகள் என்னற்ற கனவுகளோடு வீட்டில் வளர்த்து வருகின்றனர்.அடுத்த பெண்ணிடம் பேசுவது சந்தோஷம் கிடையாது தன் தாய், தங்கை, தாரத்திடம் ,ஐந்து நிமிடம் பேசினால் போதும் அதை விட சந்தோஷத்தை வேற்று பெண்களால் கொடுக்க முடியாது.

மனிதனாக பிறப்பது அறிது. இன்று இருப்போம் நாளை இருப்போமா என்று நமக்கே தெரியாது மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்வோம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு   : உங்கள்  சகோதரன்  மு. அஜ்மல் கான்.

Thursday, 15 August 2019

What’s an EPC project in Oil & Gas Industries !!!

.


 Defining EPC is how well we execute the EPC contract as per the Contract Conditions and Specifications. It is an uphill task for a TL/ PM to convince for good practice for the self interest of Client and Consultancies




Definition:

 EPC stands for Engineering, Procurement, and Construction. It is a type of contract where a single contractor is responsible for the entire project, from the initial engineering design to the final construction and commissioning. The contractor ensures that the project is completed to the required standards and specifications.


 Key Components:


 1. Engineering: This phase involves the detailed design and planning of the project. Engineers create blueprints, technical specifications, and other necessary documentation.


 2. Procurement: This phase includes the sourcing and purchasing of all materials, equipment, and services needed for the project. The contractor ensures that everything is delivered on time and within budget.


 3. Construction: This is the actual building phase where the project is constructed according to the engineering plans. The contractor oversees all construction activities, ensuring quality and adherence to the project timeline.


 4. Commissioning: Once construction is complete, the contractor tests and commissions the facility to ensure it operates as intended.