Friday, 11 June 2010

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்....

உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக...

ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் ...
 நன்றி : tamilislam.com

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....


நமது   வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.



வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 80 அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை. வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


 வாழைப்பழம் வரலாறு :

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது நண்பன்  வசிக்கும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.





மேலும் நான் எனது  நண்பன்  ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.





வாழைப்பழ வகைகள்
 கற்பூரவல்லி வாழைப்பழம் இதனைத் தேன் வாழை என்பார்கள்.

* மலை வாழைப்பழம்

* பேயன் வாழைப்பழம்

* பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?

* பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)

* நேந்திர வாழைப்பழம் (கேரளாவில் உற்பத்தியாகின்றன)

* மொந்தன் வாழைப்பழம்அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள்.

* பூவன் வாழைப்பழம்

* கப்பல் வாழைப்பழம்

* கதலி வாழைப்பழம்

* ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

* மோரீஸ் வாழைப்பழம்


அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும்.
பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும்.
மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது.
ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே.
இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். 
மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும்.
சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.
பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம்.



மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. 

அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்  (Fiber) கொண்டுள்ளது. 


வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.

* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 

* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.
*உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.


* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும்.


வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது.ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.

இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
    

விருத்தி தரும் செவ்வாழை!!!

Red Bananaஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்..

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்..

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்..

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

இரத்த விருத்திக்கு உதவும் மொந்தன் வாழை!!!


வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் அணைவரும் விரும்பி சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை. மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும்.

இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

பச்சை வாழைப்பழம்!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.



முடிவு : குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும்.நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.மேலும்  அநேக வியாதிகளுக்கு தீர்வு தரும். இயற்கை அன்னை நமக்கு வழங்கிய பொக்கிஷமாகும். எனவே அதை உண்டு அதனின் முழு பயனை பெற  வாழ்த்தும்  உங்கள் சகோதரன் !! 


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

Thursday, 10 June 2010

உலகக் கோப்பை கால்பந்து-ஒரு சிறப்பு பார்வை...




19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கால்பந்து விளையாட்டு பிரிட்டனில் மட்டுமே ந்டைபெற்று வந்தது;1872ல் தான் இரு நாடுகளுக்கிடையே முதல் சர்வதேச போட்டி ந்டைபெற்றது; பிரிட்டனும் ஸ்காட்லாந்தும் மோதின.
1904ல் FIFA ( FEDERATION OF INTERNATIONAL FOOT BALL ASSOCIATION )உருவானது;1908ல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸில் கால்பந்து போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
1930ல் முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942,1946ஆம் ஆண்டுகளில் ந்டைபெறவில்லை.
1978 வரை நடந்த போட்டிகளில் 16 அணிகள் கலந்து கொண்டன; 1982ல் இது 24 அணிகளாகவும், 1998ல் 32 அணிகளாகவும் உயர்ந்தது.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
1938 முதல் போட்டியை நடத்து நாடு தகுதிச் சுற்றில் கலந்து கொள்ளாமலேயே நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளும் என்ற மரபு கொண்டுவரப்பட்டது; அதே போல, கடந்த உலகக் கோப்பை சாம்பியன் அடுத்த உலகக் கோப்பைக்கு தானாகவே தேர்வாகி விடும் என்ற மரபு 2006 முதல் அறிமுகமானது.
முதல் உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவிலுள்ள உருகுவே நாட்டில் நடைபெற்றது; அதற்கு பிறகு நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே நடைபெற்றதால், அதை எதிர்த்து உருகுவேயும் அர்ஜென்டினாவும் ஒரு உலகக் கோப்பை போட்டியை புறக்கணித்தன. இதையடுத்து 1958 முதல் ஒரு முறை அமெரிக்க நாடுகளிலும் அடுத்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மரபை கொண்டு வந்தது FIFA
2002ல் விதிவிலக்காக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது; தென்கொரியா ஜப்பான் இரண்டும் சேர்ந்து போட்டியை நடத்தின. அதே போல் இந்த முறை ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்த தென் ஆப்ரிக்கா போட்டியை நடத்துகிறது.அடுத்த போட்டி (2014) பிரேசிலில் நடக்க இருக்கிறது.
இது வரை நடைபெற்ற 18 உலகக் கோப்பை போட்டிகளில், பிரேசில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது; இத்தாலி 4 முறையும் ஜெர்மனி 3 முறையும் அர்ஜென்டினா உருகுவே நாடுகள் தலா 2 முறையும் பிரிட்டன் ஃபிரான்ஸ் நாடுகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.
இந்தியா இது வரை ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றதில்லை ; வரும் காலங்களிலாவது கால்பந்து போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறும் என்று நம்புவோம்.
உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை 
தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை
 ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

தொகுப்பு : மு.அஜ்மல்கான்.

Friday, 28 May 2010

நமக்குத் தேவைதானா இந்த போலியான சந்தோஷம்!.


போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா? அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல.

போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர்.

ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள்.
'ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் என் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்' என்றாள் கணவனிடம். 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுவது ?' கேட்டான் கணவன்.

அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. 'என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்' என்றாள்.

நகை கடைக்காரரிடம் அவன் போனான். அவர் இரெண்டே இரண்டு வளையல்களை வைத்துக் கொண்டு எப்படி செயின் வாங்க முடியும்?' என்றவர் நான் ஒரு இமிடேஷன் செயின் தருகிறேன். அசல் தங்கச் செயினைப் போலவே இருக்கும். இந்த வளையல்களுக்கு பதில் அதைத் தருகிறேன்' என்றார்.

அவனும் அதை வாங்கிக் கொண்டு மனைவியிடம் தந்து, உண்மையையும் சொன்னான். 'இப்போதைக்கு இதைப் போட்டுக் கொண்டு போ. கொஞ்ச நாட்கள் கழித்து அசல் செயின் வாங்கித் தருகிறேன்' என்றான்.

இமிடேஷன் செயினைப் போட்டுக் கொண்டு அவள் தாய் வீட்டுக்குப் போனாள். எல்லோரிடமும் அது தங்கம் என்றே சொன்னான் தன் கௌரவம் குறையக் கூடாதென்று.

அவளுடைய அண்ணிக்கு அந்தச் செயின் ரொம்பவும் பிடித்து விட்டது. அவளும் அது போல ஒன்றை வாங்கித் தரும்படி தன் கணவனை நச்சரித்தாள்.

அவனிடம் போதிய பணம் இல்லை. ஒரு நகைக் கடைக்காரரிடம் போய்க் கேட்டான். அவர் 'இதோ பார். இப்போதெல்லாம் இமிடேஷன் நகை அணிவதுதான் ஃபாஷன். அதனால் நீ இமிடேஷன் செயினை வாங்கிப் போ. உன் மனைவி சந்தோஷப்படுவாள்' என்றான்.

அவனும் ஒரு இமிடேஷன் செயினை வாங்கிக் கொண்டு போனான். தன் மனைவியிடம் கொடுத்து, 'யாரிடமும் சொல்லாதே. இது இமிடேஷன் செயின். இப்போதைக்கு இதை அணிந்து கொள் !' என்றான்.

ஊரிலிருந்து வந்தவன் ஒரு நாள் தன் செயினை கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள். அதைப் பார்த்த அண்ணிக்குத் திருட்டு புத்தி ஏற்பட்டது.

'என் இமிடேஷனை வைத்துவிட்டு இந்த தங்கச் செயினை எடுத்துக் கொண்டாள் என்ன? இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குத் தெரியாது' என்று எண்ணி அதை எடுத்துக் கொண்டாள்.

ஒரே சந்தோசம் அவளுக்கு. 'அசல் தங்கச் செயினைப் போட்டுக் கொண்டிருக்கிறோம்' என்று ஆனந்தப்பட்டாள்.

அடுத்த நாள் அவள் தன் செயினைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போகையில் ஊரிலிருந்து வந்தவள் தன் செயினை வைத்துவிட்டு அவளுடைய செயினை எடுத்துக் கொண்டாள்.

அசல் தங்கச் செயின் தனக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தாள்.
இப்போது இரண்டு பேருக்குமே சந்தோசம் தாங்கள் அணிந்திருப்பது அசல் தங்கச் செயின் என்று!

ஆயுட்காலம் பூராவும் போலியான மகிழ்ச்சியிலேயே இருவரும் வாழ்ந்தார்கள்!

இதைப் படிக்கும் நமக்குப் புரியும் எவ்வளவு முட்டாள்தனமான மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள் என்று.

இப்படிப்பட்ட போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம்.

அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது.

இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா?-

நன்றி :ரா.கி.ரங்கராஜன்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 27 May 2010

ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா?



சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.

தாவா சென்டரில்  மாதத்திற்கு ஒருமுறை தினங்களுக்கு ஜுபைலில்  சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.

விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!

Wednesday, 19 May 2010

வெண்குஷ்டம், வெண்புள்ளி பற்றிய சிறப்பு விழிப்புணர்வு தவகல்!!

ஆரோக்கியம்தான் மிகப் பெரிய சொத்து என்பதை, நோயின் கையில் சிக்கி சித்ரவதைப்படும் போதுதான் புரிந்துகொள்ள முடியும். நோயாளியாக இருப்பது அந்த அளவுக்கு ஒரு நரக வேதனை.
உடல் உறுப்புகளில் கோளாறு என்றால், நாம் சொன்னால்தான் தெரியும் பிறருக்கு. ஆனால், தோல் நோய் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களின் நிலை பரிதாபத்திலும் பரிதாபம். "நான் ஒரு நோயாளி" என்பதைப் பார்ப்பவர்களின் முதல் பார்வைக்கே "பளிச்" எனக் காட்டிவிடும் தோல் நோய் பாதிப்பு. இதனால், பரிதாபம், பரிகாசம் என்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.
அவர்களையெல்லாம் பார்த்து, "கவலை வேண்டாம். உங்கள் நோயைக் குணப்படுத்த நாங்களாச்சு" என்று நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம். இவர், சென்னை, தாம்பரம் - சானடோரியத்தில் இயங்கி வரும் "தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன"த்தில் உள்ள "அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனை"யில் பணியாற்றி வருகிறார்.
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்துக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகள், தங்கி சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு உட்பட அனைத்தும் இலவசம். இங்கு அனைத்து தோல் வியாதிகள், முடக்குவாதம், மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
"தோல் நோய்க்குச் சித்த மருத்துவத்தை விட்டால் வேறு சிறந்த மருத்துவம் இல்லை. ஆங்கில மருந்தில் இருக்கும் சில வேதிப் பொருட்கள், அதை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், சித்தாவில் உங்களின் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளும் இல்லை!" என்று அடித்துச் சொல்கிறார் வேலாயுதம்.
குறிப்பாக, தோல் வியாதியிலேயே வீரியமாகக் கருதப்படுகிற, சிகிச்சைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கிவிடாத "வெண்குஷ்டம்" நோய்க்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சை, மிகவும் பிரபலம். ஆம்... இங்கு வரும் வெண்குஷ்ட நோயாளிகளில் 85% மேல் முழு குணம் பெற்று உள்ளனர் என்பது கவனத்துக்கு உரியது! அந்த வெண்குஷ்டம் நோய் பற்றி விளக்கமாகப் பேசினார் வேலாயுதம்.
"ஆங்கிலத்தில் "லூக்கோடெர்மா" (Leuco-derma) என்று வழங்கப்படும் இந்த நோய்க்கு தமிழில் வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை என்று பல பெயர்கள் உண்டு. சித்த மருத்துவத்தில் பதினெட்டு வகையான தோல்நோய்களில் ஒன்றாக இதைக் கருதுகிறோம். 



வெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்:-


நமது உடல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்கலங்கள் தான் மெலனின் நிறப்பொருட்களை உருவாக்கும். நிறப்பொருட்கள்அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும்தோன்றுவோம்.


ஆனால் சிலருக்கு குறிப்பிட்ட இடங்களில் உள்ள கலங்கள் ஏதோவொருகாரணத்தால் பாதிப்படைவதால், அவ்விடத்தில் இருக்கும் நிறப்பொருட்கள் குறைந்து வெண்புள்ளிகளை ஏற்ப டுத்துகிறது.இந்தக் குறைபாடு உடலின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம் 


வெண்புள்ளிகளில் இரண்டு வகைகள் உண்டு. 1.`விட்லிகோ' 2.`லூக்கோ டெர்மா'. 


இதில் 'விட்லிகோ' எனப் படுவது உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடியது.பெரும்பாலும் உதடு, கைகள், கால்கள், தொப்புள், பிறப்புறுப்புகள், மார்புக் காம்பு,காது போன்ற இடங்களில் தோன்றி படிப்படியாக வளரத் தொடங்கும். இதில் ஒருசிலருக்கு உடல் முழுவதும் வேகமாகப் பரவி, வெள்ளைகாரர் போல்மாறிவிடுவதும் உண்டு. 


`லூக்கோ டெர்மோ' எனப்படுவது உடலின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும்பாதிக்கும் வகையைச் சேர்ந்தது. உடலில் எங்கேனும் தீயால் சுட்ட புண்கள்இருந்தாலோ அல்லது இறப்பர் செருப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சலைகளில்பணிபுரிந்தாலோ இவ் வகையான வெண்புள்ளி வரும். 


இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புசக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள்தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. இது ஒரு சிலருக்கு பரம்பரைகாரணமாகவும் ஏற்படலாம். தைரொய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள்,நீரிழிவு வியாதி, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, கலங்களுக்குக் கிடைக்க வேண்டிய விட்டமின் குறைபாடுஆகியவைகளால் இவை உருவாகும்.


மேலும் ஒரு சிலருக்கு அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, தைபொய்ட் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின்தாக்குதலாலும் இவை ஏற்படும். அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல்இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும் நிறப்பொருள் அணுக்கள்தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது. இதனால் இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றும். 



உடலியக்கத்தைச் சீராகச் செயற்படவைப்பதுதான் இதற்கான சரியான சிகிச்சைமுறை . அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் வந்ததா? பரம்பரையின்காரணமாக ஏற்பட்டதா? வேறு சில நோய்களின் பின்விளை வினால்உருவானதா? என்பதை ஆராய்ந்தறிந்து, உடல் திறனுக்கு ஏற்பசிகிச்சையளிக்கவேண்டும். உடலின் இயக்கம் சீரடைந்தால், சருமத்தில் உள்ளமெலனோசைட் கலங்கள் பணியாற்றத் தொடங்கும். தோலின் மீது சூரிய ஒளிபட்டால் கூட நிறப்பொருட்கள் வேலை செய்யும். அதனால் சில மருத்துவமுறைகளில் சில வெளிப் பூச்சுகளை பூசிக்கொண்டு, சூரியனின் ஒளி உடலில்படுமாறு நில்லுங்கள் என்று பரிந்துரைப்பார்கள். 


பொதுவாக உதடுகளில் தோன்றும் வெண்புள்ளிகள் விரைவில் குணமடையும்.உடல் முழுவதுமாகத் தோன்றும் வெண்புள்ளிகளுக்கும், ஒரு சில இடங்களில்மட்டும் இருக்கும் வெண்புள்ளிகளுக்கும் சிகிச்சை பெற்றால்தான் குணமாகும்.அத்துடன் பொறுமையுடனும் சிகிச்சையை எடுத் துக்கொள்ளவேண்டும். 


உடலில் எங்கேனும் வெண்புள்ளிகள் தோன்றினால் விட்டமின் C சத்துஅதிகமாக இருக்கும் எலுமிச்சை , திராட்சை , ஒரேஞ்ச், ஊறுகாய், மீன், முட்டை,மாமிசம் ஆகிய வற்றைத் தவிர்த்துவிடவேண்டும். அத்துடன் பொதுவாகபுளிப்புச் சுவையையே தவிர்த்து விடவேண்டும். அதற்கு மாறாக கரட், பீட்ரூட்,முள்ளங்கி, பனை வெல்லம், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். 


வெண் குஷ்டம் என்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதற்கும்,வெண்புள்ளிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழுநோய் ஒருவிதவைரஸ் கிருமிகளின் தாக்குதலால் உருவாகிறது. அதற்கான சிகிச்சை முறைமுற்றிலும் வேறுபட்டது. 


வெண்புள்ளிக்கு மற்றைய மருத்துவ முறைகளை விட ஹோமியோபதிமருத்துவ முறைகளில் சிகிச்சை எடுத்தால் நல்ல பலன், நிரந்தரமாக உண்டு.


"பகர்பித்த விந்தையிலாது மேகம் வராது" என பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் ஒரு பாட்டில் குறிப்பிடுகிறார். அதாவது, பித்தத்தின் ஆதிக்கம் இன்றி எந்த மேகநோயும் வராது என்று அர்த்தம். குறிப்பாக உடலில் உள்ள பிரகாச பித்தம் (ஒள்ளொளித்தீ), வண்ணப்பித்தம் (வண்ண அழல்)... இந்த இரண்டின் குறைபாடு காரணமாக தோலில் வெண்புள்ளி தோன்றும். ஆங்கிலத்தில் இதை "மெலனின் நிறமி குறைபாடு" என்பார்கள்.
இந்த நோய் ஆரம்பத்தில் சருமத்தில் சின்னபுள்ளிகள் போல் தோன்றும். சிலருக்கு புள்ளிகளில் அரிப்பு, தோல் வறட்சி, மரத்துப்போதல், கூடுதலான வியர்வை, முழு உணர்ச்சி இல்லாதது போன்ற குணங்கள் இருக்கும். சிலருக்கு இந்த குணங்களில் ஏதாவது ஒன்றிரண்டு குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கும்.
இந்த வெண்குட்டம் நோய்க்கு வாத வெண்படை, பித்த வெண்படை, கப வெண்படை என மூன்று உட்பிரிவுகளும் உண்டு. வாத வெண்படை சிறிது சொரசொரப்பாக, சிவந்து வெளுத்திருக்கும். பித்த வெண்படை செந்தாமரை இதழ் போல் சிவந்து, வெளுப்பாகப் பரவும். பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். முடி உதிரும். கப வெண்படை தும்பைப்பூப் போல் வெண்மையாக தடித்துப் பரவும். நமைச்சல் உணர்வு இருக்கும்" என்று அறிகுறிகள் சொன்னவரிடம், இவற்றுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டோம்.
"இந்த வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் தருகிறோம். வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.
மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்கவேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்" என்றார்.
இந்த நோய் குறித்து தனியாக ஆய்வு நடத்தி முடித்திருக்கிறார் மருத்துவர் ஏ.சதீஷ்குமார். "பதின்மூன்று வயது வரையுள்ள குழந்தை நோயாளிகளை ஆய்வு செய்ததில், அதில் மூன்று சதவிகிதத்தினருக்கு பெற்றோர் வழியாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகம் வருகிறது" என்ற சதீஷிடம்,
பொதுவாக சித்த மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிற்காலத்தில் பாதிப்பு வரும் என்று ஒரு கருத்து நிலவுவது உண்மையா?
"இது மிக தவறான ஒரு கருத்து" என்று மறுத்தவர், "சித்த மருத்துவம், மூலிகைகளின் சுத்தி முறைகளைப் பற்றி தான் முதலில் வலியுறுத்துகிறது. பல மூலிகைகளுக்கு சுத்தி முறைகள் இருக்கின்றன. அதோடு மருந்து தயாரிப்பில் நட்புச் சரக்கு, பகைச் சரக்கு என கலவை விகிதாச்சார அளவுகள் உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் கவனமுடன் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கத் தேவையான குடுவை உள்ளிட்ட அனைத்துமே சுகாதாரமான முறையில் அங்கே பராமரிக்கப்படும். எனவே, நாங்கள் தரும் சித்த மருந்துகளால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது" என்றார்.
சரி, வெண்குஷ்டத்தை சித்த மருத்துவத்தால் குணப்படுத்துகிறோம் என்று இவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
தொடர் சிகிச்கைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து தன் மகளை அழைத்து வந்திருந்த ஆனந்தன், "பத்து வயசுல, என் மகளுக்கு காலுல சிறு புள்ளியா ஆரம்பிச்சுது. முதல்ல இங்கிலீசு வைத்தியம்தான் பார்த்தோம். அந்த மருந்து சாப்பிட, சாப்பிட குறையறதுக்குப் பதிலா, உடம்பு முழுவதும் பரவ ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு லட்ச ரூபா செலவானதுதான் மிச்சம். இங்க இலவசமா மருந்து கொடுக்கறாங்க. ரெண்டு வருஷமா அதைச் சாப்பிட்டு நல்ல குணம் தெரியுது. முகம், தலை எல்லாம் முழுசா மாறிடுச்சு. பக்கவிளைவெல்லாம் எதுவும் இல்ல. செலவும் கிடையாது. நாங்க இந்த ஆஸ்பத்திரியை கோயிலா பாக்குறோம் என்றார் நன்றிப் பெருக்கோடு.
கேரளாவில் இருந்து இங்கே வந்து கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துவரும் சல்மான் "பல இடங்கள்ல சிகிச்சை எடுத்தும் குறையல. இங்க வந்தபிறகு நல்ல முன்னேற்றம். குணமாயிடுவேன்கிற நம்பிக்கை வந்துடுச்சு சார்!" என்றார் கண்கள் ஒளிர.


ஆக... புற அழகை பாதிக்கும் வெண்குஷ்டம் நோயால் மன உளைச்சல் அடைந்து, வாழ்நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மையோடு கடக்கத் தேவையில்லை. நோயாளிகளைக் குணப்படுத்த சித்த மருத்துவம் காத்திருக்கிறது!

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Tuesday, 18 May 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

        
     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் \
இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.


 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்


1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்


நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

    இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது

   (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
   
   இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?


   * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.


  அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)

  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.

 அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.


"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

  * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,

     உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.

  எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

      அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

       இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.


மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 

மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.
  ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

   சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

Sunday, 16 May 2010

We ( Muslim Scientists) always contributed to the civilization!!

Assalaamu alaikum,
Who says Islam and Muslims did not contribute to the civilization!!
We just need to ask ourselves the following two questions however…
 
1)     What went wrong that stopped us from achieving the same success now?
2)     How can we achieve the same glory again? (the answer to the first question will give us 50% of the clues to this question.)
 
Read on…
 
A century-wise list of renowned Muslim scientists during Medieval Islamic Civilization. Latinized names, where applicable, are given in brackets. A very impressive and fascinating fact is that during the Islamic Golden era, a large number of Polymaths (a person whose expertise fills a significant number of subject areas) emerged. For example, Ibn Sina (latinized as Avicenna) made major contributions in medicine, Astronomy, Chemistry, Geology, physics, Philosophy, Theology, Engineering and Poetry!
 
According to the famous Historian of Science, George Sarton (regarded as 'Father of History of Science') in his well-recognized book the 'Introduction to the History of Science' he writes…:
 
"It will suffice here to evoke a few glorious names without contemporary equivalents in the West: Jabir ibn Haiyan, al-Kindi, al-Khwarizmi, al-Fargani, al-Razi, Thabit ibn Qurra, al-Battani, Hunain ibn Ishaq, al-Farabi, Ibrahim ibn Sinan, al-Masudi, al-Tabari, Abul Wafa, 'Ali ibn Abbas, Abul Qasim, Ibn al-Jazzar, al-Biruni, Ibn Sina, Ibn Yunus, al-Kashi, Ibn al-Haitham, 'Ali Ibn 'Isa al-Ghazali, al-zarqab, Omar Khayyam. A magnificent array of names which it would not be difficult to extend. If anyone tells you that the Middle Ages were scientifically sterile, just quote these men to him, all of whom flourished within a short period, 750 to 1100 A.D."
 
 
List of Muslim Scientists
 
 
7th century
 
Jabir Ibn Haiyan (Geber)
Ahmad Nahavandi
 
 
8th century
 
Al-Asmai
Al-Khwarizmi (Algorizm)
Amr ibn Bahr Al-Jahiz
Al Balkhi, Ja'Far Ibn Muhammas (Albumasar)
Al-Fazari,Ibrahim Ibn Habeeb
Al-ajjāj ibn Yūsuf ibn Maar
Ibrahim al-Fazari
Muhammad al-Fazari
Yaqūb ibn Tāriq
 
 
9th century
 
Ibn Ishaq Al-Kindi (Alkindus)
Thabit Ibn Qurrah (Thebit)
Abbas Ibn Firnas
Ali Ibn Rabban Al-Tabari
al-Hasan al-Hamdānī
Al-Battani (Albategnius)
Al -Farghani (Al-Fraganus)
Al-Razi (Rhazes)
Al-Farabi (Al-Pharabius)
Abul Hasan Ali Al-Masu'di
Al-ʿAbbās ibn Saʿid al-Jawharī
Abd al-Hamīd ibn Turk
Hunayn ibn Ishaq
Banū Mūsā Brothers:
 1. Ja'far Muhammad ibn Mūsā ibn Shākir
 2. Ahmad ibn Mūsā ibn Shākir
 3. Al-Hasan ibn Mūsā ibn Shākir
 
Abū anīfa Dīnawarī
Al-Mahani
Ahmed ibn Yusuf al-misri
Al-Hashimi
Abu Kamil
Sinan ibn Tabit
Al-Nayrizi
Ja'far ibn Muhammad Abu Ma'shar al-Balkhi
Ahmed ibn Sahl al-Balkhi
Abu Sa'id al-Darir al-Jurjani(Gorgani)
Ibn al-Jazzar (Algizar)
Ibn Khordadbeh
Ibn Wadih al-Ya'qubi
Ibn Saeed Ibn Aswad
Ibn al-Faqih
Al-ajjāj ibn Yūsuf ibn Maar
Qusta ibn Luqa
 
 
10th century
 
Al-Sufi (Azophi)
Al-Saghani
Abu Al-Qasim Al-Zahravi (Albucasis)
Abu Rayhan Biruni
Abū Ja'far al-Khāzin
Al-Uqlidisi
Al-Saghani
Abū Sahl al-Qūhī
Abu Nasr ibn `Iraq
Abu-Mahmud al-Khujandi
Al-Karaji
Abū al-Wafā' Būzjānī
Al-Karabisi
Al-Sijzi
Al-Jayyani
Abu Nasr Mansur
Abolfadl Harawi
Al-Muqaddasi
Ali ibn Abbas al-Majusi(Haly Abbas)
Ibn Al-Haitham (Alhazen)
Ibn Tahir al-Baghdadi
Ibrahim ibn Sinan
Ikhwan al-Safa'
Ibn Miskawayh
Al-Mawardi (Alboacen)
Abu Raihan Al-Biruni
Abul Hasan al-Tabari
Ibn Sina (Avicenna)
Ibn Sahl
Ibn Yunus
Kushyar ibn Labban
Labana of Cordoba
Najab ud-din Muhammad
 
 
11th century
 
Al-Zarqali (Arzachel)
Al-Mu'taman ibn Hud
Omar Al-Khayyam
Hibat Allah Abu'l-Barakat al-Baghdaadi
Abu Bakr Muhammad Ibn Yahya (Ibn Bajjah)
Ibn Zuhr (Avenzoar)
Ibn al-Zarqalluh
Ibn Jazla
Al-Idrisi (Dreses)
Alī ibn Amad al-Nasawī
Ali ibn Ridwan Al-Misri
Maslamah Ibn Ahmad al-Majriti
Yusuf al-Mu'taman ibn Hud
 
 
12th century
 
Abu Bakr Muhammad Ibn Yahya (Ibn Bajjah)
al-Maghribī al-Samaw'al
Al-Hassār
Al-Bitruji (Alpetragius)
Al-Khazini
al-Baghdadi
Anvari
Ibn Tufayl (Abdubacer)
Ibn Rushd (Averroes)
Ibn Jumay
Muhammad al-Idrisi
Ibn Al-Baitar
Ibn al-Yāsamīn
Ibn Bajjah(Avempace)
Nur Ed-Din Al Betrugi (Alpetragius)
Sharaf al-Dīn al-ūsī
Jalal Al-Din Rumi
 
 
13th century
 
Al-Marrakushi
Al-Fida (Abdulfeda)
Ibn Al-Nafis Damishqui
Ibn Mun`im
Ibn Baso
Ibn al-Quff
Muyi al-Dīn al-Maghribī
Mo'ayyeduddin Urdi
Nasir Al-Din Al-Tusi
Shams al-Dīn al-Samarqandī
Qotb al-Din Shirazi
 
 
14th century
 
Muhammad Ibn Abdullah (Ibn Battuta)
Abdur-Rahman Ibn Khaldun
Ibn al-Banna'
Ibn al-Shatir
Ibn Khatima
Lisan al-Din ibn al-Khatib
Kamal al-Din Al-Farisi
Mansur ibn Ilyas
Al-Khalili
Cheng Muhammad Zheng He
ī Zāda al-Rūmī
Ulugh Beg
 
 
15th century
 
Jamshīd al-Kāshī
Abū al-Hasan ibn Alī al-Qalasādī
Piri Reis
 
 
16th century
 
Taqi al-Din
 
More details click below link