Wednesday, 24 October 2012

தியாகத் திருநாள் பக்ரீத் பக்ரீத் பண்டிகை!! ஒரு சிறப்பு பார்வை....

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடபடுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் ஈத்கா திடல் அல்லது மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்வர். 

புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர் இஸ்லாமியர்கள். பக்ரீத் பண்டிகையை ஒட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்.

குர்பானி ஏன் ?

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத், இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள். இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பானி எனப்படும் வழிபாடு செய்கின்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் என தங்கள் வசதிக்கு தகுந்தவாறு பலியிட்டு அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானிக்காக பிராணியை அறுக்கும் போது, அதன் ரத்தச்சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது. எனவே மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் ( ஸல்) கூறியுள்ளார்.

தியாகம் பிறந்த கதை...

நபி இப்ராஹீம் தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும், அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கியவர். அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார்.

'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை' எனும் இறைப் பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள். ஆயினும், குழந்தை பேறு கிடையாது.

இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹீம், இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் வாரிசாக அளித்தார். இதன்பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது.

தியாக திருவிளக்கு...

ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹீமுக்கு கனவொன்று வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்ட நபி, கவலையில் ஆழ்ந்தார். தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு அர்பணித்த இப்ராஹீம் நபி, தாம் கண்ட கனவை அன்பு மகனிடம் கூறினார். தியாகத் திருவிளக்குக்குக்குப் பிறந்தது, தியாக தீபமே என நிரூபிக்கும்வண்ணம், இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி தன்னுடைய தந்தையிடம் பணித்தார், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம். அவ்வாறு பணித்ததோடு மட்டுமின்றி, 'பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ?' என அஞ்சிய பாச மகன், தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார்...

ஆனால், அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன்! குழந்தைச் செல்வங்கள் மலிந்திருப்போரும், தனது ஒரு குழந்தையை இழக்க சம்மதிக்காத இவ்வுலகில், ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்ராஹீமின் தியாகத்தை போற்றாமல் இருப்பது முறையா?.

இப்புனிதம் மிகுந்த தியாகத் பெருநாளில், இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து, உற்ற நண்பர்களுடன் உறவாடி, நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் இறையருளுடனும், தியாகத்தின் உன்னதத்தை உணர்ந்தும் நல்வாழ்க்கை வாழ்வோம்!




குர்பானி கொடுக்கும் நாட்கள்
அறுக்கும் முறை
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை விநியோகம் செய்தல்
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
o குர்பானிப் பிராணியின் வயது
நாமே அறுக்க வேண்டும்.
o தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது
அரஃபா தினத்தன்று நோன்பு


இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்:
                                                        குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். (அறிவிவப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நுல் புகாரி955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.


அறுக்கும் முறை:
                                குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நுல் முஸ்லிம் (3637)
முஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் ''பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு, அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா 3137) முஅத்தா 921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி:
                                                              மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்:
                                        குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர்: அலீ, நூல்: புகாரி. 1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது:
                                                        ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பபவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: நஸயீ 4285)


நாமே அறுக்க வேண்டும்:
                                                  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது:
                                                                                               பராஃ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார் ரளியல்லாஹு அன்ஹு, 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள் (புகாரி 955)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;. ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழு(வித்)தார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதுவிட்டு அங்கேயே இரவு தங்கினார்கள். காலை விடிந்ததும் தம் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'லா இலாஹ இல்லல்லாஹ்'வும் 'ஸுப்ஹானல்லாஹ்'வும் கூறிக் கொண்டே சென்றார்கள். பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து அறுத்து பலியிட்டார்கள். (பெருநாளில்) பெரிய கொம்புகளையுடைய கருப்புநிறம் கலந்த வெள்ளைநிற ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத்தார்கள்'' இது பற்றி குரான் வசணங்கள் இல்லை எனவும் கூறுகிறார்.

அரஃபா தினத்தன்று நோன்பு ;
                                                       இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்'' (புகாரி 2004)

தொகுப்பு: மௌலவி எம்.எஸ் அப்பாஸ் M.Sc.
                முஹம்மது உபைஸ் ,
                மு.அஜ்மல் கான்.

Tuesday, 23 October 2012

நைட்டியை கழற்றவே மாட்டாங்களா உங்கள் இல்லத்தரசிகள் ? ஒரு சமூக பார்வை...

நைட்டி என்று அழைக்கப்படும் அந்த இரவு உடை சில வருடங்களுக்கு முன்பு நம் ஊரில் அறிமுகமானபோது‘ச்சீ! இதென்ன வெள்ளைக்கார தொரச்சிக போடுற கவுன் மாதிரி இருக்கு... மேலருந்து கீழவரைக்கும் ஒரேடியா... நல்லாவா இருக்கு’ என்றுதான் நம் பெண்கள் கமெண்ட் அடித்தார்கள். 

ஆனால் அந்த நாகரிகம் மெல்ல மெல்ல வேர் பிடிக்க தனிக்குடித்தனமாக இருந்த பெண்கள் இரவில் குழந்தைகள் தூங்கிய பிறக அதை கொஞ்சம் வெட்கத்துடன் அணிந்து கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களும்கூட காலையில் சுரியன் உதிக்கும்முன் எழுந்து புடவைக்கு மாறிவிடுவார்கள். கூட்டுக் குடித்தனவாசிகள்... மூச்! நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 

பெண்களுக்கு இரவு உடையாக  இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால்,  இன்று அது படும்பாடு சொல்லிமாளாது.  என்னமோ... நைட்டிதான் நமது பெண்களின் தேசிய உடை என்று,  நமது பெண்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ...?  அந்த அளவிற்கு இந்த நைட்டி அவர்கள் உடலிலிருந்து இறங்குவதே இல்லை.

வீ ட்ல இருந்தாலும் நைட்டிதான், தெருவில் நடந்தாலும் நைட்டிதான், கடைக்கு போனாலும் நைட்டிதான், பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போனலும் நைட்டிதான் என்று நைட்டியை தமது ஒரு அங்கமாகவே பெண்கள் நினைத்துவிட்டார்கள். 

வீட்ல ஆம்பிளைங்க  என்னதான் காட்டு கத்தலா கத்தினாலும், அது 'செவிடன் கதில ஊதுன சங்குதான்'. வீட்டில் இருக்கும்போது நைட்டியை விட்டு பெண்கள் வேறு உடைக்கு  மாறுவதில்லை. 


உடலை பெறுக்க வைக்கும் நைட்டி!

தொடர்ந்து நைட்டியை அணிவதால், அது பெண்களின் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில்லை. இடுப்பு, பின்பக்கம், அடிவயிறு  போன்ற இடங்களில் எந்தவித இறுக்கமும் இல்லாததால் சதை அதன் போக்கில் பெறுக்கத் தொடங்கிவிடுகிறது.  இதனால் சிறிய வயதினிலேயே பெண்கள் அதிக வயதானவர்கள் போல் தெரியத்தொடங்கிவிட்டனர். 

மார்பு  தொங்கிவிடாமல் இருக்குக்கவும்,  பார்க்க (?) எடுப்பாக இருக்கவும், பழங்காலங்களில் பெண்கள் துணியை (கச்சை) வைத்து தங்கள் மார்பை இருக்கமாக கட்டிக் கொள்வார்கள்.  

"கச்சை அணிந்த கொங்கை மாந்தர் 
கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே"  என்றார் பாரதி. 
உடலில் தேவையான இடங்களில் எப்போதும்  இறுக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனதன் அளவில்'அது' இருக்கும்.  இல்லையென்றால் பெறுக்கவும் வழியுண்டு, சிறுக்கவும் வழியுண்டு.


நைட்டி இரவு உடைதானே...? 

நைட்டி இரவு உடைதான் என்பதை  மறந்து பல நாள் ஆயிற்று. பகல் முழுவதும் உழைத்து களைத்துப் போகும் பெண்கள் இரவிலாவது தங்களைச் சுற்றி பின்னிப் பிணைத்திருக்கும் ஆடைகளுக்கு விடை கொடுத்து,   கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவேண்டும்,  என்ற என்னத்தில்தான் இந்த நைட்டி வந்திருக்கும் என்பது எனது என்னம்.

"ஆமா,   வீட்டுக்கார ஐயா, நடுக்கூடத்தில் மேலாடை அணியாமல் உக்காந்து டிவி பாப்பாரு. ஆனா,  அந்த வீட்டுக்கார அம்மா மாட்டும் சமையல் கூடத்தில்,  எட்டு முழம் சேலையை சுத்திக்கொண்டு  புழுங்கிச் சாகவேண்டுமா?  நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு"
ஆனால், எது சொளகரியமாக இருந்ததோ.... அதுவே  இன்று நமது கலாச்சாரத்தை பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  பேருந்து செல்லாத சிறு சிறு மலை  கிராமங்களில் கூட,  நமது பெண்கள் நைட்டி அணிகிறார்கள்.  குச்சி ஊன்றி நடக்கும் ஆயாக்கள் கூட நைட்டி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன்..
நைட்டியை பகலில் கூட கழற்ற மறுக்கிறார்கள். 

ஐரோப்பியர்கள்தான்  சூழ் நிலைக்கேற்ப ஆடை அணியும் பழக்கத்தை கொண்டுவந்தனர்.  பகலில் ஒரு ஆடை, இரவினில் ஒன்று, வாரயிறுதிக்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று  என்று ஒரு நாளில் இரண்டு மூன்று செட் ஆடைகளை அணிகின்றனர்.  பல வழிகளில் அவர்களை காப்பி அடிக்கும் நாம்,  இனியாவாது அந்தந்த ஆடைகளை  அந்தந்த  சீதோஷன நிலைகளில் அணியவேண்டும். 


என் கருத்து :வீட்டுக்குள்ள இருக்கறவரைதான் நமக்குப் பிடிச்ச உடை. வாசல் தாண்டிட்டா உடைங்கிறது பல பேர் சம்பந்தப்பட்டதாகிடுது. ‘எனக்குப் பிடிச்சிருக்கு. என் வசதி’னு சொல்லி ஆண்களோட கண்களை உறுத்துற மாதிரி உடுத் துறவங்க ஒட்டுமொத்தமா பெண்களையே கேவலப்படுத்தற மாதிரி இருக்கில்ல ...

அதனால், இனியாவது இல்லத்தரசிகள் தங்கள் இரவு உடையான 'நைட்டியை' இரவில் மட்டுமே,  அணிய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 

ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.



உலக ஐக்கிய நாடுகள் தினம் -ஒரு சிறப்பு பார்வை ....

File:The United Nations Building.jpg
 நாளை ‘ உலக ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. U.N.O. (United Nations Organisation) என்பதன் தமிழாக்கம் ஐக்கிய நாடுகள் சபை என்பதாகும். ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்பார்கள். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் ஏறக்குறைய உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.


ஐ.நா. அமைப்புக்கு முன்னமே இது போன்றபல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் (League of Nations) ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தைப் பேணுதல் என்றபிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றநோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு.
ஐ.நா.வின் பணிகளை நெறிப்படுத்தும் விதிகளையும் கோட்பாடுகளையும் கொண்ட ஆவணமே ஐக்கிய நாடுகள் சாசனம் (UN Charter) என்றழைக்கப்படுகிறது. உறுப்பு நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் பொது லட்சியங்களை எட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் அதில் அடங்கி உள்ளன. ஒரு நாடு ஐ.நா.வில் உறுப்பினராக சேரும்போது இச்சாசனத்தின் விதிகளை ஏற்று கையொப்பமிட வேண்டும்.
1945ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி ஐ.நா.சாசனம் உருவாக்கப்பட்டு 51 நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு.
க்ஷி உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது,
க்ஷி நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது,
க்ஷி ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்
க்ஷி இந்தக் குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.
‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரை முன்மொழிந்தவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் ஆவார். ஐ.நா. சாசனம் கையெழுத்திடப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக ரூஸ்வெல்ட் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் முன்மொழிந்த ‘ஐக்கிய நாடுகள்’ என்றபெயரையே ஏற்றுக்கொள்ள சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபெற்றஅனைத்து நாடுகளும் சம்மதித்தன.
இதன் தலைமையகம் அமெரிக்கா நாட்டில் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகத்தில் 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்றபொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. இந்தத் தலைமையக கட்டிடத் தொகுதி 1949, 1950ம் ஆண்டுகளில் ஜோன் டி, ராக்பெல்லர் ஜுனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது.
ஐ.நா.சபையின் சின்னத்தில் வெளிர்நீல நிற பின்னணியில் வெள்ளைநிறத்தில் ஐக்கிய நாடுகள் இடம் பெற்றிருக்கும். போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெள்ளையும் நீலமும் ஐ.நா. அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக உள்ளன. ஐ.நா.வின் அலுவலக மொழிகளாக அரபிக், சைனிஸ், ஆங்கிலம், பிரென்ச், ருஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் உள்ளன. தலைமையகத்தில் செயல் மொழிகளாக ஆங்கிலமும், பிரென்ச் மொழியும் உள்ளன. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது. இதன் தற்போதைய பொதுச் செயலர் பான் கி மூன்.
ஐ.நா.சபை சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம் (UNICEF)அகதிகளை பராமரிக்கும் UNHCR நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான UNPF நிறுவனம், மசடஊ எனப்படும் மக்கள் தொகை நிதியம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஐ.நா. அமைப்பின் முக்கியமான ஏஜென்சி நிறுவனங்களாக IMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம், World Bank எனப்படும் உலக வங்கி, ILO எனப்படும சர்வதேச தொழிலாளர் கழகம், WHO எனப்படும உலக சுகாதார நிறுவனம், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான ‘யுனெஸ்கோ’ நிறுவனம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்றசர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் எதுவென்றால் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்’ ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதி மன்றம் நீங்கலாக ஏனைய ஐந்து அமைப்புகளும் நியுயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகின்றன.


(1) ஐ.நா. பொதுச்சபை (General Assembly)
(2) ஐ.நா. பாதுகாப்பு மன்றம் (Security Council)
(3) ஐ.நா. பொருளாதார சமூக மன்றம் (Economic and Social Council)
(4) ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம் (Trusteeship Council)
(5) ஐ.நா. செயலகம் (Secretariat)
(6) சர்வதேச நீதி மன்றம் (International Court of Justice)


1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.





File:UN security council 2005.jpg
2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பினைப் பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்றஅதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.

UN Economic and Social Council
3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.



UN Trusteeship Council
4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.

5. ஐ.நா. செயலகம் : இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்றபணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.


International Court of Justice
6. சர்வதேச நீதிமன்றம் : என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.


இந்த நீதிமன்றத்தில் நாடுகள் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய முடியும். தனிப்பட்டவர்கள் வழக்காட முடியாது. ஒரு நாடு இந்த நீதிமன்றத்தை அணுகும்போது இந்த நீதி மன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்குப் பணிந்து நடப்பதாகவும் அந்த நாடு உறுதியளிக்க வேண்டும். 15 நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் இடம் பெறுவார்கள். ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் ஒரே சமயத்தில் இடம்பெறமாட்டார்கள். நீதிபதிகளின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.


ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அதற்கு வேறு வருமானம் கிடையாது. அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன.


ஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடுகளின் ஐக்கியத்தையே முதன்மையாகக் கொண்டது. உறுப்பு நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் செய்ய இயலாது. குறிப்பாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் எதிர்த்தாலும் அந்த விஷயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்பட மாட்டாது.


உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்றவல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவிமக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்றகுற்றச்சாட்டு இருந்து வருகிறது.


எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு. இலங்கையில் முள்கம்பி வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழ் மக்களைப் பாதுகாத்து நல்லதோர் தீர்வை வழங்க வேண்டுமென ஐ.நா. தினத்தில் தமிழ் மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

"தமிழகசூரிய சக்தி கொள்கை"-ஒரு சிறப்பு பார்வை ...


 முன்னுரை :மின்சார உற்பத்தியை பெருக்க, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட, தமிழகசூரிய சக்தி கொள்கையை, மின் துறை முதலீட்டாளர்கள் வரவேற்று உள்ளனர். அதே நேரத்தில், அமலாக்க தேதிகள் உட்பட, பல கொள்கை முடிவுகள் தெளிவில்லாமல் உள்ளன. இவற்றை தெளிவுபடுத்த, தமிழக மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து, முதலீட்டாளர் களுக்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

கொள்கையின் நல்ல அம்சங்கள்...

* இந்தியாவிலேயே முதல் முறையாக நிகர கணக்கீடு (நெட் மீட்டரிங்) முறை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம், வீடுகளில் நிறுவப்படும் ‹ரிய சக்தி மின் தகடுகளில் இருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தில், சொந்த தேவை போக, மீதம் உள்ளதை மின் வாரியத்திற்கு விற்றுவிடலாம். 

* வீடுகளில் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

* உயரழுத்த மின்சாரத்தை பெறும் நுகர்வோர் மற்றும் சில வகையான வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது

இது, இரு கட்டங்களாக செயல்படுத்தப் படும். ட

* வரும், 2020க்குள், மாநில மின்வாரியங்கள் வாங்கும் மின்சாரத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம், குறைந்தபட்சம், 3 சதவீதம் இருக்க வேண்டும் என, தேசிய மின் கட்டண கொள்கை கூறுகிறது

தமிழகத்தில், சில மாதங்களில், 40 சதவீதம் மின்சாரம், காற்றாலைகளில் இருந்து தான் உற்பத்தியாகிறது. இதனால், தேசிய கொள்கை கட்டுப்பாடுகளை எளிதில் கடந்துவிடலாம். இதன் மூலம், தமிழகத்தில் சூரிய சக்தி மின்சாரம் பின்தங்கிவிடும் என, கருதி, 6 சதவீதம் கட்டுப்பாடு, சாதுர்யமாக சேர்க்கப் பட்டு உள்ளது.

* இந்த கட்டுப்பாடு,சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பவர்களுக்கு, ஆயத்த நிலை சந்தையை உருவாக்கி, பெரும் ஊக்கத்தை தரும்.
* தமிழகத்தில், 24 மாவட்டங்களில், தலா, 50 மெகாவாட் திறன் உள்ளசூரிய சக்தி மின்சார பூங்காக்கள் அமைக்கப் படும். இது தவிர, பெரிய அளவிலான மின் பூங்காக்களும் அமைக்கப் படும். இதன் மூலம், சூரிய மின் திட்டங்கள் அமைப்பதற்கான மூலதன செலவும், பராமரிப்பு செலவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

* தொகுப்புடன் இணைந்த உற்பத்தியாளர்கள், 240 வோல்ட் அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்ப வசதி செய்யப் பட்டு உள்ளது; இது, வீடுகளில் நிறுவப்படும் திட்டங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

* அதே போல், 100 கிலோவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்பவர்களும், 11 கே.வி., அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்பலாம். பெரும்பாலான கிராமப்புறங்களில், 11 கே.வி., வசதி தான் உள்ளது. இந்த கொள்கை முடிவு, திட்டங்களை பரவலாக செயல்படுத்த வழிவகை செய்கிறது.

* இதுவே, குஜராத்தில், 66 கே.வி., ஆந்திராவில், 33 கே.வி., என, நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. அவற்றை ஒப்பிடுகையில், தமிழகத்தின் கொள்கை முற்போக்காகவே உள்ளது.

கொள்கையின் குழப்பமான அம்சங்கள்....
* கொள்கை எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது, குறிப்பிடப் படவில்லை.* அதே போல், கொள்கையின் ஆளுமை எந்த ஆண்டு வரை இருக்கும் என்பதும் குறிப்பிடப் படவில்லை. இதனால், அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது, கொள்கையில் நிலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டால், முதலீடு செய்ய முன்வர தயங்குவர். குஜராத், ஆந்திரா மாநிலங்களின் ‹ரிய சக்தி கொள்கையில் இது தெளிவாக குறிப்பிடப் பட்டு உள்ளது.*சூரிய மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், என்ன விலையில் மின்சாரத்தை வாங்கும் என்பது குறிப்பிடப் படவில்லை. இது கொள்கையில் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணயம் முடிவு செய்யும் ஒன்றாக இருந்தால், முதலீட்டாளர்கள் தயங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

* நிகர கணக்கீட்டு முறை, வீடுகள் மற்றும் அலுவலக கட்டடங்களில்சூரிய மின் உற்பத்தி வசதி களை நிறுவுபவர்களுக்கு தான் பெரும்பாலும் பயன்படும் என்பதால், அது குறித்த மொத்த விதிக ளும் வெளிப்படையாக அறிவிக்கப் பட வேண்டும். தற்போது, இது எப்படி செயல்படும் என்பது தெளிவாக இல்லை.

* உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையில், உற்பத்தியாகும் அனைத்து, "யூனிட்'டுகளுக்கும் ஊக்க தொகை உண்டா அல்லது தேவைக்கு மிகுதியான,"யூனிட்'டுகளுக்கு மட்டும் தான் ஊக்கத் தொகை யா என்பது தெளிவாக இல்லை

* இத்தகைய உற்பத்தியாளர்களுக்கு, மூலதன மானியம் கிடைக்குமா என்பதும் குறிப்பிடப் படவில்லை. "யூனிட்'வாரியான ஊக்கத்தொகை இருந்தாலும், இத்தகைய வசதியை நிறுவுவதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால், மூலதன ஊக்கத்தொகை இருந்தால் தான், தனிநபர்கள் இதை செயல்படுத்த முன்வருவர்.

* கட்டாய சூரிய சக்தி மின்சார பயன்பாடு, எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது குறிப் பிடப் படவில்லை.

தெளிவுபடுத்த கூட்டம் தேவை:


சூரிய சக்திக்கான புதிய கொள்கை, ஒரு முன்னோடியான கொள்கை என்பதில் சந்தேகம் இல்லை. இதில், மூன்று ஆண்டுகளில், உற்பத்தியை 3,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
ஒரு மெகாவாட், சுமார் பத்து கோடி என்ற முறையில், 3,000 ஆயிரம் மெகாவாட்டிற்கு, சுமார், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். சூரிய சக்தி உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தொடங்குவதற்கு மற்றும் வீடுகளில் சூரிய சக்தி மேற்கூரை அமைப்புக்கு, சுமார், 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

* தமிழக அரசு அமைத்திருக்கும், அதிகாரமளிக்கப் பட்ட குழுவில், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிபுணர்கள் இடம்பெறவில்லை. இந்த தொழிலில் அனுபவம் உள்ள, தொழில் முனைவோர்களும் பங்கு பெற வேண்டும். அப்போதுதான், இந்த கொள்கையை செயல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை முறைப்படுத்தி, வெற்றி காண முடியும்.

* சில வகையாவ நுகர்வோருக்கு, ஆறு சதவீதம், சூரிய சக்தி மின்சாரம் வாங்குவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கான விலை நிர்ணயம் எதையும் தெளிவாக குறி பிடப் படவில்லை.

* விடுகளில் உற்பத்தியாகும், சூரிய சக்தி மின்சாரத்தை மின் தொகுப்புக்கு வழங்கும்போது, 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து, கிடைக்க வேண்டிய மொத்த தொகை எவ்வளவு என்பதை தெளிவுப் படுத்தவில்லை.

* முந்தைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, "டெடா' மூலம் கட்டணம் வசூலிக்கப் பட்டது. அதே போல், தற்போது, கட்டணம் எவ்வளவு என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.* சோலார் பூங்கா அமைக்கும் போது, அமைப்பவர்களுக்கான முன் அனுபவம், என்ன என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

டி.பி.குமரேசன், செஞ்சுரி கன்சல்டிங் குரூப்பின், துணை தலைவர். இந்த நிறுவனம் புதுப்பிக்கத்க்க எரிசக்தி மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.

ஐந்து சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்'
சூரிய சக்தி மூலம், 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், தமிழக அரசின், புதிய கொள்கை வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முன்னரே செயல்படுத்தி இருந்தால், மின் பற்றாக்குறை நெருக்கடி நிலை ஏற்பட்டு இருக்காது.
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோர், 6 சதவீத சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது, ஒரு நீண்ட கால கொள்கை. இது போன்ற திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
அதே நேரத்தில், குறைந்த அழுத்த மின்சாரத்தைபயன்படுத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சூரிய சக்தியை உற்பத்தி செய்வதில் அதிக முதலீடு செய்வது கடினம்.

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்படும் அதிக செலவை குறைப்பதற்கான எவ்வித திட்டத்தையும், அரசு அறிவிக்கவில்லை. இதை சரி செய்ய, விற்பனை வரியை தளர்த்தி, வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி இருக்கலாம்.சாதாரணமாக, வீடுகளில், 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த, 2.50 லட்சம் ரூபாய் செலவாகும். 

இதில், 75 ஆயிரம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக அளிக்கிறது; இதற்கு விற்பனை வரி தனி.

ஒரு நாளுக்கு, 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பில், 5 யூனிட் வரை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை, புதிய திட்டம் அளிக்கிறது.அதன்படி, 1 யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம், ஒரு நாளுக்கு, 10 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும். தொடர்ச்சியாக, 300 நாட்கள் உற்பத்தி செய்தால், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

மாநில அரசு, இதற்கான மூலதன செலவிற்கு, எவ்வித மானிய தொகையையும் அறிவிக்க வில்லை; அதிக முதலீட்டிற்கு, இந்த ஊக்கத் தொகை மிகவும் சொற்பமே. அதனால், இது எப்படி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும், என்பது சந்தேகமாக உள்ளது. சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான முதலீட்டு தொகை சுமையைக் குறைக்க, வங்கி அல்லது "சிட்கோ' மூலம் கடன் பெறும் வசதியை ஏற்படுத்தி, 5 சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்.

புதிய கொள்கை நீண்ட கால திட்டம். நாள்தோறும் மின் தடையால், அவதிப்படும் பாமர மக்களுக்கு, இத்திட்டம் ஒரு அவசர தீர்வாகாது. தற்போது நிலவும், 14 மணி நேர மின் தடை மற்றும் 3,500 மெகாவாட் பற்றாக்குறைக்கு, இப்புதிய கொள்கை எப்படி அவசர தீர்வாகும் என்பது சந்தேகமாக உள்ளது. ரகுநாதன், சோல்கர் சோலார் தொழில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்.

எனது கருத்து :
அருமையான கருத்தாய்வு. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை பற்றி என்னுடைய சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.இதற்கு முதலில் Case Study செய்ய வேண்டும், பயனாளிகள் தரம் வாரியாக, வீடுகள், வர்த்தக மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்று. குடியிருப்பு பகுதிகளில் சோலர் தகடுகள் பதித்து மின்சாரம் உற்பத்தி செய்ய முதலீடு, கால அவகசாம், உற்பத்தித்திறன், Sustainability - தொடர் உற்பத்திக்கு உத்திரவாதம், என்று அணைத்து அமசங்களையும் ஆராய்ந்து செயல் திட்டம் வகுத்து, உடனடியாக அறிவிக்கவேண்டும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், ஒரு சென்னை/மதுரை  குடியிருப்புவாசி எவ்வாறு சோலர் மின்சாதனத்தை தன வீட்டில் பொருத்தி பயன் பெறமுடியும், வருமானம் ஈட்ட முடியும் என்பதை Visual முறையில் விளக்கவேண்டும்.. தமிழகம் முழுவதுமே அதிகமாக சூரிய ஒழி உள்ள பிரதேசங்கள், மற்றும் காலை எட்டு மணி முதல் மாலை ஆறுமணி வரை உச்சி வெயில் அனேக தமிழகத்தில் உண்டு. உண்மையில், இந்த திட்டத்தை சரியாக செயல் படுத்தினால் தமிழ்கள் மின்சார தன்னிறைவு பெரும்... போட்டோ வால்டாயிக் பானல்கள் சராசரி இருபத்தி ஐந்து வருடம் உழைக்கும் திறன் வாய்ந்தது. இந்த திட்டத்தினால் அதிகமான லாபங்கள் உண்டு.. ஒன்று, உங்கள் முழு மின்சார செலவும் மிச்சம். மீதம் உள்ள மின்சாரத்தை விக்கலாம்.. எல்லா வீடுகளும் மின்சாரம் தயாரித்தாலும், மீதமஅடையும் மின்சாரத்தை வியாபரச்தலங்களுக்கு விக்கலாம். உற்பத்தி அதிகமாகும்..."

முடிவுரை :மூன்று மாதத்தில் மின்தடையை நீக்கி விடுவதாக கூறிவிட்டு,கடைசியில் சூரிய மின் திட்டம் என்று கூறி, நீங்களே செலவழித்து உங்கள் மின்தடையை சரி செய்து கொள்ளுங்கள் என்று மக்கள் தலையில் கட்டிவிட்டு மக்களை ஏமாளிகளாக ஆக்கி உள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்ச் 2014 குள் அமைப்பவர்களுக்கு மட்டும் மானியம் கிடைக்குமாம் ( அதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டுமோ ) ஏனெனில் 2014 மார்ச்சுக்கு பின்பு பாராளு மன்ற தேர்தல் வருவதாலும் ,அதற்குள் மக்களை தூண்டி விட்டு மழை நீர் தொட்டிகள் போல் ஓரளவு அவர்களாக சரி செய்து கொள்ளட்டும் நமக்கு 40 உம் கிடைக்கும் என்பது இவர்களின் திட்டம். சரி இந்த திட்டத்திற்கு குறைந்த பட்ச ( 200w panel ) தொகையாக மானியம் கழித்தது போக ரூ 24,000 ஆகும் என்று சொல்லபடுகின்றதே கீழ் தட்டு மக்களும் ,சாமானிய,நடுத்தர மக்கள் இவ்வளவு தொகை செலவு செய்ய முடியுமா என்பதை இந்த ஆட்சியாளர்கள் எண்ண வேண்டாமா ? மழை நீர் தொட்டிகள் போல் வீணான திட்டம் போன்றே தெரிகின்றது. மேலும்  இது அமல் படுத்தப்படும்போது ஆட்சி முடிந்து விடும்... அப்புறம் அடுத்த ஆட்சியை குறை கூறி காலத்தை ஒட்டி விடலாம்.. ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. இது எப்படி இருக்குன்னா "வரும்.. ஆனா வராது... 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா! - ஒரு சிறப்பு பார்வை...

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது. 

தமிழகத்தில் மைசூருக்கு நிகராக சுமார் பத்து லட்சம் முதல் 15 லட்சம் வரை கூடி வழிபடும் இடம் குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் ஆகும்.தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இத் தலம் கடந்த 25 ஆண்டுகளில் மிக அபரிதமான வளர்ச்சி கொண்டுள்ளது.அறுபடை வீடான திருச்செந்தூரிலிருந்து 13 கிமீ தூரத்தில் திருச்செந்தூர்-கன்னி யாகுமரி நெடுஞ்சாலையில் குலசேகரன்பட்டினம்என்ற கடற்கரை கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.தென் தமிழகத்தில் சிறந்து விளங்கும் சக்தி தலங்களில் இது ஒன்றாகும்.இங்கு அம்மையும் அப்பனுமாக ஸ்ரீஞான மூர்த்தீஸ்வரரும் ஸ்ரீமுத்தாரம்மனும் சேர்ந்து சுயம்பாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.இயற்கை துறைமுகமாகவும் முன்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற வணிகத்திற்கு துணையாக இருந்த நகர் தற்போது ஊராட்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் தொகையுடன் உள்ளது. அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இந்நகர் வழியாக பாண்டிய மன்னர்கள் இறக்குமதி செய்ததாகவும், இலங்கை மன்னனை வென்ற சோழ மன்னன் இந்நகர் வழியாக நாடு திரும்பியதாகவும் புராணம் கூறுகிறது.குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் திருக்காட்சி அளித்ததால் இநநகர் பெருநகராக மாற்றப்பட்டு மன்னன் பெயராலேயே குலசேகரன் பட்டணம் என்று அழைக்கப்படுகிறது.1934ஆம்  வருடத்திற்கு முன் இப்போது வழிபடும் மூல விக்ரகங்கள் இல்லை. சுயம்புவாக தோன்றி சுவாமி மற்றும் அமமன் விரகங்களே இருந்தன. சுவாமி அம்மன் பெரிய திருவடி அமைத்து வழிபட பக்தர்கள் எண்ணிய போது கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடியில் சென்றால் உங்கள் எண்ணம் ஈடேறும் என்று வழிகாட்டியுள்ளார்.இதே போன்று மைலாடியிலுள்ள சுப்பையா ஆசாரி கனவிலும் தோன்றி ஒரே கல்லில் ஒரே பீடத்தில் சுவாமி அம்மனை அருகருகே அமைந்துள்ள ஆண்பாறை மற்றும் பெண் பாறையில் வடித்திடு என்றும், அதற்கான பாறை தெற்கு நோக்கி சென்றால் கிடைக்கும் என்றும் அவ்வாறு வடித்ததை குலசை மக்களிடம் வழங்கிடு என்றும் அம்மன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அம்மனே தேர்ந்தெடுத்த திருமேனிதான் இன்றும் பக்தர்கள் கோவிலில் வழிபடுகின்றனர்.இதே போன்று 17.10.1927ல் கோவிலில் அமைத்து இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கும் கோவில் மணியையும் அம்மனே ஏற்பாடு செய்ததுதான் என்கின்றனர்.குலசேகரன்பட்டினம் மலையன் தெருவில் மளிகை கடை நடத்தி வந்த சுப்பையா பிள்ளை கனவில் தோன்றிய அம்மன் அவரது கடைக்கு மறுநாள் வரும் உளுந்து மூட்டையில் இருக்கும் பணத்தைக் கொண்டு கோவிலுக்கு ஆலயமணி செய்து வைக்க பணித்தார்.அவ்வாறே மறுநாள் நடந்ததால் அம்மன் பணித்தபடி அவர் 35 படி கொள்ளவு கொண்ட 56 கிலோ எடையுள்ள மணியை வாங்கி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது.பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்களே. பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களிலிருந்து அம்மன் உதித்ததால் முத்தாரம்மன் என அம்மன் அழைக்கப்படுகிறார்.இஙகு நவராத்திரி திருவிழாதான தசராத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.புரட்டாசி மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் பிரமை திதியில் கொடியேற்றி 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது.அம்மன் தினசரி பல்வேறு கோலத்தில் காட்சி தருவார்.பத்தாம் திருவிழா அதாவது தசரா தினத்தன்று அம்மன் மகிசாசுர வர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறான்.முனிவராக துவங்கிய வரமுனி தனது பிற்காலத்தில் அசுரனாகி வாழ்வை நடத்தியதால் அந்த மகிஷாசூரனினை அழிக்க முனிவர்கள் வேண்ட பராசகதி அழிக்கின்றார்.அந்த நாள்தான் தசரா திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது.முன்பு குலசேகரன்பட்டினம் ஊருக்குள் நெருக்கமான சந்தில் நடைபெற்ற மகிஷாசூர சம்ஹாரம் தற்போது கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு நடைபெறுகிறது.இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் பத்து நாட்கள் முதல் 40 நாட்கள் வரை விரதம் இருந்து வேடமிட்டு காணிக்கை பெற்று திருக்கோவிலில் சேர்க்கின்றனர்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 10 முதல் 15 லட்ச பக்தர்கள் தசரா திருவிழாவின்போது குவிகின்றனர்.முன்பு மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தசரா குழுக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும். இப்போது ஆயிரக்கணக்கான குழுக்கள் வேடம் தரித்து வந்து கலந்து கொள்கின்றன.

 தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வதும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தசரா குழுக்கள் அமைத்து கரகம், காவடி, குறவன்- குறத்தி, நையாண்டி மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஊர் ஊராக சென்று நடத்துவதும் இதன் தனிச் சிறப்பாகும். 

வேடம் அணியும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 9 நாள், 7 நாள் என விரதம் இருப்பார்கள். விரதம் தொடங்கும் முன் குலசேகரன்பட்டினம் கடலில் நீராடி விட்டு கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். தற்போது தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர். 

விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலில் கொடியேறியதும், கோவிலுக்கு வந்து தங்களது வலதுகையில் காப்பு கட்டுவார்கள். அதன்பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 

விஜயதசமி அன்று அனைவரும் குலசை கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தொகுப்பு : மு,அஜ்மல் கான் .

Monday, 22 October 2012

Special Report of Apple Cider Vinegar and Benefits....

Over the centuries, vinegar has been used for countless purposes: making pickles, killing weeds, cleaning coffee makers, polishing armor, and dressing salads. It's also an ancient folk remedy, touted to relieve just about any ailment you can think of.

In recent years, apple cider vinegar has been singled out as an especially helpful health tonic. So it's now sold in both the condiment and the health supplement aisles of your grocery store. While many of the folk medicine uses of vinegar are unproven (or were disproved), a few do have a medical research backing them up. Some small studies have hinted that apple cider vinegar could help with several conditions, such as diabetes and obesity.

So does consuming apple cider vinegar make sense for your health? Or is vinegar best used for cleaning stains and dyeing Easter eggs? Here's a rundown of the facts.

What Is Apple Cider Vinegar?

Vinegar is a product of fermentation. This is a process in which sugars in a food are broken down by bacteria and yeast. In the first stage of fermentation, the sugars are turned into alcohol. Then, if the alcohol ferments further, you get vinegar. The word comes from the French, meaning "sour wine." While vinegar can be made from all sorts of things -- like many fruits, vegetables, and grains -- apple cider vinegar comes from pulverized apples.

The main ingredient of apple cider vinegar, or any vinegar, is acetic acid. However, vinegars also have other acids, vitamins, mineral salts, and amino acids.

Apple Cider Vinegar: Cure for Everything?


While long used as a folk remedy, apple cider vinegar became well known in the U.S. in the late 1950s, when it was promoted in the best-selling book Folk Medicine: A Vermont Doctor's Guide to Good Health by D. C. Jarvis. During the alternative medicine boom of recent years, apple cider vinegar pills have become a popular dietary supplement.

Look on the back of a box of supplements -- or on the Internet or in the pages of any one of the many books on vinegar and health -- and you'll find some amazing claims.  Apple cider vinegar is purported to treat numerous diseases, health conditions, and annoyances. To name a few, it's supposed to kill head lice, reverse aging, ease digestion, and wash "toxins" from the body.

Most of these claims have no evidence backing them up. Some -- like vinegar's supposed ability to treat lice or warts -- have actually been studied, and researchers turned up nothing to support their use. Other claims have been backed up by studies, but with a catch: vinegar may work, but not as well as other treatments. For instance, while vinegar is a disinfectant, it doesn't kill as many germs as common cleaners. And while vinegar does seem to help with jelly fish stings -- an old folk remedy -- hot water works better.

Scientific Evidence of Apple Cider Vinegar Benefits...

But there are some medical uses of vinegar that do have promise, at least according to a few studies. Here's a rundown of some more recent ones.

Diabetes. The effect of vinegar on blood sugar levels is perhaps the best-researched and the most promising of apple cider vinegar's possible health benefits. Several studies have found that vinegar may help lower glucose levels. For instance, one 2007 study of 11 people with type 2 diabetes found that taking two tablespoons of apple cider vinegar before bed lowered glucose levels in the morning by 4%-6%.

High cholesterol . A 2006 study showed evidence that vinegar could lower cholesterol. However, the study was done in rats, so it's too early to know how it might work in people.

Blood pressure and heart health. Another study in rats found that vinegar could lower high blood pressure. A large observational study also found that people who ate oil and vinegar dressing on salads five to six times a week had lower rates of heart disease than people who didn't. However, it's far from clear that the vinegar was the reason.

Cancer. A few laboratory studies have found that vinegar may be able to kill cancer cells or slow their growth.  Observational studies of people have been confusing. One found that eating vinegar was associated with a decreased risk of esophageal cancer. Another associated it with an increased risk of bladder cancer.

Weight Loss. For thousands of years, vinegar has been used for weight loss. White vinegar (and perhaps other types) might help people feel full. A 2005 study of 12 people found that those who ate a piece of bread along with small amounts of white vinegar felt fuller and more satisfied than those who just ate the bread.



 Digestion and food poisoning. Vinegar contains malic acid, which can help common digestive issues like constipation or acid-reflux. And because it’s a trifecta of antifungal, antibacterial, and antiviral properties, a tablespoon or two in a 8 oz. Glass of water may even help with a case of food poisoning.
 Sleep issues. Many people swear by a tablespoon of apple cider vinegar in a cup of hot water with honey before bed, citing its sleep-inducing powers and that it promotes a more restful night’s sleep.
Bones and teeth. Apple cider vinegar has the capacity to extract calcium from fruits, vegetables, and meat in your diet, thereby helping strengthen your bones and teeth.
Joint pain. Its antioxidant and anti-inflammatory properties may help provide pain-relief to neck, back, and shoulder joint pain (including arthritis).
 Detox. High levels of potassium in the vinegar work like a clarifying tonic on the body, helping clear up sinus infections, Candida, sore throats, and allergies. 

While the results of these studies are promising, they are all preliminary. Many were done on animals or on cells in a lab. The human studies have been small. Before we will truly know whether vinegar has any health benefits, much larger studies are needed.

How Should Apple Cider Vinegar Be Used?


Since apple cider vinegar is an unproven treatment, there are no official recommendations on how to use it. Some people take two teaspoons a day (mixed in a cup of water or juice.) A tablet of 285 milligrams is another common dosage.

Apple cider vinegar is also sometimes applied to the skin or used in enemas. The safety of these treatments is unknown.

What Are the Risks of Apple Cider Vinegar?

On the whole, the risks of taking occasional, small amounts of apple cider vinegar seem low. But using apple cider vinegar over the long term, or in larger amounts, could have risks. Here are some things to keep in mind.

Apple cider vinegar is highly acidic. The main ingredient of apple cider vinegar is acetic acid. As the name suggests, it's quite harsh. Apple cider vinegar should always be diluted with water or juice before swallowed. Pure apple cider vinegar could damage the tooth enamel and the tissues in your throat and mouth. One study found a woman who got an apple cider vinegar supplement stuck in her throat. She seemed to have suffered lasting damage to her esophagus. Vinegar has been known to cause contact burns to the skin.
Long-term use of apple cider vinegar could cause low potassium levels and lower bone density. If you already have low potassium or osteoporosis, talk to your doctor before using apple cider vinegar.
Apple cider vinegar could theoretically interact with diuretics, laxatives, and medicines for diabetes and heart disease.

If you have diabetes, check with your doctor before using apple cider vinegar. Vinegar contains chromium, which can alter your insulin levels.


What Are the Risks of Apple Cider Vinegar?

Using apple cider vinegar supplements -- instead of the liquid itself -- adds another layer of risk. You just can't be sure what you're really getting. Unlike medicines, supplements are not regulated by the FDA. They aren't routinely tested for effectiveness or even basic safety. A 2005 study looked at the ingredients of eight different brands of apple cider vinegar supplements. The researchers found that:

The ingredients listed on the box did not reflect the actual ingredients.
The ingredients varied a great deal between different brands.
The recommended dosages varied a great deal between brands.
Most disturbing, the chemical analysis of these samples led the researchers to doubt whether any of these brands actually contained any apple cider vinegar at all.

Should I Use Apple Cider Vinegar?

The answer depends on how you want to use apple cider vinegar. As a salad dressing, you should be fine. But taken as a daily medical treatment, it could be a little more risky. Yes, some studies of apple cider vinegar are intriguing. But a lot more research needs to be done. Right now, there is not enough evidence that apple cider vinegar -- or any vinegar -- has any health benefit for any condition. Since the benefits are unknown, so are the risks.

If you're thinking about trying apple cider vinegar, talk to your doctor first. It's always worth getting an expert's advice. Your doctor can also make sure that the apple cider vinegar won't affect other health conditions or the effectiveness of the medicines you take. Trying to control a serious medical condition on your own with an unproven treatment is both unwise and dangerous.

More Details..
http://www.apple-cider-vinegar-benefits.com/

Collection by M.Ajmal Khan.