Monday, 16 February 2015

World Top Ten Bowlers Ever in Cricket..

Popular “Best Test Batsmen” in the country, let us have a look at the best bowlers that have graced the sport. These magicians are truly among the best, and more than one of them is capable of winning an entire match on their own. On a good day, almost all these bowlers eat up the batting line one by one, and set up easy victories. In Reverse Order.

10 Wasim Akram — Pakistan

Wasim Akram is known for taking over 400 test wickets and a record number of 502 test wickets in ODIs. His average is 23.62 from 104 games. He has bowled two hat tricks in Test Cricket, and is one of only three bowlers having done so, and has recorded the same in ODI’s as well, again one of only three bowlers. 09 more after the break...

09 Courtney Walsh — West Indies

Over five thousand test match overs in hand, with more than 500 wickets in test matches, Walsh was a much feared right handed pace bowler. Curtly Ambrose and Courtney Walsh was not only respected as a partnership, but also feared.

08 Glenn McGrath — Australia



McGrath was one of the key players of Australia and the reason for the team to reach great heights since the middle of the nineties. His world cup wickets are the highest among all players. He has an average of 21.64 and this from 124 tests.

07 Curtly Ambrose — West Indies

Standing at six feet seven inches, Courtney Ambrose was a giant in both senses of the word, with more than a thousand maidens in just 98 tests. He had over 405 wickets and an average of 20.99.

06 Dennis Lillee — Australia

 Lillee was not a bowler to mess with any time of the year. Almost all batsmen in his time knew and respected Lillee as a fearsome fast bowler. He retired in 1984 with 355 test wickets and an average of 23.92.

05 Sir Richard Hadlee — New Zealand

Sir Richard Hadlee idolized Dennis Lillee, and eclipsed his own idol with 431 wickets in test cricket, and an average of 22.29. He was the first bowler crossing the 400 wicket mark in test cricket.

04 Malcolm Marshall — West Indies

Malcolm Marshall was an aggressive pace bowler, and was feared for his bouncer. His average was 20.94 and had 376 wickets in test matches.

03 Shane Warne — Australia

Shane Warne is certainly the best leg spin bowler in cricket. Shane Warne had more than 700 test match wickets and was voted as among the five Wisden Cricketers of the Century.

02 Sydney Barnes — England

Sydney Barnes has not taken too many wickets, but his test average is simply the best. A phenomenal 16.43 average, with 27 test matches and 189 wickets.

01 Muttiah Muralitharan — Sri Lanka

Murali is arguably the best off spinner of all time and has taken 735 wickets, the highest of any list. His highest average is 23. The infamous doosra is just one among his arsenal of fearsome weapons.

Prepared by M.Ajmal Khan.

Sunday, 15 February 2015

பாரத பிரதமர் அவர்களுக்கு இந்த கடிதம் போய் சேரும் என்ற நம்பிக்கையில்...

முகபுத்தகம்  வழியாக..
அன்புள்ள பாரத பிரதமர் அவர்களுக்கு,
வணக்கம்! ஒரு காங்கிரஸ் ஆதரவாளராக இல்லாமல், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
Image result for modiநலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்.ஆனால் உங்களுக்கு வாக்களிக்காத நானும் உங்களுக்கு வாக்களித்தவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறேன்.சரியாக ஒரு வருடத்திற்கு முன்னால் நீங்கள் உங்கள் ஆருயிர் நண்பன் அதானியின் விமானத்தில் ஊர் ஊராக பறந்து " காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து, உங்கள் பொன் விளையும் பூமியான குஜராத்தின் போட்டோஷாப் வளர்ச்சியை தம்பட்டம் அடித்து, காசா பணமா என்று வள்ளல் போல் வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியையும் பிடித்துவிட்டிர்கள்.
அதில் முக்கியமானவை " ஆளுக்கு பதினைந்து லட்சம் " அதையும் பிரதமர் என்ற முறையில் முதல் நபராக பெற்றுக் கொண்டு, உங்களிடம் ஏது பனம் நீங்கள் தான் டீ வீற்ற ஏழையாச்சே! எனவே அதில் பத்து லட்சத்துக்கு ஒரு கோட் -சூட் வாங்கி மீதம் உள்ள ஐந்து லட்சத்தை உங்கள் ஆட்சியின் ஒரே திட்டமான " பிரதான் மந்திரி ஐன் தன் " திட்டம் முலம் சேமித்து வைத்திருப்பீர்கள். விரைவில் நாட்டு மக்களுக்கு அந்த பதினைந்து லட்சம் போய் சேரும் என்ற நம்பிக்கையில் இந்த கடிதத்தை மேலும் தொடர்கிறேன்.
சில சமயங்களின் நானும் உங்களை விமர்சித்து வலைதளத்தில் எழுதியிருக்கிறேன் ( உங்கள் பக்தர்கள் மன்மோகன் சிங்கை பற்றி எழுதியது போல் அல்ல, நாகரிகமாக தான் எழுதியிருக்கிறேன், எழுதுவேன்) அதை தவிர்த்து உங்கள் பக்தர்கள் போல் நீங்கள் செல்லும் இடமெல்லாம் " மோடி மோடி " என்று கோஷம் போட எனக்கும் ஆசை தான்! ஒருவேளை நீங்கள்
*குறைந்தபட்சம் கருப்பு பனம் வைத்திருக்கும் நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தால்.
*நீங்கள் பிரதமர் பதவி ஏற்பதற்கு சில நொடிகளின் முன் மண்டியிட்ட காந்தி யை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சியை கண்டித்திருந்தால்.
*நாட்டை துண்டாட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் - வி.எச்.பி - பஜ்ரங் தல் - இந்து மகாசபா போன்ற இயக்கங்களை சேர்ந்தவர்களின் விஷமத்தனமான கருத்துகளை மறுத்து அறிக்கை விட்டிருந்தால்.
*நிரன்ஜன் ஜோதியை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தால்.
*பாலியல் குற்றவாளியை அமைச்சரவையில் சேர்க்காமல் இருந்திருந்தால்.
*சாக்ஷி மஹராஜாவை ஒதுக்கியிருந்தால்.
*ராஜபக்ஷேவை வாழ்த்தாமல் இருந்திருந்தால்.
*ஒபாமாவிடம் சரண் அடையாமல் இருந்திருந்தால்.
*தேவாலயம் இடிக்கபட்டதிற்கு கண்டனம் தெரிவித்திருந்தால்.
*உயர் பதவிகளில் இருப்பவர்களை சகட்டுமேனிக்கு நீக்காமல் இருந்திருந்தால்.
இது அத்துனையும் கூட வேண்டாம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராபர்ட் வதேரா பற்றி நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்நேரம் அவர் சிறையில் இருக்க வேண்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் ராபர்ட் வதோராவைப் பற்றி இப்பொழுது நீங்கள் பேசுவதில்லை? அவர் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ? உண்மையில் ராபர்ட் வதோரா தவறு செய்திருந்தால் கைது செய்ய வேண்டியது தானே? எதற்காக தாமதம் ? ஏன் இந்த நாடகம் ?
இன்னும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.அவற்றை எல்லாம் எழுத நேரம் போதாது. இப்படி உங்கள் ஆட்சி இருக்கையில் நானும் முட்டாள் தனமாக " மோடி மோடி " என்று கோஷமிடுவது சரியாக இருக்காது.
ஆக, நீங்களோ இந்த ஆட்சியோ இந்நாள் வரையில் எதுவும் உருப்படியாக செய்ய வில்லை. இதற்கு ஆதாரம் டெல்லி தேர்தல் முடிவுகள். எதையும் செய்ய வில்லை என்றாலும் பரவாயில்லை, நாட்டில் சிறுபான்மை மக்களை வாழ விடுங்கள். உங்கள் கட்சியை கண்டு முஸ்லிம் மக்கள் தான் ஒதுங்கிக்கொண்டார்கள், இன்றைக்கு கிறிஸ்தவ மக்களும் ஒதுங்க நினைக்கிறார்கள். எனவே உங்கள் "பொற்கால " ஆட்சியின் பெயரை கெடுக்க நினைக்கும் மோகன் பகவத் - யோகி ஆத்தியனாத் - சாக்ஷி மஹாராஜா இவர்களை கண்டித்து வையுங்கள். எட்டு மாத ஆட்சியை பார்த்த மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை என உணரத்தொடங்கி விட்டார்கள். வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லையே என்று ் என்று நீங்களும் வருத்தப் படவேண்டாம்.
தமிழகத்தில் எப்படி ஓ.பி.எஸ் மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறாரோ, அதைப்போல் ஐந்து வருடங்களும் முழுவதும் பேட்டி எதுவும் கொடுக்காமல் ஒரு மௌன ஆட்சியை நடத்தி விட்டு மீண்டும் உங்கள் " United States of Gujarat " ற்கே சென்று விடுங்கள்.
இந்த தேசத்தை அறுபது ஆண்டுகளாக ஒரே குடையின் கீழ் கட்டி வளர்த்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்த மக்கள், தாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கி விட்டார்கள். அந்த பெருமை எல்லாம் உங்களையே போய் சேரும்.
நன்றி!
விஜய் ராம்தாஸ்
14/02/2015

பிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்!!

பிரசவம்‬ முடிந்துவிட்டால், நிம்மதிஅடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது.என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது.ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள்.
அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு நாம்தான் தனியாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்,

மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாகஇருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை.
இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானதுதேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

0-4 மாதம் வரை . . .
நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர்,அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும்கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில்‬ அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள்‬ காமாலையை
ஏற்படுத்தும் பிலிரூபின்‬ என்னும் நிறமியை வெளியேற்றிவிடும்.
அதிலும் அந்ததா ய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.இதனால்அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்குசெயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை . . .
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை
சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம்,பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
அதிலும் இவர்களதுஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறைதாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும்,தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம்.அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை . . .
இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும்
போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம்,காய்கறிகள், பருப்பு‬ வகைகள்,
சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது,அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள்‬ என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்தஉணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாகபார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால்ஆகிறது என்று ‪#மருத்துவரிடம்‬ சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றைகொடுக்கலாம்.

8-10 மாதம் வரை . . .
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள
தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாககொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம் . . .
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால்
அது அளவாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது  மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன்,  காய்கறிகள் மற்றும் புரோட்டீன்‬ உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.


குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்...


• குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த  திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். 
அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.

• குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்சனை சரியாகும். 

• சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்... வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும். 

• குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும். 

• மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்சனைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்... நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும். 


தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல். 



Thursday, 12 February 2015

உங்கள் அலுவலகத்தில் உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்!


நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.  

முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.

புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!
எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

அப்டேட் ஆகுங்கள்!
உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ரிஸ்க் எடுங்கள்!
சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!
ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.

சுய மதீப்பீடு தேவை!
உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!
அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.

குழுவாகச் செயல்படுங்கள்!
நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.
ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!
வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.

நீங்களே தலைவன்!
நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.

இந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, 11 February 2015

தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி( Tonsillitis ) பற்றிய சிறப்பு பார்வை....

” டான்ஸில் ” என்பதை தொண்டைச் சதை எனலாம். தொண்டையின் இருபுறமும், உள்வாயில் நாக்கின் அடியில் இவை அமைந்துள்ளன. நிணத்திசுக் கோளங்களான இவை, உடலின் தடுப்புச் சக்தியின் உறுப்புகள். இவை ‘ லிம்ப் ‘ எனும் நிணநீர் உயிரணுக்களை உற்பத்தி செய்து தொண்டையில் நோய் தொற்றாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இந்த சதைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதை தொண்டைச் சதை வீக்கம் அல்லது அழற்சி ( Tonsillitis ) அழைக்கப்படுகிறது.
தொண்டைச் சதை வீக்கம் பெரும்பாலும் 3 முதல் 7 வயதுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த வயதில்தான் தொண்டைச் சதை அதிகமாக நோய்க் கிருமிகளை எதிர்த்து போரிடும் காலமாகும். குழந்தை வளரும்போது தொண்டைச் சதையின் அளவும் குறையும். அப்போது நோய்த் தொற்றும் குறைந்துவிடும்.
தொண்டைச் சதை வீக்கம் ஆபத்தை விளைவிக்காது. ஆனால் அதில் சீழ் கட்டி உருவானால் அதன் மூலம் கிருமிகள் இரத்தத்தில் கலந்து ரூமேடிக் காய்ச்சல் அல்லது சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்கிவிடலாம்.
சில வேளைகளில் வீக்கம் பெரிதாக இருந்தால் அதனால் மூச்சு விடுவதில் சிரமமும், காது வலியும் கூட உண்டாகலாம்.

பெரும்பாலான தொடை சதை நோய்த் தொற்றும் சீழ் கட்டியும் ஸ்ரெப்டோகாக்கஸ் எனும் கிருமிகளால் உண்டாகின்றன. சில வைரஸ் கிருமிகளும் இதை உண்டாகலாம்.
               

மேல் தொண்டை, நடுத் தொண்டை, கீழ்த் தொண்டை போன்ற இடங்களில்சதைத் துண்டுகள் இருக்கின்றன. மேல் தொண்டையின் சதைத் துண்டு அடினாய்டு என்றும், நடுத் தொண்டையின் ஜோடி சதைத் துண்டுகள் டான்சில் என்றும் அழைக்கப்படுகின்றன. கீழ்த் தொண்டைப் பகுதியிலிருந்து மூச்சுக் குழல் ஆரம்பமாகிறது.

இதில் தொண்டைக்குள் இறங்கும் உணவுப் பொருட்கள், டான்சில் வழியாகத்தான் உணவுக்குழலை சென்றடைகின்றன. அதில் கிருமிகள் இருப்பின் அதன் தாக்குதலாலேயே இந்த சதைத்துண்டுகள் வீக்கமும் வலியும் காணுகின்றன.

இப்படி சதை வீக்கம் ஏற்பட்ட குழந்தைகள் மூச்சு விடத் திணறுவதும் அதனால் வாயைத் திறந்தபடி தூங்குவதும்தவிர்க்க முடியாதவை. வாயைத் திறந்து தூங்குவதால் பல் சீரமைப்பு கெடுவது, மூக்கடைப்பு, காதடைப்பு, காது கேளாமை போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.


துவக்க நிலை டான்சிலை கட்டுப்படுத்த மாத்திரைகள் போதும். தொடரும் தொண்டைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளோடு உணவை விழுங்கவே திணறும் அளவுக்கு வீக்கம் முற்றி விட்டால், அறுவை சிகிச்சை மட்டுமே கைகொடுக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு டான்சில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால் போதும். தொடர்ந்து வேறு மாத்திரைகளுக்கு வேலையில்லை. தற்போது கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சைகள் சகஜமாகிவிட்டன.

. ஐஸ்கிரீம், சாக்லேட் இல்லாத குழந்தைப் பருவத்தை கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல், குழந்தைகளுக்கு தரமான தயாரிப்புகளை மட்டுமே அளவோடு கொடுங்கள்.

இது சாதாரண பிரச்னைதான். ஆனால், இதய மற்றும் சிறுநீரக கோளாறு உள்ள குழந்தைகளை இது தாக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.





 அறிகுறிகள்
* தொண்டையில் புண் உண்டாகி அதிகம் சிவந்து காணப்படும். வெள்ளை நிறத்தில் புள்ளிகள் அல்லது மஞ்சள் நிறத்தில் சீழ் உள்ளதைக் காணலாம்.
* கழுத்துப் பகுதியில் நிணநீர்க் கட்டிகள் அல்லது கரளைக் கட்டிகள் ( Lymph Nodes ) இருக்கலாம்.
* லேசான காய்ச்சல் , தலைவலி தோன்றலாம்.
* தொண்டையில் கடுமையான வலியும், உணவை விழுங்குவதில் சிரமமும் உண்டாகலாம்.
* பேசுவத்தில் கூட சிரமத்தை எதிர் நோக்கலாம்.
* மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம்.


சிகிச்சை முறை 
பிள்ளைகளின் தொண்டையை நாம் பரிசோதிப்பது சுலபம். ஒரு கரண்டியின் பிடியை நாக்கின் மீது வைத்து, குழந்தையை ஆ என்று சொல்ல வைக்க வேண்டும். அப்போது டார்ச் லைட்டை வாய்க்குள் அடித்து பார்த்தால் தொண்டைச் சதையின் வீக்கத்தையும், அதிகமான சிவந்த நிறத்தையும் காணலாம்.. அப்படி தெரிந்தால் உடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர் தொண்டையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மருந்துகள் தருவார். பொதுவாக வலிக்கு மருந்தும், கிருமிகளைக் கொல்லும் என்டிபையாட்டிக் மருந்தும் தருவார். சில மருத்துவமனைகளில் தொண்டைப் பகுதிலிருந்து பஞ்சுத் துடைப்பான் ( Swab ) மூலம் நீர் அல்லது சீழ் எடுத்து பரிசோதனையும் செய்வார்கள். அதில் கிருமியின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வேளை சீழ் கட்டி இருந்தால், அல்லது அடிக்கடி தொண்டைச் சதைத் தொந்தரவு ஏற்பட்டால் மட்டுமே அறுவைச் சிகிச்சைத் தேவைப் படும்.
உண்மையில் தொண்டைப் பகுதியில் தொண்டைச் சதைகள் உள்ளது உடலின் எதிர்ப்புச் சக்திக்குத்தான். இவை கிருமிகள் வாய் வழியாக உடலினுள் புகாமல் தடுத்து நிறுத்தும் உறுப்புகள். அதனால் வேறு வழியே இல்லாதபோதுதான் அறுவை சிகிச்சை மூலமாக தொண்டைச் சதைகள் அகற்றப்படுகின்றன.
காது மூக்கு தொண்டை நிபுணர்களிடம் இதை செய்து கொள்வதில் ஆபத்து இல்லை.  அதன் பின் தொண்டைப் பகுதியில் எதிர்ப்புச் சக்தி ஓரளவு குறைவு பட்டாலும், திரும்ப திரும்ப ஏற்படும் தொண்டைச் சதை வீக்கத்தால் உண்டாகும் ஆபத்தான பின் விளைவுகளிலிருந்து விடுபடலாம்.

பாட்டி வைத்தியம்...

1.ஜாதிக்காய்..

தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.


2.தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம், தேன் கலந்து கொடுக்க‌ தொண்டைச் சதை வளர்ச்சி குறையும்.

3.தொண்டை சதை வளர்ச்சி குறைய வில்வ இலைச் சாறு, துளசி இலைச்சாறு நூறு வீதம் எடுத்து நல்லெண்ணெய் ஐநூறு மில்லியில் கலந்து அடுப்பில் வைத்
து காய்ச்சி வடிகட்டி எண்ணெயை பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி ஒரு கரண்டி அளவில் எண்ணெய் எடுத்து வாயில்விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். (oil pulling) இதுமாதிரி குறைந்தது பத்து நாட்கள் கொப்பளிக்க தொண்டை சதை வளர்ச்சி குறைந்து குணம் தெரிய ஆரம்பிக்கும். 
தொடர்ந்து செய்து வர நல்ல குணம் உண்டாகும்.


4.ஆயர்வேத மருத்துவ கடைகளில் அரிமேதாஸ் தைலம் கிடைக்கும். இதில் ஒரு ஸ்பூன் வாயிலிட்டும் இரண்டு நேரம் வாய்கொப்பளிக்கலாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

World Airlines And Cargo Website Details...




Aero MexicoAeroflot
Aerolineas ArgintiniaAir caledonia
Air CanadaAir Charter Network
Air FijiAir France
Air IndiaAir Jamaica
Air LingusAir Mauritius
Air New ZealandAir Pacific
Air Tran AirwaysAir Vanuatu
Air VegasAl Aeran Express
Al ItaliaAlaska Airlines
Aloha AirlinesAmerican Airlines
American Trans AirAmerican West Airlines
Amerijit InternationalAnsett Australia
Asiana AirlinesAtkin Air
Atlantic AirlinesAustrian Airlines
Biman BangladeshBritish Midland
BWIA InternationalCanadian Airlines
Canjet AirlinesCape Air
Cathay PacificCayman Airways
Cebu Pacific AirlinesChalks Ocean Airways
Colgan AirCondor Air
Continental AirlinesCorporate Express
CorsairCross Air
Cyprus AirwaysCzech Airlines
Delta AirlinesDHH Express
DHL Worldwide ExpressEast Coast Flight Services
Egypt AirEl Al Israeli Airlines
EmiratesEVA Airways
Evergreen International AvaitionFine Airlines
Finn AirFrontier Airlines
Grand Aire ExpressGreat Plains Airlines
Gulf AirGulf Stream International Airlines
Hawaiin AirlinesHorizon Air
IberiaIceland Air
Impulse AirlinesIndian Airlines
Japan AirJapan Airlines
Jet AirwaysJet Blue Airways
Jet ExpressKenya
KLMKorean Air
Kuwait AirwaysLanchile Airlines
Lasca Costa RicaLloyd Aereo Bolivinio
LTU InternationalLufthansa
Malaysian AirlinesMalev Hungarian
Mesaba AirlinesMexicana
Mid West AirlinesMiddle East Airlines
Nanucket AirlinesNew England Airlines
North WestNorth West Airlines
Pakistan International AirlinesPANAM
Pen AirPhillipine Airlines
Polish AirlinesQantas Airlines
Royal Air marocRoyal Jordanian Airlines
Royal Nepal AirlinesRyan international Ailrlines
Sabena AirlinesSahara Airlines
SASSaudi Arabian Airlines
Scenic AirlinesShuttle America
Silk AirSingapore Airlines
Sky West AirlinesSN Brussels Airlines
Solomon AirlinesSONICBLUE AIRWAYS
South African AirlinesSouth African Airways
South West AirlinesSpan Air
Spirit AirlinesSri lankan Airlines
Sun Country AirlinesThai Airways
Travel AirTurkish Airlines
U.S.AirwaysUnited Airlines
US Airways ShuttleUSA Jet Airlines
VarigVasp Brazilian Airlines
Virgin AtlanticVirgin Blue
West Jet AirlinesWestern Airlines , Australia
Winward ExpressWorld Airways
YemeniaYugoslavia Airlines


Collection by M.Ajmal Khan.