Thursday, April 9, 2015

செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் உள்பட 20 பேர்ஆந்திர வனப்பகுதியில்சுட்டுக்கொலை!!

திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணியில் ஆந்திர போலீஸார்.| படம்: கே.பூரணசந்திரகுமார்ஆந்திர வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர்கள் உட்பட 20 பேரை அம்மாநில போலீசார் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால் இரு மாநிலத்திலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் உள்ள சேஷாசலம் மலைப்பகுதியில் தான் செம்மரங்கள் வளர்கின்றன. சிவப்பு சந்தனமரம் என்று அழைக்கப்படும் இந்த மரங்களுக்கு வெளிநாட்டில் கடுமையான கிராக்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் இந்த மரங்களை மருந்து பொருளாகவும், கோடீஸ்வர வீடுகளில் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். செம்மரங்கள் சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள திருப்பதி மலைப்பகுதியிலும் உள்ளன. இந்த மரங்களை தமிழகத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள ஏழை தொழிலாளர்களை அழைத்து சென்று வெட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
சாதாரண மரம் வெட்டுவதைவிட செம்மரம் வெட்டினால் அதிகம் கூலி வழங்கப்படும் என்பதால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் இந்த வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு மரம் வெட்டுவதை தவிர செம்மரத்தின் முக்கியத்துவம் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் இந்த மரங்களை வெட்டும் கும்பல் மரங்களை வெட்டி கடத்துகிறார்கள். கடந்த 2 ஆண்டாக ஆந்திராவில் செம்மரம் வெட்டுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2500 தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு அங்குள்ளசிறைகளில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று திருப்பதி மலைப்பகுதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் ஈத்தங்காயம் என்ற இடத்தில் தொழிலாளர்கள் மரம் வெட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆந்திர போலீஸ் அதிரடி படையினர் அங்கு விரைந்தனர். தொழிலாளர்களை சுற்றி வளைத்தனர். போலீசிடமிருந்து தப்புவதற்காக தொழிலாளர்கள் போலீசார் மீது கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். குருவி சுடுவது போல் சுட்டதில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர்  கொல்லப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். நேற்று கொல்லப்பட்டவர்களில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

சீமேந்திரா சிறையில் தமிழர்களை மிருகங்களை விட கொடுமையாக‌ துன்புறுத்துகிறார்களாம்..இப்போது சுட்டு கொல்லப்பட 20 தமிழர்களும் ஆந்திர சீமேந்திர சிறையில் இருந்தவர்களே.இவர்கள் தங்களை நீதிமன்றில் அனுமதிக்கும்படியும் வக்கீலை வைத்து வாதாடுவதற்கு உரிமை கேட்டு வாதாடியவர்கள்..மனித உரிமை கழகங்களை தொடர்பு கொள்ள முயன்ற போது இவர்கள் தாக்கபட்டனர்..சிறையில் இருந்து இவர்களின் நீதியை நீதிமன்றத்தை நாட முயன்ற போது..மரம் வெட்ட சொன்ன தெலுங்கரும் மரத்தை கடத்தும் தெலுங்கரும் வெளியே உல்லாசமாக இருக்க கூலிக்கு என்று கூட்டிவந்த நாம் சிறையில் இருப்பதா என்று சிறையில் கலகம் செய்த தமிழர்கள் இனம் பிரிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து வந்து ஒரு சவச்சாலையில் வைத்து இவர்கள் மீது எரிவாய்யுவால் நெருப்பை மூட்டி தீயிட்டு சுடார்கள் இப்போது நீதிமன்றம் நீதி தேவையா என்று இரும்பு கம்பிகளால் தாக்கப்படார்கள்..இவர்கள் உண்மையில் கடத்தி கொலை செய்திருப்பார்கள்.ஆனால் சிறையில் இருந்து அழைத்து வரும்போது பலர் பார்த்ததால்.சிறையில் உள்ள தமிழரிடம் இவர்கள் தப்பிக்க பார்த்ததால் சுட்டுகொல்லப்படதாக கூறப்பட்டுள்ளது.துப்பாக்கியால் சுட்டால் தீகாயங்கள் வர இடமில்லை இதோ இவர்கள் மீது சித்திரவதை செய்து சாகடித்த பின். மரம் வெட்டியதாக கூறி துப்பாக்கி சூடு நடத்தப்படது..மர ஆலைகளில் இருந்த பழைய காய்ந்த மரங்கள் இவர்கள் உடலுக்கு பக்கத்தில் போடப்படது.. உண்மையை அறிய நாம் நேரிடையாக சென்றும் பல பிரிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பூர்வீக தமிழர் மீது பல தாக்குதல்கள் கற்பழிப்புக்கள் தெலுங்கரால் செய்யப்பட்டுள்ளது..இதை வெளியிட எந்த தெலுங்கு பத்திரிகையோ நிருபர்களோ மனித உரிமை ஆவலரோ முன் வரவில்லை..அங்கு சிறையிலும் எல்லையோர தமிழர்கள் மீது தெலுங்கர் மிக கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர்..தமிழருக்கு எதிராக சீமேந்திராவில் மிக கொடுமைகள் அன்றாடம் நடைபெறுகின்றன‌.
தெலுங்கு திராவிட கட்சியின் தலைவர்களுக்கும் தெலுங்கு திராவிட கட்சி நிறுவனங்களுக்கும் தெலுங்கு திராவிட கட்சி காரியாளையங்கள் பெரியார் சிலை என்பவற்றுக்கும் தெலுங்கு சாதி தலைவர்களுக்கும் தெலுங்கு சாதி நிறுவனங்களுக்கும் உயர் பாதுகாப்பு வளங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அப்போ தமிழ்நாடு அரசு யாருக்காக செயல்படுகின்றது????தமிழ்நாட்டு அரசை கட்டுப்பாட்டில் வைத்துள்ளவர் யார்?? அப்போ தமிழ்நாடு தமிழன் நாடா???இல்லை வந்தேறிகள் நாடா??? தமிழரே உடன் களம் காண்பீர்

தமிழகத் தொழிலாளர்களை அம்மாநில போலிஸ் சட்டுக்கொன்ற சம்பவத்தை சிபிஐ விசாரிக் கோரிக்கை....
------------------------------
 துப்பாக்கிச் சூடு - சந்தேகங்கள்

------------------------------
மரம்வெட்டும் இடத்திற்கு சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் எப்படி வந்தார்கள் ?
அவர்கள் காவல்துறையில் இருந்து தப்பி வந்தார்களா ?அல்லது காவல்துறையினரே அழைத்து வந்தார்களா?
100 பேர் மரம் கடத்திய இடத்தில் துப்பாக்கி சூட்டில் 20 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் கூட காயம் அடையாதது எப்படி?
மற்றவர்கள் தப்பிச்சென்று விட்டார்கள் என்றால் அவர்கள் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ?
மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?
கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதியிலேயே துப்பாக்கி குண்டுகள் துளைத்திருப்பதன் மர்மம் என்ன?
கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது...
தப்பி ஓடியவர்களின் காலில் இருந்து தவறிய காலணிகள் எங்கே?
கொல்லபட்டவர்களின் அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ?
மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கும் செம்மரங்கள் இல்லை ..!
அப்படி என்றால் அந்த செம்மரங்கள் எங்கு வெட்டப்பட்டவை?
செம்மரக்கடத்தல் கும்பலின் தலைவனும், ஆந்திர அரசியல் பிரமுகருமான கெங்கிரெட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
செம்மர கடத்தல் கும்பல் தலைவர்களை விட்டுவைத்திருப்பதன் மர்மம் என்ன?
கூலிக்கு ஆசைபட்டு மரம்வெட்டச்சென்ற தமிழக தொழிலாளர்களை சுடுவதற்கான காரணம் என்ன?
 அதனால் மரம் வெட்ட ஆந்திரா சென்ற தமிழத்தைச் சேர்ந்ந 20 கூலித் தொழிலாளர்கள் அம்மாநிலக் காவல் தறையால் துப்பாகியால் சுட்டுப் படு கொலை செய்யப் பட்ட வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிபிஐ விசாரணை கோற வேண்டும். அப்போதுதான் மர்மக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் மற்றும் இறந்தவர்களின் குடும்ப த்திற்கு நீதிக் கிடைக்கும் என்பது சாத்தியம்.

ஒண்ணே முக்கால் லட்சம் பேரை கொன்றபோதே சூடு சொரணை இல்லாம
இருந்த பயலுகதானே' என்று.....
மலயாளி வென்னீரை ஊற்றி கொன்றான்.
சொரணையில்லை!
'மலயாளியே கொன்றிருக்கானே!'
நாமும் கொல்வோமென கன்னடன்...
அடிச்சே கொன்னு ஆத்துல தூக்கிப்போட்டான்.
அப்பவும் சொரணையில்லை!
'மலயாளியும் கன்னடனும் கொன்றிருக்கானுகளே!
நாமும் கொஞ்சம் போட்டுத்தள்ளுவோமென தெலுங்கன் அவர்களுக்கு போட்டியாக.....
'என்னடா ஒவ்வொருத்தனா போடுறீங்க!
இந்தா பாருடா என்னை!' என
20 பேரை ஒரே நேரத்தில்
துன்புறுத்தி தீயால் கருக்கி.....
தன் பங்கிற்கு சுட்டுக் கொன்றிருக்கிறான்.
இப்பவும் சூடு சொரணை வரும்?
ஈனப்பிறவிகளுக்கேது மானம் சூடு சொரணை?
நாளை தன் வீட்டு பெண்களை எதிரிகள் கற்பழிக்கும்போதுகூட....
இந்த ஈனப்பிறவிகளிடம்
திரைப்படமோ
மதுவையோ
மட்டைப்பந்தாட்டம்,
மானாட மயிராட அல்லது
சூப்புர சிங்கர.....
இதில் ஏதாவது ஒன்றை காட்டினாலே போதும்.
கண்டுக்காம மயங்கிக் கிடப்பான் இந்த ஈனப்பிறவி!
சித்தூர் இந்த செய்தி கேட்பவருக்கு அதிர்ச்சியாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை . என்ன நடந்தது தப்பிய நபர் விபரிக்கின்றார்!!!!

 தமிழ் மக்களின் தாக்குதலுக்கு தீர்வு இல்லையா?தமிழர்கள் நலன் கருதி இந்தக் கோரிக்கை வலிமை அடைய செய்வீர்.....
அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் , தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சியை கொண்டுவர கடினமாக உழைப்போம் , புலம்பெயர் தமிழர்கள் பண உதவியும் , களத்தில் இருக்கும் இளைஞர்கள் வீடு வீடாக சென்று மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களையும் செய்யுங்கள்..

 நன்றி..


No comments:

Post a Comment