Friday, 17 April 2015

அக்குவாஃபீனாவும் அலறவைக்கும் ரகசியங்களும்‬ !! ஒரு விழிப்புணர்வு ஆய்வு..

வீட்டிலுள்ள சமையலறைக் குழாய்களில் வரும் குடிநீரை, ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று எவரேனும் விற்றால் வாங்குவோமா? அவ்வாறு யாரேனும் வாங்கினால் கேலி செய்து சிரிப்போம்தானே? உலகப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் இந்த பாட்டில் தண்ணீரை வாங்கி குடிப்பவர்கள் அனைவருமே அத்தகைய கேலிக்குரியவர்கள்தான் என்பதே உண்மை.


பெப்ஸி நிறுவனத்தின் தயாரிப்பான, ’அக்குவாஃபீனா’, வெறும் சாதாரண பைப் தண்ணீரையே சுத்திகரித்து மினரல் வாட்டர் எனற விற்பனை செய்து வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இதேப் போல நெஸ்ட்லே நிறுவனத்தின் , ‘ப்யூர் லைஃப்’ மற்றும் கோக் நிறுவனத்தின் நிறுவனத்தின், ’தஸானி’ யும் இதே போல்தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, அமெரிக்க அரசின் ஒரு அங்கமான, பெருநிறுவன சோதனை வாரியம் (Corporate Accountability International), அக்குவாஃபீனா வின் நீர் ஆதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, சாதாரண குழாய் நீரையே, சுத்திகரித்து விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டது பெப்ஸி நிறுவனம். அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால், தனது புதிய தயாரிப்புகளிலெல்லாம், ‘பொதுத்தண்ணீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவை (Public water source)’ என்று அச்சிடத் தொடங்கியது.

இந்நிறுவனம். ஆனால் பெப்ஸி பாட்டில்களில் எல்லாம் மலைகளுக்கிடையே தண்ணீர் ஓடி வருவது போல லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். தங்கள் தயாரிப்பு இயற்கையானவை என்பதை காட்டவே இத்தகைய லேபிள்கள் அதில் ஒட்டப்பட்டு வந்தன. இந்த விவகாரத்தையடுத்து, அது போன்ற லேபிள்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குடிநீர் தயாரிப்பின் பின்னணியிலுள்ள வணிக யுக்திகளைக் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், வெளிவந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சுமார் 9.7 பில்லியன் கலன் நீரிலிருந்து 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டுவதே பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதில் ஒரு கலன் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர், 1.22 அமெரிக்க டாலர்கள். இதில் மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீர், 500 மிலி பாட்டில்களாக சந்தைப்படுத்தப்படுகிறது. அரை லிட்டர் குடிநீரின் விலை, 16.9 செண்ட்கள்.

மொத்தத்தில், சாதாரணக் குழாய் நீர், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் என்ற பெயரில் சுமார் 2000 மடங்கு விலையேற்றம் செய்யப்பட்டு மக்களிடம் சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த பாட்டில்களைத் தயாரிக்கப் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக்குகளும் , அவற்றைப் பதப்படுத்தப் பயன்படும் பல்வேறு இரசாயனங்களும், மனித உடலிலுள்ள நரம்புகளையும், சுரப்பிகளையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது (Endocrine disrupting chemicals).

இது மட்டுமன்றி பாலியல் உறவுக்கு அடிப்படைத் தேவையான முக்கியச் சுரப்பிகளான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் ஆகியவற்றையும் இது பாதிக்கிறது என்கிறது ஆய்வுத் தகவல்.மேலும் அதிரடிச் சோதனைகளுக்கோ, நேரடி ஆய்வுக்கோ இந்நிறுவனங்களை ஆட்படுத்த முடியாத சட்டப் பாதுகாப்பு இருப்பதால், இவர்களின் செயல்முறை விளக்கங்களும் மர்மமாகவே உள்ளன.

இத்தகைய நிறுவனங்கள்தான் நம் தாமிரபரணிக்குக் குறி வைக்கின்றன என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment