Everything that happens to us, Happen for a reason, Reason that should make us even closer to Allah (Creator/God)
- Education is foremost to shape a person's character in life.
- Love is the oldest teaching in the world, for the history of our human existence is through love from our Creator.
- Nothing can change a person but the person itself.
If you want a happier life, change the way you view the world around you. Take off the negative glasses and put on the positive ones.
Wednesday, 29 April 2015
B.Arch (கட்டிட நிர்மான கலை பொறியியல் )பட்டப்படிப்பு!! ஒரு சிறப்பு பார்வை.....
B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும். B.Arch கலந்தாய்வு (counseling) முறை : +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிடபடுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 – ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும். உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும். இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
NATA (National Aptitude Test in Architecture) தேர்வு இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800. தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும். NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.
No comments:
Post a Comment