Monday 13 April 2015

த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் 60 பெய‌ர்க‌ள் !! ஒரு தவகல்..

Image result for தமிழ் வருடப் பிறப்புஉலகிலுள்ள எல்லா நாடுகளிலும் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஆண்டுகள் எண்களின் அடிப்படையில் தான் அறியப்படுகிறது. ஆனால் தமிழில் மட்டுமே ஆண்டுகளுக்கு பெயர்கள் வழங்கப்படுகிறது. தமிழில் மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. சூரியன் மேஷம் ராசியில் நுழைவதை தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆங்கில தேதியில் சுமார் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு நிகழும். இவ்வாண்டு 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இவ்வாண்டு பிறக்கும் தமிழ் ஆண்டானது தமிழ் ஆண்டுகளின் வரிசையில் இருபத்து ஒன்பதாவது வருடம் ஆகும். இப்புத்தாண்டின் பெயர் மன்மத வருடம் ஆகும். ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் இடைக்காட்டுச் சித்தர் எழுதிய பாடல்களைக் கொண்டு அந்த வருடத்தின் பலன் அறியப்படுகிறது. மன்மத வருடத்திய வெண்பா மன்மதத்தின் மாரியுண்டு வாழமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளும் நண்ணுமே - மன்னவரால் சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் காண் இதன் பொருள் என்னவென்றால் மன்மத வருடத்தில் நல்ல மழையுண்டு. எல்லா உயிரினங்களும் நன்றாக சுகமாக வாழும். நன்மைகள் அதிகரிக்கும். எல்லாவிதமான பொருட்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் பின்வருமாறு: மன்மத வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி - 14-04-2015 செவ்வாய் கிழமை கிருஷ்ணபட்சம் தேய்பிறை தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் சுபம் நாமயோகம் பத்திரை கரணம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 01-47 மணியளவில் சிம்மம் லக்கினத்தில் மன்மத வருடம் பிறக்கிறது.



த‌மி‌ழ்  ஆ‌ண்டுக‌ளி‌ன்  60  பெய‌ர்களை‌ வ‌ரிசையாக பா‌ர்‌ப்போ‌ம்..


‌1. பிரபவ 
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷூ
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய

தொகுப்பு :அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment