Sunday 8 June 2008

பீச் பழங்களின் பயன்கள் என்ன ? ஒரு மருத்துவ பார்வை ..

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை  ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள்  என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே.

பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள்  வைத்துக்கொள்கிறது. கீழ்வாதம், ரூமட்டிக் நோயால் அவதி படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல்  இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல் திறன் மிக்கதாக உள்ளது. முந்திரி பழம் 

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில்  மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது.   இதில்  பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்சுடியது. பீச்  பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. 

மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது. பீச்பழங்களை உட்கொள்வதால்  நரம்பு மண்டலம்  மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது மேலும் சீறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச்பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் .  இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பை குறைக்கும்  திறன் கொண்டது.

கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச்பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின்  இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது. இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள  நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.


பளிச் சென்ற முகத்திற்கு...


பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சரும துளைகளில்  உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.

முகம் நன்கு மென்மையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்றால், அதற்கு பழங்களால் செய்யப்படும் பேஸ் மாஸ்க் தான் பெஸ்ட். ஏனெனில் பழங்களில் நிறைய விற்றமின், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு மட்டும் நல்லதல்ல. சர்மத்திற்கும்தான். அத்தகைய பேஸ் மாஸ்க் செய்ய பயன்படும் பழங்களில் பப்பாளி, ஸ்ட்ரோபெரி, செர்ரி, வாழைப்பழம், மற்றும் பீச் போன்றவை முக்கியமானவை. இப்போது இதில் பிச் பழத்தை எடுத்துக்கொண்டால், அதில் விற்றமின் சி அதிகமாக உள்ளது. இந்த விற்றமின் உடலுக்கு அழகைத்தருவதிலும், முதுமைத்தோற்றம் ஏற்ப்படாமல் இருக்கவும் உதவுகிறது. ஆகவே அந்த பீச் பழத்தை வைத்து எப்படி பேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா?

பீச் பெக்:

வறண்ட சருமத்திற்கு இந்த பழம் மிகவும் சிறந்தது. ஆகவே இத்தகைய சர்மம் உள்ளவர்கள், இந்த பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 10-15 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் வரட்சி மற்றும் அரிப்பு போன்றவை வராமல் இருக்கும். 


பீச் மற்றும் முட்டை பேஸ் பெக்:

முகத்தை அழகு செய்வதற்கு ஸ்பா சென்று பணத்தை வீணாக செலவழித்து வருவதை விட, வீட்டிலேயே இந்த பேஸ் பேக்கை செய்து வந்தால், பணம் மிச்சமாவதோடு, முகமும் அழகாக மாறும். அதற்கு பீச் பழத்தை எடுத்துக் கொண்டு, அதில் இருக்கும் விதையை நீக்கி, முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 25-30 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாக பளிச்சென்று பொலிவுறும்.
பீச் மற்றும் தக்காளி பெக்:

தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருக்கிறது. இது சருமத்திற்கு இளமைப்போலிவைத் தருகிறது. மேலும் தக்காளியில் இருக்கும் ஜீஸ், சருமத்தில் இருக்கும் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தைத் தருகிறது. அதிலும் இந்த தக்காளியை எந்தக் காய்கறி அல்லது பழத்துடனும் சேர்த்து, பேஸ் பெக் செய்யலாம். அதிலும் பீச் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து ,அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கிவிடும்.


 பீச் மற்றும் எலுமிச்சை பேஸ் பெக்:

எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்த, சருமத்தில் இருக்கும் தூசிகளை நீக்குவதோடு, முகப்பருக்களையும் நீக்கும். ஆகவே பிச் பழத்தை (விதையை நீக்கி) நன்கு மசித்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி, நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதனால் முகம் புத்துணர்சியுடனும், சுருக்கமின்றியும் காணப்படும்.

பீச் மற்றும் தேன்:

தேன் ஒரு இயற்கையான சருமத்திற்கு அழகு தரும் பொருள். இதில் இருக்கும் ஆன்டி-பக்டீரியல் சருமத்திற்கு நிறம், அழுக்குகளை நீக்குதல், ஈரப்பசை போன்றவற்றை தருகிறது. அதற்கு நன்கு கனிந்த பீச் பழத்தை அரைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால், அதோடு சிறிது எலுமிச்சம் சாற்றையும் ஊற்றிக்கொண்டு, முகத்திற்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால்முகத்தில் இருக்கும் முகப்பரு நீங்கும்.

ஆகவே மேற்க்கூறிய பேஸ் பெக்களை வீட்டில் இருக்கும் போது செய்து  வந்தால், சருமம் நன்கு பொலிவு பெற்று, பளிச்சென்று மின்னும்.     

மேலும் அறிய ...
  http://nutritiondata.self.com/facts/fruits-and-fruit-juices/1990/2
  http://www.nutrition-and-you.com/peaches.html
  http://www.care2.com/greenliving/16-health-benefits-of-peaches.html
  http://www.ihomeremedy.net/7-amazing-health-benefits-of-peaches/

தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல் .

No comments:

Post a Comment