Sunday, 22 June 2008

பாலித்தீவில் கிளிமானுக் என்னுமிடத்தில் அமைக்கபட்டுள்ள நுழைவாயில் !!

இந்த நுழைவாயில் இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலித்தீவில் கிளிமானுக் என்னுமிடத்தில் அமைக்கபட்டுள்ளது. நாக வாசுகி என்பது இதன் பெயர். இந்த வாயில் 1995 -2005 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எஃகு இரும்பு மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டி நடுவில் மின்சார இணைப்பும் கொடுக்கப்பட்டு மின்சார விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு திசையை இந்த வாசுகி பாம்பு தனது கூரிய பார்வையால் காப்பதாக பாலி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இதுதான் இந்த நுழை வாயிலுகக்கான சரித்திரம்!! இதில் நம் தமிழ் மன்னர்கள் இராஜராஜனோ, இராஜேந்திர சோழனோ காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்படவுமில்லை.இதே படத்தைப்போட்டு பல்லவர்கள் கட்டியது என்று ஒரு பதிவு முன்பு வந்தது. இது தமிழர்களை முட்டாளாக்கும்/குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு பதிவாகும். இதை யாரும் நம்பவேண்டாம். நாம் பெருமைப்பட்டுக்கொள்ள ஏராளம் நம்மிடத்தில் உள்ளது. அடுத்தவன் வீட்டில் விறகு திருடி நாம் குளிர்காயவேண்டிய அவசியம் நமக்கில்லை.

No comments:

Post a Comment