Sunday 28 June 2009

நகைகளை எவ்வாறு முறையாக பராமரிப்பது எப்படி? ஒரு சிறப்பு பார்வை..

பெண் என்றாலே பொன் நகை தான். அதிலும் குறிப்பாக திருமணம் ஆகப் போகும் பெண் என்றால், அவர்களுக்கு விதவிதமான நகைகளை அணிவித்து மகிழ்ச்சி பெறுவது பெற்றோர்களின் ஆசையாகவே இருந்து வருகின்றது. இன்று அதிகரித்து வரும் தங்கத்தின் விலையை பொருட்படுத்தாமல், இன்னும் நகைகளை வாங்கி கொண்டு தான் இருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மதிப்பு என்றென்றும் நிலையானதாகவே இருக்கும் என்பது தான். இப்படி அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளை பேணிப் பாதுக்காப்பது நமது கடமையாகும். நமது தங்க நகைகளை கடைகளில் கொடுத்து சுத்தம் செய்தால், அது நாம் முதன் முதலில் அணிந்த போது பளப்பளப்பாக இருந்தது போன்று இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று இருக்கும் அவசர காலக் கட்டத்தில் நமக்கு அதனை கடைகளில் கொடுத்துச் சுத்தம் செய்வதற்கு நேரம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களான ஆன்டாசிட், அலுமினியம் பாயில் மற்றும் வினிகர் கொண்டு நகைகளை சுத்தம் செய்யலாம்.இதற்கு பிறகு நகைகளை கடைகளில் சுத்தம் செய்வதற்கு கொடுக்கவே மறுப்பீர்கள்.நகைகள் வாங்கும் அளவிற்கு அதை பெரும்பாலானோர் பராமரிப்பதில்லை. நகைகளை முறையாக பராமரித்தால் தான், அவை நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும். நகைகளை பாதுகாப்பது எப்படி?  எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்று வாங்க படிக்கலாம். இதோ சில டிப்ஸ் உங்களுக்காக… 
தங்க நகைகள்:
  • தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.
  •  தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம். இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.
  • கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.
  • ஆன்டாசிட் மாத்திரை வயிற்றை தணிப்பது மட்டுமல்லாது, நகைகளையும் சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு வெந்நீரில் 2 ஆன்டாசிட் மாத்திரைகளை போட்டு, அதில் நகைகளை போட்டு, 2 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து அலச வேண்டும்.
  • டூத் பேஸ்ட் சில்வர் நகைகளை பளிச்சென்று மின்ன உதவும். அதற்கு டூத் பேஸ்ட்டை சில்வர் நகைகளின் மீது 10 நிமிடம் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • நகைகளில் தங்கியுள்ள மறைந்துள்ள அழுக்குகளையும் உப்பானது நீக்கிவிடும். அதற்கு உப்பை நீரில் கலந்து, அதில் நகைகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் உப்பானது நகைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடும்
    .
  • நகைகளில் தங்கியுள்ள மறைந்துள்ள அழுக்குகளையும் உப்பானது நீக்கிவிடும். அதற்கு உப்பை நீரில் கலந்து, அதில் நகைகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் உப்பானது நகைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கிவிடும்.
  • நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்து விடும்.
  • எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பு அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.
முத்து நகைகள்:
  •  முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.
  •  முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும். மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும்.
  •  முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கி விடும்.

வெள்ளி நகைகள்:
  • வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து   குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.
  • வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.
  • அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.
  •  மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.
  • வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி கருத்து விட்டதா? கவலை வேண்டாம். வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
  • புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும். 
  • வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.
  • குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
  • அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

கற்கள் பதித்த நகைகள்:
  • கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீலக்கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும். பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.
  • கெட்சப் கொண்டு கல் பதித்த நகைகளை சுத்தம் செய்தால், கற்கள் நன்கு ஜொலிக்கும். அதற்கு கல் பதித்த நகைகளில் சிறிது கெட்சப்பை தடவி, வட்ட நிலையில் தேய்த்து, பின் சுத்தமான நீரில் அலச வேண்டும்
  • இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.


வைரநகைகள் :
வைரங்கள் தான் ஒரு பெண்ணின் உற்ற நண்பன். ஆனால் அவை அழுக்காக இருக்கும் போது அல்ல. ஆகவே ஒரு கப் வெந்நீருடன், 1/4 கப் அமோனியாவை கலந்து வைர நகைகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், மென்மையான டூத் பிரஷால் மீதம் இருக்கும் அழுக்கை அகற்றவும். குறிப்பாக, அமைப்புகளின் பிளவுகளிலும், வைரத்தின் அடிப்பகுதிகளிலும் நன்றாக தேய்க்கவும்.



தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment