Wednesday, 12 August 2009

ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!.மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்றுமழைஇடிமின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும்விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும்மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

பயந்த மனிதன்பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டுஅதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும்குறத்தி சொல்லும் வாக்கையும்சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும்கிளி ஜோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் ஜோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.

பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும்பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள்சமூக விரோதிகள்ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல,சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும்பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும்பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாதவர்களையும்அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, ஜோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறிபுரட்டுப் பேசிநம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் ஜோதிடத்தை புகுத்தியும் பரப்பியும் ஏமாந்த மக்களையும்அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு ஜோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது - வருகிறது.

தமிழ் மக்களின் வரலாற்றிலும்வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல,வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். 
திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும்வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேதபுராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.

1300
 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி - கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை கி.பி 2-வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
ஜோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது. 
பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு ஜோதிடர். இந்த பார்ப்பன ஜோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பாதுலாநிதத்நிஅப்யந்திமேகயந்தி,வர்ஷயந்திசுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். ஜோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட 1000மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் - விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.

ரிக் வேதத்தை ஜோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதைசாராவளி,காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் ஜோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம்நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி ஜோதிடர்.

இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம்நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை ஜோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள்கோபர்னிக்கஸ்கெப்ளர்பிராகேகலிலியோநியூட்டன்,லேப்லேஸ்சேம் பர்லின்மவுல்டன்பிரின்சியாஜேம்ஸ்பிரெட் ஹாய்ஸ்வான்வெய் ஜக்கர்ஹாய்லிஹெயின்ரிச்வேபேஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் ஜோதிடத்தையும்தினமணி ஜோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லைபொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. 

அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே.

நன்றி:- "விடுதலை" 12-6-2009

No comments:

Post a comment