எலக்ட்ரீசியன்
இன்றைக்கு வீடுகளாகட்டும், தொழிற்சாலைகள், விவசாயம் என்று எந்த இடமாக இருக்கட்டும் மின்சார த்தின் துணையின்றி எதுவும் இயங்க முடியாது. அத்தகைய இடங்களில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் மொத்தமாக மின்இணைப்புகள் தரவும், தொழிற்சாலைகளில் பல இயந்திரங்களுக்கு மின் இணைப்புகளை தரவும். மின்சாரம் நின்றுபோனால் அவற்றை சீர்படுத்தவும் கற்றுத்தரப்படுகின்றன.
ஏசி அண்ட் ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக்
இன்றைக்கு வெயில் காலங்களில் மக்கள் அதிகமாக தங்களுடைய இல்லங்களில் பொருத்த விரும்புவது குளிர்சாதன பெட்டிகளைத்தான். மேலும், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்களையும் கெடாமல் பாதுகாக்க விரும்புபவர்கள் வீட்டில் ஒரு ரெப்ரிஜிரேட்டரையாவது வைத்திருக்க விரும்புவார்கள். அப்படிப்பட்ட மெஷினில் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றை பழுதபார்க்க வேண்டும் இல்லையா? தவிர, கார்களிலும், பேருந்துகளிலும் கூட தற்போது ஏசி பொருத்தப்படுகிறது. இப்படி பலவித உபயோகங்களில் இருக்கும் ஏசியை பழுதுபார்க்க அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வெல்டர்
வெல்டிங்கில் ஆர்க்வெல்டிங், கேஸ்வெல்டிங் என சிலவகைகள் உண்டு. இந்த பற்றவைப்பு சாதனம் மூலம் வெட்டப்பட்ட இரும்புத்துண்டுகளை ஒட்டவைக்க வெல்டிங் வைக்கப்படுகிறது. இன்றைக்கு கார்கள், பஸ்கள், ரயில்துறைகள், விமானம், கட்டிடங்கள், வீட்டின் காம்பவுண்ட் கதவுகள் என பல இடங்களிலும் இதன் உபயோகம் அபாரமானது. இது ஒரு ஆண்டு பயிற்சியாகும்.
மெஷினிஷ்ட் கிரைண்டர்
லேத்மெஷினிலோ, பிளானிங், ஷேப்பிங், மில்லிங், சிலாட்டிங் மெஷினில் மெஷினிங் செய்யப்பட்ட உதிரிபாகங்களின் மேற்பாகங்களை மிக நுண்ணிய அளவிலும் பொருட்களை ஒன்றோடு ஒன்று பொருத்துவதற்கு வசதியாக மிகச்சரியாக பொருந்தும் படியும் உற்பத்திப் பொருட்களின் மிக முக்கிய பாகங்களை குறிப்பிட்ட மைக்ரான் அளவில் சரியான அளவாக மெஷினிங் செய்வதற்கு பயன்படும் இயந்திரம் கிரண்டர். இதில் கூர்முனை கற்கள் கொண்ட கார்பைடு வீல்கள் பொருத்தப்பட்டு .ற்பத்தி பொருட்களை டேபிளில் பொருத்தி மெஷினிங் செய்வார்கள். இது இரண்டு ஆண்டுப் படிப்பாகும்.
டிராப்ஸ்மேன் மெக்கானிக் மற்றும் கட்டிடபட வரைவாளர்
ஒரு மெஷினையும் அதை உருவாக்கிடத்தேவையான உதிரிபாகங்களை உருவாக்கவும் முக்கியமானது வரைபடம். அத்தகைய படங்களை வரையக்கூடியவர்கள் டிராப்ஸ்மேன்கள். மெஷினின் உள்பாகங்கள், அதில் வரக்கூடிய துவாரங்கள், மரைகள், மற்ற உதிரிபாகங்கள் பொருந்தக்கூடிய பகுதிகள் என அத்தனை விசயங்களையும் மிக நுணுக்கமாக வரையக்கூடியவர்கள். கட்டிடபட வரைவாளர் டிரேடில் கட்டிடங்கள், அதன் மாதிரிகள், கட்டிடங்களின் உள்பகுதிகள் என மிக நுணுக்கமாக வரையக்கூடிய பயிற்சியை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 2 ஆண்டு பயிற்சி படிப்பாகும்.
மோல்டர்(அச்சுவார்ப்பவர்)
இரும்பு, பித்தளை, வெண்கலம், தங்கம், வெள்ளி, எக்கு போன்ற பல்வேறு உலோகங்கள் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கபட்டு தாதுக்களாக பிரிக்கப்பட்டதும் அவை அந்தந்த உலோகங்களின்உருகுநிலை வெப்பத்திற்கு ஏற்ப உருகவைக்கப்பட்டு அச்சுக்களில் ஊற்றி வார்க்கப்படுகின்றன. அப்படி உருக்கி வார்க்கப்பட்ட உலோகங்களை பின்னர் மெஷின்களில் பொருத்தி தேவையான உருவத்திற்கு மெஷினிங் செய்கிறார்கள்.
No comments:
Post a Comment