சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர்.
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். அல்குர்ஆன் 4 : 119
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : புகாரி 5931
அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன் என சைத்தான் கூறுவதும், பச்சைக் குத்தி கொள்ளும் பெண்களையும் பல் வரிசையைப் பிரித்துக் கொள்ளும் சபித்த அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பெண்கள் காதணிகள் அணிந்திருந்ததை கண்டும் அதைக் தடுக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதை கீழ்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். புஹாரி 1431
காது குத்துவது தடுக்கப்பட்டிருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் அதனை தடுத்திருப்பார்கள். நபித்தோழியர்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள். என்ற ஹதீஸிலிருந்து காது குத்துவது கூடாது என்பதற்கு ஆதாரமில்லை. காது குத்துவது அல்லது குத்தாமல் இருப்பது தனி ஒருவரின் தேர்வுக்கே விட்டு விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment