Saturday, 21 July 2012

இந்தியா குடியரசுத் தலைவர் தேர்தல் வழிமுறை-ஒரு பார்வை ....


தெரிந்து கொள்ளலாமே….
உலகின் மிகப் பெரிய குடியரசு இந்தியா என்பதும் இந்தியாவின் குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் திரு.பிரனாப் முகர்ஜியும் திரு.சங்கமாவும் என்பதும் நாம் அனைவரும் அறிவோம். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாள ரை அறிவிப்பது முதல் அவருக்கு ஆதரவு திரட்டுவது வரை பல் வேறு சர்ச்சைகள், சலசலப்பு கள் எழுந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன் றைய தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. ஆனால், குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்படி நடக்கிறது ? அதற்கான விதிமுறைகள்என்ன? இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் நோக்கமே இந்த பதிவு….
குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யார் போட்டியிடலாம் ?
இந்திய அரசியலமைப்பின் படிகுடியரசுத் தலைவருக்கானதேர்தலில்போட்டியிட பின் வரும் அனைத்து தகுதிகளும்பெற்றிருக்க வேண்டும்:
1) இந்திய குடிமகன்
2) வயது – 35 அல்லது அதற்கு மேல்
3) பாராளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதி
இதனோடு கூடஒருவர் அரசாங்கத்தின் பதவியில் இருந்துகொண்டு ஆட்சிபொருப்பின்
நிமித்தம் பொருளுதவி பெறுபவராக இருத்தல் கூடாது.எனினும்,பின் வரும் பொருப்பு
வகிப்பவர்கள் குடியரசுத் தலைவர்பதவிக்கு போட்டியிடலாம்:
1) துணை குடியரசுத் தலைவர்
2) மாநில ஆளுநர்
3) மத்திய மற்றும் மாநில அமைச்சர் (பிரதான மந்திரியும்மாநிலமுதலமைச்சரும் இதில் உள்ளடங்குவர்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, குடியரசுத் தலைவராக போட்டியிடுபவர், அவரைத் தேர்ந்தெடுப்பவர்களில்,50 பேரால் முன் மொழியப்பட்டு 50பேரால் வழி மொழியப் படவேண்டும்….15,000 இந்திய ரூபாய் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும். ஆறில்ஒரு பங்கு ஓட்டு பெறாவிட்டால், வைப்புத் தொகை பறி போகும்.
யார் தேர்ந்தெடுப்பார்கள் குடியரசுத் தலைவரை ?
இந்திய குடிமகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்கள் சேர்ந்துகுடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். சட்டசபை உறுப்பினர்கள்மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைதேர்ந்தெடுப்பதற்கும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.

எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் சட்ட சபை களிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இந்தியா முழு வதும் மொத்தம் 776 எம்.பி.,க் களும், 4 ஆயிரத்து 120 எம்.எல். ஏ.,க்களும் வாக்களிக்க உள்ளனர். இதில், 77 எம்.பி.,க்கள் அவர்கள் விரும்பிய மாநிலங்களில் வாக் களிக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இதுபோல், 8 எம்.எல்.ஏ .,க்கள் நாடாளுமன்றத்தில் வாக்க ளிக்க அனுமதி பெற்று ள்ளனர்


தேர்தலும் தேர்வும்…

தேர்தலின் விதிப்படி சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு எண்ணிக்கையுடன் சமமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சட்டசபை உறுப்பினரின் ஓட்டும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை ஆயிரத்தினால் வகுத்து வரும் விடையை அந்த மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு வகுப்பார்கள். இது தான், ஒவ்வொரு சட்டசபை உறுப்பினருக்கும் உண்டான வாக்கு.

மாநிலத்தின் மக்கள் தொகை / 1000 = A.

A / மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக இது வேறுபடும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த ஒட்டு மதிப்பு சட்டசபையின் மொத்த ஓட்டு மதிப்புடன் சமமாக இருக்க வேண்டும். இதன் படி,

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு (மாநில வாரியாக), அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு பெறுக்க பட்டு, இந்தியாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பு மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுக்கப் படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டு மதிபின் கூட்டுத் தொகை / பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாநில வாரியான கட்டமைப்பு புரிதலில் உதவியாய் இருக்கும். (மக்கள் தொகை – 1971 census படி – இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும்…..)
A

State / UT
1971 Census
1971 Census divided by 1000
# of MLA
Value of Each MLA's Vote
Total Value of MLA's Votes
UP
83,849,905
83849.91
403
83824
Andaman


0


AP
43502708
43502.71
294
43512
Arunachal
467511
467.511
60
480
Assam
14625152
14625.15
126
14616
Bihar
42,126,236
42126.24
243
42039
Chandigarh


0


Chattisgarh
11,637,494
11637.49
90
11610
Dadra


0


Daman


0


Goa
795,120
795.12
40
800
Gujarat
26,697,475
26697.48
182
26754
Haryana
10,036,808
10036.81
90
10080
HP
3,460,434
3460.434
68
3468
J&K
6,300,000
6300
87
6264
Jharkand
14,227,133
14227.13
81
14256
Karnataka
29,299,014
29299.01
224
29344
Kerala
21,347,375
21347.38
140
21280
Lakshadweep


0


Maharashtra
50,412,235
50412.24
288
50400
Manipur
1,072,753
1072.753
60
1080
Meghalaya
1,011,699
1011.699
60
1020
Mizoram
332,390
332.39
40
320
MP
30,016,625
30016.63
230
30130
Nagaland
516,449
516.449
60
540
New Delhi
4,065,698
4065.698
70
4060
Orissa
21,944,615
21944.62
147
21903
Pondicherry
471,707
471.707
30
480
Punjab
13,551,060
13551.06
117
13572
Rajasthan
25,765,806
25765.81
200
25800
Sikkim
209,843
209.843
32
224
TN
41,199,168
41199.17
234
41184
Tripura
1,556,342
1556.342
60
1560
Uttarkhand
4,491,239
4491.239
70
4480
WB
44,312,011
44312.01
294
44394
Total
233

4,120

549,474
# Number of MP's




766
Value of MP's Vote




717


எம்.எல்.ஏ. ஓட்டுக்கு மதிப்பு எவ்வ ளவு? குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகள், மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 474 வாக்கு மதிப்புகளாக கணக்கில் கொள்ளப் படும். மக்கள் தொகையைப் பொறுத்து அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளுக்கு மதிப்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
கடந்த 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் அளிக்கும் வாக்குகளின் மதிப்பு விபரம் பின் வருமாறு : இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை யைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்க ளின் வாக்கிற்கு அதிகபட்சமாக 208 மதிப் புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, அம்மாநிலத்தில் உள்ள 403 எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 83 ஆயிரத்து 824.
இதற்கு அடுத்தபடியாக, தமிழகம் மற் றும் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ. க்களின் வாக்குகளுக்கு 176 மதிப்புகள் அளிக் கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 41 ஆயிரத்து 184 மதிப்புகளாக கணக்கி ல் கொள்ளப்படும்.
இதேபோல், ஜார்க்கண்டில் உள்ள 81 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 14 ஆயிரத்து 256 ஆக எடுத்துக் கொள்ளப் படும். மஹாராஷ்டிராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 175 மதிப்புகள் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, 288 உறுப்பினர்களின் மொத்த வாக்குகள், 50 ஆயிரத்து 400 மதிப்புகளாக கணக்கில் கொள்ளப்படும்.
கேரள எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 152 மதிப்புகள் கிடைக்கும். அந்த மாநிலத்தில் உள்ள 140 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 21,280 மதிப்புகளாக  எடுத்துக் கொள்ளப்படும்.
மேற்கு வங்கத்தில் ஒரு எம். எல்.ஏ. அளிக்கும் வாக்கிற்கு, 151 மதிப்பு கள் அளிக்கப்படும். அதன்படி, மொத்தமுள்ள 294 உறுப்பினர்களுக்கு 44 ஆயிரத் து 394 மதிப்புகள் கிடைக்கும். ஒடிசாவில், ஒரு எம்.எல்.ஏ. வி ன் வாக்கிற்கு 149 மதிப்புகள் வழங்கப்படுவதால், அங்குள் ள 147 உறுப்பினர்களின் வாக் குகள், 21 ஆயிரத்து 903 வாக்குகளாக கணக்கில் கொள்ளப்படும். ஆந்திராவில் ஒரு எம்.எல்.ஏ.க்களுக்கு 148 வாக்கு மதிப்பு வழங்கப் படுவதால், அங்குள்ள 294 உறுப்பினர்களுக்கு ஒட்டு மொத் தமாக 43 ஆயிரத்து 512 மதிப்புகள் கிடைக்கும்.
குஜராத் எம்.எல்.ஏ.வின் வாக்கிற்கு 147 மதிப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்குள்ள 182 எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்கு களுக்கு, 26 ஆயிரத்து 754 மதிப்புகள் கிடைக்கும். கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள எம். எல். ஏ.க்களின் வாக்குகளுக்கு 131 மதிப் புகள் வழங்கப்படும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள 224 எம்.எல். ஏ.க்களின் வாக்குகள், 29 ஆயிரத்து 344 மதிப்புகளாகவும், மத்திய பிரதே சத்தில் உள்ள 230 எம்.எல் .ஏ.க்களின் வாக்குகள், 30 ஆயிரத்து 130 மதிப்புகளாகவும் கணக்கில் கொள் ளப்படும். ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வின் ஒரு வாக்கிற்கு 129 மதிப்புகள் வழங்கப்படுவதால், அம்மாநிலத்தில் உள்ள 200 உறுப்பினர்களின் வாக்குகள் 25 ஆயிரத்து 800 மதிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படும்.

ம்மு காஷ்மீரில் ஒரு எம்.எல். ஏ.வின் வாக்கிற்கு 72 மதிப்பு கள் கிடைக்கும் என்பதால், அங் குள்ள 87 உறுப்பினர்களுக்கு 6 ஆயிரத்து 264 வாக்கு மதிப்புக ள் கொடுக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் எம்.எல்.ஏ.வுக்கு மட் டுமே அதிக வாக்கு மதிப்பு உள் ளது. அங்கு ஒரு உறுப்பினரின் வாக்கு, 116 மதிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படுவதால், மொத்தமு ள்ள 126 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து 14 ஆயிரத்து 616 வாக்கு மதிப்புகள் கிடைக்கும். நாகாலந்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கிற்கு 9 மதிப்புகள் மட்டுமே வழங்கப்படுவதால், அங்குள்ள 60 உறுப்பினர்க ளுக்கு 540 வாக்கு மதிப்புகளே கிடைக்கும். மிசோரம், அருணாச்சலில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 8 மதிப்புகளே கிடை க்கும். அந்த வகையில் அருணாச்சலத்திற்கு 480 வாக்கு மதிப்பும், மிசோரமிற்கு 320 வாக்கு மதிப்பும் மட்டுமே இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 58 மதிப்புக ள் என்ற அடிப்படையில், மொத்தம் 4 ஆயிரத்து 60 வாக்கு மதிப்புகள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
செய்தி – புதிய தலைமுறை
ஒற்றை வாக்கு மாற்று முறைப்படி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அது எப்படி என்கிறீர்களா ?
4 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். தேர்தலில் வெற்றி பெற 51 சதவீத வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொரு சட்டசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வாக்களிக்கும் போது போட்டியிடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்...

A – 7000 ; B – 6000 ; C – 4000 ; D – 3000 என வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் (முதல் முன்னுரிமையின் படி). மொத்த வாக்குகள் – 20,000. வெற்றி பெற 10001 வாக்குகள் பெறவேண்டும். யாரும் பெறவில்லை.

கடைசி இடத்தில் வந்தவர் பந்தயத்தில் தோற்றுவிட்டதாக கருதப்படுவார். அவருடைய முதல் முன்னுரிமை (First Preference) வாக்குகள் – 3000. இந்த 3000 வாக்குகளின் இரெண்டாவது முன்னுரிமை – A – 1000 ; B – 1500 ; C – 500 என வைத்துக் கொள்வோம்.
மொத்த வாக்குகள் = A – 8000 (7000 + 1000) ; B – 7,500 (6000 + 1500) ; C – 4,500 (4000 + 500).

இந்த நிலையிலும் யாரும் 10,001 வாக்குகள் பெறவில்லை. C பந்தயத்தில் தோற்றதாக கருதப்படுவார். C பெற்ற 4,500 வாக்குகள் Aக்கும் Bக்கும் மூன்றாவது முன்னுரிமை (Third Preference) படி பிரிக்கப்படும். A – 1500 ; B – 3000 என வைத்துக் கொண்டால், A – 9,500 ; B – 10,500 வாக்குகள் பெற்று, B வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.

இதுதான் ஒற்றை வாக்கு மாற்று முறை.

என்ன தோழர்களே ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்ற நுட்பத்தை அறிந்து கொண்டீர்களா? இப்படித்தான் நம்மைச் சுற்றி நிகழும் நிறைய நிகழ்வுகளின் மறைமுக நேர்முக பங்கேற்பளாராக நாம் இருந்தும் அந்த அந்த நிகழ்வுகளின் முழு உண்மைகளை அறிந்திராதவர்களாக நாம் இருக்கிறோம்..!

பெரும்பாலான நாடளுமன்ற உறுப்பினர்களையும், மற்ற கட்சிகளின் நாடளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாகும் சூழல் தற்போது இருந்தாலும்....இந்திய அரசியல் சுழற்சி எதை வேண்டுமானலும் எப்படி வேண்டுமானலும் திருப்பிப் போடும் என்பதால், நாம் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை காத்திருப்போம்..நமது தேசத்தின் முதற் குடிமகனாகப் போகிறவர் யாரென்று அறிய....!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment