Tuesday, 2 April 2013

'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? ஒரு சிறப்பு பார்வை...

'ஆஸாத்' விசா என்றால்  ப்ரீ  விசா(pre visa ) என்று பெயர். இந்த விசாவை கொண்டு உங்களது திறமைகேற்ற வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

Saudi Arabia, Trade and business informations and links to Saudi Arabia, Arabian gulf and middle east area.நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு ...பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம்.

 நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும், பலர் விசிட் விசா அல்லது ஃப்ரீ விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வேலை செயபபவர்களுக்கு   எவ்வித பிரச்சனைகளும் இல்லை. விசிட் விசாவில்  வேலை செயபபவர்களுக்கும்  மற்றும் ஃப்ரீ விசாவில் வருபவர்களுக்குத் தான் சிக்கல்கள் அதிகம்.

 விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும் ( குறிப்பிட்ட காலத்திற்கு  மேல்  தங்குவது ) ஃப்ரீ விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதி அரேபியாவின் நிலை.

 நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு. அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

 அது சரி சொந்த விசா என்றால் என்ன? என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது. இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும். அந்தளவுக்கு ஃப்ரீ விசா ஆபத்தானது,

 இப்போது விஷயத்திற்கு வருகிறேன், சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள்.
அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று, நகைகளை விற்று ஒரு வழியாக சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3,000, இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு ரூ. 30,000 என மொத்தம் ரூ.33,000 செலவழிக்க வேண்டும்.

 இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள் பொறுப்பு. இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும். வேலை கிடைத்ததோ இல்லையோ மாதம் தவறாமல் விசா கொடுத்த அரபிக்கு 300 ரியால் அதாவது ரூ.4,300 கொடுத்தாக வேண்டும். இது தவிர சாப்பாடு மற்றும் தங்குமிடமும் அவரவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

 இது போன்ற விசாவில் வருபவர்கள் சராசரியாக 2,000 ரியாலில் இருந்து ,2500 ரியால் வரைக்குமே மாதச் சம்பளமாக பெற முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2500+2400=4,900 ரியால் செலவழித்து இகாமாவையும் புதுப்பிக்க வேண்டும். ஒரு மாதச் சம்பளம் 2,500 ரியால் ஆகும்.

 செலவினங்களின் வகைகள்:
தங்குமிடம் - 200 ரியால்
சாப்பாடு - 250 ரியால்
அரபிக்கு கொடுப்பது - 300 ரியால்
இகாமா புதுப்பித்தல் - 400 ரியால்
போக்குவரத்து செலவு- 150 ரியால்
போன் செலவு - 100 ரியால்
------------
மொத்தம் - 1,400 ரியால்
------------
இதில் 2,000 ரியால் சம்பளமாக இருந்தால் 700 ரியாலும், 2,500 ரியால் சம்பளமாக இருந்தால்1200 ரியாலும் செலவினங்கள் போக மிஞ்சும். மொத்தத்தில் மாதம் ரூ.10,000- 18,000 வரை மட்டுமே குடும்பத்தாருக்கு அனுப்ப முடியும்.

 இதையும் கூட சுதந்திரமாக பெற முடியாது! ஜவசாத் என்னும் காவல்துறைக்கு பயந்தே சம்பாதிக்க வேண்டும். காரணம் ஹவுஸ் டிரைவர் விசா அல்லது மற்ற ஃப்ரீ விசாக்களில் வெளியில் வேலை பார்ப்பது சட்டவிரோதமாகும். இப்போது இத்தகைய தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக ஜவசாத் எனும் காவல்துறை அதிரடியாக ஹவுஸ் டிரைவர் விசாவில் வெளியில் வேலை பார்ப்பவர்களையும், ஃப்ரீ விசாவில் வந்து வெளியில் வேலை பார்ப்பவர்களையும் சல்லடை போட்டு தேடி வருகிறது.
பாவம், விசாவுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வந்திருக்கும் நமது சகோதரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதை நினைக்கும்போது வேதனையே மிஞ்சி நிற்கிறது. 



மேலுள்ள அனைத்தும் படிக்காதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு பொருந்தும்.ஆனால் உயர் பதவிகளில் பணிபுரியும் நண்பர்கள்  மாதம் ரூ 1,50,000.00 வரை அனுப்பலாம்.

 நன்றி : கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்



சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப உதவி மத்திய மந்திரி உறுதி.

சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவும் என்று மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால் உறுதி அளித்தார்.


வேலை இழப்பு
சவுதி அரேபியாவில் ‘நிதாகத்’ என்ற சட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. 10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில், 10 சதவீத பணியிடங்கள் சவுதி அரேபியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.அப்படி ஒதுக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினரின் பணி உரிமம் ரத்து செய்யப்படும்.இதன்படி, 2½ லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினர் பணிஉரிமம் இழந்துள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி திரும்பாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.இச்சட்டத்தால், வேலை இழந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
மத்தியஅரசு உறுதி
இந்நிலையில், அவர்கள் நாடு திரும்ப உதவுவதாக மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:–சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்தியஅரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். அவர்களின் பயண பிரச்சினைகளுக்கு தீர்வு காண சவுதி அரேபிய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பண பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு விசேஷ கவனம் செலுத்தும்.
ஒற்றுமை
இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறையும், வெளியுறவுத்துறையும் ராஜரீக முறையில் தேவையான நடைமுறைகளை பின்பற்றும். மேற்கண்ட இரு துறைகளின் ராஜாங்க மந்திரிகளும் இப்பணியை செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினையை ராஜரீக முறையில் தீர்க்க மத்திய மந்திரிகளிடையே ஒற்றுமை அவசியம்.இதை உணர்ச்சிகரமான பிரச்சினையாக கருத முடியாது. இருப்பினும், இப்பிரச்சினையை கையாள மத்திய அரசு எச்சரிக்கையுடன் தலையிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்


 
சவுதி நிறுவனத்தின் நிதாகத் நிலை அறிய:
sசவுதி அரேபியா – சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் புதிய சட்டவரைவுகள் கொண்டுவரப்பட்டன. அதில் நிதாகத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இத்திட்டம் சவுதி குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு, ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 சதவிகிம் சவுதி குடிமக்களை பணியில் அமர்த்தவேண்டும். இதனை அடிப்படையாக வைத்து அந்தந்த நிறுவனங்களுக்கு பிளாட்டினம் பச்சை மஞ்சள் சிவப்பு என்ற கலரின் அடிப்படையில் தரம்பிரிக்கப்பட்டது. சிவப்பில் உள்ள நிறுவனம் சவுதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி தனது நிறுவனத்தின் நிலையை மாற்ற வேண்டும் இல்லாதபட்ச்சத்தில் அவர்களது உரிமம் ரத்துசெய்யப்படும் அதிலுள்ள தொழிலாளர்கள் தனது நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவர்.
ஒவ்வொரு தொழிலாளரும் தனது நிறுவனம் எந்த நிலையில் எள்ளது என்பதை அறிந்து கொள்ள சவுதியிலுள்ள அலைபேசி நிறுவனங்கள் புதிய சேவைகளை அறிவித்துள்ளது.
முதலில் 44* இதனுடன் இகாமா எனும் அடையாள அட்டையின் எண்னை சேர்த்து SMS செய்தால் தனது நிறுவனத்தின் நிதாகத் நிலைபற்றி அறிந்து கொள்ளலாம்
STC – 88899
MOBILY – 626666
ZAIN – 709446
மேலதிக விபரங்களுக்கு சவுதி அரசின் தொழிலாளர் நலத்துறை இணைய தளத்தை காணவும்

செய்தி: அரப் நியுஸ்

 எனதருமை தமிழ் சொந்தங்களே, இனியாவது வெளிநாட்டு மோகத்தில் மற்றவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் தீவிரமாக விசாரித்து கூடுமானவரை கம்பெனி விசாக்களில் வந்து வேலை பார்ப்பது போல் அமைத்துக் கொள்ளுங்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment