குழந்தைகளுக்கு, பள்ளி தேர்வுகள் முடிந்து விட்டன. சொந்தமாக கார் இருக்கிறது என்றால், சில நாட்களுக்கு, வெளியூர் பயணம் செல்லலாம் என்ற நினைப்பு வருவது சகஜம் தான்.இன்ப சுற்றுலா புறப்படும் முன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.
லைஃப் டைம் ஹேப்பி டூரை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.ஒன்று
செல்ஃப் அரேன்ஞ்ட் டூர் மற்றொன்று பேக்கேஜ் டூர்.
சொந்த காரில், இன்ப சுற்றுலா புறப்படும் முன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. ஒரே நாளில், நீண்ட தூரம் பயணம் செய்வது, மிகவும் சலிப்பான ஒன்றாகி விடும். குறிப்பிட்ட தூரம் மட்டுமே, காரை ஓட்டிச் செல்ல வேண்டும். அடுத்த நாள், முழு தெம்புடன் பயணத்தை துவக்க, சரியான இடைவெளியுடன், கார் பயணத்தை திட்டமிட வேண்டும். சுற்றுலாவுக்கு புறப்படும் முன், சொந்த காரை தயார்படுத்தி கொள்ள வேண்டும். டயர்கள் சரியாக உள்ளனவா, இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில், வின்ஷில்டு வாஷர் போன்றவை நிரப்பப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஏராளமான பொருட்களை சுமந்து கொண்டு சென்றால், சுற்றுலா இனிக்காது. எனவே, தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு செல்லுங்கள். எனினும், காருக்கு தேவையான டூல் கிட், ஸ்டெப்னி, மெடிக்கல் கிட், பிளாஷ்லைட், டேப் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலா பயணத்துக்கு புறப்படும் முன், வரைப்படத்தை பார்த்து, எந்த ஊருக்கு, எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை நன்கு கவனித்து கொள்ள வேண்டும். காரில், வரைப்படத்தை கையோடு எடுத்து செல்வது மிகவும் நல்லது. தொடர்ச்சியாக பல மணி நேரம் காரை ஓட்ட வேண்டாம். அவ்வப்போது, காரை நிறுத்தி, காருக்கும், உங்களுக்கும், சிறிதளவு ஓய்வு கொடுங்கள்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
லைஃப் டைம் ஹேப்பி டூரை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.ஒன்று
செல்ஃப் அரேன்ஞ்ட் டூர் மற்றொன்று பேக்கேஜ் டூர்.
செல்ஃப் அரேன்ஞ்ட் டூர்:
1.நீங்களாகவே திட்டமிட்டு டூர் செல்வதென்றால் பக்காவாக திட்டமிட்டு ஒவ்வொரு சிறு திட்டங்களையும் டைரி ஒன்றில் குறிப்பெழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
2.செலவுக்கான தொகையை அனைத்தும் பணமாக வைத்திராமல்,குடும்ப உறுப்பினரகள் அனைவரது டெபிட்,கிரடிட் கார்டுகளை அவ்வப்பொழுது உபயோகித்துக்கொள்ளுங்கள்.
3.குழந்தைகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் தங்கி இருக்கும் ஹோட்டல் முகவரி.போன் நம்பர்,கைபேசி நம்பர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
3.குழந்தைகளை அழைத்துச்செல்வதாக இருந்தால் தங்கி இருக்கும் ஹோட்டல் முகவரி.போன் நம்பர்,கைபேசி நம்பர் ஆகியவற்றை எழுதி அவர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்.
4.மலிவாக கிடைக்கின்றதே என்று கண்ட உணவகங்களில் சாப்பிட்டு வயிற்றை அப்செட் செய்து கொள்ளாதீர்கள்.
5.குறிப்பிட்ட இடத்துக்கு தங்கி இருக்கும் இடத்தில் இருந்து செல்வதென்றால் அந்த இடத்தைப்பற்றி முன்னரே அறிந்து கொள்வதோடு தங்கி இருக்கும் இடத்திற்கும் ,செல்லக்கூடிய ஸ்பாட்டுக்குமான தூரம்,ஆட்டோ டாக்ஸி கட்டணம் ஆகியவற்றை கேட்டு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
6.செல்லும் இடத்தில் தரமான உணவு எங்கு கிடைக்கும் என்று தங்கி இருக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் கேட்டாலும் உதவுவார்கள்.
7.செலவுகளை சிக்கனம் செய்ய ஒரு வேளைக்கு டிப் டீ,ஒட்ஸ்,கப் ஓ நூடுல்ஸ்,பிரட் பட்டர் ஜாம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் ஒரு பெரிய அமவுண்ட் மிச்சமாகும்.தயாரிப்பதும் சுலபம்.
8.உறவினர் வீடுகளில் தங்குவதென்றால் அவர்களுக்கு துளியும் சிரமம் தராமல் கவனத்துடன் செயல்படுங்கள்.அவர்கள் வீட்டில் இருந்து சோப்,பேஸ்ட்,ஷாம்பூ,சீப்பு,எண் ணெய்,டவல் என்று எதிர்பர்க்காமல் அனைத்தையும் நீங்களே எடுத்து சென்றுவிடுங்கள்.
9.ஊரில் இருந்து எடுத்து வந்தேன் என்று ஒரு கிலோ ஸ்வீட் பாக்கெட்டும்,அரைகிலோ மிக்சர் பாக்கெட்டையும் கொடுத்து கடமை முடிந்தது என்றிராமல் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பால் பாக்கெட்டுகள்,பிரட் பாக்கெட்டுகள்,பட்டர்,நெய்,காய் கறிகள்,அசைவ உணவுவகைகள் சாப்பிடுபவர்கள் என்றால் சிக்கன்.மட்டன்.முட்டைகள் போன்றவற்றை வாங்கி வந்து கொடுத்தால் தயக்கத்துடன்,லஜ்ஜையுடன் அவர்கள் பெற்றுக்கொண்டாலும்,கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.
10.இறுதியாக உறவினரிடம் அதிக எதிர்பார்பின்றி,கிடைக்கும் உபசரணைகளில் முழு திருப்தியுற்று, குறைகளை களைத்தெரிந்து விட்டு இன்பமுடன் பிரியாவிடை பெறுங்கள்.அந்த அனுபவம் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும்.
பேக்கேஜ் டூர்:
1.குழுக்களோடு சேர்ந்து செல்லும் டூரில் சகிப்புத்தன்மையும்,பொறுமை உணர்வும்,விட்டுக்கொடுக்கும் தன்மையும் அதிகமிருந்தால் அந்த டூர் இன்பகரமாக அமையும்.
2.ஓய்வென்பது சொற்ப கால அவகாசத்தில்த்தான் குழு சுற்றுலாவில் கிடைப்பதால் ரெஃப்ரஷ் செய்து கொள்ள ஜுஸ்,க்ளுகோஸ் போன்றவற்றை கையோடு எடுத்து செல்லுங்கள்.வலி நிவாரண மருந்துகள்,தைலங்கள் கைப்பையில் இருக்கட்டும்.
3.மற்ற பயணிகளுடன் உங்களை கம்பேர் பண்ணாமல் இருந்தாலே டூர் சுகமாக அமையும்.
4.வாகனங்களில் செல்லும் பொழுது வசதியான இருக்கை,ஜன்னலோர இருக்கை,என்று அடம் பிடிக்காதீர்கள்.அதே போல் தங்கி இருக்கும் அறை ரோட்டை பார்த்தாற்போல் வேண்டும்,ரூம் சர்வீஸ் சரி இல்லை,சாப்பாடு சூடு இல்லை என்று சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போங்கள்.
5.சுற்றிப்பார்க்கும் பொழுது கூட வந்த பயணிகளை விட்டும் தனித்து சென்று விடாதீர்கள்.சக பயணிகளுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அவர்களுடனான கைபேசி நம்பரை வாங்கி சேமித்துக்கொள்ளுங்கள்.அவசரத்தி ற்கு உதவலாம்.
6.இப்பொழுது டிஜிட்டல் கேமரா இல்லாத வீடுகளே இல்லை எனலாம்..இயன்றவரை ,புகைபடங்களும்,வீடியோவும் எடுக்க கூச்சப்படாதீர்கள்.டூர் முடிந்து போனாலும் காலாகாலத்திற்கும் வைத்து பார்த்து மகிழலாம்.படங்களை வெறும் பென்டிரைவிலும்,பி சியிலும்,சிடிக்களிலும் சேமித்து வைப்பதை விட பிரிண்டுகள் போட்டு ஆல்பமாக வைத்துக்கொள்ளலாம்.
7.சுற்றுலா நிர்வாகத்தினரே சாப்பாடு தருவதானாலும்,நொறுக்குத்தீனிகளை கையுடன் எடுத்துச்செல்வதின் மூலம் குழந்தைகளின் பிடுங்கள்களில் இருந்து தப்பிக்கலாம்.கையுடன் எப்பொழுது தண்ணீர் பாட்டில்கள் இருக்கட்டும்.
8.பெரிய பாலித்தீன் பேக்குகள் எடுத்துச்சென்று அழுக்குத்துணிகளை அதில் போட்டு வைத்து டூரை முடித்துக்கொண்டு திரும்பும் பொழுது அந்த பைகளுடன் சூட்கேஸ்களில் திணித்துக்கொண்டு ஊர் திரும்பலாம்.
9.கோபத்தில் சப்தமிட்டு பேசுவது,மனைவியிடமோ அல்லது கணவரிடமோ குழந்தைகளிடமோ கோபம் வந்தால் அதை நாண்கு பேர்களுக்கு முன்பு வெளிப்படுதுவது,குடும்ப விஷயங்களை,குறைநிறைகளை சக பயணிகளின் முன்பு அலசுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.ஏனெனில் உங்களின் பால் சகபயணிகள் வைத்திருக்கும் மதிப்பும் அன்பும் தடாலென்று சரிந்து போகலாம்.
10.குழந்தைகளை அழவைத்து பார்த்துக்கொண்டிராதீர்கள்.சட் என்று அழுகையை அடக்கி சமாதானப்படுத்துங்கள்.அது சக பயணிகளுக்கு இம்சையாக இருக்கும்.
என்ன டூர் கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?ஹாப்பி ஜர்ணி!
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment