Friday, 29 November 2013

உலகில்முறியடிக்கப்படாத சாதனைக‌ள்உசைன்போல்ட்!!


 உலகில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும்  ஒலிம்பிக்  போட்டி  முதன் முதலில் 1886ஆம் ஆண்டு கிரேக்கத்தின்  எதென்ஸ்  நகரில் நடைபெற்றது.  சில நாடுகள் தனியாகவும்  சில நாடுகள் இணைந்தும் முதலாவது ஒலிம்பிக்கில்  போட்டியிட்டன.  அமெரிக்கா, கிறீஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து,  ஆகிய நாடுகளின் வீரர்கள் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 11 தங்கம், ஏழு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன்  அமெரிக்கா முதலிடம் பெற்றது. 10 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன்  கிரீன் இரண்டாமிடம் பெற்றது. ஆறு தங்கம்,  ஐந்து வெள்ளி, மூன்று வெள்ளிப் பதக்கங்களுடன் ஜேர்மனி மூன்றாமிடம் பெற்றது.
ஒலிம்பிக்கில்  அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். சோவியத் ரஷ்யா அமெரிக்காவுடன் போட்டி  போட்டு சில ஒலிம்பிக்கில்  முதலிடம் பெற்றது. சோவியத் ரஷ்யா உடைந்த பின்  அமெரிக்காவின்  கையே மேலோங்கியது. 2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது சீனா.  சீன  வீரர்கள்  அதிக தங்கப் பதக்கத்தைப்  பெற்று முதலிடம் பிடித்தனர்.

அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பெற்றது. 36 தங்கம் 37 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடம் பெற்றது. ரஷ்யா மூன்றாமிடத்தையும்,  இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. அதிக தங்கப் பதக்கங்களுடன்  முதலிடம் பிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயற்சிக்கிறது. சீனாவுக்கும் பதிலடி கொடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்கா ஒலிம்பிக்கை எதிர்நோக்குகின்றது.

ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் அதிகமான  போட்டிகள் இருந்தாலும் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்டமுமே  பரபரப்பும் விறுவிறுப்பும் உடையன. நீச்சல், ஜிம்னாஸ்ட்டிக் என்பனவும்  ரசிகர்களைக் கட்டிப் போடவல்லன. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் மின்னல் போல் ஓடும் உசைன் போல்ட் மீது  அதிக  எதிர்பார்ப்பு உள்ளது.  100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும்  உலக சாதனை ஒலிம்பிக் சாதனை செய்த தங்க மகன்.

உசைன்போல்ட்டுக்கு சவாலாகப் புறப்பட்டுள்ளனர் யொஹான் பிளேக். ஒலிம்பிக்  தகுதி காண் போட்டியில் 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
400 மீ @ஜான்ஸன் (அமெரிக்கா) 500 மீ, 10000 மீ பெக@ல (எதியோப்பியா) 400 மீ நேடில்ஸ் யொப் (அமெரிக்கா) ஆகியோரின் உலக சாதனையும்,  ஒலிம்பிக் சாதனையும் இன்னமும்  முறியடிக்கப்படவில்லை.
4 x 100 மீ அஞ்சலோட்டத்தில் ஜமெய்க்காவும் 4 x 400 மீ அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவும் ஒலிம்பிக் சாதனையையும் உலகசாதனையும் தம் வசம் வைத்திருக்கின்றன.


வருடத்தின் அதிசிறந்த சர்வதேச மெய்வல்லுநர்களுக்கான இரண்டு விருதுகளும் இம் முறை ஜமைய்க்கா நாட்டவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் இவ்விழா மொனாக்கோவில் நடைபெற்றபோது அதிசிறந்த  ஆண் மெய்வல்லுநர் விருது உலக குறுந்தூர ஓட்ட சாதனையாளர் உசைன் போல்டுக்கும் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருது ஷெலி-ஆன் பியர்ஸுக்கும் வழங்கப்பட்டன.


இவ்வருடம் மொஸ்கோவில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் போட்டிகளில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை 27 வயதான போல்ட் தக்கவைத்துக்கொண்டதுடன், 200 மீற்றர் ஓட்டப் போட்டிய 19.66 செக்கன்களில் நிறைவு செய்து இவ் வருடத்தின் அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவு செய்தமைக்காக இந்த விருது அவருக்கு சொந்தமானது.


கடந்த ஆறு வருடங்களில் போல்ட்டுக்கு கிடைத்த ஐந்தாவது அதிசிறந்த மெய்வல்லுநர் பட்டம் இதுவாகும்.


27 வயதான உசைன்போல்ட் ரியோ டி ஜெனிரோவில்  2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது ரசிகர்களின் விருப்பப்படி வரும் 2017 உலக தடகள சம்பியன்´ப் போட்டிகளுக்கு பின்னரே ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment