Monday, 15 September 2014

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றிய ஒரு சமூக பார்வை...

கற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே!


பெயர்: உ.சகாயம்
ஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம்.
பெற்றோர்: உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள்.

மனைவி: விமலா.
பிள்ளைகள்: யாழினி, அருண்.
இவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம்.

பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.
அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க
அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க
தொழில்:
எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்
ஆற்றிய பணிகள்:
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர்
நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி
காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி
திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்
கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி
தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்
நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் 

மதுரை மாவட்ட ஆட்சியர்
கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது)
சொந்தம்:
ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉
மிகவும் பிடித்த வாசகம்:
✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
✅உயர உயரப் பற… வானம் வசப்படும்
அடிக்கடி கேட்ட வாசகம்:
1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...
நீண்டகால சாதனை:
👎23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..
👌கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.
👌மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.
👌சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்
மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼
சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼
பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼
கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼
நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼
✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது
✅✅✅உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.
நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.
எதிரிகள்:
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.
சமீபத்து எதிரிகள்:
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.
ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.
பலம்:
நேர்மை
பலவீனம்:
கொள்கை:

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே,குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை..
ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.
ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன?
ஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு - அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் "யூனிட்டிற்கு" "சீல்" வைத்திருக்கிறார்.
அப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், "சீல்" வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், "இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்", என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார்.
தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, "சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க", இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
மதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா? திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார்.
இன்று நடந்து கொண்டிருக்கும் "கிரானைட் ஊழல்" வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம்.
எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.

லட்சியம்:
🎯ஊழல் இல்லா இந்தியா
🎯கிராமப்புற ஏழைகளுக்காகஅனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.
இதுவரை அறிந்த உண்மைகள்:
நேர்மை நிச்சயம் வெல்லும்,சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.👍👍👍
இதுவரை புரியாதது:அடுத்த பதவியும் இடமும்  
விரும்புவது:தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி
விரும்பாதது:முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை
நண்பர்களே..!
நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே? அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்!சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை, நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அறியத்தருவோம்.ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.
எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம்
இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான்
சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை...

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment