Friday, 19 September 2014

இளைஞர்களே, இளைஞிகளே !! அன்புள்ள காதலால் ஆதல் செய்வீர் ..

 காதல் என்பது விரும்பிய பெண்ணை மனம் முடிக்க ஒரு சிறந்த வழி என்றே கழிசடை ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் காதல் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாட பெரும் பட்டாளமே காத்திருப்பது இவர்களின் காமாலை கண்களுக்கு தெரியவில்லை. தெரிந்தாலும் தெரியாதது போல நடிக்கின்றனர். இன்டர்நெட், சின்னத்திரை சீரியல்,  சினிமா போன்ற பல்வேறு ஊடகங்கள் பெண்களின் கற்பை எவ்வாறு லாவகமாக பெண்ணின் சம்மதத்துடன் பறிப்பது என்ற கலையை ஆண்களுக்கு கற்றுத்தருகிறது. செல்போன் , சாட் போன்றவற்றின் மூலம் ஆபாசமான பேச்சுக்களை பேசி பெண்களை தன்வயப்படுத்துகின்றனர்  காமுகர்கள். தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவைதான் இன்றைய காதலில் பிரதானமான அங்கங்களாக இருக்கின்றன. பின்னர் பெண்ணைக் காணவில்லை, வீட்டை விட்டு ஓடி விட்டாள் என பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையிடம் முறையிடுகின்றனர். சிலர் அவமானத்திற்கு அஞ்சி கூனிக்குறுகி தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்

இன்றைய இளைஞர்கள் அவர்களுக்கு காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டு விடுவார்கள்....


  •  பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
  •  நமது நேரம் மீதமாகும்.
  •  நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
  •  மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை
  •  எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
  •  எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
  •  நாள்ளிரவில் எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
  •  நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
  •  எல்லா பெண்கள்களோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
  •  உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது.
  •  ‘இங்கே வா, அங்கே வா’ என்ற தொல்லை இருக்காது.
  •  அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை
  • எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்தது இல்லை)
  •  பணம் மிச்சமாகும்.
  •  தேவதாஸாக வாய்ப்புக்கள் கம்மி.
  •  வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
  •  நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
  •  காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
  •  பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
  •  இஷ்டம் போல ஆடலாம்!

உண்மையிலேயே ஒரு பெண்ணை மணமுடிக்க ஒருவர் விரும்பினால் அப்பெண்ணின் பொறுப்பாளரிடம் சென்று பேசி, அந்த பெண்ணையும் நேரில் பார்த்து பின்னர் அப்பெண்ணுக்கும் அந்த நபரை பிடித்திருக்குமானால் மணமுடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தான் இஸ்லாமிய வழிமுறை. 

"முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்." - (நூல்: நஸயீ 3183)

மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.
‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.

இவ்வாறு செய்கின்ற போது ”பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப் படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.”

அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம்
செய்து கொடுக்க முன் வர வேண்டும்



இத்தகைய வழிமுறைகளின் வழியாக மட்டுமே பெண்கள் தம் கற்பை பாதுகாத்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கும் இத்தகைய அறிவுரைகளை கூறி வளர்க்க வேண்டும். மாறாக தம் பிள்ளைகளுடன் அமர்ந்து சினிமா , காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் பெற்றோர்கள் பிற்காலத்தில் தம்முடைய பிள்ளைகள் காதல் என்ற பெயரில் ஏற்படுத்தும் அவலங்களையும் சந்தித்து தான் ஆக வேண்டும். நோய் வரும் முன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். ஏனெனில் இன்றைய காதல் என்பது செல்போன், சாட் அல்லது சில சந்திப்புகளில் ஆரம்பித்து இரவு நேரங்களில் சென்னை மெரீனா பீச்சில், ஈ.சி.ஆர் சாலையில், திருச்சி முக்கொம்புவில் அல்லது இன்னபிற நகரங்களில் தனிமையாக சந்திக்க வாய்ப்பிருக்கும் பகுதிகளில் முடிகிறது. காதலின் முடிவு கற்பை இழத்தல் மட்டுமே. ஆகையால் பெண்களை போகப் பொருளாக்கும் காதலை ஒழிப்போம். கண்ணியமான நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாப்போம்.

பெற்றோர்களே! சமூக அக்கறையுள்ளவர்களாக நமது பிள்ளைகளை வளர்ப்போம். காதல் என்ற சாக்கடையில் விழாமல் அவர்களை கண்ணியமிக்கவர்களாக வார்த்தேடுப்போம். இளைஞர்களே, இளைஞிகளே  சமூக அக்கறையுள்ளவர்களாக நாம் வாழ்ந்து இந்த தேசத்திற்கும் சமூகத்திற்கும் நன்மை செய்வோம்..

ஆக்கம் மற்றும் தொகுப்பு :  அ .தையுபா அஜ்மல்.

1 comment: