There is a link, all the korean know the story of prince Suro (Kim Suro) who founded Geumgwan Gaya. According to the legend Prince Suro refused the suggestions of the courtiers to marry a woman and told them his future wife will be selected by the Heavens. He dreamed of the arrival of his bride and send a escort to the island Mangsam to wait for the boat. His bride was a princess from a faraway kingdom called Ayodhya (Uttar Pradesh) India.But this is wrong. Actuall she is from India Tamilnadu in Madurai (Pandiya nadu) Region. Her parents get an order from god to send her daughter to prince Suro who was not married, so she arrived with a boat, gold, silver,silk and stones and married prince Suro in the year 48 CE, she was later called Queen Heo or Heo Hwang-ok, she was the first Queen of Gaya. She was mentioned in Samguk Yusa, in a 13th-century Korean chronicle. According to that she may have spoken Tamil, because Tamil was a strong language and nation/ empire at that time in South India. She may were a popular Queen and the citizen may took over some of her words because of beauty or to impress her and like that 'amma' `eoppa` and 'aigoo' came to korea. Most tamil people know that 'aigoo' or 'ayo' is the wife of sannian the god of unluck, if somebody says 'ayo' it means we invite the minor deity 'ayo' and she always come with her huusband 'sannian' who brings misfortune and unluck in the house. 'aigoo' is the OMG in korea and has the same meaning as 'ayo'. So like that we come to know how an ancient expression in tamil which is the name of a hindu deity come to korea. Maybe the queen expressed the word and it become popular.
According to the Samguk Yusa, Heo's parents had a dream of King Suro. The dream showed that the king had not yet found a queen. Her father then told her to go to him. She arrived on a boat with gold, silver, and a tea plant. Before marrying the king, she took off her silk trousers and prayed to the mountain spirit.
A tomb believed to be Heo's lies near that believed to be her husband's, in Gimhae, South Korea. A pagoda traditionally held to have been brought to Korea on her ship is located near her grave. The Samguk Yusa reports that the pagoda was erected on her ship in order to calm the god of the ocean and allow the ship to pass. The unusual and rough form of this pagoda, unlike any other in Korea, may lend some credence to the account.
The Samguk Yusa also records that a temple was built in honor of Heo and her husband by King Jilji in 452. The temple was called Wanghusa, or "the Queen's temple." Since there is no other record of Buddhism having been adopted in 5th-century Gaya, modern scholars have interpreted this as an ancestral shrine rather than a Buddhist temple.
Members of both the Heo lineages (including the clans of Gimhae, Hayang, Taein, and Yangcheon{=Gongam}) and the Gimhae Kim lineage consider themselves descendants of Heo Hwang-ok and King Suro. Two of the couple's ten sons chose the mother's name. The Heo clans trace their origins to them, and regard Heo as the founder of their lines. The Gimhae Kims trace their origin to the other eight sons. They request their childens to call Amma(Mother) and Appa(Father).
Recently, Jung Nam Kim from the Tamil Language Association in South Korea attended the Tamizh Semmozhi Maanadu (World Tamil Conference) and spoke about how over 500 words in Tamil and Korean use similar pronunciation and have the same meaning.
The tomb of Queen Heo Hwang-ok is located at 1 Garak Avenue 190th Street/Garak-ro 190beon-gil, Gusan-dong 120-beonji, Gimhae City, Southern Gyeongsang Province - not far from her husband's tomb, which is located at 26 Garak Avenue 93rd Street/Garak-ro 93beon-gil, Seosang-dong 312-beonji in the same city.
More Deatils..
தாய்மொழியை மட்டுமே பயின்று , கொரிய மக்கள் நம்மை விட பொருளாதாரத்தில் பல மடங்கு முன்னேறிய நாடாக கொரியா திகழ்கிறது.தென் கொரியாவில் முழுக்க முழுக்க அதாவது 100 விழுக்காடு கொரியன் மொழியை மட்டுமே அமமக்கள் பயன்படுதுகின்றனர் .
கொரிய மொழியில் தாய், தந்தை என்பதற்கு, அப்பா அம்மா என்ற தமிழ் சொற்களையே கொரிய மொழியாக பயன்படுதுகின்றனர் . மரியாதையாக அழைக்க வேண்டுமெனில் அம்மாஜி அப்பாஜி என்று அழைகின்றனர்.
பண்டைய காலத்தில் தமிழ் இளவரசியை, கொரிய அரசர் மண முடித்தாராம் . குழப்பமாக இருக்கிறதா? வெகு சுவாரஸ்யமான கதை அது. கொரிய வரலாற்று இதிகாசம் அதனை கொள்ளலாம். முழுமையாக புரிய காலச்சக்கரத்தில் ஏறி 2000 ஆண்டுகள் பின்னோக்கி பயணிப்போம்!
ஹியோ ஹவாங் ஓக்கே ராணியின் வரலாறு
அது கி.மு. 48-ம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கனவில் பூத்தது காதல் பூ. கொரியா இளவரசனுக்கும் அப்படியே. காதலில் விழுந்த இளவரசி பெற்றோர் சம்மதத்துடன் நிறைய தங்கம், வெள்ளி, தேயிலை, பட்டு உள்ளிட்ட சீதனங்களுடன் படகில் நெடுந்தொலைவு கடல் வழி பயணம் மேற்கொண்டு கொரியாவைவும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைகிறாள். மன்னன் சுரோ கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 10 மகன்கள் இரு மகள்கள். தனது 157-வது வயதில் ராணி இறக்கும்போது தங்கள் குழந்தைகளிடம் அம்மா, அப்பா என்று உச்சரித்துவிட்டு இறக்கிறாள்.
அந்த ராணியின் பெயர்தான் ஹியோ ஹவாங் ஓக்கே. இது கொரியாவின் (இன்றைய தென் கொரியாவின் வரலாற்றுக் கதை. 1206 - 1289-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் மூன்று பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பு ‘சாம்குக் யுசா’ (Samguk yusa) இந்த வரலாற்றை விவரிக்கின்றது. கொரிய மக்கள் இன்றைக்கும் ராணியை தெய்வமாக வழிபடுகிறார்கள்.
ராணி இந்தியாவில் இருந்து கிளம்பிய இடம் ‘அயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்று கருதப்படுகிறது. அதனால், விக்கிபீடியா உள்ளிட்ட அநேக தற்கால தரவுகள் அதனை ‘அயோத்தி’ என்றே பதிவு செய்கின்றன. சமீபத்தில் ராணியை போற்றும் வகையில் இந்திய வெளியுறவுத் துறையும் தென் கொரியா வெளியுறவுத் துறையும் இணைந்து அயோத்தியில் ராணிக்கு மணி பிரமாண்டமான மணி மண்டபம் கட்டவும் முடிவு செய்துள்ளன.
இங்குதான் எழுந்திருக்கிறது சர்ச்சை...
கனவில் வந்த இளவரசனை தேடிச் சென்ற இளவரசி ஒரு தமிழச்சி என்று ஏராளமான ஆதாரங்களையும் வரலாற்றுத் தரவுகளையும் முன்வைக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை.
“ராணி ஹியோ ஹவாங் ஓக்கே பாண்டிய நாட்டின் ஆய் குலத்தை சேர்ந்தவர் என்று நிருபிக்க , சீன தரவுகளில் உள்ள கொரிய தடயங்களையும்,கடல் வழி பயணங்களையும் ஆய்வு செய்து தருகிறோம். தமிழகத்தில் ‘அயை’ என்ற தாய் தெய்வ வழிபாடுகள் இருந்தன.
தமிழ்க் குடில்களும்... ஊறுகாயும்!
தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த தலைவர் முனைவர் கண்ணன் , பேராசிரியர் நாகராஜன், கடல் ஆய்வாளர் பாலசுப்ரமணி ஆகியோர் இதுகுறித்து முன் வைக்கும் கருத்துகள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை.கடல் ஆராய்ச்சியாளரான பாலசுப்பிரமணியன் (ஒரிசா பாலு) “இதுவரை செய்யப்படஆய்வுகளில் கொரிய நாட்டு மொழி மற்றும் பண்பாடு, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுடன், கடல் வழியாக இணைக்கப்பட்டு, அதன் உறவுகள் நெருக்கமாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாண்டிய நாடு.
தமிழகத்தில் ‘அயை’ என்ற தாய் தெய்வ வழிபாடுகள் இருந்தன. மதுரைத் தமிழ்க் கூத்தனார், கடுவன் மள்ளனார் ஆயி என்ற கடையேழு வள்ளைப் பற்றிப் பாடி உள்ளதும் பாண்டியத் தொடர்பை உறுதி செய்கிறது.
மதுரைத் தமிழக் கூத்தனார், கடுவன் மள்ளனார் ஆயி என்ற கடை ஏழு வள்ளலை பற்றி பாடி உள்ளதும் பாண்டியத் தொடர்பை உறுதி செய்கிறது. தவிர, கடல் வழி பயணங்களால் உலகின் கிழக்கையும் மேற்கையும் இணைத்தவர்கள் பாண்டியர்கள். அதற்கு அசைக்க முடியாத வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.”
தமிழர் பண்டிகை
தமிழர் பண்டிகையான பொங்கலைப் பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.சமீபத்தில்தான் சீன உணவின் தாக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்புவரை அவர்களின் முழு உணவும் அரிசி சார்ந்து இருந்தது. ஊறுகாய் இல்லாத உணவு அரிது. 1960கள் வரை அவர்களின் வீடுகள் தமிழர்களின் குடிசைகளைப் போலவே இருந்தன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் கண்ணன், “கொரிய பெண்கள் தமிழக பெண்களைப் போலவே கடலில் மூழ்கி முத்துக் குளிக்கிறார்கள். கடலில் இறங்கும்போது அம்மா என்கிற சொல்லைத் சொல்ல அவர்கள் தவறுவது இல்லை. கொரியா பண்பாடுகளில் தமிழக சாயல்கள் அதிகம். கொரிய மொழியின் நெடுங்கணக்கு தமிழ் மொழியில் உள்ளது போன்றே இருக்கிறது.அவர்களின் உழவாரமும் நம்மைப் போன்றதே. அங்கும் அத்தை, மாமன், தாய் மாமன் முறைப் பெண்களைத்தான் மனந்துகொள்கிறார்கள். ராணி இங்கிருந்து மீன் சின்னம் மற்றும் சூலத்தை மரக்கலத்தில் கொண்டு சென்றதாக கொரிய வரலாற்று நூல் சாம்குக் யூசா குறிப்பிடுகிறது.”
கடல் தரும் சான்றுகள்!
கடல் ஆராய்ச்சியாளரான பாலசுப்ரமணியன், “இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் கொரியா நாட்டு மொழி, பண்பாடுகள் தமிழ் மொழி, பண்பாடுகளுடன் கடல் வழியாக இணைக்கப்பட்டு அதன் உறவுகள் மிகவும் நெருக்கமாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கடற்கரைகளில் கிடைக்கப்பெற்ற சீன தரவுகளில் கொரிய தொல்லியல் கூறுகள் காணப்படுகின்றன. கொரியா வரை உள்ள கடல் வழிகளில் அந்தமானில் துவங்கி இந்தோனோஷியா, மலேசியா , பிலிப்பைன்ஸ் வரை உள்ள வழிகளில் தமிழ் வணிகர்களின் தாக்கங்களும் கொரிய உறவை வலுப்படுத்துகின்றன. தவிர, ஜப்பானில் உள்ள தமிழ் தொடர்புகளும் , வட மற்றும் தென் அமெரிக்க தமிழ் கடல் சார் உறவுகளும் கொரிய நாட்டு கடல் சார் தொடர்புகளை உறுதி செய்கிறது.
தமிழக கடற்கரை சில ஆயிரம் வருடங்களாக தென் கிழக்கு ஆசியாவுடன் கடல் சார் தொடர்புகளை தொடர்ந்து வைத்திருப்பதை அனைவரும் அறிவர்.
கொரிய அரசிக்கு மணிமண்டபம் அயோத்தியிலா ? அல்லது தமிழகத்திலா ?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. ஆனால், அறியாத ஒரு தமிழகம் சார்ந்த சர்ச்சையும் அங்கு இருக்கிறது. அது அயோத்தியாவில் ராணி ஹியோ ஹவாங் ஓக்கேவுக்கு (Heo hwang ok) மணி மண்டபம் கட்டுவது.
ராணி யாருக்கு சொந்தம்? தமிழகத்துக்கா? அயோத்திக்கா?
அதில்தான் சர்ச்சை இப்போது. இன்றும்கூட தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரிய மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து கொரியாவுக்கு தொடர்ந்து கடல் வணிகம் நடந்துக் கொண்டிருக்கிறது.கொரியாவிலும் தமிழக மக்கள் நிறைய பேர்கள் வசிக்கிறார்கள்.
நாங்கள் சொல்லும் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழக அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் விரிவான ஆய்வுகளை நடத்தி இதனை உறுதி செய்துக்கொள்ளட்டும்.அதன் பின்பு அரசி ஹியோ ஹவாங் ஓக்கேவுக்கு மணி மண்படம் அயோத்தியில் கட்டுவதா தமிழகத்தில் கட்டுவதா என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.”
கொரிய மொழி ஆராய்ச்சியாளரும் தமிழ் அறிஞருமான ஜங்க் நாம்கிம் தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்கால உறவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அவரது பதிவுகளின்படி இன்றும் கொரியாவில் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்கிறார்கள். ‘புதியது’ என்பதை ‘புது’ என்கிறார்கள். ‘நீ திரும்ப வா’ என்பதை ‘நீ இங்கே பா’ என்கிறார்கள். ‘உயரம்’ அங்கே ‘உரம்’. ‘புல்லை வெட்டு’ என்பது அங்கே ‘புல் வேடா’. ஆச்சர்ய சந்தர்ப்பங்களில் ‘அச்சச்சோவும்’, நிம்மதி பொழுதுகளில் ‘அப்பாடா’வும் அங்கே வெகு சகஜம். இப்படி அங்கே நிறைய தமிழ் வார்த்தைகள் 500 க்கும் மேல் புழக்கததில் இருக்கின்றன.
இங்கு நாம் மானகெட்ட தமிழர்களா!! மம்மி டாடி என்று அழைபதிலே பெருபான்மையான தமிழர்கள் பெருமிதம் கொள்கிறோம்.
வாழ்க தமிழ் மொழி !! வளர்க எம் பாண்டிய நாடு....
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment