சின்ன வயதில் திருவிழாக்கள் என்றாலே சந்தோஷம் சொல்லிமாளாது. எங்கள் பக்கம் பங்குனியில் ஆரம்பிக்கும் கோவில் திருவிழாக்கள் ஆடி மாதம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் பூக்குழி திருவிழா, முளைப்பாரி திருவிழா என்று விழாக்கள் களைகட்டத் துவங்கி விடுகின்றன. அதிலும் கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில் முளைப்பாரி திருவிழா முக்கியமான ஒன்று. உலகமயமாதல் சூழ்நிலையில் அனைத்துமே மாறி வருகிறது. அப்படி மாறாத தன்மையோடு இருப்பவைகள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களைச் சொல்லலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இத்திருவிழாக்களின் போது கிராமங்கள் தனி கலையோடு தான் காட்சி அளிக்கிறது.
தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் பூக்குழி திருவிழா, முளைப்பாரி திருவிழா என்று விழாக்கள் களைகட்டத் துவங்கி விடுகின்றன. அதிலும் கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில் முளைப்பாரி திருவிழா முக்கியமான ஒன்று. உலகமயமாதல் சூழ்நிலையில் அனைத்துமே மாறி வருகிறது. அப்படி மாறாத தன்மையோடு இருப்பவைகள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களைச் சொல்லலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இத்திருவிழாக்களின் போது கிராமங்கள் தனி கலையோடு தான் காட்சி அளிக்கிறது.
தமிழர்களின் வாழ்க்கையில் முதன்மையான நிகழ்ச்சிகளில் திருவிழாவும் ஒன்று. பொதுவாக கிராம காவல் தெய்வ வழிபாடுகள் என்பது நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு, ஆண்டு வழிபாடு என்ற வகைகளில் தான் கொண்டாடப்படுகிறது. நாள் வழிபாடு என்பது கிராம தெய்வங்கள் இருக்கும் இடத்தை கடக்கும் பொழுதோ, அல்லது கிராம மக்களில் தனிப்பட்டவர்களுக்கு ஒரு சிறு சங்கடங்கள் வரும் பொழுதோ அம்மனை வழிபடுவார்கள். இந்த வழிபாட்டில் கிராம மக்கள் எந்த செலவும் செய்வதில்லை.
சிறப்பு வழிபாடு என்பது வருடத்தில் முக்கிய தினங்கள் என்று சொல்லப்படுகின்ற பொங்கல் விழா, தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் நடத்தப்படுகிறது. ஆண்டு வழிபாடு என்பது தான் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியமாக, முழு ஈடுபாட்டோடும் கொண்டாடப்படுகின்ற விழா. இந்த விழாக்களின் பொழுது தான் கிராம காவல் தெய்வங்களை நன்கு அலங்கரிக்கப்பட்டு 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா மாரியம்மன், எல்லைக்காத்தம்மன், எக்கலாதேவியம்மன், காளியம்மன், முண்டக்கன்னியம்மன், செங்கோணியம்மன், முத்துமாரியம்மன் போன்ற தெய்வங்களை மகிழ்விக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாள் விழாவில் ஆண்கள் காவல் தெய்வங்களை அலங்கரித்து அதனை கிராமம் முழுவதும், ஊர்வலம் எடுத்து வருதல், விழா ஏற்பாடுகளை செய்தல் போன்ற காரியங்களை கவனிப்பார்கள். ஆனால் பெண்களால் உருவாக்கப்பட்டு, புஜை செய்யப்பட்டு பெண்களால் அழிக்கப்படும் விழா முளைப்பாரி எடுத்தல் விழாவைச் சொல்லலாம்.
இப்படி திருவிழா ஆரம்பித்த முதல் நாளில் இடப்படுகின்ற முளைப்பாரி பயிர் திருவிழாவின் 9ம் நாள் அன்று பெரிய அளவில் வளர்ந்து அற்புதமாக காட்சி அளிக்கும். 9ம் திருவிழாவின் பொழுது, உருவாக்கபபட்ட முளைப்பாரிகளை அதன் உரிமையாளர்களான பெண்கள் தங்களது தலையில் சுமந்து கிராம தெய்வங்களோடு ஊர்வலம் வருவார்கள். பின் அம்மனுக்கு புஜை செய்த பின் முளைப்பாரிகளை ஊரில் இருக்கும் குளத்தில் மொத்தமாக கொண்டு போய் போட்டுவிடுவார்கள். இது தான் முளைப்பாரி திருவிழாக்களின் வரையறை. இந்த வரையறை சில கிராமங்களுக்கு வேண்டுமானால் மாறுபடலாம். ஒரு சில கிராமங்களில் பூக்குளி நடைபெறும் பொழுது எடுத்துச் செல்வார்கள், சில கிராமங்களில் முளைப்பாரிக்கு என்று தனியாக விழா நடத்துவார்கள்.
திருவிழா அன்று கையிருப்பைப் பொருத்து நாடகம். கரகாட்டம், ஒயிலாட்டம், திரைப்படம் என எதாவது ஒன்று இரவு முழுவதும் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக வாணவேடிக்கையும் உண்டு. எல்லாருமே உறவுகள்... மனசுக்குள் கோபதாபங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து சந்தோஷமாக எல்லாரும் நின்று செவ்வாய் கொண்டாடுவது என்பதில் ஒரு அலாதி சுகம்தான்.
என்றோ நாங்கள் பற்றவைத்த நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...
திருவிழாக்கள் என்ற தலைப்பில் சிலவற்றைப் பற்றி பகிர நினைத்து எங்க ஊர்த்திருவிழாவிலேயே நின்றுவிட்டது. மற்றொரு முறை திருவிழாக்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment