Sunday, 8 March 2015

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி–பங்குனி திருவிழா !! ஒரு சிறப்பு பார்வை..

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் மாசி–பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி மொத்தம் 36 நாட்கள் நடைபெறும். திருவிழாவின் போது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
தமிழக அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி - பங்குனித்திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் காரைக்குடி மீனாட்சிபுரத்திற்கு 8 வயது சிறுமியாக அன்னை முத்துமாரியம்மன் வந்தாள். அன்னையின் மேனி முழுவதும் அம்மை படர்ந் திருந்து சில நாள்களில் பெரிய அம்மையாக உடலெல்லாம் முத்து முத்தாக முளைத் தது. படுத்த படுக்கையான நிலையில் சிறுமி வடிவில் இருந்த அன்னை தனது அருள் வாக்கினாலும், மகிமையாலும் மக்களுக்கு தான் முத்துமாரியம்மன் என்பதை புரிய வைத்து மறைந்தாள். அன்னைக்கு லலிதா முத்துமாரியம்மன் என்ற பெயரும் உண்டு.
இவ்வாறு மகிமைவாய்ந்த அம்மனுக்கு இக்கோயிலில் மாசிமாதம் இறுதியில் தொடங்கி பங்குனியில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தவிருக்கும் பக்தர்களும் காப்புக்கட்டிக்கொண்டு தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
அத்தனை சிறப்பு பெற்ற இந்த கோவிலின் இந்த ஆண்டுக்கான திருவிழா  மார்ச் 10-ந்தேதி அதிகாலை 4.14 மணிக்கு கணபதி பூஜையும், 5.45 மணிக்கு கொடியேற்றமும், 5.50 மணி முதல் 6.24 மணிக்குள் அம்மனுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெறுகிறது.
மார்ச் 17-ந்தேதி இரவு திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து வருத லும், மார்ச் 18-ந்தேதி திருக்கோயில் காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்து வருதல் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதலும் நடைபெறும். அன்று மாலை திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி ஊர்வலம் கோயிலிலிருந்து புறப்பட்டு பருப்பூரணியில் செலுத்துதல் நடைபெறும். இரவு காப்புப்பெருக்குதலும், மார்ச் 19-ந்தேதி இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதியுலாவும், மார்ச் 20-ந்தேதி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
மதுக்குடம்
நவதானியங்களையும் அரைத்துப் புளிக்க வைத்து அதை ஒரு குடத்தில் ஊற்றி ஊற வைப்பார்கள்தானியக் கரைசல் புளித்துப் பொங்கஅதில் ஊமத்தங்காய்களையும் அரைத்துப் போடுவார்கள்இதனால் குடத்தில் உள்ள தானியக் கரைசல் புளித்துப் பொங்கும்இப்படிப் பொங்கும் குடத்தை 'மதுக்குடம்என்கிறார்கள்.
முளைப்பாரி
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் தட்டாம் பயறுபாசிப்பயறு முதலியவற்றின் விதைகளை நெருக்கமாகத் தூவிஅதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள்தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள்எனவேபயறுவகை விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்துவளர்ந்து நிற்கும்இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்இதையே 'முளைப்பாரிஎன்கிறார்கள்.
கரகம்
நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள்  அம்மனிடம் கரகம் எடுத்து வருவதாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகள்  கரகம் பிரார்த்தனையை நிறைவேற்றுவார். கரகத்தை நன்றாக அலங்காரம் செய்து பட்டுச்சேலை சுற்றி, பூ வைத்து,  இப்பானையை நோன்பிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்இந்த பிரார்த்தனையை அதிகமாக செய்கிறாரக்ள். திருமணத்துக்காக இந்த பிரார்த்தனை செய்யப்படுவதால், இதை "குடை கல்யாணம்'' என்றும் அழைக்கிறார்கள்

பால்குட பெருவிழா

இதையடுத்து புதன் காலை  பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெரும் . முன்னதாக அதிகாலையில் இருந்தே காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் நேர்த்திகடனாக கொண்டு சென்ற பால் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த ராட்சத அண்டாவில் நிரப்பப்படும்.
பின்னர் மின் மோட்டார் மூலம் அந்த பால் முழுவதும் கருவறையில் உள்ள முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். விழாவில் கைக்குழந்தைகள் முதல் முதியோர் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும்  பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் பால் காவடி, பறவைக்காவடி, அக்னி காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர் .சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த பக்தர்கள் லட்சக்கணக்கில் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தஉள்ளனர் .
மலைபோல் குவியும்  மாலைகள்
நகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ததால் அந்த பகுதி முழுவதும் பால் மணம் கமலும் . மேலும் பக்தர்கள் அம்மனுக்கு செலுத்ததும்  மாலைகள் கோவில் பகுதியில் மலை போல் குவியும்
 போக்குவரத்தில் மாற்றம்.
.36 நாள்கள் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மூலம் சுகாதார பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறைது. பாலதண்டாயுதம் செய்திருக்கிறார்.இந்த திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும்..
மேலுமபேருந்துகள் ஆலங்குடியார் வீதி, சத்தியன் திரையரங்கம், கீழத்தெரு, டி.டி. நகர் வழியாக நூறடிச்சாலை சென்று புதிய பஸ்நிலையத்தை அடையவேண்டும். கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம் போக்குவரத்து நடைபெற போலீஸாருக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். திருவிழா நாள்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமூகத்தாரின் மண்டகப்படி நடைபெறும். இதில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.  விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.. 
அக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment