Thursday, 5 March 2015

ஹைதராபாத் நகரில் ஒப்பந்த திருமணம் பற்றிய சமூக விழிப்புணர்வுப்பார்வை..

ஹைதராபாத் நகரில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் ஏழைப் பெண்கள் குறிவைத்து ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றெல்லாம் பழமொழிகள் உண்டு.மொத்தத்தில் இருமனங்களும் கலந்து ஒருமனமாகி திருமணம் செய்து கொள்கின்றனர். ஓர் ஆணும், பெண்ணும் உணர்வாலும் உடலாலும் ஒருங்கிணையும் அழகான பந்தம் "திருமணம்". இதனை ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் கேவலப்படுத்துகின்றனர் வெளிநாடுகளைச் சேர்ந்த சில பணக்கார கணவான்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம், லிவிங் டுகெதர் என இன்றைக்கு பல திருமணங்கள் இருக்க தற்போது "ஒப்பந்த திருமணம்" இந்திய மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

வெளிநாட்டு ஆண்கள்!
ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை முஸ்லீம் பெண்களை திருமணம் செய்து கொண்டு, சில வருட படிப்பு காலம் முடிந்து தாயகம் திரும்பும் போது அவர்களை விவாகரத்து செய்துவிட்டுச் சென்றுகின்றனர். இதனால் பாதிப்பிற்கு ஆளாவது என்னவோ ஏழை சிறுமிகள்தான்.
ஹைதராபாத் நகரில்!

 ஏழை பெண்களை, குடும்பங்களை குறி வைத்து நடத்தப்படும் ஒப்பந்தத் திருமணம் என்ற மோசடி தற்போது ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினர் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த சில தரகர்கள் உதவி செய்து வருகின்றனர்.

உள்ளூர் புரோக்கர்கள் !
வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கும் வாலிபர்கள், இந்தியாவில் இருக்கும் வரை தங்களுக்கு என்று ஒரு துணையைத் தேடிக் கொள்கின்றனர். அதாவது இங்கு இருக்கும் வரை அந்தப் பெண் தங்களுக்கு போதும் என்கின்றனர். இதற்காக ஒப்பந்தத் திருமணத்துக்கு அவர்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே பல புரோக்கர்கள் உள்ளனர்.


கைமாறும் பணம் !
அந்த புரோக்கர்கள், தங்களுக்கு தெரிந்த பெண்கள் மூலம் இளம் பெண்களுக்கு, குறிப்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வலை வீசுவார்கள். ஆனால் ஒப்பந்தத் திருமணம் என்பதை மறைத்து, திருமணம் செய்து விடுகின்றனர். இதற்காக புரோக்கர்கள் பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தங்களுக்கு உதவும் பெண்களுக்கு ஒரு பங்கை கொடுக்கின்றனர்.



மணப்பெண்ணுக்கு பணம்!
 அதைத் தவிர பெண்ணின் குடும்பத்துக்கு, திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்கள் தனியாக பணம் கொடுக்கின்றனர். குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களையே இவர்களை குறிவைத்து செயல்படுகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.





திருமண உறவு !
மேலை நாடுகளை பொருத்தவரை திருமணம் உறவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பிடித்தால் சேர்ந்து வாழ்வதும் பிடிக்காவிட்டால் மற்றொரு நபரை தேடிச் செல்வதும் சர்வசாதரணமான விசயம் ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை திருமண உறவில் இந்த பழக்கவழக்கங்கள் இருந்தாலும், பெரும்பாலாக நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவின் ஹைதராபாத்தில் தான் ஒப்பந்த திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன.


திருமணத்தில் வராது !
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஆடவர்கள், சில மாதங்களுக்கு இங்கு தங்குகின்றனர். அப்போது சுற்றுலா, மது என்று பொழுதை கழிக்கும் அவர்கள் இந்திய பெண்களை ஒப்பந்த முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். கெட்டிமேளம் முழங்க தாலி கட்டினாலும் இந்த திருமணத்தில் திருமண பதிவு இடம்பெறாது.

கை கழுவும் ஆண்கள் திருமணம் !
முடிந்த கொஞ்சம் மாதத்திற்கு மட்டும், அந்த வெளிநாட்டு ஆடவர் தன் புது மனைவியோடு உல்லாசமாக ஊர் சுற்றி திரிவார்.பின்னர் நாட்கள் உருண்டோட, மாதங்கள் செல்ல மணமகன் வெளிநாடு செல்லும்போது மனைவியை கைகழுவி விடுகிறார். இறுதியில், அப்பெண்களுக்கு குறைவான பணமும், கொஞ்சம் நாட்கள் பணக்கார வாழ்க்கை மட்டுமே மிஞ்சுகிறது.


தெரிந்தே குழியில்!
 ஒப்பந்த திருமணத்தில் ஏழைப்பெண்கள் ஏமாறுகின்றனர் என்று சொன்னாலும், சில குடும்பங்கள் இந்த திருமணம் பற்றிய விசயங்கள் தெரிந்திருந்தும் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். அன்றாடம் பிழைப்பு நடத்த கஷ்டப்படும் குடும்ப சூழலில் வாழும் பெண்கள், கொஞ்ச நாளைக்காவது பணக்கார வாழ்க்கையும், குடும்பத்திற்கு பண உதவி கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் இந்த திருமணத்தை செய்து கொள்கின்றனர்.

ஏமாறும் பெண்கள் !
இதனை ஒருவகை விபச்சாரம் என்று கூட சொல்லலாம், ஒப்பந்த திருமணம் என்ற பெயரில், ஒப்பந்த விபச்சாரம் செய்கிறார்கள் என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வாறு நடக்கும் அவலங்களை கண்டறிந்து, அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏமாறும், ஏமாற்றப்படும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகும்.

தொகுப்பு  : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment