Wednesday, 11 January 2017

ஜல்லிகட்டுக்கு முதல் முதலில் தடை வந்தது எப்போது ?

  • Related imageஜல்லிகட்டுக்கு முதல் முதலில் தடை வந்தது
    எப்போது தெரியுமா
    தெரியுமா தெரியுமா ...
    சாட்சாத் ....

    இரும்பு மனுஷி ...
    புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ..
    தமிழக முதல்வராக செங்கோல் ஏந்தி
    ஆட்சி செய்து கொண்டிருந்த போது தான்
    .
    29.03.2006 அன்று ....
    .
    ஜல்லிக்கட்டு புகழ் அலங்காநல்லூர் இருக்கும் அதே மதுரை மாநகரத்தில் இருக்கும்
    உயர்நீதி மன்றத்தில்
    நீதிபதி பானுமதி அவர்களால் அன்று தான் தடை செய்ய பட்டது
    .
    ஏப்ரல் மாதம் தீர்ப்பு வந்ததால் அந்த வருட பொங்கல் ஜல்லிக்கட்டு தப்பி பிழைத்து நடந்துவிட்டது
    .
    அதிமுக ஆட்சியில் 2006-லேயே, ஜல்லிக்கட்டு, காளை வண்டி பந்தயம் போன்றவற்றை நடத்தக் கூடாது என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். என்பது செய்தி....

    இந்நிலையில்
    ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி ஒருவர் தொடுத்த வழக்கில் ..
    வந்தவனுக்கு ஒண்ணு ...வராதவனுக்கும் ஒண்ணு என்பதை போல
    ரேக்ளா ரேசுக்கும் ...ஜல்லிகட்டுக்கும் சேர்த்து தடை விதித்தார் நீதிபதி பானுமதி அவர்கள்
    .
    ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகாவை குறை சொல்லும் ரத்தத்தின் ரத்தமே ...தொடர்ந்து படிங்க....

    இப்படி 2006 தடையை எதிர்த்து அதே மாதம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ..நல்ல காரியம் தான்....

    பிறகு தேர்தல் ...திமுக வெற்றி...

    2006 தடை இருந்த போதும் மறு பரிசீலனை செய்ய கோரி மனு கொடுத்து சிறப்பு அனுமதி பெற்று 2007ல் ஜல்லிக்கட்டு நடத்தியது ..திமுக....

    பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால் ..
    விலங்குகள் நலவாரியம் 2007ல் மூக்கை நுழைத்து
    கொடுக்க பட்ட சிறப்பு அனுமதிக்கு எதிராக
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது...

    இதை தொடர்ந்து ...மீண்டும் தடை
    தடை விதிக்க பட்ட நாள் 11.1.2008.....

    இதை எதிர்த்து 13.1.2008-ல் மேல்முறையீடு
    தமிழக அரசால் செய்யப்பட்டது.
    15.1.2008-ல் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த
    உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
    உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிகட்டை நடத்த அனுமதி பெற்ற கட்சி திமுக ...
    .
    2009-இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நெறிப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது..அப்போதைய திமுக ஆட்சியால்
    பல நெறிபடுத்தும் வரைமுறைகள் கொண்டுவரப்பட்டது ...(இதன் காரணமாக 3000 இடத்தில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு வெறும் 34 இடத்தில் மட்டுமே நடந்ததாக வரலாறு ..பலர் நிபந்தனைகளை நடைமுறை படுத்த முடியாமல் ஜல்லிகட்டு நடத்துவதை நிறுத்தி கொண்டனர் )
    .
    இந்த நிபந்தனை ஜல்லிக்கட்டு திமுக ஆட்சியில் இருந்த 2010,2011 மற்றும் அதிமுக ஆட்சியில் இருந்த 2013,2014 வரை நடந்தது
    .
    இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி இழந்த திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஜெயராம் ரமேஷ் தலைமையில் இருந்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 2011 ல் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையையும் இணைத்து சுற்றறிக்கை வெளியிட்டது....

    அதை தொடர்ந்து திமுக கொடுத்த அழுத்தம் காரணமாக ...
    2014ல் ..ஜெயராம் ரமேஷை தொடர்ந்து பதவி ஏற்ற ஜெயந்தி நடராஜன் காளைகளை பட்டியலில் இருந்து நீக்கி அறிக்கை அளித்தார் ..
    இருப்பினும் அதை நீதி மன்றம் ஏற்று கொள்ள மறுத்துவிட்டது
    .
    இதனிடையே ...ஜல்லிக்கட்டு நிபந்தனைகள் கடைபிடிக்க படுகிறதா என்று கண்டறிய ..உச்ச நீதிமன்றத்தால் அனுப்பபட்ட குழு 2014-ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையின் வாலை திருகுவது உள்ளிட்ட வதை செய்வதுபோன்ற புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
    இந்த குழுவில் Peta ஆதரவாளர்கள் இருந்தனர் என்பது குற்றசாட்டு இதனடிப் படையில்தான் 7.5.2014-ல் உச்ச நீதிமன்ற அமர்வு நிரந்தர தடை விதித்தது. இதனால் 2015-ல் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
    .
    peta உறுப்பினர்கள் கொண்ட குழு ஜல்லிகட்டுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதை அப்போதைய ஆட்சி கண்டுகொள்ள வில்லை என்பது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன் வைக்கும் குற்றசாட்டு அப்போது யார் ஆட்சி என்று யாரும் விளக்க தேவை இல்லை என்று நம்புகிறேன்
    .

    2014 தேர்தலில் வெற்றி பெற்று பிஜேபி ஆட்சி அமைக்க பட்டது முதல் ஜல்லிக்கட்டு பிரச்னையை அக்கட்சியின் தமிழக MP பொன்னார் கையிலெடுத்து பிரச்னையை தீர்க்க முயல
    .
    மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.
    இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது.
    அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது.
    எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
    .
    அந்த தடை இன்று வரை தொடர்கிறது
    .
    இப்போது ...தன்னார்வ இளைஞர்கள் ..போராடி கொண்டிருக்க ..
    ஜல்லிக்கட்டு பிரச்சனை ..யார் முடித்து வைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருக்கிறது...

    எனினும் ...ஜல்லிக்கட்டு தடை வந்த போது எல்லாம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை...

    இப்போது கூட எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு .....

No comments:

Post a Comment