நாமெல்லாம் தமிழன் என்பதில் பெருமை கொள்ள இதைவிட வேறு எந்த புரட்சியும் தேவையில்லை எங்கள் தலைவன் வளர்த்த பிள்ளைகள் தமிழ்நாட்டிலும் உருவாகிவிட்டனர் சகோதரர்களே !!
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர்.
எங்க வேணாலும் போராட்டம் நடக்கலாம்..ஆனா இவ்வளவு அழகான ரசிக்க வைக்கும் போராட்டத்தை தமிழனால் மட்டுமே நடத்த முடியும்..
குப்பைகள் அகற்றம்
டிராபிக் க்ளியரன்ஸ்
பெண்களுக்கு பாதுகாப்பு
அனைவருக்கும் பட்டினியில்லா உணவு
அடிதடியில்லா அமைதி
வன்முறையில்லா வாதம்
அத்தனையும் அழகு..இந்த அழகை கற்பித்த ..இந்த நேர்த்தியை கற்பித்த கலாச்சாரத்தையா அழிக்க நினைக்கிறீர்கள்...???
விடிய விடிய போராட்டம்
போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.
களத்தில் பெண்கள்
போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் குடும்பத்துடன் வந்து பேராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக தாய்மார்கள் கைகுழந்தையுடனும், கர்ப்பிணி பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்திருப்பது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நேற்று சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இதுவரை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று இருந்த போராட்டத்தில் இன்று பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகர்கள் ஆதரவு
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு இன்று பல தரப்பு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் எதுவும் இன்று ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் லாரிகள், மணல் லாரிகள் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகள் போராட்ட அறிவிப்பு
இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் அரசியல்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம், த.மா.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ம.ந.,கூட்டணி ஆதரவு என அரசியல் கட்சிகளும் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.
கண்ணியம் காக்கும் இளைஞர்கள்
லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடங்களில் கூடி உணர்வு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் கண்ணியத்தை காத்து வருகின்றனர். தங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மாறாக தங்கள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் இருக்கும் குப்பைகளை தாங்களே அகற்றுவது, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருக்கு உதவுவது என கூட்டம் சேர்க்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் தமிழன் என்ற ஒரே உணர்வோடு அமைதியை போராடடம் தொடர வேண்டும். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கானது மட்டுமல்ல மழுங்கடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபுகளை தட்டி எழுப்பி உத்வேகம் கொள்ள செய்யும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய நல்ல தமிழின இளைய சமுதாயம் உலக இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு....இக்கால சமுதாயம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்ற கடந்த சில ஆண்டு கேள்விக்குறிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் நல்ல மனிதர்கள்,,,எங்களால் நல்ல சமுதாயத்தை மேலும் வருங்காலத்திற்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்....இவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்....உங்கள் போராட்டம் வெற்றி பெற்று கடந்த முப்பது, நாற்பது வருடங்களாய் திராவிட கட்சிகளால் தமிழன் இழந்த மானத்தையும், பெருமையும் மீட்கட்டும்....முத்துக்களை பிள்ளைகளாய் பெற்று இன உணர்வுடன் வளர்த்த ஒவ்வொரு பெற்றோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,, பாராட்டுக்கள், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்..
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:
Post a Comment