காக்கிக்குள் புதைந்திருக்கும் ஈர மனசு' - 16 டாக்டர்கள், 105 பட்டதாரிகளை உருவாக்கிய இன்ஸ்பெக்டர் டீம்!
சென்னையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து நான்கு வருடங்களில் 16 ஏழை மாணவர்களை டாக்டருக்குப் படிக்க வைத்துவருகின்றனர். அதோடு 105 மாணவர்களை பட்டதாரிகளாகவும் மாற்றியிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் உயர்கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்கள் பலர் ஏக்கத்தில் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு இலவசமாக உயர்கல்வியைக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கொடுத்துவருகின்றனர் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது நண்பர்கள். கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை 16 ஏழை மாணவர்களை டாக்டருக்குப் படிக்க வைத்துவரும் இவர்கள், 105 பேரைப் பட்டதாரிகளாகவும் மாற்றியிருக்கின்றனர். இவர்கள் மூலம் மொத்தம் 368 பேர் உயர்கல்வி பயின்றுவருகின்றனர். படிப்பை முடித்தவர்கள் வேலைக்குச் செல்ல தயாராக இருக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை பவுண்டேஷனின் அறங்காவலர் விஜயராமன் கூறுகையில், "நான் ஐ.டி.துறையில் மேலாளராக பணியாற்றுகிறேன். இந்த உலகில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். அதுபோலத்தான் நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தேன். அதில் ப்ளஸ் டூ முடித்துவிட்டுப் படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பீஸ் செலுத்திப் படிக்க வைத்தேன். இதை நண்பர்களுடன் சேர்ந்து செய்தால் இன்னும் பலருக்கு உதவலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுதொடர்பாக என்னுடைய நண்பர்கள் சென்னை எக்ஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபிரபு, ஐ.டி. துறை மேலாளார் ராஜகோபால், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் விநாயகமூர்த்தி மற்றும் சுஜாதா ஆகியோருடன் பேசினேன். அவர்களும், 'நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப்போடணும்; உடனே செய்யலாம்' என்று சொன்னதோடு தங்களால் முடிந்த பண உதவிகளைச் செய்தனர்.
2013ல் ‘ஆர்கோ-ஐரீஸ்’ என்ற பெயரில் அமைப்பை தொடங்கினோம். 'ஆர்கோ-ஐரீஸ்' என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் வானவில் என்று அர்த்தம். மாணவர்களின் வாழ்க்கையை வண்ணமயமாக்கவே இந்தப் பெயரை தேர்வு செய்தோம். ஆனால், அந்தப் பெயர் மக்களிடையே சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும், மக்கள் 'சென்னை பவுண்டேசன்' என்று எங்கள் அமைப்பை அழைக்கத் தொடங்கினர். இதனால், இந்த ஆண்டு முதல் சென்னை பவுண்டேஷன் என்ற பெயரில் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம்.
மாணவர்களை அவர்களது மார்க் மற்றும் குடும்ப சூழ்நிலையை விசாரித்தப் பிறகே தேர்வு செய்வோம். கல்விக்கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்துக்கு காசோலை மூலம் கொடுத்துவிடுவோம். மேலும், கண்பார்வையற்ற மாணவர்களையும் தேர்வு செய்து அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றிவருகிறோம்.
2014ம் ஆண்டு 105 மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்தினோம். அவர்கள் விரும்பும் கல்வியைக் கற்கவும் வழிவகை செய்தோம். அவர்கள் மூன்றாண்டுகள் கல்வியை முடித்து பட்டதாரிகளாகிவிட்டனர். 2015-16ம் ஆண்டில் 133 ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளோம். இதில் 10 எம்.பி.பி.எஸ் மாணவர்கள், 75 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 48 பேர் மாற்றுத்திறனாளிகள். 2016-17ம் ஆண்டில் 130 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 6 பேர் மருத்துவக்கல்லூரியிலும், 74 பேர் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். 50 மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவியை செய்துள்ளோம்.
மாணவர்களை அவர்களது மார்க் மற்றும் குடும்ப சூழ்நிலையை விசாரித்தப் பிறகே தேர்வு செய்வோம். கல்விக்கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்துக்கு காசோலை மூலம் கொடுத்துவிடுவோம். மேலும், கண்பார்வையற்ற மாணவர்களையும் தேர்வு செய்து அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றிவருகிறோம்.
2014ம் ஆண்டு 105 மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்தினோம். அவர்கள் விரும்பும் கல்வியைக் கற்கவும் வழிவகை செய்தோம். அவர்கள் மூன்றாண்டுகள் கல்வியை முடித்து பட்டதாரிகளாகிவிட்டனர். 2015-16ம் ஆண்டில் 133 ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளோம். இதில் 10 எம்.பி.பி.எஸ் மாணவர்கள், 75 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 48 பேர் மாற்றுத்திறனாளிகள். 2016-17ம் ஆண்டில் 130 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 6 பேர் மருத்துவக்கல்லூரியிலும், 74 பேர் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர். 50 மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவியை செய்துள்ளோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 16 ஏழை மாணவர்களை அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிக்க வைத்துவருகிறோம். எங்கள் மூலம் 258 மாணவிகள், 110 மாணவர்கள், (142 மாற்றுத்திறனாளிகள் உள்பட) மொத்தம் 368 மாணவர்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். இது, எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது. நாங்கள் உதவி செய்த மாணவர்களுடன் ஒவ்வொரு ஆண்டும் சந்திப்பது வழக்கம். அப்போது, மாணவர்களுக்குத் பயனுள்ள பயிற்சிகள் அளிக்கப்படும். இதை உதவி என்று சொல்வதைவிட ஒரு மாணவனுக்கு நல்ல வழியைக் காட்டுகிறோம் என்றுதான் கருதுகிறோம்" என்றார் மகிழ்ச்சியுடன்.
சென்னை நொளம்பூரில் படிக்க விரும்பாத ஒரு முஸ்லிம் மாணவியின் மனதை மாற்றிய சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சென்னை பவுண்டேஷனைச் சேர்ந்த சுஜாதா.
“அந்த மாணவி ப்ளஸ் டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட். பள்ளி நிர்வாகமும், மாணவியின் வீட்டிலும் எவ்வளவோ சொல்லியும் குடும்பத்தின் வறுமையைக் கண்டு அவர் உயர்கல்விபடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். இந்தத்தகவல் எனக்குக் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவியின் முகவரியைக் கேட்டேன். அப்போது, 'நாங்கள் எவ்வளவோ சொல்லிவிட்டோம், அவர் கேட்கவில்லை' என்ற சலிப்போடு முகவரியைப் பள்ளிநிர்வாகம் கொடுத்தது. இதன்பிறகு மாணவியின் வீட்டுக்குச் சென்றபோது, அவரது பெற்றோரும் அதே பதிலைச் சொன்னார்கள். 'ஒரு பத்துநிமிடம் அவரிடம் பேசுகிறேன், நிச்சயம் மனம் மாறுவார்' என்று சொல்லிவிட்டு மாணவியிடம் பேசினேன். முதலில் மறுத்த அவர், குடும்ப வறுமையை என்னிடம் சுட்டிக்காட்டினார். அப்போது, 'உன் படிப்புக்கு நாங்கள் பொறுப்பு, உன்னுடைய அப்பா ஒரு பைசாகூடச் செலவழிக்க வேண்டாம்' என்று சொன்னேன். உடனே அவர் மனம் மாறினார். அடுத்து அவரைக் கல்லூரியில் சேர்க்க ஓர் ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்றாண்டுகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம். தற்போது, கல்லூரியை அவர் முடித்துவிட்டார். அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறது. அடுத்து, குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு மாணவன் ப்ளஸ் டூவில் 1,162 மார்க் எடுத்துவிட்டுப் படிக்க வழியில்லாமல் இருந்துள்ளார். இந்தத்தகவல் எங்களுக்குக் கிடைத்ததும், தனியார் கல்லூரியில் சேர்க்க முயற்சித்தோம். அப்போது, அந்த மாணவன், படிக்கிற பையன் 'அரசுக் கல்லூரியில் சேர்ந்தால்கூட நல்லா படிக்க முடியும் சார்' என்று நம்பிக்கையுடன் சொல்லி அரசுக் கல்லூரியில் சேர்ந்து படித்துவருகிறார்" என்று சொல்லும்போதே சுஜாதாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தில் மின்னியது.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .
No comments:
Post a Comment