Wednesday, 19 April 2017

வங்கிகளில் கல்விக்கடன் (Education Loan for students) !!!

Image result for education loan for students in sbiஎன்போன்றோர் கல்வி பயிலும் காலத்தில் பெற்றோர் தன் பிள்ளைகளை உயர் நிலைப்பள்ளி வரை படிக்க வைக்கவே சிரமபட்ட சூழலில் இப்போதைய புதிய தலைமுறையினரான மாணவர்களுக்கு வங்கிகள் மூலமான கல்விக்கடன் என்பது ஒர் வரம் தான் என்பேன்.
இந்திய அரசு நிர்வாகத்தில் எல்லோருக்கும் கல்வி வழங்கிட மத்திய மாநில அரசுகள் வலியுறுத்துதலின் அடிப்படையிலும்...
நம் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் 2005 முதல் சுமார் 25அரசுடமையாக்க பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுமே விரைவாக கல்விக்கடனை வழங்கி வருகிறது.

கல்விகடனின் நிபந்தனைகள்.
-------------------------------------------------------
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 60%மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.
மாணவரின் தந்தையின் வருமான சான்று இருப்பிட சான்று அவசியம்.
School Tc Mark sheet. Admission card. Fees structure. படிக்கும் கல்லுரியின் Bona fide certificate சாதி சான்று நகல் என்பவை அத்யாவசியம்.
ஒரு மாணவன் 4லட்சம் வரைகல்விக்கடன் பெற யார் ஜாமீனோ பத்திர அடமானம் வைக்க தேவை இல்லை
.
நீங்கள் படிக்க உள்ள எந்த கல்வி நிறுவனம் அரசு அங்கிகாரம்பெற்றிருப்பது அவசியம்.
அதே சர்ட்டிபிகேட் மற்றும் குறைந்தபட்ச ஒருவருட பயிற்சி படிப்புக்குகல்விகடன் தரப்படுவதே இல்லை
.
அதே சமயம மருத்துவம் பொறியியயல் டிப்ளமோ கலை அறிவியல் IAS IPS படிப்புக்கும் கடன் பெறலாம்.
மருத்துவம் போன்ற படிப்பிற்கு உள்நாட்டடில10 லட்சமும் வெளிநாடாயின் 20லட்சம் வரை வங்கி வழங்கிடும்.
4லட்சத்துக்கு மேல் போகும் நிலையில் 7.50லட்சம் வரை அரசு அதிகாரி ஜாமீன் வழங்கவோ 10 லட்சம் மேற்பட்டவைக்கு சொத்து அடமானம் காட்டிடவேண்டிவரும்.
கல்லுரிகளில் வசூலிக்க படும் நன்கொடைக் கொள்ளை(Capitation fee) வங்கிக்கடனில்வராது.
கல்விக்கடனுக்கான வங்கி வட்டிவீதம் வங்கிக்கு வங்கி மாறுபடும் எச்சரிக்கை
.
ஓரே வங்கியில் இரண்டு பிள்ளைகளுக்கு கூட வெவ்வேறு படிப்புக்கு கடன் வாங்கலாம்.
இதுமேனேஜர் முடிவு சார்ந்தது.
பெண்குழந்தைகளுக்கு கல்விக்கடன் முறையாக திரும்பி செலுத்தும் நிலையில் 1% தள்ளுபடி சலுகை உண்டு
.
கல்விக்கடனை திரும்ப செலுத்தும் முறையானது
3 வகைப்படும்.
1. மாதாமாதம் வட்டியும் அசலும்.
2.வருடா வருடம் வட்டியும் அசலும்.
3.தவனைமாதம் 60 to 84 மாதம் வரை மாதம் ஒரு முறை.
மாணவன் பெறும் கல்விக்கடனும் படிப்பையும் வைத்தே கடன் திரும்பி செலுத்தும் முறைகளை நீங்களே முடிவு செய்தாலும் கல்வி முடித்த பின்பே கடனை திரும்ப செலுத்தலாம்.
அப்படி திரும்பி செலுத்தும் காலம் படிப்புமுடிந்து 6 மாதத்திற்குபின்பே திரும்ப செலுத்தும் காலம் ஆரம்பமாகும் .
கடன் பெறும் விண்ணப்பத்தில் நீங்கள் பெறும் திட்ட வடிவத்தை கவனமுடன் முடிவு செய்யவும்.
வங்கிகள் கடன் மறுக்ககாரணம்...
*********************
ஏற்கனவே உங்களின் குடும்பத்தின் கடன் பாக்கி இருந்தால்.
ஒரு முறை ஒருவர் பெற்றிருந்தால் மீண்டும் கிடைப்பது சிரமம்.
ஒரு வங்கி 100 பேருக்கு மட்டுமே தர முடியும்
அதே சமயம் உங்க ஏரியாவுக்கு இந்த வங்கி லிமிட் வராது.
உங்களுக்கு இங்கே அக்கவுன்டே இல்லையே என மேனேஜர் பல் இலிக்க முடியாது.
அதே சமயம் தகுதியான உங்களை மேனேஜர் புறக்கனிக்கவோ மறுக்கவோ முடியாத வேலையில் உங்களுக்கு கடன் வழங்கும் சீலிங் பவர் அவரிடமே உள்ளதால் நீங்கள் உங்களின் அன்பான அனுகு முறையால் மட்டுமே வாங்கிடமுடியும்.
குறிப்பு-சிரிப்பு...
+++++++++++++++
வங்கிகளில் கல்விக்கடன் பெற விரும்புவோர் எந்த புரோக்கரையும் நம்ப வேண்டாம்.
அதே சமயம் எந்த மேனேஜருக்கும் கட்டிங் தர வேண்டா ம்.
கட்டிங் வாங்கி தொலைத்து கடன் தந்தால் வாங்கும் போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்யம் போது மிக மிக கவனம்..

No comments:

Post a Comment