தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில், பழைய இரும்புப் பொருள்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட உயிரினங்களின் சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ‘’ரோச் பூங்காவில் பழைய இரும்புப் பொருள்களைக்கொண்டு சுறா, நீலத்திமிங்கிலம், கடல்குதிரை, நண்டு, ஆமை, முதலை, ஆக்டோபஸ், படகோட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் இலச்சினையான ‘சிப்பிக்குள் முத்து’, ஆகிய 15 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பூங்கா சீரமைப்புப் பணிகள் சில மாதங்களில் முடிவடையும். மேலும், மாநகராட்சியை அழகுபடுத்தும் விதமாக, நகரிலுள்ள அரசுக் கட்டடச் சுவர்களில் மாவட்டத்தின் வரலாறும் இயற்கை வளம்குறித்த ஓவியங்களும் வரையப்பட்டுவருகின்றன. இதன்மூலம், சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தடுக்கப்படும்.’’ என்றார்.பூங்கா பராமரிப்புப் பணி, வண்ணம் பூசும் பணி ஆகியவை முழுமையாக நிறைவடைந்தால், பூங்கா புதுப் பொலிவுபெறும்.
No comments:
Post a Comment