Wednesday, 22 November 2017

சித்தூர் ராணி பத்மினியின் கதையா இந்த பத்மாவதி !! ஒரு சிறப்பு பார்வை..


Image result for queen padmavati


சித்தூர் ராணி பத்மினி என்ற தமிழ் படம் நியாபகம் உள்ளதா ?

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:--

14-ம் நூற்றாண்டில் (ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன்), அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள (ராஜஸ்தான் ) சித்தூரை ராஜபுத்திர பேரரசரான ரத்தன்சிங் என்பவன் ஆண்டுவந்தான். ராணி பத்மினி மிகப் பெரிய பேரழகி. இவரிடம் ஹிரா மணி என்ற பேசும் கிளி இருந்திருக்கிறது. அந்த கிளி சித்தூர் அரசன் ராணா ரத்தன் சிங் என்ற ராஜாவிடம் சென்று எங்களது ராணி பேரழகி என்று கூறியிருக்கிறது.. உடனே அவரும் ராணியை திருமணம் செய்ய சுயம்வரத்திற்கு வந்திருக்கிறார். சுயம்வரத்தில் பத்மினி யையும் திருமணம் செய்து கொள்கிறார்.

பத்மினி தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.


அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” ரத்தன் சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.


ரத்தன்சிங் அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி,மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று ரத்தன்சிங்கிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், ரத்தன்சிங்ச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் ரத்தன்சிங் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.


ரத்தன்சிங்னின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி;வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி,அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “ பத்மாவதி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “ பத்மாவதியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து ரத்தன்சிங் குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தாள் . உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான்.


இப்பொழுது ரத்தன்சிங் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் ரத்தன்சிங் . யா  இந்த 


ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் முகமதியரிடமிருந்து தங்கள் கற்பைக் காக்க அன்று 74,500 பெண்கள் அந்தத் தீயில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது., பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும்,வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

ராணி பத்மினி மன்னர் உமாயுனைச் சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் ரக்சா பந்தன் என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது. 

இதனால் ராணி பத்மாவதியை ராஜஸ்தானில் உள்ள ஒரு பிரிவினர் தெய்வமாக வழிபடுகிறார்கள். பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!


தமிழில் பத்மினி திரைப்படம்.. 

சித்தூர் ராணி பத்மினி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்திஇயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , வைஜெயந்திமாலா ராணி பத்மாவதியாக நடித்திருந்தனர்.
இந்தியில் ‘பத்மாவதி 
திரைப்படம் !!

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற பல  ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி.ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிபடுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
பத்மாவதி பட சர்ச்சை என்னை அலாவுதீன் கில்ஜியின் வரலாறை அறிய
முற்படுத்தியது. தவறான சித்தரிப்புகளுக்கு முன்னால் நாம் அவரைப்பற்றி தெரிந்து கொள்வோம். நீங்களும்..


அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றின் சிறு குறிப்பு.அலாவுதீன் கில்ஜி கி.பி 1295 முதல் 1316 வரை டெல்லியில் அரசனாக ஆட்சி செய்தவர்.

1298ல் குஜராத் மீது படையெடுத்து வெற்றி கொண்டவர்.

1299ம் ஆண்டு டெல்லியை கைப்பற்ற வந்த மங்கோலியர்களை விரட்டி அடித்த இரண்டாம் அலெக்சாண்டர் (கில்ஜி)

1310ல் கில்ஜி,மாலிக்காபூர் படை தேவ்கீர் மீது படையெடுத்து கர்நாடக,மலபார், கனாரா பகுதிகளை பிடித்து கொரமண்டல் பகுதி முழுவதும் தன் வசப்படுத்தினார்.(எனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெரும்பகுதியை ஆட்சி செய்த மன்னர்)

இந்தியாவில் மதுவை ஒழிக்க முதன்முதலாக சட்டம் கொண்டு வந்த சுல்தான், மதுவை தயாரிப்பதையும்,விற்பதையும்,அருந்துவதையும் பெரும் தண்டனை குற்றமாக அறிவித்தவர். அலாவுதீன் கில்ஜி

வியாபாரிகள், பிரயாணிகள் பாதுகாப்பாகவும்,தொல்லையில்லாமல் பயணிக்க நெடுஞ்சாலைகள் போட்டார்.

விலைவாசிகளை கட்டுப்படுத்த மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு மன்னரே விலை நிர்ணயம் செய்தார்.அதுவே இன்றைய state Trading Corporation of India என்னும் கொள்கைக்கு முன்னோடி.

1296ல் அலாவுதீன் கில்ஜி 70ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய நீர் நிலையை உருவாக்கினார். இதிலிருந்து மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கினார்.

வழிப்போக்கர்கள் தங்குவதற்கு சாவடிகளும், சத்திரங்களும் கட்டினார் மேலும் இலவச உணவும் அளிக்கப்பட்டது.

கி.பி.1316ல் ஜனவரி 2ம் தேதி அலாவுதீன் கில்ஜி மரணமடைந்தார்


இந்த சித்தூர் ராணி பத்மினி சரித்திரத்தில் எனக்குள் எழும் கேள்விகள் ?

1, அலாவுதீன் கில்ஜி கெட்டவன் என்று வைத்துக்கொள்ளவோம். இவன் படையுடன் சித்தூரில் முகாமிட்டுள்ளான். ஏன் அவனுக்கு பத்மாவதியை காட்ட வேண்டும். இதில் எதோ உடன்பாடு முரண்பட்டதால் அவன் ரத்தன்சிங்கை டெல்லிக்கி கூடி சென்றான். அவன் நினைத்தால் பத்மாவதியை சித்தூரிலே அடைந்திருக்கலாமே ?

2, ஆயுதங்கள் மறைத்து 70 பல்லக்குடன் வந்து ரத்தன் சிங் தப்பித்தார் என சரித்திரம் கூருகிறது. டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி  முட்டாளாக இருக்க முடியாது. அப்படி இருந்தால்  நாட்டை எப்படி  காப்பாற்ற முடியும் ?

3, அரண்மனையின் அந்தப் புரத்தில் அணைத்து பெண்களுடன்  ராணி பத்மினி  ஏன் தீ குளிக்க வேண்டும். ( அலாவுதீன் கில்ஜி அடைய நினைத்தது பத்மினி ராணியை மட்டுமே ). 


4,ஒரு வேலை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ள கதையில் உள்ளது போல் அலாவுதீனிக்கும், பத்மாவதிக்கும் காதல் மலர்ந்து , அதை மறைக்க, ராஜ புத்திர வம்சத்தின் பெருமையை காக்க அவர்களே பெண்களை தீ குண்டத்தில் கொளித்தீர்களாம் அல்லவா ?

5, மாலிக் முகமது ஜாயசி என்பவர் 1540ல் எழுதிய கவிதை தான் ராணி பத்மினியின் முதல் வரலாறு குறிப்பு என அறியப்படுகிறது. அதனால் அலாவுதீன் கில்ஜியை நாம் கெட்டவன் என  நினைத்துள்ளோம்.  இஸ்லாமிய  அடிப்படையில் போரில்  பெண்கள் மற்றும் குழந்தைகளை  கொல்லக்கூடாது. மேலும் பிறர்  மனைவியை  தப்பான கண்ணோட்டத்துடன்  பார்ப்பதும்  தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே சித்தூர் ராணி பத்மினி  ஒரு  கதையாக  இருக்கலாம் என்பதே  எனது கருத்து ..


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment