Monday, 1 January 2018

ரஜினியைவிட திறமையும் கொண்ட விஜயகாந்த்,சிவாஜி,மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியல் ! !!


Image result for rajini vs vijayakanthதேர்தல் அரசியல் சாதாரணமானது அல்ல... ரஜினியைவிட சாதாரண & கிராமப்புற மக்களிடம் செல்வாக்கு கொண்ட, அதிகளவு ரசிகர்களை கொண்ட, அந்நேரத்தில் உச்சபட்ச மார்கெட் வேல்யு & அரசியல் அறிவும், ஓரளவு பேச்சு திறமையும் கொண்ட விஜயகாந்த், சொந்தமாக தனி கட்சி துவங்கி, முதன் முதலாக தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்ட 2006 ஆம் ஆண்டில், ஜெயித்து ஆட்சியை பிடித்தது திமுக தான்.. நடிகர்கள் பிரிப்பது அதிமுக ஓட்டுக்களைத்தான்.. திமுகவுடையதை அல்ல.. இப்போ, விஜயகாந்தோட செல்வாக்கு எல்லோருக்கும் தெரிந்த்தது தானே.. அரசியல் கட்சி துவக்கிய சிவாஜி கணேசனின் கதி எல்லோரும் அறிந்தது.. MGR மறைந்ததால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புகிறேன் என வந்தவர்.. இத்தனைக்கும் சிவாஜி மன்றங்களும், காங்கிரஸ்சில் பல ஆண்டுகளாக இருந்த அனுபவமும், சொந்த சாதி செல்வாக்கும் இருந்தும், சிவாஜி படுதோல்வியடைந்தார். சரி, பக்கத்து மாநில ஆந்திரா மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அரசியல் பயணம் தெரியும் தானே.. CBI வழக்குகள், ஜெயில் தண்டனை என ஊழல்வாதி பட்டம் இருந்தாலும் காங்கிரஸ்ல இருந்து தனி கட்சி தொடங்குன ஜெகன் மோகன் ரெட்டி அங்கே வலிமையான தலைவரா, எதிர் கட்சியா இருக்காரு.. ஆனா, மெகாஸ்டார் சிரஞ்சீவி, துண்டை காணோம் துணிய காணோம் என அரசியல் விட்டு ஓடிவிட்டார்...தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறானது.
சிகர்களுடன் போட்டோ எடுத்து, அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தால், தமிழகமே அவர் பின்னால் வந்துவிடுமோ??? மெரினாவில், நடிகர்களின் சிறிய "கட்டவுட்" களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வார்களே, அப்படித்தான் இருந்தது ரஜினி தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது... ஒரு பொம்மைபோல் நிற்கிறார்...ஆத்மார்த்தமாக இல்லாமல்,ஏதோ கடமைக்கு செய்வதுபோல் ஒரு நிகழ்ச்சி...ரசிகர்கள் தன் தலைவனை? பார்த்த சந்தோஷத்தில் கை குலுக்க கையை நீட்ட..., அவர் கைகூப்புகிறார் அல்லது கையை கட்டிக்கொண்டு பொம்மைபோல் நிற்கிறார்... உணர்ச்சி வேகத்தில் ஒரு செலஃபீ எடுக்க எத்தனித்த ஒருவரை, ஒரு நாலு பேர் வந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகிறார்கள்...போட்டோ எடுத்து முடிந்ததும், போ,போ என்று பிடரியில் கைவைத்து தள்ளுகிறார்கள்.... ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தை எதிர்பார்த்த நமக்கு, ஒரு நாடகம் மட்டுமே காண கிடைத்தது....ரசிகன் என்பதை விடுங்கள், ஒரு சக மனிதனிடம் கை கொடுக்கக்கூட மனமில்லாத ஒருவர் எப்படி..., தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கும்,தமிழர்க்கும் உடல்,பொருள்,ஆவியெலாம் கொடுப்பார் ??? பேச்சில் நல்லவராக இருந்து என்ன பிரயோஜனம்? செயலில் நல்லவராக இருக்க வேண்டும்........எனக்கென்னவோ, இந்தியாவில் எங்கு இயற்கை சீற்றம் நடந்தாலும், சினிமாவிலிருந்து நீளும் முதல் உதவிக்கரத்திற்கு சொந்தக்காரர் விஜயகாந்த்..... தன் சம்பாத்தியத்தில் ஒரு பகுதி, மக்களுக்காக செலவிட்ட மனிதர், அடித்தாலும் அரவணைக்கும் வெள்ளந்தி, அவருடன் ஒப்பிட்டால், ரஜினி என்பவர் ஒன்றுமே அல்ல என தோன்றுகிறது....

ரஜினி வருவது அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஏன் ரஜினிக்கே கூட சந்தோசமாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக பொது மக்கள், நடுநிலைவாதிகள், கொஞ்சம் யோசிக்க தெரிந்தர்வர்கள், நாடு நல்லா இருக்காதா என்று ஏங்குபவர்கள், என்று பலதரப்பட்ட மக்களுக்கும் புடிக்கவேயில்லை. ரஜினி வீணாக சிறிய ரசிகர்களுக்காக பெருமான்மை பொதுமக்களின் வெறுப்பை சம்பாரித்து விட்டார்.

ரஜினினின் நிலைப்பாடு என்ன தமிழ் ரசிகர்களை தான் வணங்கும் முதல் தெய்வம் என்று கூறிவிட்டு தன்னுடன் புகைப்படம் பிடிக்க வரும் ரசிகர்களை கூட தொடுவதற்கு கூட மனம் இல்லாமல், ஆட்சிக்கு வருமுன்பே அவர்களை காலில் விழ வைப்பது தான் இவர் தமிழினத்தின் மீது காட்டும் அக்கறையோ? இத்தனை ஆயிரம் கோடிகளை தமிழ் ரசிகர்களால் சம்பாதித்தவர் தமிழக நலனுக்காக செய்த தொலை நோக்கு திட்டங்கள் என்ன?
நடிகர்கள் அரசியலுக்கு வந்தவுடன் அவர்களை நம்பி சந்தோசப்பட்டது விஜயகாந்தோடு போய் விட்டது. அந்த வரிசையில் விஜயகாந்தே கடைசி. இனி எவ்வளவு பெரிய கொம்பன் நடிகர் வந்தாலும் மக்கள் சலன பட ஒன்றுமேயில்லை. நடிகர்கள் உபயோகமற்ற யூஸ்லெஸ் பெல்லோக்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. கூட்டம் கூட்டமா வருவார்கள். ஆனால் ஓட்டு போட மாட்டார்கள். ரஜினி போன்ற உச்ச பட்ச நடிகருக்கு கற்று கொடுக்கும் பாடம் இதை மற்ற எல்லோருக்கும் உணர்த்தும்.


தமிழ்நாட்டை தமிழன் ஆள முடியாது அப்படியே ஆண்டாளும் பெரும் தலைவர் காமராசரை போன்று கறிவேப்பிலையாக தூக்கி எரிய படுவார்கள்.ஆக தமிழ் அல்லாதவர்களை தான் தமிழகம் ஆண்டாண்டு காலமாய் நம்பி கொண்டு இருக்கிறது.எந்த தமிழனும் வேற்று ஜாதி ஆள்வதை பொறுத்து கொள்வதில்லை. அனால் வேற்று மொழி பேசுபவர்களை எல்லா தமிழனும் ஏற்று கொள்வான். தமிழ் அல்லாதவர்கள் தான் பொதுவாக இருக்க முடியும்.இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த தமிழ் அல்லாதவர்களும் தமிழகத்துக்கோ அல்லது தமிழனுக்கோ தீங்கு இழைத்தது இல்லை ஆனால் பதவியில் இருந்த எல்லா தமிழனும் (காமராசர் நீங்கலாக)தனி மனித சொத்துக்களையும் அரசு சோத்துக்களையும் கொள்ளை அடித்தது தான் வரலாறு.அதன் உச்ச கட்டம் தான் மரத்தமிழர்களான சசிகலா மற்றும் தினகரன் .ஆக ரஜினியை போன்ற எல்லா வித மக்களையும் கவருகின்ற மனிதர்கள் கடவுள் நமக்கு கொடுத்த வரமாக கருதி ஒத்துழைத்து நடந்தால் சிஸ்டம் என்கிற அமைப்பை மாற்றி தமிழகத்தையும் தமிழக மக்களையும் ஒளி மயமான மற்றும் பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்கி நம் பிள்ளைகளுக்கு அளித்திட முடியும் என்கிற நம்பிக்கையும் பேரானந்தத்தையும் என்னுள் உணர்கிறேன் ,அப்படி நடந்தால் வரும் எதிர் காலங்கள் நம்முள் இருக்கின்ற ஜாதி மத இன மொழி வேறு பாடுகல் மறந்து பல காமராஜர் உருவாக வாய்ப்பு ஏற்படும்.இல்லை என்றால் தமிழக மக்கள் என்றென்றும் இன்றைக்கு உள்ளது போல வோட்டுக்கு கையை ஏந்தும் பிச்சை காரர்களாகவும்,ஆள்பவர்களின் அடிமைகளாவும் இருக்கின்ற சூழலே ஏற்படும் என்பது என் மன வேதனையான உண்மையான கருத்து .தயவு செய்து யார் மனதையும் புண்படுத்த நான் இதை கூறவில்லை.உண்மையான சூழ்நிலையை தான் என் உல் மனதிலிருந்து வேதனையான உண்மைய உரைக்கிறேன். உண்மை,உழைப்பு ,உயர்வு-வாழ்க தமிழக மக்கள்,வளர்க தமிழகம்!!


அன்புடன் தமிழக மக்கள் நலம் விரும்பி
மு.அஜ்மல் கான்.No comments:

Post a Comment