Saturday 20 January 2018

ஆட்சியில் இருக்கும் அதிகார பேய்கள்தின்பதற்க்காக மக்கள் தலையில் மற்றுமொரு சுமைதான் இந்த பேருந்து கட்டண உயர்வு !! ஒரு சமூக பார்வை...

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடிக்கும் கொள்ளைக்கு பலிகடா ஆக்கப்படுவது பொதுமக்கள்தான்,ஓட்டு போய் விடும் என்று பயந்து , எதிர் கட்சிகளின் அரசியலுக்கு பயந்து பல வருடங்களாக ஏற்றாமல் , ஒரே நேரத்தில் இவ்வள்வு உயர்வு என்பது பொது மக்களுக்கு கஷ்டம் தான் ; வருடா வருடம் 3% அல்லது 4% ஏற்றியிருந்தால் , சுமை தெரியாது . 6 ரூபாய்க்கு 13 ரூபாய் வாங்குவதும் 4 ரூபா வசூலித்த இடத்தில 10 ரூபாய் வசூலிப்பதும் எந்தக்காலத்திலும் நடக்காத ஒன்று.அதிமுக அரசு ஆட்சி அமையும் போது 6 ஆண்டுகளுக்கு முன் 3 ரூபாய் கொடுத்த இடத்தில் இன்று 11 ரூபாய். 6 ஆண்டுகளில் 375 சதவிகித உயர்வு. எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மக்கள் தலையில் தான் சுமத்துகிறார்கள். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் சாமானியர்களின் நிலைமை மிகவும் கஷ்ட்டமாகிவிடும்

தனியார் மார்க்கெட்டிங் கம்பனிகளில் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் ஐம்பது காசு வாகன செலவுக்கு கொடுக்கப்படும். ஆனால் அரசு அதைவிட அதிகமாக குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கு சாமானிய மக்களிடம் கேட்பது வெட்கப்படவேண்டிய விஷயம். இங்கு இருக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கொடுத்தாலும் நஷ்டம் தான் வரும்.

தனியார் பேருந்து இரண்டு நடத்துனர் ,ஒரு ஓட்டுநர் ,ஒரு கிளீனர் என வைத்துக்கொண்டு மினிமம் 5 ரூபாய் வசூலித்து பேருந்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டு புது புது பேருந்துகளை வாங்கி கொண்டு லாபம் பார்க்கின்றனர் .தற்போதைய கட்டணங்களில் தனியார் பேருந்துகள் லாபம் சம்பாரித்து புதிய பஸ்கள் வாங்கும் நிலையில் அரசுக்கு மட்டும் கட்டணம் கட்டுப்படியாகவில்லை என்பது கேலிக்கூத்து ?சரியான நிர்வாக திறன் இல்லாமை ,ஊழல் ,அலட்சியம் ,இவற்றாலேயே நழ்டம் ஏற்படுவதை உணராமல் மக்கள் தலையில் மேலும் மேலும் சுமையை ஏற்றுவது தனியார்மயத்திலிருந்து போக்குவரத்தை அரசுடைமை ஆகியதையே அர்த்தமற்றதாக்குகிறது !!இதுவே அரசு பேருந்துகளில் ,விரைவு ,சொகுசு என பெயர்களை போட்டுகொண்டு இரண்டுமடங்கு வசூலித்து,தொழிலார்களின் பணத்தை எடுத்து தின்று விட்டு நஷ்ட கணக்கை காண்பித்து அவற்றை பொதுமக்கள் தலையில் சுமத்தி விட்டனர் . அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசாங்கம் கொடுக்கும் காரில் பயணம் செய்வதால் மக்களின் துன்பம் அவர்களுக்கு புரியாது.


தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட காரணங்கள்...

1.அரசு பஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு,தின படி,ஓவர் டைம் மற்றும் போனஸ்.

2.அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் கேட்பது.

3.அரசு பஸ் தொழிலாளர்கள் சங்கங்கலுக்கு பணம் கட்டுவது.

4.அரசு பஸ்களை, பஸ் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் என்ற போர்வையில் அரசியல் வாதிகள் பஸ்களை சேதப்படுத்துவது.

5.அரசு பஸ் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கலுககு இளவசங்கள் வழங்குவது.

6. அரசு பஸ் தொழிலாளர்கள் பல கட்சி பெயரைச் சொல்லி வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது.

7.எதிர் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொது மக்களுக்கு இடஞ்சல் கொடுப்பது.

8, 
ஆனால்,ரூ.5.00 கூடப் பெறாத பொருளை ரூ.50 .00 க்கு வாங்கியதாக கணக்கு காட்டி ஊழல் செய்தும், மாதந்தோறும் டீசலில் ஊழல் செய்தும்,கமிஷன் அடித்தும் போக்குவரத்துக் கழக நிதியைக் களவாடினால் கழகம் எப்படி உருப்படும்?
Related image
இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும்,செய்வது வேறொன்றுமாகவே இருக்கிறது !ஏழாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட கட்டணங்களை "Express ,LSS ,TSS " என எழுதி 100 % கட்டணங்களை உயர்த்திக் கொள்ளையடித்து வருகின்றனர்.எந்தப் பேருந்தும் காலியாக இயங்கவில்லை. பணியாளர்களும் வஞ்சகமில்லாமல் உழைத்துக் கொடுக்கிறார்கள்.
 

பேருந்துக் கட்டணத்தை ஏற்ற வேண்டியதே இல்லை. ஊழல் மலிந்த நிர்வாகத்தை வைத்துக் கொண்டு கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் த.நா.அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சீர்திருத்த முடியாது. ஊழல் இல்லா நிர்வாகம் இருந்தாலே இலாபம் ஈட்ட முடியும்.

காலாவதியான பேருந்துகளை மாற்றமாட்டோம். நிர்வாகச் சீர்கேட்டை அதிகாரிகள் ஆராயமாட்டார்கள்.ஆனால் கட்டணத்தை உயர்த்தி உடனே அதாவது மாலை 6 மணிக்குமேல் அறிவித்து நள்ளிரவு ௧௨ மணிக்கே அமுலுக்கு கொண்டுவந்து விடுவோம். இதற்குப் பெயர்தான் குடியரசு. பொதுமக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் ஏனென்றால் நிழலைவிட்டு நிஜத்திற்கு நாம் வரவே இல்லையே . மக்கள் விரோதம் தொடரும்.

கட்டண உயர்வுஇல்லாமல் தவிர்க்கமுடியாது 10 சதவீதம் 20 சதவீதம் உயர்த்தினால் அதன் பெயர் கட்டண உயர்வு .50 சதவீதம் 60 சதவீதம் உயர்த்தினாள் அதன் பெயர் கட்டண கொள்ளை.கட்டண உயர்வு தேவைதான் என்றாலும் இது அதிகப்படியான உயர்வு மேலும் எத்தனைமுறைகட்டன உயர்வு செய்தாலும் நிர்வாக சீர்கேட்டால் மீண்டும் மீண்டும் நஷ்டத்தில் கழகங்கள் இயங்குவது உறுதியே.ஆனா அதற்காக இவ்வளவுக்கடுமையானஉயர்வு என்பதுமக்களைகடுமையா பாதிக்குமென்பதிலசந்தேகம் இல்லை நிர்வாகத்தில் சிக்கனம் நேர்மை மதிநுட்ப அதிகாரிகல்முழு ஒத்துழைப்பைக்கொண்டு திறம்பட அரசுசெயல்பட்டால் இக்கட்டணயுயர்வைத்தவிர்க்கலாம்.இதற்கான விலையை இவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுக்கவேண்டியதிருக்கும். வறியவர்களை சுரண்டி வலியவர்களை வாழவைக்கும் அரசாங்கம் சீக்கிரம் விடைபெறும்.மக்கள் எதை எல்லாம் சலுகை என்று அரசியல் வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்களோ , அது ஒரு நாள் மீண்டும் அவர்கள் தலையிலேயே விடியும் ; 5 லட்சம் கோடி கடன் சுமையும் ஒரு நாள் மக்கள் தலையில் விடியும்..இலவசம் , மானியம் , வறுமை கோட்டிற்கு கீழயே இருக்கும் ஏழைகளுக்கு மட்டும் தான் குடுக்க படவேண்டும் ; இல்லையேல் , என்றாவது ஒரு நாள் மக்கள் தலையிலேயே வந்து முடியும் .இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,இப்படி நினைத்த போது கட்டணத்தை ஏற்றுவதை விட்டு விட்டு ஒரு தெளிவான கொள்கை வகுக்க வேண்டும்.. ஒவ்வொரு இரண்டாடுக்கு ஒரு முறை கட்டண உயர்வு என்று மக்களுக்கு தெரியப்படுத்தினால் இப்படி அதிர்ச்சி அடைய வாய்ப்பில்லை..
நஷ்டத்தால் இந்த கட்டண உயர்வு என்று கூறுகின்றனர் உயர்த்தப்பட்ட கட்டணம் வைத்து நஷ்டத்தை ஈடு கட்டிவிடுவார்களா? இதற்க்கு முன் ஏற்றிய போதும் இப்படியே சொன்னார்கள் நஷ்டம் அதிகரித்துள்ளதே.. திறமையில்லாதவர்களை வெளியே அனுப்பினால் பல சம்பள தொகை மிச்சமாகும் கடின உழைப்பாளருக்கு சம்பளத்தை அதிகரித்தால் இன்னமும் நல்லது. ஒரு தனியார் நிறுவனம் எப்படி இயங்குமோ அப்படி அரசு இயங்கினால் அரசுக்கு நல்லது மக்கள் அடுத்த முறை அதே அரசை அமைப்பார்கள்ஒட்டு மாெத்த கடன் மற்றும் ஊழியர்கள் ஊதியம் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரேடியா உயர்த்திடுங்க ... ஏழைப்பங்காளர்களே! பட்ஜெட்டுக்கு முந்தியே இந்த கூத்தா ? மக்களுக்கு இரண்டு ஆட்சியிலும் கிழிந்த காேமணம் கூட மிஞ்சாது பாேல இருக்கு!!


மக்களால் மீண்டும் ஒரு புரட்சி உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை ... 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment