2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.
சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.
ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும் என தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணம் நாளை மாலை 5.20க்கு துவங்குகிறது. ஆனால், முழு கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மாலை 6.25க்கு துவங்கி 7.25 வரை நீடிக்கும். இந்த மாதத்தில் தோன்றும் 2வது பெளர்ணமி இது. இது ‘புளூ மூன்’ ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
Supermoon: பெருமுழு நிலவு - பௌர்ணமியன்று நிலா பூமிக்கு வெகு அருகில் வருவது பெருமுழு நிலவு எனப்படும். இம்முறை அது மேலும் பெரிதாகக் காணப்படும்.
முழுச் சந்திர கிரகணம்: - சூரியன், நிலா, பூமி மூன்றும் ஒரே கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
Blue moon: - ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி ஆகியவை அந்த மூன்று நிகழ்வுகள்.
- 32 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமியைக் காண முடியும்.அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.
மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என space.com தெரிவித்துள்ளது.
முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.
இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 இல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037 இல் நிகழும். இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்களாகும்.
சந்திர கிரகணம் பற்றி மேலும் அறிய ..
No comments:
Post a Comment