Tuesday, 2 January 2018

ரஜினியை முந்துகிறார் இந்த கமலஹாசன்? ஒரு அலசல் !!

Image result for rajini vs kamalநம்ம ஊடகங்களில் ரஜினி கமலை முந்துகிறார் அப்படி இப்படின்னு சீன போடுறாங்க. கமலால் ரஜினியை முந்த முடியாது என்று சொல்கிறார்கள். அவர் எப்பவும் ரஜினியை முந்தவேண்டும் என்று நினைக்கவிலை. முந்த வேண்டும் என்று நினைத்தால் அவருக்கும் ரஜினிக்கும் உள்ள இடைவெளியில் பயங்கர வித்தியாசம் இருக்கும். இதோ ரஜினி 25 வருடம் தன் ரசிகர்ளையும் மக்களையும் இப்ப அரசியலுக்கு வருவேன் அப்ப அரசியலுக்கு வருவேன், அவனுக்கு ஆதரவு தருவேன் இவனுக்கு ஆதரவு தருவேன் என்று கூறி ஏமாற்றி தன் மார்க்கெட்டையும், பண பலத்தையும் உயர்த்தி கொண்டார். அதன் விளைவு எதோ அவர் சொன்னால் தமிழ்நாடே கேட்கும் என்று ஒரு பிரம்மையை வட இந்திய ஊடகங்களில் உருவாக்கினார். விளைவு? கோச்சடையான், லிங்கா, கபாலி என்று எந்த படமும் வட இந்தியாவில் 20 கோடி கூட வசூல் செய்யவில்லை என்றாலும் எதோ 300 கோடி வசூல் செய்யும் என்ற ஒரு தோற்றத்தை படம் வெளிவரும் முன்பு அந்த ஊடகங்கள் உருவாக்கின. அதனால் பிரதமர் முதல் அனைவரும் இங்கு ஒரு தேர்தல் என்றால் ரஜினியை வீடு தேடி வந்து சந்தித்தார்கள்.ரஜினி முதல் முதலில் கமலை முழுமுகமாக முந்தி முதல் இடம் பிடித்தது பாட்ஷா திரைப்படத்தில் தான். நாயகன் படத்திற்கு பின் கமல் தன் பாதையை முழுவதுமாக மாற்றிவிட்டார். அதன் பின்னே ரஜினி முன்னேற துவங்கினார் அல்லது கமலை முந்த துவங்கினார் என்ற கூறவேண்டும். கமல் கமெர்சியல் படம் செய்யும் வரை அவரை ரஜினியால் நெருங்கவே முடியவில்லை. இன்று கூட கமல் கமெர்சியல் படம் செய்தால் ரஜினியால் கமலை ஜெயிக்க முடியாது. ரஜினி ஊடகங்களால் வளர்க்கப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார்.


Image result for rajini vs kamalஇந்த அலசல் கமலின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை பற்றி தெரியாதவர்களுக்கும், சினிமா தொழிற்சாலையில் நாங்கள் கொடுக்கும் வசூல் தான் உண்மையான வசூல் என்று போலி வசூல் கணக்கை கொடுக்கும் ஸ்ரீதர் பிள்ளை போன்றவர்களுக்கும் மற்றும் இவர் 30 வருட சூப்பர் ஸ்டார், இவர் ஷைனிங் ஸ்டார், அவர் டைமண்ட் ஸ்டார் என்று சகட்டுமேனிக்கு வருவோர் போவோருக்கெல்லாம் பட்டம் கொடுப்பவர்களுக்கும் இது சமர்ப்பணம். 1971 - 1980 கமல் முதல் முதலில் தன்னை ஒரு பெரும் கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய காலகட்டம் இதுதான். 'The Man with a Golden Arm' என்று சொல்லுவார்கள் அதை போல அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். இன்று கூட கேரளத்தில் பலர் அவரை தமிழர் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரை ஒரு மலையாளி என்று தான் நினைக்கிறார்கள். மடநட்சவம், ஈட்டா போன்ற பிளாக்பஸ்டர் படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ஆனால் அவரை தமிழ் திரை உலகம் அப்போது இன்னும் ஏற்கவில்லை. கேரளத்தில் அவர் வெற்றிக்கொடி நாட்டியபின் தமிழ்நாட்டின் பக்கம் அவர் கவனம் திரும்பியது. இந்த காலகட்டத்தில் பதினாறு வயதினிலே, கல்யாணராமன், சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது, குரு, தாயில்லாமல் நான் இல்லை, ராம் லக்ஷ்மணன் என்று எண்ணற்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை அள்ளி கொடுத்தார். அதுவரை புரட்சி தலைவரையே பார்த்து பிரமித்த மக்கள் ஒரு 22 வயது இளைஞன் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஆடினார்கள். அதே காலகட்டத்தில் கமல் ஆந்திராவிலும் கால் பதித்தார். ஏற்கனவே அங்கு NTR , கிருஷ்ணா போன்ற மாஸ் ஹீரோக்கள் வலம் வந்துகொண்டிருந்த நேரம், மேலும் சிரஞ்சீவியும் அங்கு ஒரு சூப்பர் ஹீரோ. இவன் இங்கு ஜொலிக்கமாட்டான்யா என்று ஏளனமாக பேசிய வாய்களை தன் சோமக்கொடுத்தி சோகக்கொடுத்தி, மரோசரித்திர, சக்கர சங்கமம் போன்ற நேரடி சூப்பர் டூப்பர் ஹிட் தெலுங்கு படங்களில் நடித்து அனைவரின் வாய்களையும் அடைத்து தெலுங்கு ஹீரோக்களின் வயிறுகளில் புளியை கரைத்தார்.அதன் பின் தமிழில் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக அங்கு டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடின. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மாநிலத்திலும் வெற்றி நாயகனாக வலம் வந்தார். இருந்தாலும் அவருக்கு ஒரு வருத்தம். காரணம் கர்நாடகம்.... அடுத்து அங்கு கால் பதித்தார். அங்கும் தொடர் வெற்றிகள். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கோகிலா. அது சென்னையில் மட்டும் 700 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆகா மொத்தம் தென் இந்தியாவே அவர் கையில் இருந்தது. ஒரு வேலை தென் இந்தியா அன்று ஒரு தனி நாடாக இருந்திருந்தால் அவர் அதற்கு பிரதமர் கூட ஆகி இருப்பார். அவரின் இந்த வெற்றி பலரை ஆச்சிரியப்பட வைத்தது என்று சொல்லுவதை விட வயிறெரிய வைத்தது என்பது தான் உண்மை. காரணம் ஒத்து மொத்த தென் இந்தியாவிற்கே கமல் பேர் சொல்லும் பிள்ளை ஆனார். அன்றைய காலகட்டத்தில் அவரின் சினிமா வெற்றி புரட்சி தலைவரை விட மிக மிக பெரியதாக இருந்ததாக சினிமா உலகினர் பேச துவங்கினர். இது புரட்சி தலைவர் காதுகளிலும் விழுந்தது. அவர் மிக மிக பெருமைபட்டார் காரணம் கமல் அவர் தூக்கி வளர்த்து பிள்ளை. அரசியலுக்கு வருகிறாயா என்று கமலை நேரிடையாக கேட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரின் சினிமா வெற்றி எப்படி இருந்தது என்பதற்கு இரண்டு சான்றுகள் தருகிறேன். 1) யாதோ கி பாரத் ரீமேக் (நாளை நமதே) படத்தில் புரட்சி தலைவரின் ஒரு தம்பியாக கமல் முதலில் நடிப்பதாக இருந்தது. அன்றைய பத்திரிகைகளில் மக்கள் திலகம் MGR மற்றும் காதல் இளவரசன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் நாளை நமதே என்று விளம்பரங்கள் வர துவங்கின. ஆனால் எதோ சில காரணங்களுக்காக கமல் அந்த படத்தில் நடிக்கவில்லை (சந்திரா மோகன் நடித்தார்) அந்த காரணம் இது வரை யாருக்கும் தெரியவில்லை. 'ஆண்டவருக்கே' வெளிச்சம். 2) கமலின் அசுர வளர்ச்சியை கண்ட புரட்சி தலைவர் தனக்கு பின் தன் கட்சியை வழிநடத்த அவர் கமலை தன் வாரிசாக கருத துவங்கினார். அதன் விளைவாக கமல் சில படங்களில் புரட்சி தலைவரின் பிரச்சார பீரங்கியாக மாற துவங்கினார். மங்கள வாத்தியம், தூங்காதே தம்பி தூங்காதே மற்றும் சில படங்களில் அவர் புரட்சி தலைவரை பற்றி பாடும் சில வரிகள் வரும். பின் ஏதோ காரணத்திற்க்காக கமல் அரசியலில் சேரவில்லை. ஜெயாவிற்கு கமலுக்கும் நிலவிய ஏழாம் பொருத்தத்திற்கு இதுவும் ஒரு காரணம். 1981 - 1988 தென்னிந்தியாவை முழுவதும் ஆண்ட பிறகு அவரின் பார்வை வட இந்தியாவின் பக்கம் திரும்பியது. அவர் நடித்த முதல் படமே வட இந்தியாவின் பாக்ஸ் ஆபீசை திருப்பி போட்டது. அதுவரை ஷோலே படம் தான் மிக பெரிய வசூல் புரட்சி செய்த படம். அந்த சாதனை எங்கே உடைக்கப்பட்டுவிடுமோ என்று வட இந்தியாவே அலறியது. ஏக்துஜேகேலியே தான் அந்த படம். ஒரே நாளில் கமல் ஆள் இந்தியா சூப்பர் ஸ்டார் ஆனார். அவரை ஆள் இந்திய சூப்பர் ஸ்டார் என்று அன்று வட இந்திய ஊடகங்களில் விளம்பரங்கள் வர துவங்கின, அதே சமயம் அவரின் இந்த வெற்றியால் அமிதாப், சத்ரவுன்சின்ஹா போன்ற ஹீரோக்களுக்கு வயித்தெரிச்சலை உண்டாக்கியது. க்ராப்ட்டார் என்ற ஒரு ஹிந்தி படத்தில் கமல், அமிதாப், ரஜினி என்ற மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடித்தார்கள், ஆனால் கமல் தான் விளம்பரங்களில் இருவர் நடுவில் இருப்பார் என்றால் அவரின் மார்க்கெட்டை பார்த்து கொள்ளுங்கள். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் ஆலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமல் ஹிந்தி படங்களில் நுழையும் முன்பே அவர் படத்தில் AAA என்று விளம்பரம் செய்தார். அதாவது ஆள் இந்திய சூப்பர்ஸ்டார். சரியாக ஒரு வருடம் கழித்து அது உண்மை ஆனது. வட இந்தியா, தென் இந்தியா என்று இந்தியா முழுவதும் கமலின் ஆதிக்கம் தான். 1982 வெளிவந்த வாழ்வே மாயம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பின் வந்த மூன்றாம் பிறை அவரை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. அந்த படம் ஒரு வருடம் ஓடி சாதனை செய்தது. ஆனாலும் நம் ஊடகங்கள் இதற்கு மேல் அவரால் பெரிய வெற்றிகளை கொடுக்கமுடியாது, இவரிடம் வேறு என்ன சரக்கு இருக்கிறது என்று வெளிப்படையாக கேட்க துவங்கினார்கள். அவர்கள் அனைவரின் வாயை அடைப்பது போல அவரின் பல பல திறமைகளை வெளிப்படுத்திய படம் சகலகலாவல்லவன். இந்த படத்தின் வெற்றியை சொல்லி விளக்கமுடியாது. தென் இந்தியா இதுவரை அப்படிப்பட்ட ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை பார்த்ததே இல்லை என்று கூறலாம். அதுவரை உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் திரிசூலம் படங்கள் தான் மிக பெரிய வசூல் சாதனை படமாக இருந்தன. சகலகலாவல்லன் படத்திற்கு முன் அனைத்தும் ஒரு சின்ன கடுகு போல தான் இருந்தது. கமல் யார் என்பதை யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்பதை ஊடகங்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டன. வெற்றி மேல் வெற்றி கொடுத்த கமல் பின் கமர்சியல் படங்களை சற்று ஓரங்கட்டிவிட்டு கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதில் குறிப்பிடத்தக்கவை சாகர சங்கமம். தெலுங்கு படமான அது அங்கு ஒரு பிளாக்பாஸ்டர், தமிழில் டப் செய்யப்பட்டு இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு டப்பிங் படம் இப்படியும் ஓடுமா என்று கமல் விமர்ச்சகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்தனர். இது கமலை வைத்து கமர்சியல் அல்லாத படங்களையும் எடுத்து வெற்றி பெறலாம் என்று பல புதிய இயக்குனர்களை அவர் வீட்டில் கால் கடுக்க காக்க வைத்தது. இந்த லிஸ்டில் சிப்பிக்குள் முத்து படத்தையும் சேர்த்து கொள்ளலாம். கமல் சினிமா வரலாற்றில் வெறும் பிளாக்பாஸ்டர் மற்றும் சூப்பர் ஹிட்டுகள் மட்டுமே இருந்தது. தோல்வி என்பது மிக மிக அபூர்வம். அது கூட குறைந்த லாபத்தை தான் தந்ததே தவிர நஷ்டத்தை தரவில்லை. இதே காலகட்டத்தில் கமல் மெரிதேறிகசம், காக்கி சட்டை, ஸ்வாதி முத்யம், சாகர் என்று எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். 1989 - 1999 இந்த காலகட்டத்தில் கமல் மிக பெரிய கமர்சியல் வெற்றி பெற்றாலும் சற்று கதை அம்சம் அதாவது நல்ல சமூக கருத்துக்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். அவரின் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், அவ்வைஷண்முகி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இந்தியன் படம் தான் முதலும் கடைசியுமாக இந்தியா முழுவதும் சில்வர் ஜூபிலி ஓடிய படம். வட இந்தியாவில் அன்றைய காலகட்டத்தில் 16 கோடிகள் வசூல் செய்தது. அதை 2008 வெளிவந்த எந்திரன் (22 கோடிகள்) தான் முறியடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆயினும் இன்றைய டிக்கட் விலை, வரி அதெல்லாம் வைத்து பார்த்தால் இந்தியன் 150 கோடிகளை வட இந்தியாவில் வசூல் செய்து இருக்கும் (இன்றைய தேதியில்). இந்தியன் படத்தின் மூலம் இந்தியாவில் முதல் முதலாக 1.25 கோடிகள் சம்பளம் வாங்கியவராக திகழ்ந்தார். அவர் கதை சொல்லும் விதமாக இருக்கட்டும், புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் இருக்கட்டும் கமலுக்கு நிகர் கமலாக தான் இருந்தார். இதுவரை யாரும் செய்யாத மற்றும் செய்யமுடியாக பல சாதனைகளுக்கு சொந்தக்காராக திகழ்ந்தார்.

Image result for rajini vs kamalமுந்தய இருதுருவங்களான புரட்சி தலைவர் மற்றும் நடிகர் திலகம் ஆகிய இருவரின் அடுத்த வாரிசாக விளங்கிய இந்த தருணத்தில் அவருக்கு ஒரு பெரும் போட்டியாக முதல் முதலாக பாட்ஷா படத்தின் மூலம் ரஜினி என்ற ஒரு நடிகர் தோன்றினார். அதுவரை ஹிட் படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து கொண்டு இருந்த ரஜினி இந்த படத்தின் மூலம் ஒரு மாபெரும் வசூல் புரட்சி செய்தார். உடைக்கவே முடியாது என்று நினைத்த இந்த சாதனையை கமல் அடுத்த வருடமே இந்தியன் படத்தின் மூலம் முறியடித்தார். அப்போதைய அரசியல் சூழ்நிலையும் ரஜினியின் அரசியல் ஈடுபாடும் - ரஜினியின் சாதாரண படங்களை கூட சூப்பர் ஹிட் படங்கள் ஆக்கின. ஒரு மிக பெரிய சூப்பர் ஸ்டார் ஆனார். ஆனால் அதே சமயம் கமல் தன் முழு கவனத்தயும் நல்ல நல்ல படைப்புகள் மீது கவனம் செலுத்தினார். இதுவே கமலுக்கும் - ரஜினிக்கும் வசூலில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கியது. அவரின் சினிமா வாழ்க்கையிலும் (வசூல் ரீதியாக) ஒரு பெரிய தோய்வு ஏற்பட்டது. 2000 - 2015 இந்த காலகட்டம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். ஹேராம், ஆளவந்தான், அன்பேசிவம், உத்தமவில்லன் போன்ற எண்ணற்ற மறக்கமுடியாத ரசனைகளை மக்களுக்கு விருந்தளித்தார். இந்த படங்கள் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் அடுத்த தலைமுறை இயக்குனர்களை உருவாக்கியது என்பது தான் உண்மை. இந்த படங்கள் ஒரு சராசரி ரசிகனின் ரசனையை தரத்தை மேலும் உயர்த்தியது. இன்று சிறு பட்ஜட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற பீட்சா, வழக்கு என், துருவங்கள் பதினாறு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற எண்ணற்ற படங்கள் உருவாவதற்கு அடித்தளம் போட்டவர் கமல் தான். இந்த படங்கள் அன்று பேசப்படாவிட்டாலும் இன்று பேசப்படுகிறது. ஒரு கலைஞன் மாண்ட பிறகும் அவனின் படைப்புகள் வாழ்வதே ஒரு சிறந்த வெற்றி. அந்த வகையில் கமல் ஒரு மாபெரும் வெற்றி பெற்ற கலைஞன் தான். ஆனால் அதே சமயம் அவரின் வேட்டையாடு விளையாடு, பஞ்ச தந்திரம், தசாவதாரம், விஸ்வரூபம் பாபநாசம், வசூல் ராஜா போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. வசூலை வாரி குவிந்தன. கமல் கமர்சியல் படங்களில் நடித்தால் என்னவாகும் என்பதை ஒரு சராசரி ரசிகனுக்கு உணர்த்தின. கமலின் சினிமா வரலாற்றை இப்போது அவரோடு பல வருடங்களாக போட்டியிடும் நடிகர்களோடு ஒப்பிட்டு பார்ப்போம். ரஜினி - இவர் பாட்ஷா படத்திற்கு பிறகு தான் சூப்பர்ஸ்டார் ஆனார். ஊடகங்களின் ஆதரவு எப்போதும் இவருக்கு உண்டு. ஆனால் சந்திரமுகி படத்திற்கு பிறகு இவரின் எந்த படமும் அணைத்து தரப்பிற்கும் லாபம் தரவில்லை. மேலும் அரசியலுக்கு வருகிறேன் என்று 25 வருடங்களாக கூறி தன் மார்க்கெட்டை நன்கு வளப்படுத்தி கொண்டார். தமிழ் சினிமா உலகில் அதிக முறை ரெட் கார்டு போடப்பட்டதும் இவர் படத்திற்கு தான். சிரஞ்சீவி - இவர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிட்டார் என்று தான் கூறவேண்டும். அரசியலிலும் தோல்வி. மீண்டும் சற்று துளிர்விட துவங்கி இருக்கிறார். மம்மூட்டி மற்றும் மோகன்லால் - இவர்கள் நன்றாக நடித்தாலும் மிக பெரிய வெற்றிகளை குவிப்பதில்லை. புலி முருகன் மற்றும் திரிஷ்யம் படம் தான் மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றி படங்கள். அமிதாப் - இவர் நடிப்பை விட்டு ஒதுங்கியே விட்டார் என்று தான் கூறவேண்டும். கன்னடத்தில் சொல்லும்படி யாரும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் முன் கமல் இந்த துறைக்கு வந்துவிட்டாலும் இன்றும் கூட சற்றும் கலைப்பற்ற அதே புத்துணர்ச்சியோடு தான் வளம் வருகின்றார். மேலும் இப்போது அவர் அரசியல் களத்திலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலத்தை வென்ற மாபெரும் கலைஞனுக்கு தலைவணங்குவது ஒவ்வொரு தமிழின் கடமையாகும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment