நீங்கள் ஒரு புகைப்படக் கலைஞர் என்றால், உங்களால் கேமராவின் டெக்னிக் சிலவற்றை மனித கண்களின் செயற்பாட்டுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள இயலும்.ஆம், நீங்கள் இரவு நேரத்தில் அறையில் விளக்கு வெளிச்சத்தில் ஏதேனும் வேலை செய்துக் கொண்டிருக்கிறீகள், திடீரென கரண்ட்கட் ஆகிவிட்டால், அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருட்டாகி விடும்.
அருகே இருக்கும் பொருள் கூட கண்களுக்கு தெரியாது. அதுவே 5-10 நிமிடம் கழித்து பார்த்தல் கொஞ்சம், கொஞ்சம் அருகே இருக்கும் பொருட்கள் கண்களுக்கு தென்படும். இது எப்படி என்று நீங்கள் என்றாவது எண்ணியது உண்டா? போதிய அளவு வெளிச்சம் இல்லை எனில், கேமராவில் துளை அளவு (Aperture) அட்ஜஸ்ட் செய்து ஒளியை உட்கொண்டுவரும் வழி இருக்கிறது. இதே போல தான் கண்களும் செயற்படுகின்றன.
நம் கண்களுக்கு இருக்கும் பல திறன்கள், மனித கண்கள் பற்றிய பல வேற்றுமைகள் நாம் பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். அதில், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே காணலாம்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்கள் இன்றும் நியூயார்க் நகரத்தில், ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
576 மெகா பிக்ஸல்
மனித கண்கள் வெவ்வேறு விதமான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காணும் தன்மை கொண்டுள்ளன. ஒருவேளை மனித கண் கேமராக நீங்கள் எடுத்துக் கொண்டால், அதன் மெகா பிக்ஸல் அளவு 576 என்ற அளவில் இருக்கும்.
மரபணு பிறழ்வு
சில பெண்களிடம் காணப்படும் மரபணு பிறழ்வு காரணமாக, அவர்களால் கூடுதலாக பத்து லட்சம் நிறங்கள் காணும் திறன் கொண்டிருக்கிறார்கள்
நீலநிற கண்கள்
நீலநிற கண்கள் கொண்டுள்ள மக்கள் அதிக அளவு ஆல்கஹால் போதையை தாங்கிக் கொள்ள கூடியவர்களாக விளங்குகிறார்கள். நாம் தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில், பத்து சதவீதத்தை கண் மூடிய நிலையில், கண்களை இமைத்துக் கொண்டிருப்பதில் கழிக்கிறோம்.
மனிதர்கள் மற்றும் நாய்கள்
மனிதர்கள் மற்றும் நாய்கள் மட்டுமே, கண்களை பார்த்து ஒரு விஷயம் அறியும் தன்மை கொண்டுள்ள உயிரினங்கள். அதிலும், நாய்களால், மனிதர்களின் கண்களை பார்த்து மட்டுமே ஒரு விஷயத்தை அறிந்துக் கொள்ள முடியும்
தும்மல்
தும்மல்
கண்கள் திறந்த நிலையில் உங்களால் தும்ம முடியாது. முயற்சி செய்ய போகிறீர்களா? பண்ணி பாருங்க... முடியாது!
ஒளி
ஒளி உங்கள் கண்களை அடைவதை உணர, மூளைக்கு வெறும் 0.2 நொடிகள் தான் தேவைப்படுகிறது., Ommatophobia எனப்படுவது கண்களை பற்றிய அச்சம் ஆகும்.
கேரட்
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படும் என்பது பிரிட்டிஷ் வேண்டுமென்ற இரண்டாம் உலக போரின் போது பரப்பிய பொய் என கூறப்படுகிறது.
நாசிக்கு எதிராக இவர்கள் இந்த பொய்யை பரப்பினர் என அறியப்படுகிறது.
பச்சை நிறம்
உலக மக்கள் தொகையில் வெறும் 2% பேர் மட்டும் தான் பச்சை நிற கண்கள் கொண்டிருக்கிறார்கள். மற்ற நிற கண்களை காட்டிலும், நீல நிற கண்கள் ஒளிக்கு மிகவும் சென்சிட்டிவாக இருக்கும்.
அமெரிக்கர்கள்
இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கர்களில் பாதி பேர் நீலநிற கண்கள் தான் கொண்டிருந்தார்களாம். ஆனால், இன்று ஆறில் ஒரு நபர் தான் நீலநிற கண்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment