Wednesday, 20 February 2019

காஷ்மீர் இராணுவ தாக்குதலில் நமக்கு கிடைக்க வேண்டிய படிப்பினைகள் என்ன.?

காஷ்மீர் தாக்குதலுக்கு பின் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய வேதனையை தன் WhatsApp fb status மூலம் இராணுவத்திற்காக வெளிப்படுத்துகிறார்கள் இதுதான் அவன் செய்யக்கூடிய அதிகபட்ச வருத்தம்..
அடுத்த இரண்டு நாட்களில் அவன் status ஐ பார்த்தால்  love status, cinema status
இது தான் 99% இளைஞர்களின் உண்மை நிலை அவனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை..
எல்லாரும் நாட்டில் எதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் சமயத்தில் மட்டும் அதற்காக ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறோமே தவிர ஏன் பிரச்சினைகளே வரவிடாமல் தடுக்க
முயற்சி செய்வதில்லை.?
Image may contain: night and textஅரசியல் வாதிகளின் சுய ஆதாயாத்திற்காக நடக்கும் அநியாயங்களை‌யும் அட்டூழியங்களையும் சதிவேலைகளையும் ஆய்வு செய்யாமல் மீடியா சொல்வதை அப்படியே நம்புகிறீர்களே ஏன்.?
மீடியா சொல்வதை அப்படியே நம்பும் நீங்கள்..
தமிழக வரலாற்றில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற #ஜல்லிக்கட்டு_போரட்டாம் பல நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடந்தது ஆனால் ஒரே நாளில் காவல்துறையை வைத்து அடித்து பலரை கைது செய்து ஒட்டுமொத்தமாக போராட்டத்தை கலைத்தது காவல்துறை,
மறுநாள் #மீடியா சொன்னது என்ன ஜல்லிக்கட்டு போரட்டத்தில்
#சமூக_விரோதிகள்
(நக்சலைட்டுகள் தீவிரவாதிகள்) புகுந்து விட்டார்கள் அது எப்படி ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் புகுந்துவிட்டார்களோ.?
சரி சரி மீடியா சொன்னால் உண்மையாக தான் இருக்கும்..!
அடுத்து #ஸ்டெர்லைட் ஆலை போரட்டாம் ஏறத்தாழ சுமார் 100 நாட்களுக்கு மேல் நடந்தது ஒரே நாளில் காவல்துறையை வைத்து போரட்டத்தை கலைக்க இதுவரை தமிழகத்தில் இப்படி ஒரு கொடுமையான விஷயம் நடந்ததே இல்லாத வகையில் 14 அப்பாவிகளை_சுட்டுக்கொன்றனர்.
மறுநாள் மீடியா_சொன்னது என்ன.? போராட்டத்தில் #சமூக_விரோதிகள்
(நக்சலைட்டுகள் தீவிரவாதிகள்) புகுந்து விட்டார்கள் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் வாயில் தெளிவாக குறி வைத்து shiper shot அடித்து கொன்றுவிட்டு சமூக விரோதிகள் என்று பட்டம் கொடுத்தார்கள் அரசியல் வாதிகள் அதை அப்படியே மக்களுக்கு காட்டியது மீடியா..!
இதையும் தாங்கள் நம்பினீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் மீடியா சொல்வது உண்மைதானே..!
நமக்கு மறதி அதிகம் அதனால் அனைத்தையும் மறந்து விடுகிறோம் தமிழக வரலாற்றிலே இன்னும் இதுபோல் பல சம்பவங்கள் நடந்தேறி உள்ளது..!
சிறிய வரலாற்று சம்பவம்..!
2001 ஆம் ஆண்டு அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது இதற்கு காரணம் ஒசாமா பின்லேடன் (அல்கொய்தா) என்று மீடியாக்கள் தொடர்ந்து ஒளிப்பரப்பி அமெரிக்கா மக்களுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மீது வெறுப்பை உண்டு பண்ணி இஸ்லாமிய தீவிரவாதம் என்ற புது பெயரை உருவாக்கினார்கள் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசு படையெடுத்து பல அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள்
இறுதியில் அது உள்நாட்டு சதி என்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து அதன் பெட்ரோலிய எண்ணெய் வளங்களை அபகரிக்க வெள்ளை மாளிகையின் சில அதிகாரிகளை வைத்தே ஜார்ஜ் புஷ் திட்டமிட்டு நடத்திய சதிவேலை என்று பல்வேறு அமெரிக்கா தனியார் உளவு அமைப்பினர் இன்று வரை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து கூறி வருகிறார்கள்.
பார்க்க வீடியோ
https://youtu.be/zPf_atoXW0I
ஆப்கானிஸ்தான் படையெடுப்பு ஒரு‌‌புறம் இருக்க 2003 ஈராக்கில் ஆபத்தான அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அதன் மூலம் அமெரிக்காவை அழிப்பதற்காக வேலைகள் நடக்கிறது என்று அமெரிக்கா #மீடியாக்கள்அனைத்தும் இதே செய்திகளை தொடர்ந்து மக்களுக்கு ஒளிப்பரப்பி கொண்டே இருந்தது பொதுமக்கள் அனைவரும் பயத்தினால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்குமாறு பணிந்தார்கள் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசாங்கம் தன் படைகளை அனுப்பி ஈராக்கை போர்களமாக்கியது..
ஈராக்கில் பல அப்பாவி மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா மீடியாக்களில் தொடர்ந்து வந்த செய்திகள் தீவிரவாதிகளை கொன்று ஒழிக்கிறோம் என்று மக்களும் தன் அரசாங்கம் தன் நாட்டை பாதுக்கிறது என்று நம்பினார்கள்
இறுதியில் சில ஆண்டுகளுக்கு பிறகு சில உண்மையை கண்டறியும் தனியார் உளவு துறை அமைப்புக்கள் கண்டறிந்த விடயம் என்ன இந்த #தாக்குதலுகள்_அனைத்தும் #ஈராக்_மற்றும்_ஆப்கானிஸ்தானில் உள்ள #பெட்ரோலிய_எண்ணெய் #வளங்களை_அபகரிக்க_என்று
ஒரு நிமிடம் இத எங்கயோ கேள்வி பட்டுருக்கேனே என்று சிந்திப்பது என் காதில் விழுந்தது ஆமா இந்த சம்பவத்தை பற்றி தமிழில் வெளிவந்த
கவன்_திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.. மீடியா நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நல்லவரை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் மாற்றுவது மீடியாவிற்கு கைவந்த கலை..!
அப்போதைய President ஆக இருந்த ஜார்ஜ் புஷ் தானாக பிரச்சினை உண்டு பண்ணி தன்னால் நான் நாட்டை காப்பாற்ற முடியும் என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டி நடந்த சதிவேலைகள்..
விளைவு பல இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் இது தான் அரசியல் வாதிகளின் #சுயரூபம் தான் அரசியலில் மீண்டும் வெற்றி பெற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் காவு வாங்குவார்கள்.
பார்க்க வீடியோ
https://youtu.be/dKbqAfC-HwE
இன்றைக்கு உலகில் தீவிரவாதிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை Google இல் தேடினால் முதல் இரண்டு இடம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தான் உள்ளது
பார்க்க
https://www.forbes.com/
உங்களிடம் ஒரு கேள்வி தன் நாட்டின் மீது அண்டை நாடு படையெடுத்து வந்து அன்று முதல் இன்றுவரை வளங்களை கொள்ளை அடித்து, நாட்டு மக்களை கொன்று அடிமைப்படுத்த பார்க்கிறது..
அவர்களுடன் போராடும் போராளிகளுக்கு உலகம் சுமத்தும் பட்டம் தீவிரவாதிகள் என்றால்,
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போராளிகள்
உதாரணமாக
சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்ட் 18, 1945):
சந்திரா சேகர் அசாத்(ஜூலை 23, 1906 – பிப்ரவரி 27, 1931):
பகத் சிங் (செப்டம்பர் 28, 1907- மார்ச் 23, 1931):
மங்கல் பாண்டே (19 ஜூலை 1827 – 8 ஏப்ரல் 1857):
இவர்கள் எல்லாம் ஆயுதம் ஏந்தி பல தாக்குதல் நடத்தி பிரிட்டிஷ் இராணுவத்தை கொன்றார்கள் இவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டார்கள்
பிரிட்டீஷ் காரர்களின் பார்வையில் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்
நம்முடைய பார்வையில் இவர்கள் எல்லாம் யார்.?
நல்ல வேலை அந்த சமயத்தில் மீடியாக்கள் இல்லை இருந்திருந்தால்..?
இவையெல்லாம் இங்கு சொல்வதற்கான காரணம் இதுபோன்ற உலகின் எவ்வளவோ சம்பவங்கள் நடந்தேறி உள்ளது நடந்தும் வருகிறது ஒரு அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் மீடியாக்களை வைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் சொல்வது தான் செய்தி..
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு செய்தி வந்தாலும் அடுத்த நாள் அந்த மீடியாவில் ரைடு நடக்கும் மீடியாவின் மீது வழக்கு தொடரப்படும்
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஆங்காங்கே மதக்கலவரங்கள் வரப்போகிறது என்றும் பாஜாக வின் இந்து அமைப்புகள் மூலம் கலவரங்கள் வரும் என்றும்.
எல்லையில் தொடரும் மோதல்களால் இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும் என்றும்
இந்தியா சீனா இடையிலான உறவும் சுமூகமற்ற நிலைக்கு செல்லும் என்றும்
அமெரிக்கா உளவு துறை இயக்குநர்
CIA director Don Cottas கடந்த ஜனவரி 31ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்துள்ளார் என்று news18 மற்றும் polimar news channel இல் செய்தி வந்தது அது வந்து சில நாட்களிலேயே காஷ்மீரில் இவ்வளவு பெரிய தாக்குதல் அரங்கேறிவிட்டது
Polimar news official website இல் இந்த வீடியோவை delete செய்துவிட்டார்கள் முகநூல் பேஜில் இருந்தும் நீக்கிவிட்டார்கள் பாவம் அதை பலர் download செய்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போல download செய்து வைத்திருக்கிறேன் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்
அதில் சொன்ன ஒவ்வொரு அறிக்கையும் சொல்லி வைத்தது போல நடக்க ஆரம்பித்து விட்டது
CIA வெளியிடப்பட்ட முதல் அறிக்கை
1. ஆங்காங்கே மதக்கலவரங்கள் வரப்போகிறது பாஜாக வின் இந்து அமைப்புகள் மூலம் கலவரங்கள் வரும்..
ராமலிங்கம் கொலை வழக்கிற்கு மத சாயம் பூசி இந்து முஸ்லிம் மதப் பிரச்சினை ஏற்பட்டது
2. எல்லையில் தொடரும் மோதல்களால் இந்தியா பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும்
காஷ்மீரில் இந்தியா இராணுவம் மீது தாக்குதல் அதனால் இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது
3. இந்தியா சீனா இடையிலான உறவும் சுமூகமற்ற நிலைக்கு செல்லும்
இந்தியா பாகிஸ்தானின் மீது போர் அறிவிப்பு வெளியிட்டால் சீனாவின் முழு ஆதரவு பாகிஸ்தானுக்கு தான் சீனா பாகிஸ்தான் கூட்டு சேரும்
மேலும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால்,
13 ம் தேதியே காஷ்மீருக்கு செல்லாதீர்கள் என தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது..!
மத்தியில் ஐந்தாண்டு ஆட்சியில் இல்லாத வகையில் சரியாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இந்த தாக்குதல் நடந்துள்ளது இதன் மூலம் நாங்கள் தான் நாட்டை காப்பாற்ற போகிறோம் என்ற மாயையை மத்திய பா.ஜா.க அரசு உருவாக்க பார்க்கிறதா.?
இதே போல தான் 1999 பா.ஜா.க ஆட்சியில் இந்தியா பாகிஸ்தான் உறவு பாதித்து கார்க்கில் போர் நடைபெற்றது
அது எப்படி பா.ஜா.க ஆட்சியில் மட்டும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை தீவிரமடைகிறது..?
தனது சொந்த நாட்டு இராணவ வீரர்களை இழக்கும் அளவிற்கு இந்திய உளவுத்துறைகளான ரா'வும் ஐபி'யும் உறங்கியதா..??
இந்த பதிவு மூலம் நான் அனைவருக்கும் கூற வருவது மீடியா எதை சொன்னாலும் அதை ஆய்வு செய்யாமல் அப்படியே நம்பாதீர்கள்..
நாம் அனைவருமே குதிரைக்கு கடிவாளம் இட்டது போல நேராக மட்டுமே பார்க்கிறோம் அந்த கடிவாளத்தை அவிழ்த்து நாளா புறமும் பாருங்கள் உலக அரசியல் படியுங்கள் அரசியல் சூழ்ச்சிகளை அறியுங்கள்..

No comments:

Post a comment