Thursday, 28 February 2019

போரின் அழிவில் இருந்து மீள அபிநந்தன் விடுதலை !! இம்ரான் கான் அமைதி ..

சாதாரண கலவரம், கலாட்டா நடக்கும் பகுதியில் நம் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அடிவயிறு கலங்கும்.. இப்போது அபிநந்தனின் குடும்ப உறுப்பினர்கள் எப்படி துடித்து கொண்டிருப்பார்கள். போர் பிரகடனம் செய்யும் தலைவர்களோ, அவர்களின் வாரிசுகளோ, அல்லது உறவினர்களோ ராணுவத்தில் சிப்பாய்களாக, போர் விமான விமானியாக பணி புரிய மாட்டார்கள்...
அட அத விடுங்க போர் போர்னு இங்க கூவிட்டு இருக்கவங்க யாருடைய வாரிசாவது அங்க இருக்காங்களா கேளுங்க. இருக்க மாட்டாங்க.. இவங்க வெறிக்கு யாரு பெத்த பிள்ளையோ சாகனும், யாரோ ஒரு குழந்தை தகப்பனை இழக்கனும், யாரோ ஒருவர் தங்கள் குடும்பத்தினரை இழக்கனும்..
Image may contain: 1 person, sitting and textதீவிரவாத தாக்குதலுக்கு பதிலடின்னு சொம்படிக்காதீங்க.. உளவுத்துறை எச்சரித்தும் கண்டுக்காம இருந்துட்டு அரசியல் காரணங்களுக்காகவும், வெத்து ஸ்டண்டுகளுக்ககாவும், மேலும் மேலும் வீரர்களை இழப்பதும், அப்பாவி வீரர்களை காவு கொடுப்பதும் வீரம் அல்ல, பச்சை படுகொலை...
போர் துவங்கும் வரை தான் ராணுவத்திற்குக் கட்டுப்பாடு. போர் துவங்கி விட்டால் ஆகக் கேவலமான கீழ்மைகள் நடந்தேறுவது போர்க்களத்தில். வரலாறு நெடுகிலும் எந்த நாட்டு ராணுவமும் இதற்கு விதி விலக்கல்ல.
நமது நல்வினை இன்றைய போர்முனையில் எதிரி நாட்டு பிரதமர் பக்குவமாகப் பேசுவது. பெருங்கெடு வினை நமது பிரதமர், வியர்க்க விறுவிறுக்க கம்யூட்டர் கேம் விளையாடும் சிறுவனின் சாகச மனநிலையில் இருப்பது.
ராணுவ அதிகாரிகள் ஒருபோதும் போர் வேண்டாம் என்று சொல்வதில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் இந்த நிமிடத்தில் உள்நாட்டு வளத்தைக் குடித்து, தின்று துய்ப்பது. அடுத்த நிமிடம் (ஜோடிக்கப்பட்ட) பகை நாட்டின் பெண்களை வன்புணர்வது, செல்வத்தைக் கொள்ளையடிப்பது. கொள்ளையில் அவன் செத்தாலும் அது வீர மரணமே.
படுமோசமான பாதிப்பிற்குள்ளாவது இரண்டு பக்கமும் போருக்கு சிறிதும் தொடர்பே இல்லாத பொதுமக்கள். போரில் முதல் பலியாகும் கடைநிலைச் சிப்பாய்.
போரின் அழிவில் இருந்து மீள இரண்டு நாடுகளுக்கும் பல பத்தாண்டுகள் ஆகும்.
போர் துவங்கிய பிறகு துவங்கியதற்கான காரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு போரை நீடிக்க புதிய புதிய காரணங்கள் முளைத்துக் கொண்டே இருக்கும். தன்னகங்காரம் மூளையின் நியூரான்களுக்கு ஏற எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் சுற்றிக் கொண்டிருக்கும்.
கடந்த காலத்தில் பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும், அதிகார வெறிக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த பொறுக்கிகள், தங்களின் செயலுக்கு நியாயம் கற்பிக்கவும், சண்டைக்கு ஆள் பிடிக்கவும் ஒரு கும்பலின் டிஎன்ஏவில் தாய் நாடு என்ற வறட்டுப் போதையை ஏற்றி வைத்திருந்திருந்தார்கள்.
அந்தப் போதை தெளியாமல் ஹேங்கோவரில் தலை கனத்துக் கிடக்கிற, காலத்தால் பின் தங்கிப் போன சங்கிகளும் இங்கே போர் போர் என்று கடை வாயில் எச்சில் ஒழுக தலையைக் கூட நேராக நிற்க வைக்கத் திராணியற்றுக் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.
துவங்கும் முன்னர் தன் நாட்டு மக்களிடம் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்த போர் இதுவாகத் தான் இருக்கும்.
எனவே -புல்வாமா தாக்குதல் நடந்த நாளில் இருந்து,
மோடி உட்பட நமது பாஜகவினர் பேசிய விர வசனங்களெல்லாம் அர்த்தமற்றுப் போய் விட்டது, இன்றைய இம்ரான்கானின் பேட்டிக்குப் பிறகு......
நீங்க எல்லோரும் தூங்கின பிறகு நடுராத்திரல போய் நான் சண்டை செஞ்சேன்னு வாயால வடை சுடாம.....
எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானத்தை கைப்பற்றி, விமானியை சிறை பிடித்து வைத்து, அதை இந்தியாவுக்கு போட்டுக் காட்டின பிறகு......
சண்டைய தொடங்குறது சுலபம்,
முடிவுக்குக் கொண்டு வர்றது கஷ்டம்.
உன் கிட்டேயும் அனு ஆயுதம் இருக்கு,
என் கிட்டேயும் அனு ஆயுதம் இருக்கு.
இப்போ நாம போரைத் தொடங்கினா,
அது எங்கே போய் முடியும்னு யாருக்கும் தெரியாது.
6 மாதத்தில் முடியும்னு நினைச்சு தொடங்கின முதல் உலகப் போர் ஆறு வருடங்களைத் தாண்டிய பிறகு தான் முடிவுக்கு வந்தது.
அதனால போர் வேண்டாம்,
வா எல்லாவற்றையும் பேசித் தீர்ப்போம்னு........
சின்னப் பையனுக்கு புத்திமதி சொல்ற அனுபவசாலி ஆசிரியர் மாதிரி பேசுறாரு இம்ரான்.....

அபிநந்தன் விடுதலை தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் நாளை அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக கூறினார்.
மேலும் கூறுகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்தான எதையும் கூறவில்லை. ஆனால், இந்தியாவில் போர் குறித்து இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்துள்ளது.
நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முன் வைத்துள்ளோம். ஆனால் அவர்களது தரப்பிலிருந்து வரும் செய்திகள் நல்ல விதத்தில் இல்லை.
இந்திய மக்கள் தற்போதுள்ள அரசின் போர் பற்றிய தூண்டுதலை ஆதரிக்கவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் எல்லாவற்றுக்கும் காரணம் காஷ்மீர்.
நான் இந்திய மக்களிடம் கடந்த நான்கு வருடங்களாக காஷ்மீரில் நடப்பது குறித்த கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
காஷ்மீரில் உள்நாட்டுப் போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் தலைவர்கள் ஒருகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரிவினையை கேட்கவில்லை.
ஆனால், இந்தியா இழைத்த கொடுமைகள் காரணமாக அவர்கள் இப்போது சுதந்திரம் கேட்கிறார்கள்.
19 வயது இளைஞர் எதற்காக மனித வெடிகுண்டாக மாற வேண்டும் ?
காஷ்மீரில் நடப்பவை அனைத்துக்கும் பாகிஸ்தானை எவ்வளவு காலம் பழிசுமத்த முடியும்.
அதுமட்டுமில்லாத விசயத்திற்கு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் ?
நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரதமர் மோடிக்கு நேற்று மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன் என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment